Monday, September 25, 2017

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

சில நாட்களாக இந்த பழமொழியை கூறிவருகின்றனர்

எனில் அர்ஜுனனுக்கு அத்தனை மனைவிகளா என்ன?

சரியாக வியாச பாரதத்தின் படி அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள் மட்டுமே (பாஞ்சாலி, சுபத்திரை, சித்ராங்கதை, உலூபி)

1.இங்கு பாஞ்சாலியை அர்ஜுனன் குறியை அடித்து மணப்பார்

2.உலூபி
      இதில் அர்ஜுனன் உலூபியை தேடி செல்லவில்லை கடத்தியது உலூபியே ஆனால் பெண்ணிடம் வீரத்தை காட்ட வேண்டாமென அர்ஜுனன் ஏதும் செய்யமாட்டார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html?m=1

   பலர் அறியாத விசயம் உலூபி ஒரு விதவை ஆவாள்
     
  அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம்{உலூபியிடம்} பெறப்பட்டவனாவான்.கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான்

http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-091.html?m=1

3.சித்ராங்கதை
              இவர் பாண்டியனின் மகள் பாண்டியன் உடனான உடன்படிக்கையின் படி இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புகிறார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section217.html?m=1

4.சுபத்திரை
               இவர் அர்ஜுனனின் அத்தை மகள் ஆவார் இருவருமே முன்னமே ஒருவரை ஒருவர் கேள்விபட்டு காதல் கொண்டனர் அர்ஜுனன் சுபத்திரையை கண்டவுடன் இந்த விருப்பத்தை கிருஷ்ணரிடம் சொன்னார் அதேபோல சுபத்திரையும் ரிஷியானவர் அர்ஜுனன் என உணர்ந்த உடனே காதல் வெளிப்படுத்தினாள் சரியாக சொல்ல வேண்டுமானால் ருக்மணி கண்ணன் மீது கொண்ட காதல்போல அர்ஜுனனை பற்றி கேள்வியுற்றே காதலிக்க தொடங்கினாள்

முறையே நான்கு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகன்களாக மாவீரர்கள் நால்வர் ஜெனித்தனர்

இவர்கள் நால்வர் மட்டுமே அர்ஜுனனின் பாரியைகள் இவர்களில் திரௌபதி மற்றும் சுபத்திரை மட்டுமே இந்திரபிரஸ்தம் வருவர்

பல பேர் அர்ஜுனனின் மனைவிகள் என குறிப்பிடப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை அவை புதினங்களே

🌸 அர்ஜுனனின் தவம்

            பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.


பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section38.html?m=1

🌸 அர்ஜுனனின் விரதம்
          பிரம்மசிரா அஸ்திரத்தை திரும்ப பெறுவதென்பது சாதாரணம் இல்லை அதற்கான விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது கடினமானது இதனால் தான் அஸ்வதாமரால் கூட அவ்வஸ்திரத்தை பின்வாங்க இயலவில்லை

Having said these words Dhananjaya withdrew his weapon. The withdrawal of that weapon by the gods themselves in battle is exceedingly difficult. Not excepting the great Indra himself, there was nobody save the son of Pandu, who was capable of withdrawing that high weapon after it had once been let off. That weapon was born of Brahma energy. No person of uncleansed soul can bring it back after it is once let off. Only one that leads the life of a brahmacari can do it. If one who has not practised the vow of brahmacarya seeks to bring it back after having shot it, it strikes off his own head and destroys him with all his equipments. Arjuna was a brahmacari and an observer of vows. Having obtained that almost unobtainable weapon, he had never used it even when plunged into situations of the greatest danger. Observant of the vow of truth, possessed of great heroism, leading the life of a brahmacari, the son of Pandu was submissive and obedient to all his superiors. It was for this that he succeeded in withdrawing his weapon.

http://www.sacred-texts.com/hin/m10/m10015.htm

கும்பகோண பதிப்பு (தமிழில்)

https://drive.google.com/file/d/0BwtAdTS664FARWRWc3AwYTNmSk0/view?usp=drivesdk

அர்ஜுனனின் தவம் பெரும் பலம் கொண்டது மேலும் மேலும் அவர் கடைபிடித்த விரதமும் அவ்வாறே

இதனால் தேவலோக அப்சரஸான ஊர்வசியையும்

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section46b.html?m=1

விராடன் மகள் உத்தரையையும் ஏற்காதவன் விஜயன்

ஊர்வசியை ஏற்காதலால் சாபம் பெற்றதை அனைவரும் அறிவோம்

சரியாக மூன்று முறை விஜயன் திக் விஜயம் செல்வார் இதில் எந்த நாட்டு பெண்னையும் மணக்கவில்லை

அப்படி பார்த்தால் திருதராஷ்டிரருக்கே மொத்தம் 110 மனைவிகள் உண்டு
எனில் இந்த பழமொழி எவ்வாறு சரியென நான் அறியேன்

பார்த்தன் பிரம்மதேவர் உருவாக்கிய காண்டீப வில்லையும் இரு அம்பறாத்தூணிகளையும் கொண்டவன்
அவன் வில்லில் இருந்து புறப்படும் கணைகள் ஒன்றையொன்று தொட்டுகொண்டு செல்லும்

http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section168.html

http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section63.html?m=1

மேலும் சவ்யசச்சின் ஒரே இழுவையில் 500, 600 அம்புகளுக்கும் மேலாக விட வல்லவன்

http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section90.html?m=1

http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-090.html?m=1

குடகேசனின் வேகத்தை தேவர்களும் பார்க்க முடியாதவர்கள் ஆவர் வெட்டிய ஜெயத்ரதனின் தலையை அம்புகளை கொண்டே கீழே விழாமல் எல்லையில் இருந்த சிந்து ராஜனின் தந்தை மடியில் விழ வைத்தவன்

http://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-145.html?m=1

அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்

என்பது போல மாற்றப்பட்ட பழமொழியே இது

உண்மையான பழமொழி

#ஆற்று_மணலை_கூட_எண்ணலாம்_ஆனால்_அர்ஜுனனின்_கணைகளை்_எண்ண_முடியாது

குறிப்பு : அனைத்தையும் ஆதாரத்துடனேயே பதிவிட்டு உள்ளேன் தேவையற்ற விவாதம் எழுப்புபவர் எவராயினும் நிச்சயம் Block செய்யப்படுவர் இங்கு நான் வேறு யாரையும் இழுக்கவில்லை அர்ஜுனரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் விவாதம் வேண்டாம் 🙏🙏🙏

💐 அஸ்திரங்களில் நிகரற்றவர் யார்


👑 மன்னராய் பிறந்து ரிஷியாகி பின் இராஜ ரிஷி பிரம்ம ரிஷி என சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்ரரே அவர்

🌷 நம் அனைவருக்கும் வசிஷ்டரின் கன்றுக்காக விஸ்வாமித்ரர் சண்டையிட்டது தெரியும்

🌷 ஆனால் யுத்தம் அவ்வளவு எளிதாக முடிந்துவிட வில்லை யுத்தத்தில் கௌசிகர் விடாத அஸ்திரம் இல்லை

🌷ஆனால் அனைத்தையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் அடக்கியது இதன்பிறகே ரிஷியாகிறார்

🌷இதன் பிறகு திரிசங்கு சொர்க்கம், அரிச்சந்திரன் என இருவருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை பலரும் அறிவோம் ஆனால் எதுவும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை

💐 வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரரின் பங்கு இராமவதாரத்தில் இன்றியமையாததாகும்

👑 ராமபிரானுக்கு ஞானமளிப்பதில் வசிஷ்டரும்

👑 அஸ்திரமளிப்பதில் விஸ்வாமித்ரரும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர்

🌺 இராமருக்கு வசிஷ்டர் அளித்த ஞானம் அளவிட முடியாதது ஆகும் அதில் யோக வசிஷ்டம் மிகவும் முக்கியமாகும் இது சரியாக 32,000 ஸ்லோகங்களை கொண்டது (வால்மீகி இராமாயணம் முழுதும் கூட 24000 மட்டுமே)

🌹 தனது 16 வயதிலேயே மனித வாழ்க்கையை கண்டு விரக்தி அடையும் ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டரின் உபதேசமே யோக வசிஷ்டமாகும்

🌸 இதே போல அஸ்திர பயிற்சியில் விஸ்வாமித்ரரின் பங்கு அற்புதமானது

🌻 அவர் ஏற்கனவே பல அஸ்திரங்களை மன்னராய் இருக்கும் போது அறிந்ததே ஆனால் ரிஷியான பின்பும் இதை விட வில்லை

🌸 பெரும் வேள்வி நடத்துகிறார் விஸ்வாமித்ரர் அதற்கு இராவணனே நேராக வந்து தடுக்க முடியாததால் மாரிசன் மற்றும் சுபாகுவை அனுப்பி வைக்கிறான்

🍀 இவ்விருவர்களும் சாமான்யர்கள் இல்லை ராமபிரானின் தந்தையாகிய தசரதரே

🌺 " நான் மற்றும் என் நண்பர்கள் எங்களின் படையுடன் சேர்ந்து வந்து தடுத்தாலும் கூட அந்த இருவர்களில் ஒருவனை தடுப்பதே இயலாத காரியம் அவ்வாறு இருக்கையில் வெறும் பன்னிரண்டு வயதேயான என் மகன் ராமன் எவ்வாறு தடுப்பான் " என மறுக்கிறார்

🌈 இதை கேட்ட வசிஷ்டர் பொங்கி எழுகிறார்

" தசரதா

இராமன் சிறுவனாய் இருந்தால் என்ன ??

இளைஞனாய் இருந்தால் என்ன ??

தனுர்வித்தை பயின்றால் என்ன??

பயிலாமல் இருந்தால் என்ன

விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ ஏன் பயம் கொள்கிறாய் எதிர்த்து வருபவன் மரணமற்றவராக இருந்தாலும் விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

அவரால் ஆகாத காரியம் என்று இல்லை அவரே ராமனை அழைக்கிறார் என்றார் அதில் காரணம் இருக்கிறது

இவர் தவத்திற்கு இருப்பிடம்

இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரை எவரும் அறிந்ததுமில்லை

இனி எவரும் அறிய போவதுமில்லை

இவர் அறியாத அஸ்திரமில்லை மேலும் தன் பலத்தினால் புதுபுது அஸ்திரத்தினை உருவாக்கும் திறனும் கொண்டவராவார்

தக்ச பிராஜாதிபதியின் மகளான ஜயை மற்றும் ஸுப்ரபை இருவரும் க்ரிசாஸ்வரை மணந்து கொடுமையிழைத்த அசுரர்களை வதைக்க இருவரும் கடவுள்களை தவிர மற்றோரால் வெல்ல முடியாத 100 அஸ்திரங்களை பெற்றெடுத்தனர் அவை அனைத்தையும் இவர் அறிவார்

மேலும் மும்மூர்த்திகளிடம் இருந்தும் பல அஸ்திரங்களை பெற்றவர் இவருடன் இராமனை அனுப்புவதே உனக்கு தகும் மேலும் அதுவே இராமனுக்கும் நன்மை பயக்கும்
(பால காண்டம் 21வது சர்க்கம்)

⛅ பின் இராமனை அழைத்து செல்லும் விஸ்வாமித்ரர் பலா மற்றும் அதிபலா வித்யைகளை அளிக்கிறார் இந்த வித்தைகளால் பலத்தில் எவரும் இணையாக மாட்டார்கள் மேலும் பசி ,தாகம், நோய்களால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படாது

🌼 இன்னும் பற்பல விசயங்கள் இவ்விரண்டு வித்தைகளால் சாத்தியம் மேலும் இதை அறிந்தவர் விஸ்வாமித்ரர் மட்டுமே இதை பிரம்ம தேவர் விஸ்வாமித்ரர்க்கு உபதேசித்தார்

🌺 தாடகையை வதைத்த பின்வரும் தேவர்கள் இதுவே சரியான நேரம் தாம் பாதுகாத்த அஸ்திரங்களை ஸ்ரீ ராமருக்கு அளிக்க வேண்டும் என வேண்ட அவ்வாறே அளிக்கிறார்


👑 விஸ்வாமித்ரர் இராமபிரானுக்கு அளித்த அஸ்திரங்கள்

🌻 தண்ட சக்கரம்

🌻 தர்ம சக்கரம்

🌻 கால சக்கரம்

👑 விஷ்ணு சக்கரம்

🌻 இந்திர சக்கரம்

👑வஜ்ராயுதம்

👑 சிவனின் திரிசூலம்

👑 பிரம்மாஸ்திரம்

👑 பிரம்மசிரா

🌻 ஜஷிகாஸ்திரம்

👑 மோதகி கதாயுதம்

👑 சிகாரி கதாயுதம்

👑 தர்ம பாசம்

👑 கால பாசம்

👑 வருண பாசம்

👑 வஜ்ரத்திற்கு இணையான இரு ஆயுதங்கள்

🌻 வருணாஸ்திரம் ஆக்னேயம் மற்றும் வாயவ்யம் மற்றும் சிகாரி

👑 சிவன் மற்றும் நாராயணரின் அஸ்திரங்கள்

👑 சிவனின் சக்தியாஸ்திரம்

👑 விஷ்ணுவின் சக்தியாஸ்திரம்

👑 ஹயக்ரீவர் அஸ்திரம்

🌺 கிரௌஞ்ச அஸ்திரம்

🌻 அசுரர்களின் சக்திமிக்க தண்டமான கங்காலம், கபாலம், கங்கனம்

🌼 வைத்யதாரா அஸ்திரம்

👑 நந்தன கட்கம்

🌻 மோஹன அஸ்திரம்

👑 பிரஸ்வாப்ன அஸ்திரம் (இதை வைத்தே பரசுராமரை பிஷ்மர் வெல்வார்)

🌻 பிரஸாமனா அஸ்திரம்

🌻 வர்சனா அஸ்திரம்

🌻 சோசனா அஸ்திரம்

🌻 சந்தப்பனா அஸ்திரம்

🌻 விலாப்பனா அஸ்திரம்

🌻 மன்மத அஸ்திரம்

🌻 கந்தர்வ அஸ்திரம்

🌻 ராட்சஸர்களின் அஸ்திரமான பைசாச அஸ்திரம்

🌻 தாமச அஸ்திரம்

🌻 சௌமான அஸ்திரம்

🌻 சம்வர்த்த அஸ்திரம்

🌻 மௌசல அஸ்திரம்

🌻 சத்ய அஸ்திரம்

🌻 மாய மாயா அஸ்திரம்

👑 சூரியனின் அஸ்திரமான தேஜபிரப

👑 சந்திரனின் அஸ்திரமான சிஷிரா

👑 துவஸ்தாவின் அஸ்திரமான சுதாமன

👑 பகனின் அஸ்திரமான சிதைசு

👑 மனுவின் மானவாஸ்திரம்

👑 மேலும் க்ரிசாஸரின் மகன்களாய் பிறந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அளித்தார் இவர்களின் பெயர் முதற்கொண்டு வால்மீகி இராமயணத்தில் உள்ளது

(பால காண்டம் 27 மற்றும் 28-வது சர்க்கம்)

🌺 இவைகள் அனைத்துமே தெய்வீக அஸ்திரங்கள் ஆகும்

🌺 மேற்கண்டவற்றில் பிரம்மாஸ்திரம் முதலிய பல அஸ்திரங்களை தடுக்க மஹேஸ்வர அஸ்திரம் வேண்டும்

👑 ஆனால் விஷ்ணு சக்கரம் மற்றும் திரிசூலம் முதலிய சிவன் மற்றும் விஷ்ணுவின் சக்திகொண்ட அஸ்திரங்களை தடுப்பது இயலாத காரியம்

