💮 பாசுபத அஸ்திரம்
🌼 சிவபுராணம் பிரம்மன் முதல் தாவரம் வரை அனைவருமே பசுக்கள் என்று கூறுகிறது இவர்களுக்கெல்லாம் தேவனாய் இருப்பதால் பசுபதி என்ற பெயர் ஈசனுக்கு உண்டு
🌼 பசுபதிநாதரின் அஸ்திரம் பாசுபதம் இது ஈசன் மற்றும் காளிக்கு தனிப்பட்ட அஸ்திரமாகும் இவ்வஸ்திரத்தை ஈசனிடம் இருந்து நேரடியாக மட்டுமே பெற முடியும் முருகப்பெருமான், சூரனின் குடும்பத்தினர், பரசுராமர், ராமபிரான், மேகநாதன், மற்றும் அர்ஜுனன் பெற்று இருந்ததற்கான சான்றுகளே உள்ளன இந்த அஸ்திரத்தை இந்திரன், எமன் கூட அறியமாட்டார்கள் என ஈசனே அர்ஜுனனிடம் கூறியுள்ளார்
🌼 இவ்வஸ்திரம் பெறவேண்டுவாயின் மாவீரனாக இருப்பது அவசியம் இராமபிரான் பெரும்போதும் சரி அர்ஜுனன் பெரும்போதும் சரி ஈசன் தோன்றி வீரத்தை பரிசோதித்தே அளித்துள்ளார்
🌼 இதை தனியாக ஒருவர் மீது விடும்போது அவரின் திறன் மிக முக்கியம் காரணம் இவ்வஸ்திரத்தை சக்தி குறைந்தவர் மீது பிரயோகித்தோமானால் சிருஷ்டியையே நாசம் செய்துவிடும். அர்ஜுனன் ஜெயத்ரதன் மீது பாசுபதத்தை விட்டார் என பலர் சொன்னாலும் உண்மை அதுவல்ல ஒரு வேளை அவ்வாறு விட்டு இருந்தால் சிருஷ்டியையே பாதித்து இருக்கும்
🌼 கந்தபுராணத்தில் சூரனின் மகன் பானுகோபன் மற்றும் வீரபாகு ஒருவர் மீது ஒருவர் ஏவிக்கொள்கிறார்கள்
🌻--- இதனால் முருகப்பெருமான் மற்றும் சூரனும் கூட இவர்கள் சண்டையினால் சிருஷ்டிக்கு பாதிப்பு வருமோ என்று ஐயமுறுகிறார்கள்
🌻--- கடைசியில் சிருஷ்டியின் நலனுக்காக இருவரும் பின்வாங்குகின்றனர்
🌼 இதுவே பாசுபதம் ஒரு படையின் மீது ஏவப்படுமேயானால் படையில் ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப பலதரப்பட்ட நச்சுகொண்ட சக்தி வாய்ந்த பற்பல தலைகள் கொண்ட உயிரினங்கள் முதல் மலைகள், கடல்கள், தேவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், அசுரர்கள், யட்சர்கள், ஆவிகள், பூதங்கள் வரை அனைத்தும் தோன்றி படையினரை அழித்து ஒழிப்பார்கள்
🌻--- கந்த புராணத்தில் சூரன் முருகப்பெருமான் படையின் மீது பாசுபதத்தை ஏவ ஈசனின் கனங்களையே வீழ்த்தும் நச்சு கொண்ட உயிரினங்கள் தோன்ற முருகப்பெருமான் அதை தனது பாசுபதம் வைத்து தடுக்கிறார்
🌻--- பாரதத்தில் மிதக்கும் நகரமான அசுரர்களின் ஹிரண்யபுரத்தின் மீது அர்ஜுனன் பாசுபதத்தை விடுகிறார்
🌻--- இங்கு வாழும் அசுரர்கள் மொத்தம் 60,000 பேர்கள் அனைவருமே பெரும் வீரர்கள் பாசுபதத்தில் இருந்து தோன்றிய ஜீவன்கள் அவர்களை அழித்தொழித்தது
🌼 கந்தபுராணத்தின்படி ஒருவர் ஈசனை மனதார பூஜித்து இருக்கும் வேளையில் அவரின் மேல் பாசுபதத்தை விட்டால் அது ஈசனிடமே சென்றுவிடும்
💮 நாராயணாஸ்திரம்
🌼 நாராயணரின் அஸ்திரம் நாராயணாஸ்திரம் இதையும் விஷ்ணு பகவானிடம் இருந்து நேரடியாக பெற வேண்டும்
🌼 பாசுபதம் போலவே இந்த அஸ்திரமும் தனியாக ஒருவர் மீது பிரயோகிக்க அவரின் சக்தி முக்கியம் இல்லையேல் சர்வ நாசம் நிச்சயம்
