Wednesday, May 10, 2017

👑 வராக அவதாரம்



🌸 ஹிரண்யாட்சன் பூமியை கடலில் மறைக்க அசுரனை கொன்று பூமியை நிலைநிறுத்த பகவான் எடுத்த அவதாரம் என கூறப்படுகிறது ஆனால் உண்மையில் வராக அவதாரத்தின் பின்புலம் வேறாகும்

🌸 பிரம்மாவின் பகல்பொழுது கல்பம் மற்றும் இரவுப்பொழுது விகல்பம் என்றழைக்கப்படுகிறது இந்த விகல்ப காலத்தில் சிருஷ்டிக்கும் தொழிலானது நடைபெறுவதில்லை

🌸 ஒவ்வொரு கல்பகால முடிவிலும் பிரளயம் வந்து 14 லோகங்களில் பூலோகம், புவர்லோகம் மற்றும் சுவர்லோகம் முழுவதுமாக அழியும் (பூமாதேவி பாற்கடலில் மூழ்குவார் என சில இடங்களிலும் பாதாளத்தில் என சில இடங்களிலும் கூறப்பட்டுள்ளது)

🌸 கல்பகாலம் தொடங்கியதால் பிரம்மதேவரின் படைத்து தொழில் தொடங்குகிறது சனகாதி முனிவர்களையும், சப்தரிஷி போன்றோர்களை படைக்கிறார் பரமபிதா

🌸 இந்த வேளையில் தான் ஜயவிஜயர்கள் சனகாதி முனிவர்களிடம் சாபம் பெற்று கசியபரின் மனைவி திதிக்கு 500 ஆண்டுகால கர்ப்பகாலத்திற்கு பின் ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யாட்சனாக  பிறக்கின்றனர்

🌸 பிரம்மதேவரை நோக்கி தவமியற்றும் ஹிரண்யாட்சன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும் எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பெறுகிறான்

🌸 கசியப்பரின் மகன் மற்றும் பிரம்மதேவரின் வரம் பெற்றவன் இதனால் அவனை வெல்ல யாரும் இல்லை என்ற நிலை உருவாகிறது

🌸 இதே வேளையில் பிரம்மதேவர் சுயம்பு மனுவை படைக்கிறார் (இவரே முதலில் படைக்கப்பட்ட மனிதர்) இவர் படைக்கப்பட்ட போது பூமி தனது நிலையில் இல்லை இதனால் தான் வசிக்கும் இடத்தை பிரம்மதேவரிடம் கேட்கிறார் இதனால் பூமியை உயர்த்த விஷ்ணுவால்தான் முடியும் என பகவான் விஷ்ணுவை துதிக்கிறார்

🌸 இதனால் பகவான் விஷ்ணு பிரம்மாவின் நாசியிலிருந்து கட்டை விரல் வடிவே உள்ள வெள்ளை வராக உருவத்தில் வெளிப்படுகிறார் கண் இமைக்கும் நேரத்திலே அவர் யானை வடிவமடைந்ததாகவும் அவரின் அதீத வளர்ச்சி கண்டு பிரம்மதேவர் உட்பட அனைவருமே ஆச்சரியம் அடைந்தனர் என என வராக புராணம் கூறுகிறது

🌸 அவதரித்தவர் விஷ்ணுவே என்றறிந்த பரமபிதா அவரை போற்றி வணங்குகிறார் சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது (வராகர் பூமியை துக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)

🌸 வெள்ளை வராக ரூபமெடுத்த பகவான் பூமியை நிலை நிறுத்த பாதாளம் நோக்கி செல்கிறார் இதற்கிடையே ஹிரண்யாட்சன் வருணனிடம் சண்டையிடுகிறான் வருணனால் ஹிரண்யாட்சனை வெல்ல இயலவில்லை இதனால் உன்னை வெல்ல கூடியவர் பகவான் விஷ்ணு மட்டுமே என்கிறார் வருணன்

🌸 பொதுவாகவே வரம்பெறும்போது இருக்கும் பக்தி அசுரர்களிடம் நிலைப்பதில்லை அகங்காரம் குடிகொள்கிறது இதற்கு ஹிரண்யாட்சன் மட்டும் விதிவிலக்கா என்ன?? தான் அனைவரையும் விட பலசாலி என்ற எண்ணம் இதனால் விஷ்ணுவையே சண்டைக்கு இழுக்க வைகுண்டம் நோக்கி செல்கிறான் ஹிரண்யாட்சன்