👑 ஆனால் இவற்றையெல்லாம் இராமலட்சுமணர்கள் உபயோகிக்கவே இல்லை

🌺 அதிகாயன் பிரம்மகவசத்தை வரமாக பெற்றவன் பிரம்ம கவசத்தினை கிழிக்க பிரம்மாஸ்திரம் ஒன்றே வழி இதனால் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தினை அதிகாயனை கொல்ல உபயோகிப்பார்
( யுத்த காண்டம், 71- வது சர்க்கம்)

🌺 இராவணனின் தலையை இராம பிரான் அறுக்க அறுக்க முளைக்கிறது இவ்வாறாக நூற்றியோரு முறை அறுத்தும் இராவணன் மாளவில்லை இதை கண்ட தேரோட்டி மாதலி இராமபிரானிடம் பிரம்மாஸ்திரம் விட வேண்டுகிறார்
(இராம - இராவண இறுதியுத்தத்தில் இராமபிரான் இந்திரனின் தேரில் யுத்தம் செய்தார்)

🌺 அப்போது இராமபிரான் அகஸ்தியரிடம் பெற்ற பிரம்ம அம்புகளை இராவணன் மீது பிரயோகிக்கிறார்
( யுத்த காண்டம் 108-வது சர்க்கம்)

🌼 மற்றபடி வேறு எதையும் இருவரும் உபயோகிக்கவில்லை

❄ இராவணன் மகன் மேகநாதன் யார் கண்ணிற்கும் புலப்படாமல் தன்னை மறைத்துகொண்டு அனைவரையும் பிரம்மாஸ்திரம் கொண்டு தாக்குகிறான் இதை கண்ட லட்சுமணன் பிரம்மாஸ்திரம் கொண்டு அனைத்து இராட்சஸர்களையும் கொன்று வீழ்த்துவேன் என இராமபிரானிடம் கூறுகிறார் ஆனால் இராமபிரான் அதை அனுமதிக்கவில்லை
(யுத்த காண்டம் 80-வது காண்டம்)

👑 இராமபிரான் சரியாக மூவரிடம் அஸ்திரங்களை பெற்றார்
அவர்கள் வசிஷ்டர், விஸ்வாமித்ரர் மற்றும் அகஸ்தியர் ஆவர் இங்கு விஸ்வாமித்ரர் அளித்த அஸ்திரங்களை இராமபிரான் பெரும்பாலும் உபயோகிக்கவே இல்லை

👑 அவையனைத்தும் போரை எளிதாய் முடிக்கும் திறன் கொண்டு இருந்தவை காரணம் இராவணன் ஈசனிடம் பெற்ற சந்திராசன வாளை தவிர வேறு மகாஸ்திரங்கள் இந்த அஸ்திரங்களை தடுப்பதற்கு இல்லை ஆனால் சந்திராசனமும் அதர்மத்திற்கு உபயோகப்படுமானால் என்னிடம் வந்துவிடும் என ஈசனே கூறினார்

👑 இந்த வாளை இராவணன் போரில் உபயோகிக்க வில்லை காரணம் இந்த வாள் ஜடாயுவை கொன்ற போதே ஈசனிடம் சென்று விட்டது ஜடாயு இராவணன் வில்லையும், கவசத்தையும் உடைத்து இராவணனின் இடது கைகள் அனைத்தையும் கிள்ளி எறிகிறார் ஆனால் மீண்டும் கைகள் முளைத்தபின் இராவணன் வாள் கொண்டு வீழ்த்துவான்
( ஆரண்ய காண்டம் 51 -வது சர்க்கம் )

👑 பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் இறுதியாக தனது அஸ்திரங்கள் அனைத்தையும் தடுத்த பிரம்ம தண்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

https://m.facebook.com/story.php?story_fbid=250256242147332&id=100014888746843

முதலில் இங்கு பாசம் என்பது என்ன என்பதை பார்க்கலாம்

ஒருவரை கட்டிப்போட பயன்படும் அஸ்திரங்களே பாசங்களாகும் இவற்றில் பல வகையுண்டு தர்மபாசம், வருணபாசம், காலபாசம், இவைகள் இராமர் அறிந்ததே

இங்கு மேகநாதன் தொடுத்தது நாகபாசமாகும் அதாவது இது தொடுக்கப்பட்டால் கொடுமையான நாகங்கள் வெளிவந்து எதிரியை கட்டும் இவ்வாறே இராமலட்சுமணர்கள் கட்டப்பட்டனர்

நாகங்கள் கட்டியதால் பட்சிராஜன் கருடன் வந்த போது அது விலகியது

எனில் நாகபாசத்தை தடுக்க எந்த அஸ்திரத்தாலும் முடியாதா என்ன....?

இல்லவே இல்லை நாகபாசத்திற்கு அவ்வளவு சக்தி இல்லை

எனில் ஏன் இதை இராமபிரான் தடுக்க வில்லை சற்று தெளிவாக பார்ப்போம்

இலங்கைக்கு வானர சேனை சென்றவுடனே அவைகளை எதிர்த்து இராட்சஸர்கள் வருகின்றனர்

பகல் முழுதும் நடந்த யுத்தம் இராத்திரியிலும் தொடர்கிறது

இராத்திரி யுத்தத்தில் இந்த்ரஜித்தை அங்கதன் எதிர்க்கிறான் அங்கதன் இந்த்ரஜித்தின் குதிரைகளையும் சாரதியையும் கொல்கிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 28 -வது ஸ்லோகம்)

இதனால் இந்த்ரஜித் உடனடியாக அந்த இடத்தை விட்டு மறைகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 29 -வது ஸ்லோகம்)

அங்கதனால் தோற்கடிக்கப்பட்ட இந்த்ரஜித் கோபத்துடன் தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு திரும்பவும் யுத்தகளம் வருகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 35 -வது ஸ்லோகம்)

யுத்தத்தில் தன்னை மறைத்து இராம லட்சுமணர்களை தாக்குகிறான் பிறகு இராம லட்சுமணர்களிடம்
" யுத்தத்தில் நான் தன்னை மறைத்து கொண்டு வந்தால் 1000 கண்களையுடைய இந்திரனால் கூட என்னை பார்க்க முடியாது பின் மனிதர்களான உங்களால் முடியுமா என்ன " என கூறுகிறார்
(யுத்த காண்டம் 45 -வது சர்க்கம் 11 -வது ஸ்லோகம்)

எனில் மறைந்து நின்று தான் இராமலட்சுமணர்களை தாக்கினாரே தவிர நேரடியாக தாக்க வில்லை பிறகு எவ்வாறு நாகபாசத்தை இராமரால் தடுக்க முடியாது என கூறமுடியும்

இவ்வாறு தாக்கி இராமலட்சுமணர்கள் வீழ்ந்தபின் நான் அவர்களை யுத்தத்தில் கொன்று விட்டேன் என இராவணனிடம் கூறுகிறார்
(யுத்த காண்டம் 46 -வது சர்க்கம் 12 -வது ஸ்லோகம்)

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த்ரஜித் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து நாகபாசத்தை விட்டான் இதை இராமபிரான் எங்ஙனம் தடுப்பது

அனைத்திற்கும் ஸ்லோகம் முதற்கொண்டு கூறப்பட்டுள்ளது இங்கு கூறியதில் ஏதேனும் பிழை இருந்தால் ஆதாரத்துடன் தெளிவாக கூறலாம்


கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

விடை : ஸ்ரீ இராமபிரான்

இராமபிரானிடம் நட்பு பூண்டதிற்கு பின்னரும் சுக்ரீவனுக்கு ராமரால் வாலியை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது

காரணம் வாலி சாமான்ய வானரமே அல்ல எதிர்த்து நிற்பவரின் பாதி பலம் கிட்டும் என்றாலும் சாதாரணமாகவே வாலியின் பலம் அளவிட முடியாதது

ஒரு முறை தேவர்கள் பாற்கடலில் சில முக்கிய ரத்தினங்களையும் புதையலையும் வேண்டி கடைந்தனர் ஆனால் அவர்களால் அதை அடைய முடியவில்லை

அதன்பிறகு வாலி தனியாளாக கடைந்து அந்த புதையலையும் இரத்தினங்களையும் பெற்றார் அப்படி தோன்றிய ஒரு இரத்தினத்தில் வந்த அப்சரஸே வாலியின் மனைவி தாரா ஆவார்

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் சண்டையில் மட்டுமே வாலிக்கு பாதி பலம் கிட்டும் ஆனால் தனியாக கடைந்ததை வைத்து பார்த்தால் வாலியின் பலம் புரியும் இவ்வாறு ஹனுமானும் வாலியையும் தவிர மற்றோரால் இயலாது

இதனாலே சந்தேகம் கொண்ட சுக்ரீவன் இராமபிரானிடம் வாலி எந்த வில்லும் இல்லாமல் தனது வெறும் கையாலேயே எறியும் பாணம் ஒரு சால மரத்தை துளைத்து வெளிவந்து மற்றொரு மரத்தை துளைத்து நிற்கும்

அவ்வாறு தமது பாணம் ஒரு சாலமரத்தை துளைத்து வெளிவந்தால் தாம் வாலியை வதைக்க வல்லவர் என நான் நம்புவதாக கூற இராம பிரானும் இசைகிறார்

இதனால் இராமபிரான் வில்லில் இருந்து தொடுக்கும் பாணம்

"" ஒரு சால மரத்தை மட்டுமல்லாது ஏழு சாலமரங்களை துளைத்து ஒரு மலையையும் துளைத்து வெளிவருகிறது பின் பூமியில் புகும் இராமபாணம் பூமியை துளைத்து வெளிவந்து பிறகு தனது இருப்பிடமான இராமபிரானின் அம்பறாத்தூணியில் அமர்கிறது ""

இதை கண்ட சுக்ரீவன் இராமனின் பாதத்தை ஒடிவந்து பிடிக்கிறார்

இக்காரணத்தாலேயே இராமபிரானுக்கு பிரசண்ட புஜ பராக்ரமன் என்ற பெயர் வந்ததாக அனுமான் உரைக்கிறார் 

👑 முப்பத்து முக்கோடி தேவர்கள்


🌷முப்பத்து முக்கோடி என்றவுடன் நம் நினைப்பது அவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்பதே ஆனால் உண்மை யாதெனில் இங்கு குறிப்பிடப்படும் கோடி என்பதன் பொருள் முக்கியமான மற்றும் தலைமையை குறிக்கிறது

🍂 சமஸ்கிருதத்தில் Trayastrimsati Koti என்ற சொல்லை மொழிமாற்றம் செய்யும்போது முப்பத்து மூன்று கோடி என செய்யப்பட்டுள்ளது ஆனால் கோடிக்கு பல பொருள்கள் உள்ளன


🌺 அதிதியின் புத்திரர்கள் ஆதித்யர்கள் பன்னிருவர்

🌺 ஈசன் படைத்த ருத்ரர்கள் பதினொருவர்

🌺 தர்மதேவதையின் மகன்கள் வசுக்கள் எட்டு பேர்

🌺 மற்றும் சூரியனின் மகன்களான அஸ்வினிதேவர்கள் இருவர்

{மன்வந்திரம் சிறு விளக்கம்

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம்

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல்

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்}

🌺 நாம் வாழும் இந்த மன்வந்திரத்திலேயே இந்த 33 பேர் ஆவர் இதே போல ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் இந்த தலைமை மாறும் அதாவது போன மன்வந்திரத்தில் ஐந்து கனதேவதைகள் முறையே அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் 8 பேர்கள் இருந்தனர் ஆனால் இந்த மன்வந்திரத்தில் இந்த 33 பேர்கள் ஆவர்

🌻 இவர்களை பற்றியும் மேலும் சில முக்கியமானவர்களை பற்றி தற்போது பார்ப்போம்


💐 சப்தரிஷிகள்
       🌼 ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் சப்தரிஷிகளின் பொறுப்பு இன்றியமையாதது ஆகும்
       🌼 முதல் மன்வந்திரத்தில் இவர்கள் பிரம்மாவின் குமாரர்களாக அவதரித்தனர் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தங்களின் தவத்தில் உயர்ந்தவர்கள் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாவர்
        🌼 உண்மையில் கடவுள்களான மும்மூர்த்திகள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்
       🌼 சப்தரிஷியாக ஆகவேண்டுமானால் ஒருவர் தவத்தில் சிறந்து விளங்கி பெரும் தவபலம் பெற்று பிரம்மரிஷியாக வேண்டும்
       🌼 இவர்கள் சிரஞ்சீவிகள் போல கல்பாந்த காலம் அதாவது கல்பகாலம் முடிந்தபின் வரும் பிரளயம் வரை இருப்பர்
       🌼 ஆனால் இவர்களுக்கு ஒரு மன்வந்திர காலம் மட்டுமே சப்தரிஷி பட்டம் மற்றும் முக்கிய பொறுப்புகள் இவ்வாறாக ஒவ்வொரு மன்வந்திரமும் சப்தரிஷிகள் மாறுவார்கள்
      🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் ஆகியோர் சப்தரிகளாவர்
       🌼 இனிவரும் அடுத்த மன்வந்திரத்தில் தீப்திமான், காலவர், பரசுராமர், கிருபர், அஸ்வத்தாமன் , பாரதம் எழுதிய வியாசர், ருஷிய சிருங்கர் ஆகியோர் சப்தரிஷிகளாவர்

👑 மனு
        🌺 மனுவே மன்வந்திரத்தின் அதிகாரியாவார் இவரே முதலில் படைக்கப்பட்ட மனிதன் ஆவார் மனுவின் வம்சமாதலால் நாம் மனிதர்கள் என அழைக்கப்படுகிறோம்
        🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் சூரியனின் மகனான சிரார்த்த தேவன் மனுவாவார்

👑 இந்திரன்
       🌺 இந்திரன் மூவுலகங்களுக்கும் அதிபதி ஆவார் தேவர்கள், சொர்க்கம் மற்றும் மூவுலங்களுக்கும் இவரே தலைவர்
       👑 பொதுவாக நூறு அசுவமேத யாகங்களை செய்தவர் இந்திர பதவியை அடைவர்
       🌺 மூவுலக அதிபதி என்பதால் இந்திரனை வெற்றிகொண்டு அந்த இடத்தை பிடிக்கவே அசுரர்கள் முயல்வார்கள்
       🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் அதிதியின் புதல்வரான புரந்தரன் இந்திரன் ஆவார் மேலும் அடுத்த மன்வந்திரத்திற்கு வாமனரால் பாதாள லோகத்திற்கு தள்ளப்பட்ட பலிச்சக்ரவர்த்தி இந்திரனாவார்

☀ ஆதித்யர்கள்
            ⛅ அதிதியின் புதல்வர்களாதலால் இவர்கள் ஆதித்யர்கள் என்றழைக்கப்படுகின்றனர்
            💧 இவர்கள் 12 பேரும் முறையே 12 மாதங்களுக்கு பொறுப்பாவார்கள் மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் சூரியனாய் இருப்பர்
            ⚡ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுள்ளனர் செடி வளர்வதிலிருந்து கர்ப்பத்தில் குழந்தை வளர்வது வரை இவர்களுக்கு பல வேலைகள் தரப்பட்டுள்ளனர்
            🌾 புரந்தரன், வருணன் முதலியோர் ஆதித்யர்களே இவர்களின் பொறுப்பு மற்றும் சக்திகளை விளக்க ஒவ்வொரு ஆதித்யருக்கும் ஒரு பதிவு தேவைப்படும் இங்கு நான் கூறியது மிகக்குறைவே

