👑 தசரத நந்தர் இராமபிரானை பற்றி நாம் அனைவருமே அறிவோம் இன்று அவருக்காக உயிரையும் பெரிதாக மதிக்காமல் போராடிய வானர சேனைப்பற்றி பார்க்கலாம்
👑 இராமர் சீதா தேவியை தேடி வரும்போது மாருதி மூலம் சுக்ரீவன் நட்பை பெறுகிறார் ஸ்ரீ ராமர்
🌼 ஜானகியை தேடி அறியும் வானரசேனை இராவணனிற்கு எதிரான போரில் இராமருக்கு துணை நின்றனர்
🌹 நாம் நினைப்பது போல சுக்ரீவரின் வானர சேனை மட்டும் யுத்தத்தில் பங்கேற்கவில்லை வானரர்களிலேயே பல அரசர்கள் இருந்தனர் மஹாபாரத யுத்தத்தில் பல அரசர்கள் துணைக்கு வந்தது போல அவர்கள் இராமருக்காக தங்கள் சேனையை அளித்து போரிட்டனர்
🍁 இராவணனின் சேனை மொத்தம் 1000 வெள்ளம் (நாற்புறமும் தலா 200 வெள்ள சேனை மற்றும் கோட்டை காவலுக்கு 200 வெள்ளம்)
🍁 அதேபோல இராமபிரானின் சேனை 70 வெள்ளம் (நாற்புறமும் தல 17 வெள்ளம் மற்றும் உணவு பொருட்கள் சேகரிக்க 2 வெள்ளம்)
🍁 இனி போரிட்ட வானர சேனையின் முக்கிய அரசர்களை பற்றி பார்க்கலாம் இவர்களின் சேனைகள் சேர்ந்ததால் தான் 70 வெள்ள வானர சேனை சேர்ந்தது
👑 இவர்களில் ஒவ்வொருத்தரும் மலையையே பெயர்த்து எடுக்க கூடியவர் மேலும் ஆயிரக்கணக்கான யானைகளின் பலத்தை கொண்டவர்கள்
🐒 சுக்ரீவன் - சூரியதேவரின் மகன் - இராம பிரானின் உற்ற தோழன் - இராவணனை முதன்முதலில் மலையில் கண்டவுடன் சென்று போரிட்டு அவன் கிரீடத்தை தட்டி விடுவார் ஆனால் ராமபிரான் இதுபோன்று உயிருக்கு ஆபத்தான காரியம் இனி வேண்டாம் என்கிறார் அதற்கு சுக்ரீவன் கூறியதை கம்பர் அழகாக கூறுவார்
“காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்,
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன்”
🐒 அனுமந்தர் - ஈசனின் அவதாரமாக கருதப்படும் இவர் பற்றி நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை - சிறுவயதில் சூரியனை முழுங்கிய இவரால் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கையில் 7 நாட்கள் அனல் அடித்ததாம் இதனால் ராவணன் 7 நாட்கள் வான்வெளியில் தங்கினான் ஆனால் இதுப்பற்றி அனுமான் தம்பட்டம் அடிக்கவில்லை இதை விபிஷணர் கூறிய பின்னே தான் அறிவார்கள்
🐒 அங்கதன் - தனியொரு ஆளாக பாற்கடலை கடைந்த வாலியின் மகன், இந்திரனின் பேரன் - இராவணனின் சபைக்கு சென்று திரும்பகூடியவர்களில் ஒருவன் - தனது தந்தையை கொன்றாலும் தர்மபாதையறிந்து இராமருக்கு சேவை செய்த உத்தமன் - தன் காலை கீழே வேகமாக வைத்தால் பூமியும் அமிழ்ந்து போகும் திறன் கொண்டவன்
🐒 ஜாம்பவான் - பிரம்ம தேவரின் அவதாரமாக கருதப்படும் இவரை சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் தவிர மற்றோரால் வீழ்த்த இயலாதவர் - தேவாசுர யுத்தத்தில் உதவிபுரிந்ததால் பல வரங்களை பெற்றவர்
🐒 நளன் - தேவசிற்பி விஸ்வகர்மாவின் மகன் - அங்கதனின் உற்ற நண்பன் - பெரும் சேனைக்கு அதிபதி - விஸ்வகர்மாவிற்கு இணையான திறன் கொண்ட இவரே ராம சேதுவை மூன்று நாளில் கட்டினார் இதனால் நள சேது என்ற பெயரும் உண்டு
🐒 நீலன் - அக்னியின் மகன் - பெரும் பலவான்
🐒 கேசரி - காஞ்சன மலைப்பிரதேசத்தின் அரசன் - வலிமையில் நிகரற்றவர் - இவரின் மகனே அனுமந்தர்
