Thursday, December 14, 2017

மஹாபாரதம் கும்பகோண பதிப்பு



மஹாபாரதம் கும்பகோண பதிப்பு

தமிழில் மஹாபாரதம் மொழிபெயர்க்கப்படாதது குறித்து தமிழ்தாத்தா வருத்தம் தெரிவித்த காலம் அது

அதுவரை பலர் மஹாபாரத கதையை சுருங்க சொன்னாலும் ஒரு லட்சம் ஸ்லோகங்களுடன் கூடிய முழு மஹாபாரதத்தையும் யாரும் மொழிபெயர்க்கவில்லை

இதனால் திருச்சியில் பிறந்து கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் இந்த பெரும்பணி தொடங்கப்பட்டது

முயற்சிக்கு பாராட்டு கிடைத்தாலும் பலரின் அறிவுரை இது முடியாத காரியம் விட்டுவிடுங்கள் என்றே அமைந்தது ஆனால் இராமானுஜாசாரியார் விடுவதாக இல்லை

அவரின் விடாமுயற்சியால் பணி தொடங்கப்பட்டாலும் அவர் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை ஆரம்பத்தில் ஒத்துழைப்பதாய் கூறியவர்கள் எவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை

கிட்டதட்ட 1915-ல் தொடங்கி 27 ஆண்டுகளாக நடந்த இப்பணிக்காக அவர் தனது அரசு பணியை உதறி தள்ளியது மட்டுமில்லாமல் அவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணிவிடுத்து இதில் முழுதாக இறங்கினார்

டி.வி. ஸ்ரீநிவாஸாசார்யர் முதலிய பல சமஸ்கிருத பண்டியர்களின் கடின உழைப்பினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது

ஒருவர் மொழிபெயர்ப்பது
பின் அவரே சரிபார்ப்பது
அதன்பிறகு கைதேர்ந்த இரண்டு சமஸ்கிருத பண்டிதர்களால் வார்த்தை வார்த்தையாக சரிபார்க்கப்பட்டு பின்னரே வெளியிடப்பட்டது இதனால் இப்பதிப்பின் துல்லியம் ஊசியை போன்று கூர்மையானது

கண்ணபிரானின் அருளால் பல கணவான்களின் பொருளுதவியை கொண்டு மொழிபெயர்ப்பு நடந்தாலும் இவரின் பணியால் இவரது வறுமை பெரிதானதே உண்மை

ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதி பர்வம் 6 ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே 1,35,000 ரூபாய் செலவுசெய்து மஹாபாரதத்தை வெளியிட்டார்

தன் வாழ்நாளின் பெரும்பகுதியையும் தியாகத்தையும் மஹாபாரத மொழிப்பெயர்ப்புக்காக செலவிட்ட ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களுக்கு மஹாபாரதம் வெளியிட்டதால் 15,000 ரூபாய் நட்டம் வந்தது

தங்கம் ஒரு கிராம் 2 ரூபாய்க்கு விற்ற காலத்தில் ஏற்பட்ட 15,000 ரூபாய் நட்டத்தினால் கிட்டத்தட்ட அவரின் குடும்பமே திவாலானது

ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுவது நடக்கின்ற விசயமே ஆனால் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதென்றால் அந்த பெருமை கும்பகோண பதிப்பிற்கே உரியது

எளிதாக புரியும்படியே புத்தகம் அமைந்திருக்கின்றன அக்கால தமிழ்நடை படி எழுதியுள்ளனர்
வியாசரின் 1 லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட முழு மஹாபாரதத்தையே மொழிபெயர்த்ததால் மொத்தமாக கூட்டினால் 8,875 பக்கங்கள் கொண்டவை இப்பதிப்பு இதனால் படிக்க விரும்புபவர்களுக்கு பொறுமை நிச்சயம்

பலரின் பூஜையறையை அலங்கரித்த இம்மொழிபெயர்ப்பு தற்போது அச்சு வடிவில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமே

இருப்பினும் Pdf வடிவில் இவை தற்போதும் கிடைக்கின்றன


Archive.org இணையதளத்தில் எடுக்கப்பட்ட கோப்புகள் தொகுக்கப்பட்டு கீழ் உள்ள சுட்டியில் உள்ளன