ருத்ரர்கள்
            🍃 இவர்களை பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டுள்ளது
            🌺 பிரம்மாவின் கோபத்தில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார் மேலும் பிரம்மாவின் உடலிலிருந்து ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற கதையும் உண்டு
            ☁ ஜந்து கர்மேந்திரங்களாகிய பேசுவது, கை (கையால் செய்யும் வேலைகள்), கால் (நடத்தல்), ஆசனவாய் மற்றும் உறுப்பு
            ❄ ஐந்து ஞானேந்திரங்களாகிய கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல்
            🌙 மற்றும் கர்மேந்திரமும் ஞானேந்திரமும் சேர்ந்ததாகிய யோசித்தல்
            🌋 இவை பதினொன்றையும் பதினொரு ருத்ரர்கள் கவனித்து கொள்வர்

🌌 வசுக்கள்
           🍀 தட்ச பிராஜிபதி தனது பத்து மகள்களை தர்மதேவதைக்கு மணமுடித்தார் அவர்களுக்கு பிறந்தவர்களே வசுக்கள் 8 பேர்
           🍁 இவர்கள் எண்மரும் முறையே பூமி, காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன், அண்டம் மற்றும் நட்சத்திரங்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுள்ளனர்
           🌺 இங்கு பீஷ்மரை பிறந்த பிரபாசன் எனும் வசுவின் புத்திரரே தேவசிற்பி விஸ்வகர்மா ஆவார்
           🌺 மன்மதனும் தர்மதேவதையின் புத்திரனே

👑 அஷ்டதிக் பாலகர்கள்
           🎆 குபேரன், எமன், இந்திரன், வருணன், ஈசானன், அக்னி, வாயு, நிருதி ஆகிய இவர்கள் எண்மரும் அஷ்டதிக் பாலகராவர்
           🌴 இவர்கள் பிரபஞ்சத்தின் எட்டு திசைக்கும் காவலராவர்

🌹 நவகிரகங்கள்
           🍃 கசியப்பரின் புதல்வரான சூரியன்
           🌼 அத்ரி மஹரிஷியின் புதல்வரான சந்திரன்
           ❄ ஈசனின் வியர்வை துளியில் பிறந்த செவ்வாய்
           🌺 சந்திரனின் புதல்வரான புதன்
           🌺 ஆங்கிரச மஹரிஷியின் புதல்வரும் தேவகுருவுமாகிய பிரகஸ்பதி
           🌺 பிருகுமுனிவரின் புதல்வரும் அசுரகுருவான சுக்ராச்சாரியார்
           🌾 சூரிய புதல்வனும் ஈசனின் சீடனுமான சனீஸ்வரர்
           🍁 அமிர்தம் உண்டவர்களும் அசுர கிரகங்களுமான ராகு-கேது
           👑 இவர்கள் ஒன்பது பேரும் நவகிரகங்களாவர் ஒரு மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்றப்படி அவர்களுக்கு பலன்களை வழங்குகின்றனர்

🌼 கந்தர்வர்கள் - இவர்கள் கசியப்பர் மற்றும் அரிஷ்டா தேவிக்கு பிறந்தவர்கள் இவர்கள் தேவர்களுக்கு உதவியாளர்களாக கருதப்படுகின்றனர்

🌼 அசுரர்கள் - இவர்களும் தேவர்களுக்கு இணையான சக்தியோடு பிறந்தவர்களே ஆனாலும் எண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்
இவர்கள் இராவணனின் தாத்தாவான புலஸ்தியரின் வம்சத்தில் வந்தவர்கள்

🌼 தைத்தியர்கள் - இவர்களும் அசுரர்கள் போலவே ஆனால் கசியப்பருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் திதியின் மைந்தர்களாதலால் இவர்களின் வம்சம் தைத்தியர்கள் என்றழைக்கப்படுகிறது

🌼 தானவர்கள் - கசியப்பருக்கும் தனுவிற்கும் பிறந்தவர்கள் தனுவின் மைந்தர்களாதலால் தானவர்கள் என இவர்களின் வம்சம் அழைக்கப்படுகிறது

🌼 யட்சர்கள் - இவர்கள் பூமியில் உள்ள வளங்களை காப்பவராக கருதப்படுக்கின்றனர் குபேரனும் யட்சரே இவரே யட்சர்களின் தலைவராவார்

🌼 ராட்ஷசர்கள் - பூதங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்

👑 அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யட்சர்கள், இராட்ஷசர்கள் இவர்களை பொறுத்தவரை அனைவருமே மோசமானவர்கள் என கூறமுடியாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் அதாவது நல்லவரும் இவர்களில் உண்டு

🌺 கிம்புருஷர் - உடலின் மேல்புறம் சிங்கமாகவும் கீழே மனிதனாகவும் இருப்பவர்கள் (நரசிம்மர் போல)

🌺 கின்னரர்கள் - உடலின் மேற்புறம் மனிதனாகவும் கீழே குதிரையாகவும் இருப்பவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவர்கள் அனைவருக்கும் (கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர் தவிர) தனித்தனி லோகங்கள் உண்டு இவர்கள் மும்மூர்த்திகளின் ஆணையின் கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்ட செயல்களை செய்கின்றனர்

ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே அதாவது தேவர்களின் தலைவன் இந்திரன் முதல் கந்தர்வர்கள் வரை புவியில் மனிதர்களாய் பிறந்தவர்களே

எனில் இந்நிலையை இவர்கள் எவ்வாறு எட்டினர் என்ற கேள்வி எழுகிறதல்லவா

இவர்கள் அனைவருமே தங்கள் செய்த புண்ணியத்தாலேயே இந்த நிலையை எட்டினர் மேலும் இதன்பிறகு இறைவனிடம் சேர்வர்

இதை பல இடங்களில் அவர்களே கூட ஒத்துகொண்டுள்ளனர்

அனைத்தும் கர்மவினையே

நரகத்தில் சேர்ப்பதும் கர்மாவே
இந்திரனாய் ஆக்குவதும் கர்மாவே

👑 நர - நாராயணர்கள் ( முழுநீள பதிவு நேரம் ஒதுக்கி படிக்கவும் )


👑 மஹாபாரதத்தின் முதல் மற்றும் ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கத்திலும் இவர்களை வணங்கியே மஹாபாரதம் இன்றும் படிக்கப்படுகிறது

🌼 பாகவதம் இவர்களை தர்மதேவதைக்கும் தட்ச பிராஜாதிபதியின் மகளான மூர்த்திக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்று கூறுகிறது [1] மகாபாரதத்தில் நாராயணர் மட்டுமே தர்மதேவதைக்கு பிறந்தார் எனவும் நாராயணரின் தபோ பலத்தால் நரன் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2]

🌹 ஐயக்ரீவர் என்றும் வேதம் ஒதும் இடமும் சிருஷ்டியில் என்றும் அழியாததுமான பத்ரிகாஸ்ரமமே இவர்களின் இருப்பிடம்

🌹 ஒவ்வொரு யுகமும் உலக காரியங்களுக்காக நர-நாராயணர்கள் பூமியில் அவதரிக்கின்றனர் (2)

🌹 பழங்காலத்தின் தெய்வங்கள் இவர்களை யுத்தத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் இணைந்து வந்தாலும்   வெல்லமுடியாதவர்கள் தேவர்களில் இருந்து கந்தவர்கள், அசுரர்கள், யட்சர்கள், நாகர்கள், மனிதர்கள் என அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் (14)

🌹 தங்களின் தவம் மூலமாக உயர்நிலையை இவர்கள் அடைந்தனர் பிரளயத்தின்போது கூட இவர்கள் அழியமாட்டார்கள்
இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஒரு மன்வந்திரமே வாழ்வு
சிரஞ்சீவிற்கு கூட ஒரு கல்ப காலமே வாழ்வாகும்
ஆனால் நர-நாராயணர்கள் பத்ரி ஆஸ்ரமத்தில் பிரம்மாவை போன்று அழியாத நித்ய வாழ்வு கொண்டு இன்றும் அகில நன்மைக்காக தவம்புரிகின்றனர்[3]

🌹 தவம்புரியும் ரிஷிகளின் சக்தி ஒப்பற்றதாகும் இந்த சக்தியை ஆதாரமாக கொண்டு சிருஷ்டியை இயக்க அவதரித்தவர்களே நர-நாராயணர்கள்

🌹 பாற்கடல் கடைந்து அமிர்தம் வெளிப்பட்டபோது நடந்த தேவாசுர போரில் அசுரர்களில் பெரும்பான்மையினரை வதைத்தவர்கள் நர-நாராயணர்களே
பிறகு இந்திரன் அமிர்தத்தை காக்கும்பொருட்டு அதை நரரிடம் தருகிறார் (4)

🌼 இருவரும் ஈருடலில் இருக்கும் ஓர் ஆன்மாவாவர் (5,6)

🌹 தவத்தை கலைக்க மன்மதன் உட்பட பல அப்சரஸ்கள் உடன்செல்ல தனது தொடையில் தட்டி ஊர்வசி எனும் அப்சரஸை உருவாக்கியவர்கள் அப்சரஸ்களே ஊர்வசியை கண்டு மயங்கினர் என்பதே உண்மை ஊர்வசி நடந்துசெல்கையில் அவள்பின்னே அனைத்து அப்சரஸ்கள் உட்பட மன்மதனே பின்னே செல்லும் அழகை உடையவள் ஊர்வசி (15)

👑 பிரகலாதனுக்கு அருள்புரிந்த கதை (வாமன புராணம்) [7]
      🌻 உலகில் சிறந்த தீர்த்தம் எதுவென பிரகலாதன் கேட்கையில் நைமிசாரண்யமே சிறந்தது என அறிய அங்கு நீராட செல்கிறார் அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது
      🌻 அங்கு ஒரு மரத்தில் எள் அளவு கூட இடைவெளியில்லாமல் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான அம்புகள் குத்திநின்ற காட்சி அவரை திகைப்பிற்கு உள்ளாக்கியது இதை கண்டு யாரென தேடுகையில் நர நாராயணர்கள் நிறைந்த அம்பறாத்தூணியுடனும் திவ்ய தனுசுடனும் தவம்புரியும் காட்சியை கண்டார்
      🌻 அவரின் பார்வையில் அவர்கள் வில்லுடன் இருந்ததால் போலித்துறவிகளாக தெரிந்தனர் தவம்செய்யும் முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள் அவர்களுக்கு ஏன் ஆயுதமென எண்ணினார் இதனால் நர - நாராயணர்களிடம் கேட்க இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை யுத்தமாகியது
      🌻 முதலில் நரனுடன் யுத்தம் தொடங்குகிறது
பிரகலாதன் ஏவும் அனைத்து பாணங்களும் நரனின் பாணத்தால் செயலற்றதாகின்றன இதை கண்ட பிரகலாதன் இவர்கள் சாமான்யர் இல்லை என்பதால் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார் நரன் இதை நாராயண அஸ்திரம் கொண்டு எளிதாக தடுக்கிறார்
               🌻 இதை அடுத்து சக்தி வாய்ந்த ஆக்நேயத்தை பிரகலாதன் விட ஈசனின் நெற்றிக்கண்ணின் சக்திகொண்ட மஹேஸ்வர அஸ்திரத்தை கொண்டு தடுக்கிறார் அச்சமயத்தில் சூரியன் அஸ்தமனமாக நரன் யுத்தத்தை நிறுத்துகிறார்
               🌻 அடுத்த நாள் யுத்தம் தொடங்க தற்போது நாராயணர் யுத்தகளம் வர யுத்தம் தொடங்குகிறது பாணங்கள் பயனற்று போக தனது கதாயுதத்தை எடுத்து நாராயணரின் தலையில் அடிக்க அது சுக்குநூறாகிறது
               🌻 இதுகண்டு அதிர்ச்சியடைந்த பிரகலாதன் பகவான் விஷ்ணுவை தியானிக்கிறார் பக்தியின் தூண்டுதலால் அங்குதோன்றிய பரந்தாமனிடம் என்னால் ஏன் இவர்களை வெல்லமுடியவில்லை எனக்கேட்க
" இவர்களை என் அம்சமென்றறிவாய் அவர்களை யுத்தத்தில் வெல்லமுடியாது பக்தியினால் மட்டுமே வெல்ல முடியும் " எனக்கூறுகிறார்
              🌻 இதைகேட்ட பிரகலாதன் ஆட்சியின் பொறுப்பை அந்தகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவியை காட்டிற்கு வந்து பிரார்த்திக்கிறார் இதனால் மகிழ்ந்த அவர்கள் தோன்ற " தான் அவர்களை ஏசியதையும் யுத்தம் செய்ததையும் பொறுத்தருள வேண்ட அவர்கள் அவ்வாறே ஏற்று வரம் வேண்ட கூற உங்ளையும் மகாவிஷ்ணுவையும் எக்காலத்திலும் மறவா வரம் கேட்கிறார்
              🌻 அரசனை காணாது அந்தகன் காடு வந்து மீண்டும் அரசாள வேண்ட அதை மறுக்கும் பிரகலாதன் எனக்கு எதுவும் வேண்டாமென இராஜ்யத்தை அந்தகனிடம் அளித்துவிட்டு வனம்செல்கிறார்

👑 ஈசனின் திருவிளையாடல் (8)
              ⚡ தட்ச பிராஜாதிபதியின் யாகம் நடந்த இடத்தையே அழித்த பின் ஈசனின் திரிசூலம் பத்ரிகாஸ்ரமம் நோக்கி வருகிறது
              ⚡ நாராயணரின் மார்பில் திரிசூலம் தாக்க அதை தவவலிமை கொண்டு தடுத்த நாராயணர் மறுபடியும் ஈசனின் கைக்கே திருப்புகிறார் இதனால் நாராயணரை நோக்கி ஈசன் வர படபடப்பாக வந்த ஈசனின் கழுத்தை பிடிக்கிறார் இதனால் அவர் கழுத்து நிறம் மாறுகிறது
              ⚡ இதனால் நரர் தர்ப்பையை எடுத்து அதை கோடாலியாக்கி ஈசனின் மேல் விட அது சுக்குநூறாகிறது இதனால் ஈசனுக்கு கண்டபரசு என்ற பெயர் உண்டு
              ⚡ இந்த யுத்தத்தால் பிரபஞ்சமே நடுங்க பிரம்மதேவர் தோன்றி இருவரையும் தடுக்கிறார் இந்த சண்டை தவத்தின் சக்தியை காட்ட நிகழ்ந்ததாக கருதப்படுகிறது
              ⚡ ஈசனின் திரிசூலம் தாக்கியதால் நாராயணரின் மார்பில் ஸ்ரீ வத்சம் என்ற மச்சமும்
              ⚡ நாராயணரின் கையால் பிடிக்கப்பட்டதால் ஈசனின் கழுத்தின் நிறம் மாறியது இவ்வாறு இருவரும் தங்களுக்குள் அடையாளத்தை உண்டு பண்ணிகொண்டனர்
              ⚡ மகாதேவனான ஈசனை பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் நர - நாராயணர்களை தவிர தேவர்களாலோ, சித்தர்களாலோ, கந்தர்வர்களாலோ கூட அவ்வளவு எளிதாக காணமுடியாது இவர்கள் நால்வர் மட்டுமே ஈசனை எளிதில் காணக்கூடியவர்களாக உள்ளனர் (9)