🌼 அதே போல் படையின் மீது ஏவப்பட்டால் படையில் உள்ள ஒவ்வொருவரின் சக்தியை பொறுத்து அவர்களை அழிக்கும் அளவிற்கு சக்திகொண்ட அஸ்திரங்கள் தோன்றும்
🌻--- அதாவது ஏவப்பட்டவுடன் படையில் எத்தனை பேர் உள்ளனரோ அத்தனை அஸ்திரமாக பிரியும்
🌻--- பிறகு ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப அவர்களை அழிக்கும் அஸ்திரமாக மாறும் சாமான்யர்கள் என்றால் சாமான்ய அம்புகளாகவும் அதே அவரை அழிக்க அக்னி அஸ்திரம் தான் வேண்டுமென்றால் அக்னி அஸ்திரமாகவும் மாறும்
🌼 முழு சமர்ப்பணம் செய்தால் அன்றி வேறு வழியில்லை உடலால் சமர்ப்பணம் செய்து மனதால் துளி எதிர்த்தால் கூட பதினான்கு லோகங்களில் எங்கு சென்றாலும் இந்த அஸ்திரம் விடாது
🌼 பாரதத்தில் அஸ்வதாமன் இதை பிரயோகித்த போது கதாயுதங்கள், சக்கரங்கள், கத்திகள், முதல் தெய்வீக சக்திகொண்ட அஸ்திரங்கள் வரை தோன்றியது கிருஷ்ணரின் அறிவுரையால் அனைவரும் சமர்ப்பணம் செய்ததால் தப்பி பிழைப்பர்
👑 << பாசுபதம் மற்றும் நாராயணம் இவை இரண்டுமே ஒத்த சக்தியுடையவை. ஒன்றில் எதிரியின் சக்திகொப்ப ஜீவன்களும் மற்றொன்றில் எதிரியின் சக்திகொப்ப அஸ்திரங்களும் தோன்றும் மேலும் பக்தியினால் இவை இரண்டையும் தடுத்துள்ளனர்
அதே போல் இரண்டையும் அம்புகளால் மட்டும் இல்லை மனம் மற்றும் கண்ணால் கூட செலுத்த முடியும் (மற்ற அஸ்திரங்களை மனத்தாலோ இல்லை கண்ணாலோ ஏவ இயலாது)
இவ்விரு அஸ்திரங்களில் ஒன்றை ஒருவர் பெற்றாலும் அவர் தேவருக்கும் மேலானவராக கருதப்படுகிறார் காரணம் இந்த அஸ்திரங்களையும் பெறுவது சாமான்யம் இல்லை சிவன் அல்லது விஷ்ணுவை மகிழ்வித்து பெற வேண்டும்>>
💮 ருத்ர அஸ்திரம்
🌼 இவ்வஸ்திரம் 11 ருத்ரர்களின் சக்தியை பெற்றதாகும் சிவபெருமானே அன்றி வேறு எவராலும் தடுக்க முடியாத அஸ்திரமாகும் இது
🌼 சிவகவசத்தை ருத்ர அஸ்திரம் கொண்டே செயலிழக்க செய்ய முடியும் வேறு அஸ்திரங்கள் கொண்டு பிளக்க இயலாது
🌼 சிவகவசம் இந்திரனை காக்க ஈசன் அளித்த கவசமாகும் பாரதத்தில் துரோணர் மற்றும் அர்ஜுனன் இக்கவசத்தை பூட்டும் மந்திரம் அறிவர் ஜெயத்ரதனை கொல்ல அர்ஜுனன் வருகையில் துரோணர் இதை துரியனுக்கு பூட்டி அவனை காப்பார்
💮 வைஷ்ணவ அஸ்திரம்
🌼 பகவான் விஷ்ணுவின் அஸ்திரம் இது விஷ்ணுவை தவிர வேறு எவராலும் தடுக்க முடியாத அஸ்திரமான இது பகவான் விஷ்ணுவின் சக்தியை கொண்டது
🌼 தாய் பூமா தேவி தன் மகன் நரகாசுரன் மற்றவர்களால் பாதிக்காமல் இருக்க இவ்வஸ்திரத்தை வேண்டுவார்
🌼 எவரானலும் ஏன் தேவர்களே ஆனாலும் அழித்துவிடும்
💮 மகேஷ்வர அஸ்திரம்
🌼 ஈசனின் நெற்றிக்கண் சக்தியே மகேஷ்வர அஸ்திரம் ஆகும்
🌼 14 லோகங்களையும் கண் சிமிட்டும் நேரத்தில் பஸ்பமாக்க வல்லது
🌼 இதை பெறுவதற்கும் ஈசனை மகிழ்விக்க வேண்டும் தேவாதி தேவர்கள் ஏன் சில கடவுள்களை கூட பஸ்பமாக்க வல்லது
🌼 இந்த அஸ்திரத்தை ஈசனின் அஸ்திரம் மற்றும் விஷ்ணுவின் அஸ்திரம் கொண்டு தடுக்கலாம் என்ற குறிப்பு உள்ளது (ஆனால் எந்த அஸ்திரம் என்று இல்லை)