Total Size : 856 Mb

01 - ஆதி பர்வம்
Size : 87 Mb

02 - சபா பர்வம்
Size : 31 Mb

03 - வன பர்வம் பாகம் 1 
Size : 83 Mb

03 - வனபர்வம் பாகம் 2
Size : 81 Mb

04 - விராட பர்வம்
Size : 27 Mb

05 - உத்யோக பர்வம் 
Size : 72 Mb

06 - பிஷ்ம பர்வம் 
Size : 53 Mb

07 - துரோண பர்வம்
Size : 75 Mb

08 - கர்ண பர்வம்
Size : 41 Mb

09 - சல்லிய பர்வம்
Size : 28 Mb

10 - சௌப்திக பர்வம்
Size : 6 Mb

11 - ஸ்திரி பர்வம்
Size : 6 Mb

12 - சாந்தி பர்வம் பாகம் 1
Size : 59 Mb

12 - சாந்தி பர்வம் பாகம் 2 
Size : 65 Mb

13 - அனுசாசன பர்வம்
Size : 116 Mb

14 - அஸ்வமேதிக பர்வம்
Size : 32 Mb

15 - ஆஸ்ரம வாசிகா பர்வம் 
Size : 8 Mb

16 - மௌசல பர்வம் 
Size : 3 Mb

17 - மகாபிரஸ்தானிகா பர்வம் 
Size : 1 Mb

18 - ஸ்வர்க்க ரோஹனா பர்வம் 
Size : 2 Mb

Saturday, October 21, 2017

👑 சுந்தரகாண்டம் - பாகம் 1

🌺 இராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திற்கும் அந்த நிகழ்வுகளை மையமாக கொண்டே பெயர்கள் அமைகின்றன ஆனால் விதிவிலக்காக அமைந்தது சுந்தர காண்டமே

🍁 இங்கு வானர சிரேஷ்டனான சொல்லின் செல்வன் அனுமந்தனின் புத்திகூர்மை மற்றும் வீரசாகசங்கள் தெளிவாக உள்ளன அச்சுந்தர காண்டம் பற்றி காண்போம்

🌼 அனுமந்தன் அஞ்சனை தேசத்தின் இளவரசன் ஆவார் அவரது தந்தை கேசரி இராமாயண யுத்தத்தில் பங்குபெற்றார் ஆனால் அனுமந்தன் தன் குருவான சூரிய தேவரின் கட்டளைப்படி சுக்ரீவனிடம் அமைச்சனாக இருந்தார்

🍁 இராவணன் ராகவன் பத்தினி ஜானகியை வனவாசம் வந்தபோது கடத்தி சென்றார் இதனால் சுக்ரீவனனின் நட்பை பெற்று அவருக்கு சகாயம் புரிந்ததால் சுக்ரீவனனின் வானரசேனை நாற்புறமும் சீதா தேவியை தேடிச்செல்கின்றனர்

☁ கோடிக்கணக்கான வானர வீரர்கள் மைதிலியை தேட சென்றாலும் சுக்ரீவரின் நம்பிக்கைக்கு உரியவராய் திகழ்ந்தது அனுமானே இதனாலே அனுமானுக்கு மட்டும் சிறப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன

🍃 இதனால் இராமபிரானும் சீதா தேவியை கண்டால் தனது நிமித்தம் காரணமாக வந்ததை தெரிவிக்க தனது கணையாழியை தருகிறார்

🌼 நாற்புறமும் ஜானகியை தேடச்சென்ற படைகளனைத்திலும் தென்திசை தவிர மற்ற படைகள் திரும்புகின்றன ஆனால் தென்திசை சென்ற படைகளில் காலக்கெடுவான ஒரு மாதம் கடந்தபின்னும் சீதா தேவியை காண முடியாததால் தங்கள் உயிரை மாய்க்க துணிகின்றன

🍁 அந்த நேரத்தில் சூரியனின் தேரோட்டியான அருணனின் மூத்த மகனும் ஜடாயுவின் தமயனும் சூரிய கதிர்களினால் தனது இறக்கையை இழந்தவனுமான சம்பாதியை காண்கின்றனர்

🍁 சம்பாதி அவர் இனத்திற்கே உரிய திவ்ய பார்வையை கொண்டு சீதை இருக்கும் இடத்தையும் தனது மகன் புஷ்பக விமானத்தில் இராவணன் சீதையை கடத்தி சென்றதை கண்டதையும் உரைக்கிறார்