              ⚡ பாசுபதம் தரும்போது கூட ஈசன் அர்ஜுனனின் முன்ஜென்மத்தை பற்றி தெளிவாக உரைக்கிறார் உன்னால் நான் யுத்தத்தில் திருப்தி செய்யப்பட்டேன் என ஈசனே கூறுவார் மேலும் அர்ஜுனனின் தவத்தை மெச்சி வாரியணைப்பார் (17)
              ⚡இதனால் ஈசனே ஜயத்ரதனுக்கு வரம்அளிக்கும்போது அர்ஜுனன் தவிர்த்து மற்ற நால்வரை உன்னால் தடுக்க முடியும் என்றே கூறி வரம் அளித்தார் (10)
              ⚡ மூவுலகிலும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை அண்டத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டவர்கள் பழமையிலும் பழமையானவர்கள் முனிவர்களில் சிரேஷ்டர்கள் நர-நாராயணர்களை ஆட்சி செய்பவர் எவரும் இல்லை அவர்களே அனைத்தையும் ஆட்சிசெய்கிறார்கள் இவர்களின் கோபம் பேரழிவை தரவல்லது (13)
              ⚡ ஈசன் சர்வத்தையும் நாசம்செய்யவல்ல பாசுபதத்தை நர-நாராயணர்கள் மீது விட அவர்கள் தங்களின் தவபலத்தால் தன்னுள் அடக்கியதாகவும் விக்கிபீடியா முதலிய பலவற்றில் கூறப்பட்டாலும் நான் தேடியவரை அதற்கான ஆதாரம் கிட்டவில்லை

🌼 நாரதருக்கு உபதேசம்

🌼 நாரதருக்கு மகாவிஷ்ணுவை காணும் வழியை எடுத்துரைத்தவர்கள் நர-நாராயணர்களே இதனால் தரிசனம் கிட்டியவுடன் நாரதர் வந்தது நர நாராயணர்களிடமே அங்கு அவருக்கு ஞானோபதேசம் வழங்கப்பட்டது ஆயிரம் வருடங்கள் அங்கு இருந்த பின்னே அவர் அவருடைய ஆஸ்ரமம் சென்றார்

👑 தம்போத்பவனின் செருக்கை அடக்குதல் (11)
                   🌺 தம்போத்பவன் எனும் அரக்கன் உலகில் அனைத்து அரசர்களையும் வென்று தனக்கு நிகரானவன் இல்லை என இருமாந்து இருந்தான்
                   🌺 ஒரு முறை ஒரு பிராமணனிடம் தம்போத்பவன் தன்னைவிட சிறந்தவர் உண்டோ எனகேட்க பிராமணன் நர - நாராயணர்களை விட சிறந்தவர்கள் இல்லை எனக்கூற தம்போத்பவன் தன் படையுடன் அவர்கள் ஆஸ்ரமம் சென்று அவர்களை யுத்தத்திற்கு அழைக்கிறான்
                   🌺 நர-நாராயணர்கள் எவ்வளவு மறுத்தும் தம்போத்பவன் விடுவதாக இல்லை இதனால் நரன் கைநிறைய புற்கூச்சிகளை எல்லாம் சேர்த்துவைத்து கொண்டு தம்போத்பவனை யுத்தத்திற்கு அழைக்கிறார் தம்போத்பவன் தனது ஆறுவகை படைகளுடன் நரனை வீழ்த்த விரைகிறார்
                   🌺 ஆனால் நரனிடம் அது பலிக்கவில்லை நரனின் புற்குச்சிகள் படையை நாசம்செய்ததோடல்லாமல் தம்போத்பவனையும் வீழ்த்தியது இதனால் தம்போத்பவன் நரனின் பாதத்தில் விழ அவர் அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார்

👑 புவியில் அவதரித்த நர - நாராயணர்கள் (12)
          🌼 ஒருமுறை பிரம்மதேவரை தரிசிக்க பிரகஸ்பதி மற்றும் சுக்ராச்சாரியர் மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் செல்கையில் அந்த இடத்தில் அனைவரின் சக்தியையும் இழுப்பது போல் தேஜசுடன் நர - நாராயணர்கள் அந்த இடத்தை விட்டு சென்றனர்
          🌼 இதைகண்ட தேவர்களின் குருவானவர் பிரம்மதேவரிடம் தங்களை வணங்காமல் இங்கிருந்து செல்லும் இவர்கள் யாரென கேட்க அதற்கு பரமபிதா தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் அசுரர்களின் அழிவுக்காகவே இவர்கள் நிலைத்திருக்கிறார்கள் எனக்கூறுகிறார்
          🌼 இதைகேட்ட இந்திரன் பிரகஸ்பதி உடன்சென்று நர-நாராயணர்களிடம் அசுரர்களின் அழிவை வரமாக கேட்கிறான்
          🌼 நர-நாராயணர்கள் அவ்வாறே வரம் அளிக்கின்றார்கள் அவ்வாறே வாசுதேவன் எண்ணற்ற அசுரர்களை வேரறுக்கிறார் அர்ஜுனன் நிவாதகசர்கள் காலகேயர்கள் மற்றும் பூமியில் அவதரித்த அசுரர்களையும் வீழ்த்தினார்
          🌼 பூதேவியின் பாரம்குறைக்க கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததுவே அவ்வாறே பல வரங்களால் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதே

👑 பத்ரிகாஸ்ரமம் (16)
            👑 இன்றைய பத்ரிநாத் கோவிலே பத்ரியாஸ்ரமம் ஆகும் இங்கே இன்றும் நர-நாராயணர்கள் தவம்செய்வதாக நம்பப்படுகிறது
            👑 வைஷ்ணவத்தில் இத்தலம் வைகுண்டமாக கருதப்படுகிறது வாழ்நாளில் ஒருமுறையேனும் வரவேண்டும் என நினைக்கும் ஸ்தலம்
            👑 ஸ்காந்த புராணத்தின்படி பத்ரிகாஸ்ரமம் சொல்லமுடியாத அளவு பெருமை உடையது சத்ய யுகத்தில் இங்கு வந்தாலே இறைவனை காணலாம்
            👑 சாலக்கிரமத்தினால் பிரம்மா உருவாக்கிய சிலையே மூலவராவர்
            👑 மூலவருக்கு இடது பக்கத்தில் நின்ற கோலத்தில் நர-நாராயணர்கள் அங்கு காட்சி தருகின்றனர்
            👑 இமயத்தில் உள்ள பத்ரிகாஸ்ரமமே நரன் மலை மற்றும் நாராயணர் மலை என்றழைக்கப்படும் இரு பனிசூழ்ந்த மலைகளுக்கு நடுவில் தான் உள்ளது
            👑 நரன் மலை அரிய பொக்கிஷங்கள் நிறைந்ததால் குபேர மலையெனவும் அழைக்கப்படுகிறது
            👑 இன்றளவும் நர-நாராயணர்கள் சிருஷ்டி நலனுக்காக இங்கே தவம்புரிவதாக ஐதீகம் கலியுகத்தில் இவர்களை காண்பது இயலாது
            👑 பிரம்மாவின் கூற்றுப்படி இவர்கள் வேறு இடத்தில் இருந்தனர் ஆனால் பூலோகத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்ததால் புனிதமான இடமான பத்ரிகாஸ்ரமத்தை அமைத்தனர்
            👑 இங்கு தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மஹாபாரதத்தை எழுதிய இடமும் உள்ளது
            👑 மேலும் பாண்டவர்கள் அவதரித்த இடமும் இங்கே தான் மேலும் சொர்க்கம் சென்றது இவ்வழியில் தான்
       
👑 மேற்கூறியவை ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கீழ் தரப்பட்டுள்ளன
A = கும்பகோண பதிப்பு
B = கங்குலி மொழிப்பெயர்ப்பு
C = Bori critical edition (சமஸ்கிருதம்)

1.
http://bhagavata.org/canto11/chapter4.html

2.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZWk1tOUZKN3UtREk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-202.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs07172.htm

3.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUmdxNTRqV3pJNUk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section97.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05095.htm

4.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeW9lZktuZ1BrYWs/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section19.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01017.htm

5.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

6.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03013.htm


7.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZV2JmRE9HQ1lZeXM/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZckNYSHFzSlgzZEk/view?usp=drivesdk

8.
A:
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZMXNiYmxCVC1HbVE/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZQ0ppSjJmdmg5SnM/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZU2JSUEJYeTFBSGM/view?usp=drivesdk

B.
http://www.sacred-texts.com/hin/m12/m12c042.htm#fn_293

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs12330.htm


9.
B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section111.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05109.htm

10.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6Zd1lKZ1ByQVhsWU0/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section270.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03256.htm

11.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZNksxRWFPZzIzTVU/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section96.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05094.htm

12.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUWxoTVhjS1FSOEU/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZVlMzMjFFSWxXa2M/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

13
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZE9sNnZZdzIzMVk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-87.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs08063.htm

14
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeWlDNmtQWWFwaDg/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section230.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01219.htm

15
https://books.google.co.in/books?id=UDCMCgAAQBAJ&pg=PT325&lpg=PT325&dq=urvashi+birth+bhagavata&source=bl&ots=87RQyWKrQI&sig=7sMtxFfAgFyf9e6Xi87hzjWrp0I&hl=ta&sa=X&ved=0ahUKEwiv_b26yY3WAhVBUbwKHYCXDR44ChDoAQgfMAI#v=onepage&q=urvashi%20birth%20bhagavata&f=false

16
http://www.thesacredjourneys.com/badrinath/

17
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZlJzMllZOURlY2c/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section40.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03041.htm

Wednesday, July 12, 2017

👑 விரத வீரர் கங்கைமைந்தர் பீஷ்மர் ( முழுநீள பதிவு 5 நிமிடம் ஒதுக்கி படிக்கவும் )


🌹 வசிஷ்டரின் கன்றான நந்தினியை அஷ்ட வசுக்கள் திருடியதால் அவர்களை பூமியில் பிறக்குமாறு சபிக்கிறார் வசிஷ்டர்

🌹 இதில் தன் மனைவியின் வற்புறுத்தலால் இந்த திருட்டிற்கு தலைமை தாங்கிய தியா எனும் வசுவே பீஷ்மராக அவதரித்தார் மற்ற வசுக்கள் துணை நின்றனர் இதனால் அவர்கள் ஏழு பேரும் பிறந்தவுடன் மரணிப்பர் என்றும் பீஷ்மனே பல காலம் வாழ்வான் என்றும் சாபம் அளித்தார்

🌸 இந்த சாபத்தினால் சந்தனுவிற்கும் கங்கைக்கும் அஷ்ட வசுக்கள் மகனாக அவதரித்தனர் சாபத்தின் காரணமாக ஏழு பேரை பிறந்தவுடன் கொல்கிறார் கங்கா தேவி ஆனால் எட்டாவது குழந்தையை கொல்ல செல்கையில் தன் அளித்த வாக்கை மீறி கங்கையை தடுக்கிறார் சந்தனு

🌼 இதனால் உண்மையை கூறும் கங்கா தேவி தன் மகன் தேவவிரதனை வளர்த்து சந்தனுவிடம் அளிப்பதாக வாக்களித்து தன் மகனை அழைத்து கொண்டு செல்கிறார்

🌼 இவ்வாறு செல்லும் பீஷ்மர்
 ---- வேதங்களையும் வேதாங்கங்களையும்  வசிஷ்டரிடமும்

 ---- அனைத்து சாஸ்திரங்களையும் சுக்ராச்சாரியரிடம்

 ---- அரசனுக்குரிய கடமைகள் மற்றும் தர்மங்களை பிரகஸ்பதியிடமும்

 ---- சஸ்திரங்கள் மற்றும் அஸ்திரங்களை பரசுராமரிடமும் சிஷ்யனாகி கற்றார்

(பிற்காலத்தில் சியவனரிடம் வேதாங்கங்களையும்
சனத்குமாரரிடம் ஆத்மவித்தையையும்
மார்க்கண்டேயரிடம் ஸந்யாச தர்மத்தையும்
இந்திரனிடம் மேலும் அஸ்திரங்களையும் கற்றார்)

🌸 ஒரு நாள் வேட்டைக்கு செல்லும் சந்தனு கங்கையின் பிரவாகத்தை அம்புகளை கொண்டு தடுக்கும் இளைஞனின் தீரத்தை கண்டு வியக்கிறார் பின்தோன்றும் கங்காதேவி தான் அளித்த வாக்கின்படி தேவவிரதனை ஒப்புவிக்கிறார்

🌸 தன் மகனை வாரியணைத்த சந்தனு தேவவிரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து மகிழ்கிறார் இந்நிலையில் மீனவ பெண்ணான சத்தியவதி மீது காதல் கொள்கிறார் சந்தனு

🌹 ஆனால் சத்தியவதியின் வளர்ப்பு தந்தையான செம்படவனோ " தன் மகளை சந்தனுக்கு அளித்தாலும் தேவரதனே அரசனாவான் என் மகளின் சந்நதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும் ஒரு வேளை தேவரதன் அரச பதவியை விட்டுகொடுத்தாலும் அவனது சந்ததியினர் பின்னாளில் ஆட்சியை கைப்பற்றுவர் " என கூறி மறுக்கிறார்

🌺 இதனை கேள்வியுற்ற பீஷ்மர் "தான் இனி அரசனாக இல்லை அஸ்தினாபுர அரியணையின் சேவகனாக இருப்பேன் என்றும் இனி வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பேன்" என்றும் சபதம் எடுக்கிறார்

🌸 உண்மையில் பீஷ்மர் செய்த சபதம் எந்த ஒருவராலும் இதுவரை செய்யப்படாதது தந்தையின் காதலுக்காக தனக்கு விவாகம் வேண்டாமென்றும் இனி சேவகனாய் இருப்பேன் என்றும் சபதம் செய்வது பீஷ்மரின் விரதத்தை எடுத்துரைக்கிறது இதனால் தேவவிரதனான இவர் பீஷ்மர் இனிவரும் காலங்களில் பீஷ்மர் என்றழைக்கப்பட்டார்

🌺 இதனை கண்ட சந்தனு தன் மகனின் தியாகத்தை மெச்சி "விருப்ப மரணம்" என்ற வரத்தை அளிக்கிறார் (எப்போது மரணிக்க வேண்டும் என நினைக்கிறாறோ அப்போதே மரணம் நிகழும்)

🌺 பின் சத்தியவதியை சந்தனு மணமுடிக்கிறார் அவர்களுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர் மூத்தவனான சித்ராங்கதன் அதே பெயருடைய கந்தர்வனால் கொல்லப்பட இளையவனான விசித்திர வீரியனுக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடக்கிறது

🌺 விசித்திர வீரியனுக்கு மணமுடிக்க நேரம் வந்துவிட்டதாக அறியும் தாய் சத்தியவதி பீஷ்மரை காசி தேசத்தில் நடக்கும் சுயம்வரத்தில் காசி அரசனின் மகள்கள் மூவரையும் கவர்ந்துவர ஆணை பிறப்பிக்கிறார்

🌺 அவ்வாறே செல்லும் பீஷ்மர் முத்தேவியரையும் கவர்கிறார் இதனால் அங்கு இருந்த அரசர்களுக்கும் பீஷ்மருக்கும் யுத்தம் வருகிறது கங்கை மைந்தன் ஒரே தேரில் அனைத்து அரசர்களையும் வீழ்த்துகிறார்

🌺 முத்தேவியரில் மூத்தவளான அம்பை சால்வனை விரும்பியதாக கூற அவ்வாறே அவளை விடுவிக்கிறார் ஆனால் சால்வனோ அம்பையை ஏற்க மறுக்கிறார் இதனால் அம்பை தன் வாழ்வு நாசமானதற்கு காரணம் பீஷ்மரே என முடிவுக்கு வருகிறார்

🌺 இதனால் கடும்தவம் செய்து முருகப்பெருமானை மகிழ்விக்கும் அம்பை தேவலோகத்தின் வாடாத மலர்மலையை வரமாக பெறுகிறார் அம்மாலை அணிபவர் பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவர்