🌸 வைகுண்டத்தில் பக்தியினால் வைகுண்டம் அடைவோர் அனைவருமே பகவான் விஷ்ணு போலவே பகவான் விஷ்ணுவிற்கு இணையாகவே நடத்தப்படுவர் இதனால் அங்கு பலரை கண்ட ஹிரண்யாட்சன் இதில் யார் விஷ்ணு என்று குழம்புகிறார் இதனை கண்ட நாரதர் பகவான் தற்போது இங்கில்லை எனவும் அவர் பூமியை நிலைநிறுத்த பாதாளம் சென்றதாகவும் கூற அவ்வாறே செல்கிறான் ஹிரண்யாட்சன்

🌸 பூமியை தூக்க வராகர் முயலுகையில் அங்கு வரும் ஹிரண்யாட்சன் சுவேத வராகரை யுத்தத்திற்கு அழைக்கிறான்  பாதாளத்தில் இருவருக்கும் பெரும்போர் நடக்க இறுதியில் வராகர் ஹிரண்யாட்சனை கொன்று பூமியை நிலை நிறுத்துகிறார் பிறகு சுயம்பு மனு பூமியை ஆட்சி செய்துகிறார் அவரின் பெயராலேயே மனிதர்கள் என நாம் அழைக்கப்படுகிறோம் சுவேத வராகர் பூமியை நிலைநிறுத்தியதால் நாம் இருக்கும் இந்த கல்பம் " சுவேத வராக கல்பம் " என்றழைக்கப்படுகிறது

🌸 பிறகு பூமா தேவி கேட்ட கேள்விகளுக்கு பகவான் அளித்த பதில்களே வராக புராணம் ஆகும்

🌸 மனிதர்கள் அல்லாமல் மனிதர்களுக்கு மேலானவர்களுக்கு சங்கல்பம், வார்த்தை, பார்வை, ஸ்பரிசம் மற்றும் புணர்ச்சி ஆகியவற்றால் குழந்தையானது பிறக்கின்றனர் (இதை வியாசரே குந்தி தேவியுடம் ஆசிரமவாசிகா பர்வத்தில் உரைப்பார் குந்தி தேவிக்கு தேவர்கள் குழந்தை வழங்கியது சங்கல்பத்தாலேயே)

🌸 ஈசனின் வியர்வையில் பிறந்தோர்களே செவ்வாய், ஜலந்தரன் முதலியோர் ஆவர் அவ்வாறு வராகரின் கொம்பு பட்டதால் பூமாதேவிக்கு பிறந்தவனே நரகாசுரன் ஆவார் இவரை நாம் அனைவருமே அறிவோம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌸 ஹிரண்யாட்சன் பூமியை ஒளித்து வைத்ததாய் தகவல்கள் கூறப்பட்டாலும் புராணங்களில் பல இடங்களில் பிரளயத்தில் மூழ்கியதாகவே குறிப்புகள் சொல்கின்றன

🌸 பிரம்மதேவரின் பகல்பொழுது தொடங்கி அவர் சிருஷ்டிக்க தொடங்கும் வேளையில் பூமா தேவி விஷ்ணுவை துதிக்கிறார் பிரம்மதேவரும் மனு வாழ பிரித்வி வேண்டும் என துதிக்கிறார் அப்போது பகவான் பூமியை தூக்க செல்லும்போதே ஹிரண்யாட்சன் சண்டைக்கு இழுக்கிறான்

🌸 இப்புவியில் சுவேத வராகர் இருந்த இடங்கள் வராக ஷேத்திரம் என்றழைக்கப்படுகின்றன அவற்றுள் ஸ்ரீ முஷ்ணம் மற்றும் திருவேங்கடம் முக்கியமானவை

🌸 வராகர் பொதுவாக ஆதி வராகர், யக்ஞ வராகர் மற்றும் பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார்

👑 வராக பெருமானை வணங்கி நல்லருள் பெறுவோமாக 

No comments:

Post a Comment