💮 பிரம்மாண்ட அஸ்திரம்
🌼 பிரம்மாஸ்திரம் எந்த ஒரு திவ்ய அஸ்திரத்தை தடுக்க வல்லது மேலும் இதன் சக்தியும் அளப்பறியது
🌻--- பிரம்மதேவரின் ஒரு தலையின் சக்தியை பிரம்மாஸ்திரம் ஆகும்
🌻--- அதேபோல் பிரம்மதேவரின் நான்கு தலைகளின் சக்தியை பெற்ற அஸ்திரம் பிரம்மசிரா
🌻--- பிரம்மதேவரின் ஐந்து தலைகளின் சக்தி கொண்டதே பிரம்மாண்ட அஸ்திரம்
🌼 இந்த பிரம்மாண்ட அஸ்திரம் பிரபஞ்சத்தையே அழிக்க வல்லது
🌼 இதை பாசுபதம் மற்றும் நாராயணாஸ்திரம் கொண்டு தடுக்கலாம்
🌼 இதைவிட பிரம்ம அம்புகள் என்றொரு சஸ்திரம் உண்டு இதில் பிரம்மதேவரின் முழு சக்தியும் அடங்கியுள்ளது இதை பிரம்மாஸ்திரத்தின் தலைவரான அகஸ்தியர் மற்றும் இராமபிரானை தவிர வேறு எவரும் அறியார்
🌻--- இராவணனின் வயிற்றிலுள்ள அமிர்தத்தை வற்ற வைத்து இராவணனை வதைக்க இராமபிரான் இதையே செலுத்தினார் என்று கூறப்படுகிறது
💮 ஓம்கார அஸ்திரம்
🌼 மும்மூர்த்திகளின் சக்தியாக கருதப்படுகிறது இந்த அஸ்திரம்
🌼 இதைப்பற்றிய குறிப்புகள் அதிகம் கிட்டவில்லை ஆனால் ஒருவேளை பிரணவத்தின் சக்தியாக இருக்க வேண்டும்
💮 பிரம்ம தண்டம்
🌼 இது சப்தரிஷிகள் உருவாக்கியது சஸ்திர வகையை சார்ந்தது
🌼 விஸ்வாமித்ரரின் பாசுபதம், நாராயணாஸ்திரம் மற்றும் பிரம்மாஸ்திரத்தையே வசிஷ்டர் பிரம்ம தண்டத்தை வைத்து தடுத்து விடுவார் எனில் இதன் சக்தியை நீங்களே யூகிக்கலாம்
🌼 நாம் இருக்கும் ஏழாவது மன்வந்திரத்தின் சப்தரிஷிகளில் பரத்வாஜரும் ஒருவர் இவ்வகையில் துரோணருக்கு இந்த பிரம்ம தண்டம் கிடைக்கும் ஆனால் அவர் அதை பிரயோகிக்க என்னுகையில் சப்தரிஷிகளால் தோன்றாமல் போகும்
💮 தர்மம் எனும் அஸ்திரம்
🌼 இராவணன் மகன் மேகநாதன் பெரும் வீரன் மற்றும் மாயாவி நிகும்பலா யாகம் நடத்தி விட்டால் மேகநாதனை வெல்வது நடவாது ஒன்று
🌼 நிகும்பல யாகம் நடத்திய பிறகு அதிலிருந்து தேர் மற்றும் குதிரைகள் வெளிப்படும் அந்த தேரை பிரம்மசிரா அஸ்திரம் கொண்டு மேலும் சக்தியை கூட்டி ஒரே நாளில் 6,700 லட்ச வானரங்களை வதைத்தெரிந்தவன்
🌼 லட்சுமணனுக்கும் மேகநாதனுக்கும் நடந்த கடைசி யுத்தம் அது
🌻--- பிரம்மதேவரின் பிரம்மாண்ட அஸ்திரத்தை லட்சுமணன் மீது விடுகிறார் மேகநாதன் ஆனால் அதி சக்திவாய்ந்த அவ்வஸ்திரம் லட்சுமணனை தொடகூட செய்யாமல் பிரம்மதேவரிடம் சென்றடைகிறது
🌻--- இதனால் அடுத்து சிவபெருமானின் மகாஸ்திரமான பாசுபதத்தை விடுகிறார் மேகநாதன் ஆனால் அதுவும் அவ்வாறே தொடகூட செய்யாமல் சிவபெருமானை அடைகிறது
🌻--- பிறகு விஷ்ணு பகவானின் அஸ்திரமான வைஷ்ணவ அஸ்திரத்தை விட அவ்வற்புத அஸ்திரமோ லட்சுமணனை தீண்டாமல் இருந்ததோடு லட்மணனை வலம் வந்து சென்றுவிட்டது
🌼 காரணம் தர்மத்தை ஸ்தாபிக்க மட்டுமே இந்த மஹா அஸ்திரங்கள் பயன்படும்
🌼 அதாவது சிருஷ்டியின் அச்சாரமே தர்மம் ஆகும்
👑 இக்காரணங்களால் தர்மம் எனும் அஸ்திரமே அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது 😇😇