🌺 ஐந்து வருடகாலம் பல தேசம் சென்றும் பீஷ்மரின் மேல் கொண்ட பயத்தினால் எவரும் அந்த மாலையை ஏற்க மறுக்கின்றனர் இதனால் அந்த மாலையை துருபதனின் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு தவம்புரிய செல்கிறார்

🌺அப்போது தனது தாயின் தந்தையும் பரசுராமரின் நண்பரான ஹோத்திரவாகனரை சந்திக்கிறார் தாத்தாவின் அறிவுரைப்படி பரசுராமரிடம் சரண்புகுகிறார் இதனால் பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் குருசேத்திரத்தில் யுத்தம் மூள்கிறது

🌼 23 நாட்கள் நடக்கும் யுத்தத்தில் பீஷ்மர் அவர் வசுவாக இருந்தபோது தெரிந்த பிரஸ்வாப்ன அஸ்திரத்தை விட முயல்கிறார் அந்த அஸ்திரத்தை தடுக்க அஸ்திரம் இல்லை இதை ஏவினால் எதிரி தூங்கிவிடுவார்

🌺 ஆனால் குருவை அவமதிக்கும் செயலை செய்யாதே பீஷ்மா என நாரதர் கூற அந்த அஸ்திரத்தை திரும்ப அழைக்கிறார் இதை கண்ட பரசுராமர் தன் தோல்வியை ஒப்புகொள்கிறார்
(பீஷ்ம பரசுராமர் யுத்தம் பற்றியும் அம்பையின் மறுபிறப்பு பற்றியும் தெளிவாக அறிய
http://seetharaman007.blogspot.in/2017/05/blog-post_28.html?m=1 )

🌺 பிறகு பிறக்கும் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரருக்கு குருவாகி அவர்கள் வளரும் வரை ஆட்சியை கவனித்து கொள்கிறார் அவர்களை தனது மகன்களை போல வளர்க்கிறார் பிறகு மூவருக்கும் மணமுடிக்கிறார்

🌺 பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் பிறந்து வளர்ந்தவுடன் அவர்களை சரத்வானின் மகனும் தனது சகோதரனுமாக வளர்த்த கிருபரிடம் கல்விகற்க வைக்கிறார்

🌼 கிருபரின் தந்தையான சரத்வானர் வில்வித்தையில் சிறந்த முனிவர் தவம்செய்யும் போதுகூட வில் இல்லாமல் இருக்கமாட்டார் இந்திரனையே வில்வித்தையில் வென்றவர் இவரின் மகனானதாலும் வில்லிற்கே பிறந்ததாலும் சஸ்திரங்களில் கிருபரை வெல்வோர் இல்லை

🍀 இதனால் குரு வம்சத்தின் இளவரசர்கள் சஸ்திரங்களில் தேர்ந்தவர்களாகின்றனர் இதை அறியும் பீஷ்மர் அவர்கள் அஸ்திரங்களிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என விரும்புகிறார்

🌼 இந்நேரத்தில் தான் துரோணரை இளவரசர்கள் சந்திக்கின்றன சஸ்திரங்களில் கிருபர் போல அஸ்திரங்களில் சிறந்தவர் துரோணர் இதனால் அவரை குருவாக்குகிறார்

🌼 குரு இராஜ்யத்தை அரியணைக்காக இரண்டாக பிரிப்பதை பீஷ்மர் சிறிதும் விரும்பவில்லை முன்னோர்களின் புகழை சிதைக்கும் செயலாக கருதினார் ஆனால் விதுரர் இயலாமையை உணர்த்த வேறு வழியில்லால் ஆமோதிக்கிறார்

🌺 இராஜசூய யாகத்தில் பீஷ்மரும் துரோணருமே எது எது நடந்தது மற்றும் நடக்க வேண்டும் என கண்காணித்து யாகம் சிறப்பாக நடக்க யுதிஷ்டிரனால் வேண்டப்பட்டவர்கள்

🌺 இராஜசூய யாகத்தில் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் யாரை தலைமையாக கொள்ள வேண்டும் என வினவ அவர் கிருஷ்ணனை தலைமையேற்க அறிவுறுத்துகிறார்

🌼 கிருஷ்ணனை சிசுபாலன் அவமதிப்பதையும் கிருஷ்ணன் தகுதியற்றவன் என்பதை கூறியபோதும் கிருஷ்ணனால் வீழ்த்தப்படாதவன் யாரும் இல்லை எனக்கூறி கிருஷ்ணனின் பெருமைகளை கூறுகிறார்

🌹 பாண்டவர்களின் அஞ்ஞான வாசத்தின் போது கூட பீஷ்மர் யுதிஷ்டிரன் இருக்கும் இடம் பெறும் வளம் மற்றும் வளர்ச்சியை தெளிவாக கூறுகிறார் அதை வைத்தே எளிதாக கண்டுபிடிக்கின்றனர்

🍀 அர்ஜுனன் விராடயுத்தத்தில் வெளிப்பட்ட பின் அஞ்ஞாத வாசம் முடிந்ததா இல்லையா என துரோணர் கேட்க பீஷ்மரே காலத்தை சரியாக சொல்லி அஞ்ஞாதவாசம் முடிந்தது என உரைக்கிறார்

🍁 அதேபோல் அர்ஜுனன் சம்மோகன அஸ்திரத்தை விட்ட போது பீஷ்மர் மட்டும் அதற்கு மயங்கவில்லை காரணம் அவருக்கு மட்டுமே அதற்கான எதிர்வினை தெரியும்

🌺 இதற்காக உத்தரனை பீஷ்மரை கடக்கும்போது மட்டும் இடப்புறமாக கடந்துசெல் என அறிவுறுத்துகிறான் (காரணம் அவ்வாறு கடப்பது பராமரிப்பாளர் மற்றும் நட்பானவர்களே இதனால் உத்திரனை பீஷ்மர் தாக்கவில்லை)

🌹 அனைவரும் மயங்கியபின்னும் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் தொடர்கிறது பிறகே அனைவரும் விழிக்கின்றனர் பிறகு விராடத்தின் பசுக்களை ஒப்படைக்குமாறு துரியனுக்கு அறிவுறுத்துகிறார்

🍁 பீஷ்மரின் வார்த்தைகளை துரியன் சற்றும் ஏற்கவில்லை பீஷ்மருக்கு யுத்தத்தில் சற்றும் விருப்பம் இல்லை ஆனால் அரியணைக்கு சேவகனாக இருப்பேன் என்ற சபதத்தால் வேறு வழியின்றி கௌரவர்கள் பக்கம் நிற்கிறார்

🌹 சேனையில் ஒவ்வொரு முக்கிய வீரரை பற்றியும் துரியன் அறிய விரும்பியதால் அனைவரையும் மகாரதி, அதிரதி மற்றும் ரதி என வீரத்திற்கு ஏற்ப வகைப்படுத்தி விளக்குகிறார்

🌺 இந்த நேரத்தில் கர்ணனை அர்த்த-ரதி (அதாவது 3000 பேரை ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறன்கொண்டவர்) என்றுகூற கோபம்கொள்ளும் கர்ணன் பீஷ்மர் களத்தில் இருக்கும்வரை நான் யுத்தகளம் புகமாட்டேன் என சபதம் செய்கிறார்

🌺 போரின் முதல்நாளே யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம் " பிதாமகர் பீஷ்மர் எத்தரப்பிற்காக யுத்தம் செய்கிறாரோ அத்தரப்பை எதிர்த்து நம்மால் எவ்வாறு யுத்தம்செய்வோம் " என வினவ அர்ஜுனன் இறைவனே நம்பக்கம் என சமாதான படுத்துகிறார்

🌺 போரின் தொடக்கத்தில் யுதிஷ்டிரன் ஆயுதங்களை கீழே எறிந்துவிட்டு பீஷ்மத்துரோணர்களிடத்தில்  ஆசியை பெறச்செல்கிறான் இதனால் அப்போது பீஷ்மர் என்ன வரம் வேண்டும் எனகேட்க  தம்மை வீழ்த்தும் வழி யாதென வேண்ட பீஷ்மர் அதற்கான நேரம் வரவில்லை என்றும் அந்த நேரம் வரும்போது தானே அந்த உபாயத்தை அளிப்பதாகவும் வரமளிக்கிறார்

🌺 யுத்தகளத்தில் பீஷ்மர் இருந்தவரை தர்மயுத்தம் தர்மம் மாறாமல் நடந்தது அதாவது தர்மம் சரியாக கடைபிடிக்கப்பட்டது மேலும் அர்ஜுனனுக்கு பீஷ்மரை தடுப்பதற்கே நேரம் சரியாக இருந்தது எந்த ஒரு பெரிய அழிவையும் ஏற்படுத்த முடியவில்லை

🌸 ஒவ்வொரு முறையும் பீஷ்மரும் அர்ஜுனனும் மோதும்போதும் அதை காண தேவர்கள் மேலே கூடினார்கள் அந்த யுத்தம் மிகவும் பயங்கரமாக இருந்தது காரணம் போரிட்ட இருவருமே தேவர்களின் சேனையையும் வெல்ல கூடியவர்கள்

🌼 இருவருக்குமே ஒருவரை ஒருவர் வீழ்த்தும் எண்ணம் இல்லை
ஒவ்வொரு முறையும் அர்ஜுனனை பீஷ்மர் துரியனின் சொல்லாலும்
பீஷ்மரை அர்ஜுனன் கிருஷ்ணரின் சொல்லாலுமே எதிர்த்தனர்

🌹 போரின் மூன்றாம் நாள் அர்ஜுனன் பீஷ்மரை சரியாக எதிர்க்கவில்லை என கையில் சக்கரத்தை ஏந்தி பீஷ்மரை வதைக்க செல்கிறார் இதை கண்ட பீஷ்மர் கிருஷ்ணனை வரவேற்று தனக்கு முக்தியளிக்க வேண்டுகிறார் ஆனால் அர்ஜுனன் ஆயுதமேந்த மாட்டேன் என்றுரைத்த வாக்கை தாம் மீறலாகாது என சமாதானம் கூறி தடுக்கிறார்

🌹 தேவர்களையும் அசுரர்களையும் ஒரே பகலில் அழிக்கும் திறன்கொண்ட பீஷ்மர் மேலும் பலர் தனது படையில் இருந்தும் பாண்டவர்களை ஏன் கொல்ல முடியவில்லை என பீஷ்மரிடம் வினவ பீஷ்மர் " கிருஷ்ணன் காப்பவர்களை கொல்லக்கூடியவன் எக்காலத்திலும் இல்லை " என உரைத்து நர-நாராயணர்களை பற்றி கூறுகிறார்

🍁 போரின் எட்டாவது நாளில் அர்ஜுனனின் மகன் அரவான் அலம்புசனால் கொல்லப்பட வெகுண்டெழுந்த அர்ஜுனன் கௌரவ படையை நாசம் செய்கிறான் மேலும் துரோணர் பார்த்துகொண்டிருக்கும்போதே துரியனின் தம்பிகளை பீமன் கொல்கிறான் இதனால் பெரும் வேதனையடையும் துரியன் பீஷ்மரிடம் தம்மால் நான் ஒருபலனையும் காணவில்லை எனவே தாம் கர்ணனை ஆயுதமேந்த அனுமதியளிக்க வேண்டும் என கூற பீஷ்மர் வெகுண்டெழுகிறார்

🌿 இதனால் போரின் ஒன்பதாம் நாள் இரக்கமற்றவராக காட்சியளிக்கிறார் அவரின் பிரவாகத்தை தடுக்க தவறுகிறான் தனஞ்செயன் இதனால் வாசுதேவர் தானே கொல்வதாக சக்கரம் ஏந்தி செல்கிறார் ஆனால் விஜயன் மீண்டும் தடுக்கிறான்

🍃 கோபம்கொண்ட யமன், பாசத்தை தரித்த வருணன், வஜ்ரத்தையுடைய இந்திரன் இவர்களை கூட யுத்தத்தில் வீழ்த்தலாம் ஆனால் பீஷ்மரை வீழ்த்தமுடியாது என்றுரைக்கிறான் யுதிஷ்டிரன் இதனால் பீஷ்மர் யுத்தகளத்தில் இருக்கும் வரை வெற்றியில்லை என பாண்டவர்கள் இரவில் பீஷ்மரை தனியாக கூடாரத்தில் சந்திக்கின்றனர் அவர்களை அன்புடன் வரவேற்ற பீஷ்மர் " பௌத்திரர்களே சந்தேகமடைய வேண்டாம் இது அன்பாக இருக்கும் நேரம் யுத்தகளம் இல்லை "என கூற யுதிஷ்டிரன் பீஷ்மர் அளித்த வரத்தின்படி அவரை வீழ்த்தும் வழியை கேட்கிறார்

🌹 அப்போது பீஷ்மர் நான் கையில் ஆயுதமேந்தி இருக்கையில் தேவபடையினாலும் வீழ்த்த இயலாதவன் ஆனால் ஆயுதங்களை கீழே வைத்தபோது வீழ்த்துவது இயலும்

👑 அப்போது பீஷ்மர் முன்காலத்தில் செய்த சபதத்தை எடுத்துரைக்கிறார்

- ஆயுதத்தை கீழே வைத்தவன்
- கவசத்தையும் கொடியையும் இழந்தவன்
- பயந்தவன் மற்றும் ஓடுகிறவன்
- பெண்ணால் ஜெயிக்கப்பட்டவன் மற்றும் பெண்ணின் பெயரில் உள்ளவன்
- ஏகப்புத்திரனுள்ளவன் மற்றும் சந்ததியுண்டு பண்ணாதவன்
- நபும்ஸகன் (பெண்ணாய் இருந்து ஆணாய் மாறியவன்) மற்றும் மாவீரன் என்று போற்றப்படாதவன்

🌺 இவர்கள் எவரின் முன்னும் நான் ஆயுதத்தை ஏந்த மாட்டேன் இது நான் முன்னமே செய்த சபதமாகும்

🌻 உங்களின் சேனையில் உள்ள சிகண்டி நபும்ஸகன் ஆவான் நர-நாராயணர்களான கிருஷ்ணார்ஜுனர்களை தவிர என்னை கொல்லக்கூடிய ஒருவனை பார்க்கவில்லை ஆதலால் அவனை முன் நிறுத்தி அர்ஜுனன் அம்புகளை தொடுக்கட்டும் என பாண்டவர்களை அறிவுறுத்துகிறார்

🌼 அடுத்த நாள் யுத்தம் தொடர்கிறது பாண்டவ சேனை பீஷ்மரை இன்றைய தினம் வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு களமிறங்குகின்றன சாத்யகி, துருபதன், விராடன், அபிமன்யு, உப பாண்டவர்கள் என அனைவரின் கவனமும் கங்கைமைந்தன் மீது திரும்புகிறது

💐 நாள்தோறும் 16,000 மகாபலசாலிகளை வீழ்த்துகிறார் பத்தாம் நாளில் சிகண்டி பீஷ்மரை நோக்கி வருவதற்குள் 7 மகாரதிகளையும், 5000 ரதிகளையும், 16000 வீரர்களையும் கொல்கிறார் சிகண்டி அங்கு வந்தபின் தான் அனைவரும் கவனமும் பீஷ்மர்மீது வருகிறது அதன்பிறகு கொன்றவர்களின் எண்ணிக்கை எண்ணற்றது

🌸 பீஷ்மரை காக்க துச்சாதனனை நியமிக்கிறான் துரியன் ஆனால் அவனை விரட்டுகிறான் தனஞ்செயன் தனஞ்செயன் ஒருபுறமிருக்க மற்ற அனைவரும் பீஷ்மருடன் யுத்தம்புரிகின்றன