👑 கேசரிக்கு அடுத்த அரண்மனை வாரிசு அனுமந்தரே ஆனால் பக்தியினால் அதை துறந்து இராமருக்கு சேவை செய்தார்
🐒 சுவேதன் - மூவுலகங்களிலும் தன் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் பெயர் பெற்று விளங்குபவன்
🐒 சரபன் - சால்விய மலைப்பிரதேசத்தின் அரசன் - அளவிட முடியாத ஆற்றலுடைய இவரை கண்டால் பயம் கொள்ளாதவர் இல்லை
🐒 பணசா - பரியாத்திர மலைப்பிரதேசத்தின் அரசன் - இந்திரனுக்கு இணையான இவர் இதுவரை தோல்வியை சந்திக்காதவர்
🐒 முந்தன் மற்றும் துவிதன் - அஸ்வினி தேவர்களின் புத்திரர்கள் - போரில் இணையற்றவர்கள் - பாரதத்தில் இராஜசூய யாகத்தின் திக் விஜயத்தின் போது சகதேவனிடம் சண்டையிடுவர் பின் பலராமரால் கொல்லப்படுவர்
🐒 தும்ரா - கரடிகளின் அரசன் ஜாம்பவானின் சகோதரர் - வருணனுக்கு இணையானவர் - ரிக்சவந்த மலைப்பிரதேசத்தின் அரசன்
🐒 சம்நாதனன் - வானரங்களிலேயே வயது முதிர்ந்தவர் - இந்திரனுக்கு இணையான இவரை யுத்தத்தில் வென்றவர் இல்லை
🐒 கிராதனா - விஸ்ரவசின் (இராவணனின் தந்தை ) மகன் - மாயமறிந்த ஒருவன் ஒரு வகையில் இராவணனுக்கு தம்பி - குபேரனுடன் வாழ்பவர் - இவருடைய வீரத்தை விளக்க வார்த்தை இல்லை
🐒 கஜன், கவாக்சன், கவாயன், சரபன், கந்தமாதனன் இவர்கள் ஐவரும் யமனின் மைந்தர்கள் இவர்கள் ஊழிக்காலத்தில் அழிக்கும் யமனை ஒத்திருப்பர்
🐒 சுவேதன் மற்றும் ஜோதிர்முகன் சூரியனின் மகன்கள்
🐒 ஹேமகுதன் வருணனின் மகன்
🐒 துர்தாரன் வசுக்களின் மகன்
🐒 சுமுக்தன், துர்முகன் மற்றும் வேகதர்சி ஆகியோர் பிரம்மதேவரால் உக்ரமாக படைக்கப்பட்டவர்கள்
🐒 சுசேனன் யமனின் மகன் மற்றும் ததிமுகன் சந்திரனின் மகன்
🐒 பிரமதிம் - காட்டு யானைகள் வானரத்தை தாக்க வந்த போது அத்தனை யானையையும் தனி ஆளாக அடக்கியவர் - மந்தர மலையில் இந்திரனும் வாழாத சுகபோக வாழ்க்கை வாழ்பவர்
🐒 குமுதன் - கோமதி நதிக்கரையில் உள்ள ரம்ய மலைப்பிரதேசத்தின் அரசன்
🐒 ரம்ப்பா - கிருஷ்ண மலை பிரதேசத்தின் அரசன்
🐒 வினாதா - வெண்ணாறு பகுதியை ஆண்ட அரசன் - மலையின் அளவு உடல் கொண்டவர்
🐒 கிராதனா - வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன்
🐒 ஹரா - சூரியனின் தேஜஸ்சை கொண்டவர்
🐒 பிரமாதி - வெல்வதற்கு முடியாதவர்
🐒 சதாபலி - புத்திசாலி தனம் வீரம், வலிமையில் சிறந்தவர்
👑 இவ்வாறு எண்ணிலடங்கா வீராதி வீரர்களை கொண்டது வானர சேனை
👑 இவ்வாறு உளவாளிகள் கூறுவதை கேட்ட இராவணனின் இதயம் அதிகமாக துடிக்க கோபத்தில் உளவாளிகளை மேலும் கூற தடை விதிக்கிறான்
( Ref : http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga29/yuddha_29_frame.htm )
🌼 இராவணன் வானர சேனையை பற்றி அறிய சுகன் மற்றும் சாரணன் என்ற இரு அசுர மாயாவிகளை உளவு பார்க்க அனுப்புகிறான் ஆனால் அவர்களை விபீஷணர் பிடிக்கிறார் ஆனால் இராமபிரானோ அவர்களை விடுவித்தது மட்டுமல்லாது அவர்களுக்கு சேனையை பற்றி அனைத்து தகவல்களையும் தரவும் ஆணையிடுகிறார்
🐒 அவர்கள் வானர சேனையை பற்றி கூறுவதே மேல் அமைந்தவை
👑 போரின் இறுதியில் இராவணனை அழித்ததால் வரம் கேட்குமாறு ஸ்ரீ ராமரை வேண்ட போரில் உயிர் துறந்த வானரங்கள் உயிர்பெற வரம் வேண்டுகிறார் இதனால் அனைவரும் உயிர்பெறுகின்றனர்
🌼 அஞ்சனை புத்திரன் பாதம் சரணம் 🌼