மஹாபாரதம் கும்பகோண பதிப்பு
தமிழில் மஹாபாரதம் மொழிபெயர்க்கப்படாதது குறித்து தமிழ்தாத்தா வருத்தம் தெரிவித்த காலம் அது
அதுவரை பலர் மஹாபாரத கதையை சுருங்க சொன்னாலும் ஒரு லட்சம் ஸ்லோகங்களுடன் கூடிய முழு மஹாபாரதத்தையும் யாரும் மொழிபெயர்க்கவில்லை
இதனால் திருச்சியில் பிறந்து கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் இந்த பெரும்பணி தொடங்கப்பட்டது
முயற்சிக்கு பாராட்டு கிடைத்தாலும் பலரின் அறிவுரை இது முடியாத காரியம் விட்டுவிடுங்கள் என்றே அமைந்தது ஆனால் இராமானுஜாசாரியார் விடுவதாக இல்லை
அவரின் விடாமுயற்சியால் பணி தொடங்கப்பட்டாலும் அவர் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை ஆரம்பத்தில் ஒத்துழைப்பதாய் கூறியவர்கள் எவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை
கிட்டதட்ட 1915-ல் தொடங்கி 27 ஆண்டுகளாக நடந்த இப்பணிக்காக அவர் தனது அரசு பணியை உதறி தள்ளியது மட்டுமில்லாமல் அவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணிவிடுத்து இதில் முழுதாக இறங்கினார்
டி.வி. ஸ்ரீநிவாஸாசார்யர் முதலிய பல சமஸ்கிருத பண்டியர்களின் கடின உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது
ஒருவர் மொழிபெயர்ப்பது
பின் அவரே சரிபார்ப்பது
அதன்பிறகு கைதேர்ந்த இரண்டு சமஸ்கிருத பண்டிதர்களால் வார்த்தை வார்த்தையாக சரிபார்க்கப்பட்டு பின்னரே வெளியிடப்பட்டது இதனால் இப்பதிப்பின் துல்லியம் ஊசியை போன்று கூர்மையானது
பின் அவரே சரிபார்ப்பது
அதன்பிறகு கைதேர்ந்த இரண்டு சமஸ்கிருத பண்டிதர்களால் வார்த்தை வார்த்தையாக சரிபார்க்கப்பட்டு பின்னரே வெளியிடப்பட்டது இதனால் இப்பதிப்பின் துல்லியம் ஊசியை போன்று கூர்மையானது
கண்ணபிரானின் அருளால் பல கணவான்களின் பொருளுதவியை கொண்டு மொழிபெயர்ப்பு நடந்தாலும் இவரின் பணியால் இவரது வறுமை பெரிதானதே உண்மை
ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதி பர்வம் 6 ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே 1,35,000 ரூபாய் செலவுசெய்து மஹாபாரதத்தை வெளியிட்டார்
தன் வாழ்நாளின் பெரும்பகுதியையும் தியாகத்தையும் மஹாபாரத மொழிப்பெயர்ப்புக்காக செலவிட்ட ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களுக்கு மஹாபாரதம் வெளியிட்டதால் 15,000 ரூபாய் நட்டம் வந்தது
தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய்க்கு விற்ற காலத்தில் ஏற்பட்ட 15,000 ரூபாய் நட்டத்தினால் கிட்டத்தட்ட அவரின் குடும்பமே திவாலானது
ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுவது நடக்கின்ற விசயமே ஆனால் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்றால் அந்த பெருமை கும்பகோண பதிப்பிற்கே உரியது
எளிதாக புரியும்படியே புத்தகம் அமைந்திருக்கின்றன அக்கால தமிழ்நடை படி எழுதியுள்ளனர்
வியாசரின் 1 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட முழு மஹாபாரதத்தையே மொழிபெயர்த்ததால் மொத்தமாக கூட்டினால் 8,875 பக்கங்கள் கொண்டவை இப்பதிப்பு இதனால் படிக்க விரும்புபவர்களுக்கு பொறுமை நிச்சயம்
பலரின் பூஜையறையை அலங்கரித்த இம்மொழிபெயர்ப்பு தற்போது அச்சு வடிவில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமே
இருப்பினும் Pdf வடிவில் இவை தற்போதும் கிடைக்கின்றன
Archive.org இணையதளத்தில் எடுக்கப்பட்ட கோப்புகள் தொகுக்கப்பட்டு கீழ் உள்ள சுட்டியில் உள்ளன
Total Size : 856 Mb
01 - ஆதி பர்வம்
Size : 87 Mb
02 - சபா பர்வம்
Size : 31 Mb
03 - வன பர்வம் பாகம் 1
Size : 83 Mb
03 - வனபர்வம் பாகம் 2
Size : 81 Mb
04 - விராட பர்வம்
Size : 27 Mb
05 - உத்யோக பர்வம்
Size : 72 Mb
06 - பிஷ்ம பர்வம்
Size : 53 Mb
07 - துரோண பர்வம்
Size : 75 Mb
08 - கர்ண பர்வம்
Size : 41 Mb
09 - சல்லிய பர்வம்
Size : 28 Mb
10 - சௌப்திக பர்வம்
Size : 6 Mb
11 - ஸ்திரி பர்வம்
Size : 6 Mb
12 - சாந்தி பர்வம் பாகம் 1
Size : 59 Mb
12 - சாந்தி பர்வம் பாகம் 2
Size : 65 Mb
13 - அனுசாசன பர்வம்
Size : 116 Mb
14 - அஸ்வமேதிக பர்வம்
Size : 32 Mb
15 - ஆஸ்ரம வாசிகா பர்வம்
Size : 8 Mb
16 - மௌசல பர்வம்
Size : 3 Mb
17 - மகாபிரஸ்தானிகா பர்வம்
Size : 1 Mb
18 - ஸ்வர்க்க ரோஹனா பர்வம்
Size : 2 Mb
Wow. Thank you so much
ReplyDelete