🌼 அத்தனை பேர் எதிர்த்தும் பீஷ்மர் யுத்தகளத்தில் நடனம் ஆடுவதுபோல அனைவரையும் சமாளித்தார் அப்போது வந்த சிகண்டி பீஷ்மரை கடுமையாக தாக்குகிறார் ஆனால் பீஷ்மரோ சிகண்டியை துளியும் தாக்கவில்லை

🌻 இந்தநேரத்தில் யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் "அப்பா நான் இந்த தேகத்தில் வெறுப்படைந்துவிட்டேன் யுத்தத்தில் எண்ணிலடங்காத உயிர்களை சாய்த்துவிட்டேன், நீ எனக்கு பிரியத்தை செய்ய விரும்பினால் உடனடியாக அர்ஜுனனை என்னை வீழ்த்த வேண்டும் " என கூறுகிறார்

🌼 வாசுதேவரின் ரதம் பீஷ்மரின் சொல்படி வருகிறது சிகண்டியை பீஷ்மருக்கு முன்நிறுத்தியதால் பீஷ்மர் வில்லை கீழே வைக்கிறார் சிகண்டியின் பல அம்புகள் தாக்கியும் பீஷ்மருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

🌸 பிறகு வருகிறான் தனஞ்செயன் சிகண்டியை முன்நிறுத்தி பீஷ்மர் வில்லை எடுக்க பாணம் கொண்டு அறுக்கிறான் விஜயன் இவ்வாறாக பல விற்களை பீஷ்மர் எடுக்க எடுக்க அறுக்கிறான்

🌸 இதைகண்ட கௌரவ படையில் துரோணர், கிருபர் முதலிய 7 பேர் படையுடன் அர்ஜுனனை கொல்ல விரைகின்றனர் ஆனால் அதேசமயம் பாண்டவ படையின் பீமன், அபிமன்யு, கடோற்கசன் உள்ளிட்டோர் அவர்களை தடுக்க அர்ஜுனன் பீஷ்மரிடம் தொடர்ந்து யுத்தம்புரிகிறான்

🌺 பீஷ்மரின் விற்களனைத்தும் அறுக்கப்பட்டவுடன் மலையையும் பிளக்கும் ஈட்டியை பிரயோகிக்கிறார் ஆனால் ஈட்டியை உடைக்கிறான் அர்ஜுனன் பிறகு கத்தி மற்றும் கேடயத்துடன் தேரில் இருந்து இறங்குவதற்குள் அதையும் உடைக்கிறான் அர்ஜுனன்

🌺 பிறகு பீஷ்மர் " இந்த வாசுதேவர் மட்டும் இல்லையென்றால் இந்த பாண்டவர்களை ஒரே வில்லில் சாய்த்து இருப்பேன் ஆனால் இவர்களின் கொல்லப்படாத்தன்மையும் சிகண்டியின் பெண்தன்மை ஆகியவற்றால் நான் அவர்களுடன் போரிட மாட்டேன் " என்று கோபத்தில் உரைக்கிறார்

🌸 அப்போது தனக்கான காலம் வந்துவிட்டதை உணர்கிறார் அப்போது சப்தரிஷிகள், வசுக்கள் மற்றும் தேவகணங்கள் அதை ஆமோதித்து இதே சரியான காலம் என உரைக்க பீஷ்மர் மீது மலர்மாரி பொழிந்தது இதை பீஷ்மர் மற்றும் சஞ்சயன் தவிர வேறெவரும் அறியவில்லை

🍁 இதனால் அதற்குப்பிறகு பீஷ்மர் ஆயுதத்தை எடுக்கவில்லை இதை பயன்படுத்திய அர்ஜுனன் பீஷ்மரின் மேல் அம்புமழை பொழிகிறான் (இவ்வாறு தாக்கியதற்காக அர்ஜுனனுக்கு வசுக்கள் சாபமளிக்கின்றனர் இதனால் பிற்காலத்தில் தன்மகனான பாப்ருவாகனனின் அம்பால் வீழ்கிறான் பிறகு உலூபியால் காப்பாற்றப்படுகிறான்)

🌼 அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு பீஷ்மர் தேரிலிருந்து விழுகிறார் அர்ஜுனனின் நூற்றுக்கணக்கான அம்புகளால் பீஷ்மரின் உடல் கீழேபடவில்லை இதைகண்ட தேவர்களின் மனமே களங்கியது எனில் குரு வம்சத்தினரின் நிலையை சொல்லவா வேண்டும்

🌼 வெற்றி பேரிகைகள் மற்றும் ஆராவாரம் செய்ய வேண்டாமென யுதிஷ்டிரன் ஆணையிடுகிறான் மேலும் அனைவரும் போரை நிறுத்திவிட்டு பீஷ்மரிடம் செல்கின்றன

🌼 தன் தலைமட்டும் தொங்குவதாய் கூற அர்ஜுனனை சத்திரியனுக்கு தலையணை அமை என்றுகூற அவ்வாறே அம்புகளை கொண்டு அமைக்கிறான் மேலும் தாகத்திற்கு அஸ்திரம் கொண்டு கங்கையை கொண்டு வருகிறான் அப்போதுகூட சமாதானம் செய்வதே சரியென கூற துரியன் அப்போதும் மறுக்கிறான்

🌼 தனது தந்தையிடம் பெற்ற வரத்தால் அப்போதும் அவர் உயிர் பிரியவில்லை ஆனால் பீஷ்மர் உத்தராயண காலத்தில் (திருத்தப்பட்டது) பிரியும் உயிர்களுக்கு முக்தி ஆதலால் தான் அதுவரை இப்படியே இருக்கபோவதாய் உரைக்கிறார்

🌼 பீஷ்மர் வீழ்ந்த இடம் தனிமைபடுத்தப்பட்டு இருசேனைகளும் காவல் காக்கின்றனர் பீஷ்மருக்காக ஆடல் பாடல் இன்னிசை நிகழ்த்த மேலும் அவரை இன்புற செய்ய பலர் வருகின்றனர் ஆனால் வேதம் சொல்லும் அந்தணர்களை தவிர மற்றோரை வேண்டாமென மறுக்கிறார்

🌼 அனைவரும் சென்றபின் இரவில் கர்ணன் பீஷ்மரை சந்திக்க வருகிறான் பீஷ்மரை சரணங்களைப்பற்றி " யான் ராதேயன், குற்றமற்றவனாயினும் தம்மால் பார்க்கப்படும்போதெல்லாம் மிகவும் வெறுக்கப்படுபவன் " என்றுகூற கண்திறந்த பீஷ்மர் ரட்சகர்களை வெளியேற சொல்லி கர்ணனை தன்மகன்போல ஒரு கையால் அணைக்கிறார்

🌺 நீ என்னை வெறுத்தாலும் பரவாயில்லை கர்ணா நான் நீ துரியனிடம் சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்ககூடாது என எண்ணினான் நீ குந்தியின் புத்திரன் என முன்னமே நான் அறிவேன் உன் வீரத்தை பற்றியும் அறிவேன் ஆனால் நீ உன் தம்பிகளுடனேயே யுத்தம் செய்ய வேண்டாம் என்றே அன்று அவ்வாறு உரைத்தேன் இப்போதும் நீ பாண்டவர்களுடன் சேரலாம் என உரைக்கிறார்

🌸 ஆனால் அதை மறுக்கும் கர்ணன் யுத்தத்திற்கான அனுமதியை வேண்டுகிறான் அவ்வாறே நீண்ட புகழோடு இருப்பாய் என ஆசிர்வசித்து அனுப்புகிறார்

🌼 போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர் ஆனால் யுதிஷ்டிரனின் குற்றவுணர்வால் அரியணை ஏறாமல் தவிக்கிறான்
இராஜ்யமும் தர்மமும் ஒன்றோடொன்று வீரோதம் என்பது அவன் கருத்து இழைத்த பாவத்திற்கு பதிலாக வனவாசம் சென்று பிச்சையெடுத்து உண்டுவாழ்வேன் என கூறுகிறான்


🌺 வியாசர், நாரதர், கிருஷ்ணன், விதுரர், திருதராஷ்டிரன் என பலரும் கூறியும் யுதிஷ்டிரனின் மனம் சாந்தியடையவில்லை இதனால் வியாசர் பீஷ்மரிடம் கருத்துகேட்பதே யுதிஷ்டிரனுக்கு மாற்றத்தை தரும் என்கிறார்

👑 பின்பு ஓரு நாள் கிருஷ்ணரை சந்திக்க யுதிஷ்டிரன் செல்கையில் கிருஷ்ணர் தியானத்தில் இருக்கிறார் இதை கண்ட யுதிஷ்டிரருக்கு ஆச்சார்யம் நாராயணரான கிருஷ்ணரே தியானத்திலிருக்குகிறார் என்று

🌼 இதை அறிந்த கிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் " பீஷ்மர் என்னைநோக்கி தவம்புரிகிறார் ஆதலால் என்மனம் அங்கே செல்கிறது பீஷ்மர் மரணித்துவிட்டால் உலகிலுள்ள அனைத்து கல்விகளும் குறைவடையும்  எனவே உடனடியாக அவரிடம் இருந்து ஞானத்தை பெற்றுகொள் " எனக்கூற அடுத்தநாள் அனைவரும் பீஷ்மரை நோக்கி செல்கின்றனர்

🌺 அனைவரையும் இன்புற்று வரவேற்கிறார் பீஷ்மர். கிருஷ்ணர் யுதிஷ்டிரனின் நிலையை கூறி ஞானோபதேசம் வழங்க வேண்டுகிறார் தனக்கு அதற்கான சக்தியில்லை எனக்கூற கிருஷ்ணன் அதற்கான சக்தியை அளிக்கிறார்

👑 பீஷ்மர் ஞானோபதேசம் வழங்கும்போது அவரை சுற்றி இருந்தவர்களில் முக்கியமானவர்கள்
- கிருஷ்ணன்
- பரசுராமர்
- மார்க்கண்டேயர்
- சப்தரிஷிகள்
- வியாசர்
- வால்மீகி
- திருணபந்து (ஹனுமானுக்கு சக்தி மறந்துபோகும் சாபமளித்தவர்)
- வசிஷ்டர்
- விஸ்வாமித்ரர்
- பராசரர்
- தக்க்ஷர்
- மைத்ரேயர்
- பிரகஸ்பதி
- சுக்ராச்சாரியார்
- சியவனர்
- சனத்குமாரர்
- கசியபர்
- கபிலர்
- வாயு
- காலவமுனிவர்
- மாண்டவ்யர்
- லோசமர்
- மௌத்கல்யர்

🌺 பீஷ்மரின் ஞானோபதேசம் பல நாட்கள் தொடர்ந்து நடந்தது ஒவ்வொரு காலையும் அனைவரும் வந்து இரவு வரை கேட்பர் ஞானோபதேசம் முடிந்த பின் தட்சியாயண காலத்தில் ஒரு சுபதினத்தை குறிக்கிறார் பீஷ்மர் அந்நாளில் யுதிஷ்டிரனை அக்னி எடுத்துவர ஆணையிடுகிறார்

🌼 சரியாக அம்புபடுக்கையில் படுத்தநாளிலிருந்து 58 நாட்கள் களித்து பீஷ்மர் குறித்த தினம் வந்தது அவ்வாறே யுதிஷ்டிரன் அக்னி கொண்டுவந்து சேர்ந்தான்

🌺 பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு நல்லாசிகளை வழங்கி திருதராஷ்டிரரிடம் பாண்டவர்கள் உன்பிள்ளைகளே அவர்களை நன்றாக பார்த்துகொள்ள அறிவுறுத்தி வாசுதேவரிடம் யுத்தத்தில் துரியனால் நானும் கலந்துகொண்டேன் என்றும் ஆதலால் மன்னிப்பும் வேண்டுகிறார்

👑 பீஷ்மரிடம் கிருஷ்ணர் " தாம் தந்தையை மதித்து இரண்டாம் மார்க்கண்டேயர் போல தவவாழ்வு வாழ்ந்துவந்தீர்கள் அதனால் தான் இன்றும் எமன் தம்முன் கைகட்டி நிற்கிறார் தாம் வசுக்களையடைவீர் " என்று சொல்ல பீஷ்மர் எழுந்துநிற்கிறார்

👑 அவர் நின்றவுடனே அவர் உடம்பில் தைத்து இருந்த அம்புகள் மாயமாய் மறைந்தன இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு அவர் தலையிலிருந்து புறப்பட்ட ஜோதி விண்னை அடைந்து மறைகிறது

👑 பிறகு விதுரர் மற்றும் யுயுத்சு சந்தன கட்டைகளை அடுக்கினர்
திருதராஷ்டிரன் மற்றும் யுதிஷ்டிரர் பீஷ்மரின் உடலை மலராலும் பட்டாலும் மூடினர்
யுயுத்சு உயர்ந்த குடை பிடித்தான்
பீமனும் அர்ஜுனனும் வெண்சாமரம் வீசினர்
நகுலசகாதேவர்கள் கீரிடம் வைத்தனர்
பித்ருமேதமெனும் சாஸ்திரத்தை முறையாக செய்து சந்தனத்தாலும் வாசனைதிரவியங்களாலும் மஞ்சளாலும் பீஷ்மரை மூடி தீ மூட்டி அனைவரும் வலம் வந்து வணங்கினர் பிறகு யுதிஷ்டிரன் அரியணை ஏறி ஆட்சிபுரிந்தான்

👑 இன்றும் கடுமையான விரதத்திற்கு பீஷ்மரே அடையாளமாக இருக்கிறார்

🌺 பீஷ்மர் விண்ணுலகம் சென்ற தினம் இன்றும் பீஷ்ம அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது (அடுத்த வருடம் ஜனவரி 25)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌸 பீஷ்மரின் திறன் அளவிடமுடியாதது எனினும் அவர் ஏற்ற சபதத்திற்குள்ளேயே அவரை நிறுத்திகொண்டார்

🌼 கடைசிவரை அரசனின் ஆணையை அவ்வாறே ஏற்றார் அரசனுக்கு தகுந்த முடிவையையும் ஞானத்தையும் எடுத்துரைக்க வில்லை

🌸 இதை யுத்தகளத்தில் சக்கரமேந்தி செல்கையில் கிருஷ்ணரே கூறுகிறார் அமைச்சனின் கடமை அரசனை சரியான பாதையில் செலுத்துவதே என கூறுகிறார்

🌼 கிருஷ்ணனே அரசன் இல்லை அமைச்சர் மட்டுமே துவாரகையின் அரியணையை கம்சனின் மரணத்திற்குபிறகு கம்சனின் தந்தை உக்ரசேனரே மதுராவிற்கு அரசராகிறார் அவரே கடைசிவரை அரசராக இருக்கிறார்

🌼 உக்ரசேனரின் சபையில் கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் மற்றும் அவரின் மகன்களான பலராமர் மற்றும் கிருஷ்ணர் அமைச்சராக இருந்தனர் ஆனால் சேனைக்கு பொறுப்பேற்றவர்கள் பலராமரும் கிருஷ்ணருமே

