Wednesday, April 26, 2017

நமது இதிகாசங்கள் மற்றும் கந்த புராணத்தில் உள்ள படை அளவுகள் பற்றிய பதிவு இது



5 காலாட்கள், 3 குதிரைகள், 1 தேர், 1 யானை, சேர்ந்தது 1 பத்தி.

3 பத்தி ஒன்று சேர்ந்தது 1 சேனாமுகம்.

3 சேனாமுகம் ஒன்று சேர்ந்தது 1 குல்மம்.

3 குல்மம் ஒன்று சேர்ந்தது 1 கணம்.

3 கணங்கள் ஒன்று சேர்ந்தது 1 வாகினி.

3 வாகினி ஒன்று சேர்ந்தது
1 பிருதனை.

3 பிருதனை ஒன்று சேர்ந்தது
1 சழூ

3 சழூ ஒன்று சேர்ந்தது
1 அனீகினி.

10 அனீகினிகள் ஒன்று சேர்ந்தது
1 அக்ரோணி

8 அக்ரோனி ஒன்று சேர்ந்தது
1 ஏகம்

8 ஏகம் ஒன்று சேர்ந்தது
1 கோடி

8 கோடி ஒன்று சேர்ந்தது
1 சங்கம்

8 சங்கம் ஒன்று சேர்ந்தது
1 விந்தம்

8 விந்தம் ஒன்று சேர்ந்தது
1 குமுகம்

8 குமுகம் ஒன்று சேர்ந்தது
1 பதுமம்

8 பதுமம் ஒன்று சேர்ந்தது
1 நாடு

8 நாடு ஒன்று சேர்ந்தது
1 சமுத்திரம்

8 சமுத்திரம் ஒன்று சேர்ந்தது
1 வெள்ளம்

எனில் ஒரு அக்ரோனி என்பது

21,870 - யானைகள் மற்றும் தேர்கள்
65,610 - குதிரைகள்
1,09,350 - காலாட் வீரர்கள்

ஒரு வெள்ளம் என்பது

29353261711360 - யானைகள் மற்றும் தேர்கள்
88059785134080 - குதிரைகள்
146766308556800 - காலாட் வீரர்கள்

மகாபாரதம்

பாண்டவர்கள் பக்கம் 7 அக்ரோனிகளும்

கௌரவர்கள் பக்கம் 11 அக்ரோனிகளும் இருந்தன

இராமாயணம்

ராம பிரானின் பக்கம் 70 வெள்ளமும்

இராவணனின் பக்கம் 1000 வெள்ளமும் இருந்தன

கந்தபுராணம்

முருகப்பெருமானின் பக்கம் 2000 வெள்ளமும்

சூரபத்மன் மற்றும் அவனது தம்பிகளின் படைகள் சேர்த்து மொத்தம் 200000 வெள்ளமும்(இவைகள் சூர பத்மன் மற்றும் அவன் தம்பிகள் பிறந்த போது உருவானவர்களே இது இல்லாமல் பலர் துணை நின்றனர்) இருந்தன

No comments:

Post a Comment