🌸 கிருஷ்ணன் ஒவ்வொரு முறையும் தன்பணியை சரியாக செய்தான்

🌹 மேலும் சத்திரியர்களின் தர்மம் அகிலத்தில் தர்மத்தை ஸ்தாபிப்பதே இதையே கிருஷ்ணர் அர்ஜுனனிடம் உரைக்கிறார் போருக்குபின் அசுவமேதயாகம் பாண்டவர்கள் நடத்த வைத்ததற்கு காரணம் அதுவே போருக்குப்பின் இருந்த அவலநிலையை பயன்படுத்தி வரும் அரசுகள் அதர்மபோக்கில் செல்லும் அவைகளை கட்டுபடுத்தி தர்மபாதையில் செலுத்துவது மிகவும் அவசியமாகும் ஆழ்ந்துப்பார்த்தால் ஒருவனை தேவர்களும் இராஜசூய யாகம் மற்றும் அசுவமேதயாகம் செய்ய சொல்வதன் காரணம் இதுவே

🌼 பீஷ்மர் இருந்தபோது இருந்த அரசவம்சங்களின் நிலை அவல நிலையாகும் தர்மம் ஒடிந்த நிலையில் இருந்தது இதற்காகவே பாரதப்போர் நடத்தப்பட்டது போரில் அரசவம்சங்கள் பலிகொடுக்கப்பட்டன

🌸 பாண்டவர்களாலேயே இராஜசூய யாகம் நடத்த முடிந்ததென்றால் காசி நகரில் தனியாளாக ஒரே தேரில் (பீஷ்மர் தனியே ஒரே ரதத்திலேயே சென்றார்) அனைத்து அரசர்களையும் வென்ற பீஷ்மரால் அனைத்து அரசர்களையும் வென்று தர்மத்தின் ஒரே கொடையில் கொண்டு வந்து இருக்கலாம் ஆனால் பீஷ்மர் அஸ்திணாபுர அரியணையை காப்பது மட்டுமே தர்மமாய் ஆற்றினார்

🌻 ஆனால் கிருஷ்ணனின் செயல்மாறாக இருந்தது பாணாசுர யுத்தத்தில் சிவபெருமானிலிருந்து
( http://seetharaman007.blogspot.in/2017/06/100.html?m=1 )

🌻 தெற்கே கபாடபுரத்தை ஆண்ட பாண்டியன் வரை
( http://seetharaman007.blogspot.in/2017/05/blog-post_14.html?m=1 )

🌹 கிருஷ்ணன் தர்மம் காக்க செய்த போர்கள் ஏராளம் அதில் ஒன்றே பாரதயுத்தம்

🌼 பீஷ்மர் தனது சபதத்தையே கண்ணும் கருத்துமாக பார்த்தார் சூதாட்டமண்டபத்திலும் பாண்டவர்களுக்கு இராஜ்யத்தை தருமிடத்துலும் யுத்தத்திற்கான முடிவிலும் பீஷ்மரின் முடிவு வேறாகி இருந்தால் நிலை தலைகீழாகி இருக்கும்

🌼 தர்மம் எதுவென்று அறிந்திருந்தும் தனக்கு தானே இட்டு இருந்த எல்லையை அவர் மீறவில்லை இரட்டை மனம் கொண்டு இருந்தார் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் ஆனால் போரிட்டதோ கௌரவர்பக்கம்

🌹 கிருஷ்ணர் தான் அளித்த வாக்கை அகில நலனுக்காக மீற சிறிதும் தயங்கவில்லை நடக்கும் தர்மயுத்தத்தில் பாண்டவர் வெல்வது அவசியமென எண்ணினார்
ஆயுதமேந்தமாட்டேன் என்ற வாக்கை மீறி சுதர்சனத்தை கையில் ஏந்தினார் மேலும் வாசுதேவரின் ரதம் எப்போதும் பாசறையில் இருந்தது யுத்தத்தில் அர்ஜுனன் ஒருவேளை மரணித்தான் என்றால் அவரே யுத்தத்தை ஏற்று நடத்துவதே திட்டம் ஆயுதமேந்ந்மாட்டேன் என்ற சபதத்தை மீற வாசுதேவன் தயங்கவில்லை

( http://seetharaman007.blogspot.in/2017/06/blog-post.html?m=1 )

🌸 கிருஷ்ணர் தூது சென்றபோதே விதுரர் பீஷ்மர் முதலியோர் இருப்பதால் துரியன் நிச்சயம் சமாதான பேச்சுவார்த்தைக்கு வரமாட்டான் அதனால் தாம் செல்வது உசிதமல்ல என விளக்குகிறார்

🌹 கிருஷ்ணரின் தூதின்போது கூட பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் இவர்கள் எல்லாம் என்பக்கம் இருக்கும்போது பாண்டவர்களால் என்ன செய்துவிட முடியும் ஊசிமுனை நிலம்கூட தரமாட்டேன் என்றே துரியன் உரைக்கிறான் பீஷ்மரின் சபதம் துரியனுக்கு கவசம் ஆகிறது

🌹 கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் ஆனால் பீஷ்மரோ வசுவின் அவதாரம் ஆதலால் இருவரையும் ஒப்பிடுவது சரியாகாது எனினும் சில கருத்துகளை இங்கு புரிய வைக்கவே இதைசெய்ய வேண்டியதாயிற்று

👑 மகாபாரதம் தேவர்களோடு சேர்ந்து மகாவிஷ்ணு நடத்திய நாடகமே அனைத்தும் சரியாக திட்டமிட்டபடியே நடந்தது இதை சொர்க்கம் சென்றபின்னே தான் யுதிஷ்டிரரே அறிவார்

👑 ஆதலால் ஒவ்வொரு விசயமும் நமக்கு ஞானத்தை அளிக்கவே நடந்தது அழிவுதான் வழியென்றால் கிருஷ்ணன் பிரளயத்தை உண்டாக்கி இருக்கலாம் அவதாரம் எடுத்து இவ்வளவு காரியம் செய்யவேண்டிய அவசியம் இல்லை

👑 பீஷ்மரிடம் இருந்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விசயம்

👑 ஒருவன் பின்பற்றும் தர்மமே அகிலத்திற்கு கேடு விளைவிக்குமேயானால் அது அதர்மமாகிறது
ஆனால் ஒருவனின் தர்மத்தை மீறிய செயல் அகிலத்திற்கே நன்மையை தருமானால்  அது தர்மமாக போற்றப்படுகிறது

~~ -க்கு அடுத்து உள்ள தகவல்கள் என் தனிப்பட்ட கருத்தே

👑 முழுமையாக படித்ததற்கு நன்றி

Tuesday, June 20, 2017

🌹 பக்தியில் சிறந்த பாணாசுரனும் மற்றும் 🌸 சிவனுக்கும் கிருஷ்ணருக்கும் வந்த யுத்தமும்


🌼 சனிப்பிரதோஷ நன்னாளில் இப்பதிவை வெளியிட பெருமிதம் கொள்கிறேன்

🌼 பாணாசுரன் பலிச்சக்ரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன், பெரும் சிவபக்தன், ஞானியும் கூட சோனிதபுரம் எனும் நகரத்தை அமைத்து ஆண்டுவந்தான்

🌼 சிவபெருமானின் தாண்டவத்தின்போது மற்றும் சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின்போது தேவர்கள் புடைசூழ பர்வத ராஜனை நோக்கி செல்கையில் பாணாசுரன் மிருதங்கம் வாசித்தபடி வந்தான் என சிவபுராணம் கூறுகிறது

🌼 தனுவின் புத்ரர்களான அசுரர்களே பூமியில் அவதரித்தனர் என பாரதம் கூறுகிறது

🌼 அவ்வாறே நரகாசுரன், கம்சன், பாணாசுரன், ஜராசந்தன், சிசுபாலன் இவர்கள் ஐவரும் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள் மேலும் தனித்தனியே ஒவ்வொருவரும் தேவர்களை வெல்லும் அளவிற்கு திறன் கொண்டு இருந்ததால் அசுர குலம் செழித்தோங்கியது இதனால் பகவானுக்கு இவர்களை அழிக்கவேண்டியது கடமையாயிற்று

🌼 அவ்வாறே பாணாசுரன் சிறந்த பக்தனானாலும் அவனால் அசுரர்கள் அட்டூழியம் வளர்ந்தது

🌼 பாணாசுரனுக்கு சிவபெருமானின் அருளால் ஆயிரம் கைகள் வந்தடைந்தன மேலும் ஈசன் தாண்டவத்தின் போது தனது ஆயிரம் கரங்களாலும் மிருதங்கம் வாசித்து ஈசனின் மனதை குளிர்வித்ததால்  வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறப்பட்டபோது " தன்னை ஈசனே தன் நகரத்தில் இருந்து காக்க வேண்டும் " என்ற வரத்தை பெறுகிறான்

🌼 இதனாலும் பாணாசுரனின் ஆயிரம் கரங்கள் மற்றும் அவரின் பராக்கிராமத்தினாலும் பாணாசுரனை எதிர்ப்பவர் இல்லை என்ற நிலை

🌼 இதனால் ஈசனிடம் செல்லும் பாணாசுரன் சிவபெருமானிடம் " தனது வீரத்திற்கு வேலை இல்லாமல் இருப்பதாகவும் தன்னுடன் யாரும் யுத்தம் புரிய வருவதில்லை என்றும் இதனால் தனக்கு யுத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் ஒரு மலையை தரைமட்டமாக்குவதாகவும் தன்னை வெல்ல சிவபெருமானால் மட்டுமே முடியும் என்றும் வேறு ஒருவரும் இல்லை " என்றும் கூறுகிறான்

🌼 இதைக்கேட்ட ஈசன் " தான் இல்லாமல் உன்னை வெல்லும் ஒருவனை நீ காண்பாய் அப்போது உனது புவி வாழ்வு முடியும் அதன்பின் உன் கொடியும் பறக்காது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் உனது மயிரத்துவஜம் என்று விழுகிறதோ அப்போது பேய்களே வியக்கும் யுத்தம் நடக்கும் " என்று பாணாசுரனிடம் கூறுகிறார்

🌼 பாணாசுரனுக்கு உஷா என்றொரு பெண் இருந்தாள் அவளை பாணாசுரன் சிறுவயதில் இருந்தே ஆண்கள் பற்றி தெரியாமலே ஒரு கோட்டையில் வளர்த்து வந்தான் அங்கு எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை பாணாசுரன் தவிர

🌻 ---- (அந்த கோட்டைக்கு அக்னிகார்ஹ் என்று பெயர் இந்த இடம் இன்றும் அசாமில் சுற்றுலாஸ்தலமாக உள்ளது இங்கு இந்த நிகழ்வுகள் சிலை வடிவில் உள்ளன)

🌼 ஒரு முறை பார்வதி தேவி சிவனுடன் இருப்பதை கண்ட உஷா தனக்கு கணவன் யார் என பார்வதி தேவியை கேட்க " வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியன்று அவள் கனவில் வரபோரவனே அவள் கணவன் " என்கிறார்

🌼 இந்நிலையில் உஷா அந்த தினத்தில் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தனை கனவில் கண்டு காதல் வயப்படுகிறார் இதனால் மாயத்தில் சிறந்த அவள் தோழியான சித்ரலேகா மாயத்தினால் அநிருத்தனை கவர்ந்து யாரும் அறியாமல் உஷாவிடம் சேர்க்கிறாள்

🌼 உஷாவின் செயல்களில் ஏற்பட்ட மாற்றத்தால் இச்செயல் பாணாசுரனுக்கு செல்கிறது இந்நிலையில் பாணாசுரன் உஷாவை பார்க்க வரும்போது அநிருத்தனும் உஷாவும் இருப்பதை காண்கிறான்

🌼 இந்நிகழ்வை எவர் கண்டாலும் கோபம் வரும் ஆயுரம் கையுடைய பாணாசுரனுக்கு சொல்லவா வேண்டும் உடனே அநிருத்தனை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஆனால் அநிருத்தன் வருபவர்கள் அனைவரையும் கொல்கிறான் இதனால் பாணாசுரன் நாகபாசத்தை ஏவி சிறைபிடிக்கிறான் (சிவபுராணத்தில் லட்சக்கணக்காண சேனையை அநிருத்தன் வீழ்த்தினான் என்று கூறப்பட்டுள்ளது)

🌼 இந்நிகழ்வு நாரதர் மூலம் கிருஷ்ணருக்கு தெரிகிறார் இதனால் யாதவர்கள் பலரும் சேர்ந்து 18 அக்ரோணி சேனையை திரட்டி பாணாசுரன் மீது போர்தொடுத்து செல்கின்றனர்

🌼 பெற்ற வரத்தினாலும், கொண்ட பக்தியினாலும் சிவபெருமானே பாணாசுரனின் படைக்கு தலைமை தாங்கி நடத்துகிறார்

🌼 சாரங்கபாணி போர்தொடுத்து வர பினாகபானி எதிர்த்து நிற்கும் யுத்தம் சொல்லவா வேண்டும் இதனால் அனைவரும் யுத்தத்தை பார்க்க கூடுகின்றனர்

🌼 சிவபெருமானும் கிருஷ்ணரும் நேருக்கு நேர் எதிர்க்கின்றனர் சிவபெருமான் அக்னி அஸ்திரம் விட கிருஷ்ணர் அதை வருணாஸ்திரம் கொண்டு தடுக்கின்றார் சிவன் வாயு அஸ்திரம் விட கிருஷ்ணர் பிருத்திவி அஸ்திரம் கொண்டு தடுக்கிறார்  இவ்வாறாக தொடங்கிய யுத்தம் கோரமாகிறது சிவன் பிரம்மாஸ்திரம் விட கிருஷ்ணர் பிரம்மசிரா கொண்டு தடுக்கிறார்

🌼 இந்த யுத்தத்தால் சிருஷ்டியே நடுங்குகிறது இந்நிலையில் சிவன் தனது அஸ்திரமான பாசுபதத்தை விடுகிறார் அதிலிருந்து கொடிய மிருகம் முதல் இந்திரனை விட சக்தியான தேவர்களும் வர கிருஷ்ணர் நாராயணாஸ்திரத்தை கொண்டு அவற்றை அழிக்கிறார்

🌼 பிறகு பாணாசுரனுடன் யுத்தம் புரிகிறார் கிருஷ்ணர் ஆயிரம் கரங்களில் ஐந்நூறு வில்லேந்தி வருகிறான் பாணன் கிருஷ்ணர் அவனது அனைத்து விற்களையும் அறுக்கிறார் இதனால் பாணாசுரன் தனது நகருக்கு திரும்புகிறான்

🌼 தற்போது சிவபெருமான் சிவஜ்வரம் எனும் அஸ்திரத்தை விடுகிறார் மூன்று தலைகளை கொண்ட அது 12 சூரியனுக்கு சமமாகும் ஊளிக்காலத்தின்போது இந்நிலையே இருக்கும் அவ்வஸ்திரம் ரூபம் பெற்று அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகையில் கிருஷ்ணர் நாராயணஜ்வரத்தை விடுகிறார் சிவஜ்வரம் எவ்வாறு வெப்பமோ அதுபோல நாராயணஜ்வரம் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இதனால் நாராயணஜ்வரம், சிவஜ்வரத்தை தடுத்துவிடுகிறது

🌼 பிறகு பாணாசுரன் மீண்டும் யுத்தகளம் வருகிறான் அப்போது கிருஷ்ணர் அவனுடைய ஆயிரம் கரங்களில் நான்கை தவிர மற்றதை வெட்டி எறிகிறார்

🌼 இதனால் சிவபெருமான் கிருஷ்ணரிடம் " கிருஷ்ணா நான் அவனுக்கு அபயம் வழங்கியுள்ளேன் " என்று கூற உடன் கிருஷ்ணர் " தாங்கள் அபயம் அளித்தால் நானும் அளித்ததுபோலே " என்று கூற இறுதியாக சிவபெருமான் பாணாசுரனை உஷாவை அநிருத்தனுக்கே மணமுடித்து வைக்க கூற அவ்வாறே செய்கிறான் பாணாசுரன்

🌼 முன்பே சிரஞ்சீவி தன்மையை பெற்ற பாணாசுரன் கொண்ட பக்தி காரணமாக ஈசனுடன் கயிலை செல்கிறான் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது ஆனால் சிவபுராணத்தில் பாணாசுரன் கைகள் வெட்டப்பட்டதால் ஏற்பட்ட காயம் மறைந்து இந்த கல்பகாலம் முடியும்வரை இருந்து இறுதியாக விஷ்ணுவின் கையால் மடியும் வரம் பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது அவ்வாறே சிவகணங்களின் தலைவராக கைலையில் பாணனை சிவன் வைத்தார் என்று கூறப்பட்டு உள்ளது

🌼 பாணாசுரனின் ஆசைப்படியே அநிருத்தனுக்கும் உஷாவிற்கும் பிறந்த விஸ்வஜித் சோனிதபுரத்தை ஆள்கிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌼 மேற்கூறிய கதை  சிவபுராணம், விஷ்ணு புராணம், பாகவதம் மற்றும் மகாபாரதத்தில் இராஜசூய யாகத்தில் பீஷ்மர் கிருஷ்ணரை பற்றி கூறுகையிலும் உள்ளது

🌼 கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் " துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனமே " பாணாசுரனிடம் இருந்த அசுரர்கள் அனைவரையுமே அழித்தார் கிருஷ்ணர்

🌼 சிவன் மற்றும் விஷ்ணுவின் திருவிளையாடல்களே இவையனைத்தும்

🌼 தர்மம் காக்க அவதரித்தவர் கிருஷ்ணர் இதனால் சிவபெருமானும் உதவி செய்வது அவரின் கடமையாகிறது

🌼 இதே போல் சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் முன்பே ஒரு யுத்தம் நடந்து இருக்கும் அது தட்ச பிரஜாதிபதியின் யாகத்தின் காரணத்தால் அந்த யுத்தத்தில் தட்சனின் தலை வெட்டப்பட்டு ஆட்டு தலை கிட்டும்

🌼 இதில் விஷ்ணு பகவான் தட்சனுக்கு அபயம் அளித்து தட்சனை காத்து நிற்பார்


👑 இவ்விரு யுத்தத்திலும் இருவரில் ஒருவரும் தோற்கவில்லை என்பது இதை முழுதாக படிப்பவருக்கு புரியும்

🌼 உண்மையில் இராவணனை விட சிறந்த பக்தன் ஆவார் பாணாசுரன் கல்பகால வாழ்வு மற்றும் கைலையில் வாழ்வு இவை இராவணனுக்கும் கிட்டாதவை

🌈 மேலும் உறவுகளே இன்று நாம் பற்பல கோயில்களில் காணும் பாணலிங்கம் பாணாசுரன் பூஜித்த லிங்கங்களே

🌼 மேலும் சாளக்கிராமங்கள் பற்றி சைவத்தில் " பாணாசுரன் சிவபெருமானிடம் பூஜிக்க 14 கோடி லிங்கங்கள் வேண்டினார் அதுவே சாளக்கிரமங்கள் " என்று கூறப்பட்டுள்ளது அதேபோல் வைணவத்தில் விஷ்ணுவே சாளக்கிராமம் என்று கூறப்பட்டுள்ளது இதை முழுமையாக அறிந்தால் சிவ - விஷ்ணு ஒற்றுமையை அறியலாம்

🌼 இவை இல்லாமல் எண்ணிலடங்கா லிங்கங்களை தினம் தினம் பூஜிப்பார் பாணாசுரன்

🌼 பாணாசுரனை நினைத்து பாணலிங்கத்தை வணங்கி மேன்மை பெருவோமாக 

கிருஷ்ணனை புரிந்து வைத்து இருந்த சல்லியன்



கர்ணன் தனக்கு கிருஷ்ணனை போன்ற சாரதி வேண்டும் என்று கேட்டதால் துரியன் சல்லியனிடம் வேண்டுகிறான்

திரிபுராசுரர்களை அழித்த கதை மற்றும் பரசுராமரின் கதையை சொல்லி வாசுதேவரை எடுத்துக்காட்டியும் சல்லியன் கர்ணனுக்கு சாரதியாக இருப்பது சரியே என விளக்குகிறார்

அதற்கு சல்லியனோ ஒரு வேளை அர்ஜுனன் கொல்லப்படுவானாகில் வாசுதேவன் தானே யுத்தகளம் புகுவான் அவ்வாறு நேர்ந்தால் உனது சேனையில் அவரை எதிர்க்க ஒருவரும் நிற்க மாட்டார் இதை உணர்வாய் என்று கூறி சல்லியன் தேரோட்ட சம்மதிக்கிறார் (அந்த ஆதாரத்தை இணைத்துள்ளேன்)

இதுவே உண்மையாகும் ஆனால் அனைத்தும் அவன் லீலையே என்பது வேறு உண்மையில் அர்ஜுனன் எவ்வழியிலாவது வதைக்கப்பட்டு இருப்பானாகில் கிருஷ்ணர் யுத்தத்தை நடத்தி இருப்பார்.

அர்ஜுனன் ஜயத்ரதனை வதைக்கும் போது கூட கௌரவ சேனையில் பலர் அர்ஜுனன் வெற்றி பெறவேண்டும் என்றே பிரார்த்தித்தனர் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ?

காரணம் யாதெனில் அன்று கிருஷ்ணரின் தேரோட்டியான தாருகன் கிருஷ்ணரின் ஆணையின் பேரில் கிருஷ்ணரின் ரதத்தை யுத்தத்திற்கு ஆயத்தமாக கிருஷ்ணரின் ஆணையை நோக்கி காத்திருந்தார் ஒருவேளை அர்ஜுனன் மடிவானாகில் கிருஷ்ணன் யுத்தத்தை நடத்துவதே திட்டம் (இதற்கான ஆதாரமும் இணைத்துள்ளேன்)



Tuesday, May 30, 2017

🐒 வானர சேனை



👑 தசரத நந்தர் இராமபிரானை பற்றி நாம் அனைவருமே அறிவோம் இன்று அவருக்காக உயிரையும் பெரிதாக மதிக்காமல் போராடிய வானர சேனைப்பற்றி பார்க்கலாம்

👑 இராமர் சீதா தேவியை தேடி வரும்போது மாருதி மூலம் சுக்ரீவன் நட்பை பெறுகிறார் ஸ்ரீ ராமர்

🌼 ஜானகியை தேடி அறியும் வானரசேனை இராவணனிற்கு எதிரான போரில் இராமருக்கு துணை நின்றனர்

🌹 நாம் நினைப்பது போல சுக்ரீவரின் வானர சேனை மட்டும் யுத்தத்தில் பங்கேற்கவில்லை வானரர்களிலேயே பல அரசர்கள் இருந்தனர் மஹாபாரத யுத்தத்தில் பல அரசர்கள் துணைக்கு வந்தது போல அவர்கள் இராமருக்காக தங்கள் சேனையை அளித்து போரிட்டனர்

🍁 இராவணனின் சேனை மொத்தம் 1000 வெள்ளம் (நாற்புறமும் தலா 200 வெள்ள சேனை மற்றும் கோட்டை காவலுக்கு 200 வெள்ளம்)

🍁 அதேபோல இராமபிரானின் சேனை 70 வெள்ளம் (நாற்புறமும் தல 17 வெள்ளம் மற்றும் உணவு பொருட்கள் சேகரிக்க 2 வெள்ளம்)

🍁 இனி போரிட்ட வானர சேனையின் முக்கிய  அரசர்களை பற்றி பார்க்கலாம் இவர்களின் சேனைகள் சேர்ந்ததால் தான் 70 வெள்ள வானர சேனை சேர்ந்தது

👑 இவர்களில் ஒவ்வொருத்தரும் மலையையே பெயர்த்து எடுக்க கூடியவர் மேலும் ஆயிரக்கணக்கான யானைகளின் பலத்தை கொண்டவர்கள்

🐒 சுக்ரீவன் - சூரியதேவரின் மகன் - இராம பிரானின் உற்ற தோழன் - இராவணனை முதன்முதலில் மலையில் கண்டவுடன் சென்று போரிட்டு அவன் கிரீடத்தை தட்டி விடுவார் ஆனால் ராமபிரான் இதுபோன்று உயிருக்கு ஆபத்தான காரியம் இனி வேண்டாம் என்கிறார் அதற்கு சுக்ரீவன் கூறியதை கம்பர் அழகாக கூறுவார்

“காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்,
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன்”

🐒 அனுமந்தர் - ஈசனின் அவதாரமாக கருதப்படும் இவர் பற்றி நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை - சிறுவயதில் சூரியனை முழுங்கிய இவரால் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கையில் 7 நாட்கள் அனல் அடித்ததாம் இதனால் ராவணன் 7 நாட்கள் வான்வெளியில் தங்கினான் ஆனால் இதுப்பற்றி அனுமான் தம்பட்டம் அடிக்கவில்லை இதை விபிஷணர் கூறிய பின்னே தான் அறிவார்கள்

🐒 அங்கதன் - தனியொரு ஆளாக பாற்கடலை கடைந்த வாலியின் மகன், இந்திரனின் பேரன் - இராவணனின் சபைக்கு சென்று திரும்பகூடியவர்களில் ஒருவன் - தனது தந்தையை கொன்றாலும் தர்மபாதையறிந்து இராமருக்கு சேவை செய்த உத்தமன் - தன் காலை கீழே வேகமாக வைத்தால் பூமியும் அமிழ்ந்து போகும் திறன் கொண்டவன்

🐒 ஜாம்பவான் - பிரம்ம தேவரின் அவதாரமாக கருதப்படும் இவரை சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் தவிர மற்றோரால் வீழ்த்த இயலாதவர் - தேவாசுர யுத்தத்தில் உதவிபுரிந்ததால் பல வரங்களை பெற்றவர்

🐒 நளன் - தேவசிற்பி விஸ்வகர்மாவின் மகன் - அங்கதனின் உற்ற நண்பன் - பெரும் சேனைக்கு அதிபதி - விஸ்வகர்மாவிற்கு இணையான திறன் கொண்ட இவரே ராம சேதுவை மூன்று நாளில் கட்டினார் இதனால் நள சேது என்ற பெயரும் உண்டு

🐒 நீலன் - அக்னியின் மகன் - பெரும் பலவான்

🐒 கேசரி - காஞ்சன மலைப்பிரதேசத்தின் அரசன் - வலிமையில் நிகரற்றவர் - இவரின் மகனே அனுமந்தர்

👑 கேசரிக்கு அடுத்த அரண்மனை வாரிசு அனுமந்தரே ஆனால் பக்தியினால் அதை துறந்து இராமருக்கு சேவை செய்தார்

🐒 சுவேதன் - மூவுலகங்களிலும் தன் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் பெயர் பெற்று விளங்குபவன்

🐒 சரபன் - சால்விய மலைப்பிரதேசத்தின் அரசன் - அளவிட முடியாத ஆற்றலுடைய இவரை கண்டால் பயம் கொள்ளாதவர் இல்லை

🐒 பணசா - பரியாத்திர மலைப்பிரதேசத்தின் அரசன் - இந்திரனுக்கு இணையான இவர் இதுவரை தோல்வியை சந்திக்காதவர்

🐒 முந்தன் மற்றும் துவிதன் - அஸ்வினி தேவர்களின் புத்திரர்கள் - போரில் இணையற்றவர்கள் - பாரதத்தில் இராஜசூய யாகத்தின் திக் விஜயத்தின் போது சகதேவனிடம் சண்டையிடுவர் பின் பலராமரால் கொல்லப்படுவர்

🐒 தும்ரா - கரடிகளின் அரசன் ஜாம்பவானின் சகோதரர் - வருணனுக்கு இணையானவர் - ரிக்சவந்த மலைப்பிரதேசத்தின் அரசன்

🐒 சம்நாதனன் - வானரங்களிலேயே வயது முதிர்ந்தவர் - இந்திரனுக்கு இணையான இவரை யுத்தத்தில் வென்றவர் இல்லை

🐒 கிராதனா - விஸ்ரவசின் (இராவணனின் தந்தை ) மகன் - மாயமறிந்த ஒருவன் ஒரு வகையில் இராவணனுக்கு தம்பி - குபேரனுடன் வாழ்பவர் - இவருடைய வீரத்தை விளக்க வார்த்தை இல்லை

🐒 கஜன், கவாக்சன், கவாயன், சரபன், கந்தமாதனன் இவர்கள் ஐவரும் யமனின் மைந்தர்கள் இவர்கள் ஊழிக்காலத்தில் அழிக்கும் யமனை ஒத்திருப்பர்

🐒 சுவேதன் மற்றும் ஜோதிர்முகன் சூரியனின் மகன்கள்

🐒 ஹேமகுதன் வருணனின் மகன்

🐒 துர்தாரன் வசுக்களின் மகன்

🐒 சுமுக்தன், துர்முகன் மற்றும் வேகதர்சி ஆகியோர் பிரம்மதேவரால் உக்ரமாக படைக்கப்பட்டவர்கள்

🐒 சுசேனன் யமனின் மகன் மற்றும் ததிமுகன் சந்திரனின் மகன்

🐒 பிரமதிம் - காட்டு யானைகள் வானரத்தை தாக்க வந்த போது அத்தனை யானையையும் தனி ஆளாக அடக்கியவர் - மந்தர மலையில் இந்திரனும் வாழாத சுகபோக வாழ்க்கை வாழ்பவர்

🐒 குமுதன் - கோமதி நதிக்கரையில் உள்ள ரம்ய மலைப்பிரதேசத்தின் அரசன்

🐒 ரம்ப்பா - கிருஷ்ண மலை பிரதேசத்தின் அரசன்

🐒 வினாதா - வெண்ணாறு பகுதியை ஆண்ட அரசன் - மலையின் அளவு உடல் கொண்டவர்

🐒 கிராதனா - வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன்

🐒 ஹரா - சூரியனின் தேஜஸ்சை கொண்டவர்

🐒 பிரமாதி - வெல்வதற்கு முடியாதவர்

🐒 சதாபலி - புத்திசாலி தனம் வீரம், வலிமையில் சிறந்தவர்

👑 இவ்வாறு எண்ணிலடங்கா வீராதி வீரர்களை கொண்டது வானர சேனை

👑 இவ்வாறு உளவாளிகள் கூறுவதை கேட்ட இராவணனின் இதயம் அதிகமாக துடிக்க கோபத்தில் உளவாளிகளை மேலும் கூற தடை விதிக்கிறான்

( Ref : http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga29/yuddha_29_frame.htm )

🌼 இராவணன் வானர சேனையை பற்றி அறிய சுகன் மற்றும் சாரணன் என்ற இரு அசுர மாயாவிகளை உளவு பார்க்க அனுப்புகிறான் ஆனால் அவர்களை விபீஷணர் பிடிக்கிறார் ஆனால் இராமபிரானோ அவர்களை விடுவித்தது மட்டுமல்லாது அவர்களுக்கு சேனையை பற்றி அனைத்து தகவல்களையும் தரவும் ஆணையிடுகிறார்

🐒 அவர்கள் வானர சேனையை பற்றி கூறுவதே மேல் அமைந்தவை

👑 போரின் இறுதியில் இராவணனை அழித்ததால் வரம் கேட்குமாறு ஸ்ரீ ராமரை வேண்ட போரில் உயிர் துறந்த வானரங்கள் உயிர்பெற வரம் வேண்டுகிறார் இதனால் அனைவரும் உயிர்பெறுகின்றனர்

🌼 அஞ்சனை புத்திரன் பாதம் சரணம் 🌼