🌼 அப்பொழுது ஆச்சாரியத்தின் உச்சமாக நிசாகர முனிவரின் சொல்லின்படி அனைத்து வானரங்களின் முன்பாக சம்பாதியின் சிறகுகள் நொடிப்பொழுதில் வளர்ந்தன இதைகண்ட வானரர்களுக்கு புதுத்தெம்பு கிட்டியது அவர்கள் சீதா தேவியை கண்டுவிட்டது போலவே உணர்ந்தன

🌹 இதனால் சம்பாதி கூறியதுபோலவே அவர்கள் சமுத்திரத்தின் அருகே வந்தன ஆனால் சமுத்திரத்தை தாண்டி அக்கரை சேர்வது மிகவும் கடினம் என அப்போதே அவர்கள் உணர்ந்தனர்

🌺 எதிர் இருக்கும் நூறு யோஜனை சமுத்திரத்தை தாண்டுவது பெருங்காரியமாக இருந்தது வானர சேனையில் வயதாகிவிட்டதால் ஜாம்பவான் 90 யோஜனை தாண்டுவேன் என்றும் அங்கதன் 100 யோஜனை தாண்டுவேன் ஆனால் திரும்ப வருவது என்னால் இயலாது என்கிறார் அப்போதே சிறுவயது முதல் அனுமனை அறிந்தவரான ஜாம்பவான் இக்காரியம் ஒருவனால் எளிதாக முடியும் ஆனால் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும் அவ்வளவே என அனுமானை ஊக்கப்படுத்துகிறார்

🌼 மாருதி அதீத சக்திகளின் விளைவால் சிறுவயதில் செய்த சேட்டையால் பிருகு மற்றும் ஆங்கிரசரின் குடும்பத்தின் வழிவந்தவரும் மகாபாரதத்தில் பீஷ்மர் ஞானோபதேசம் வழங்கியபோது உடன் இருந்தவருமான மாமுனிவர் திரிணபந்து அனுமான் தன் சக்திகளை மறப்பார் என சபிக்கிறார் பிறகு விமோசனமாக மற்றொருவர் ஞாபகப்படுத்தினால் அதை திரும்ப பெறுவார் என உரைக்கிறார் இதனால் ஜாம்பவான் கூறியபின் அனுமானிற்கு தனது சக்தி ஞாபகம் வருகிறது

🌺 முன் நூறு யோஜனை தாண்ட முடியுமா என யோசித்த அனுமான் தற்போது விஸ்வரூபம் எடுக்கிறார் அப்போது அவர் முழு வேகத்தோடு செல்லும் கருடனை கூட நான் ஒரே முயற்சியில் ஆயிரம் வலம் வருவேன் என்கிறார் எனில் அவரின் வேகத்தை யூகிக்கலாம்

🍀 பறப்பது வேறு தாண்டுவது வேறு இங்கு அனுமான் நான் 16,000 யோஜனை தூரத்தை கூட தாண்டுவேன் என அவர் மனம் கூறுகிறது என்கிறார்

🌼 தான் பறக்கும்போது வரும் விசையின் காரணமாக இந்த நிலமே பாதிக்கப்படும் என்று மகேந்திர மலையின் உச்சிக்கு ஏறுகிறார்

👑 எந்நகரத்தின் பெயர் கேட்டாலே தேவர்கள் நடுங்குவார்களோ

👑 ஏந்நகரத்தில் திக்கஜங்களுடன்கூட போரிட்ட இராவணன் மற்றும் அரக்கசிரேஷ்டர்கள் 1000 வெள்ளப்படையுடன் உள்ளனரோ

👑 எந்நகரத்தின் மீது தேவர்கள்,கந்தர்வர்கள், தானவர்கள், யட்சர்கள் என அனைவரும் சேர்ந்துகூட போர்தொடுக்க அஞ்சுவார்களோ

👑 அந்நகரத்தின் மீது தன்னந்தனி ஆளாக வானரசிரேஷ்டன் வாயுபுத்திரன் சூறாவளியையும் மிஞ்சும் வேகத்தில்  பாய்வதில் தொடங்குகிறது சுந்தர காண்டம்

🌹 முற்காலத்தில் மலைகள் எல்லாம் பறக்கும் திறன் கொண்டவையாக இருந்தன இதனால் முனிவர்கள் அச்சப்பட இந்திரன் அவற்றின் இறக்கை எல்லாம் வெட்டி எறிகிறார் இவற்றில் மைநாக பர்வதத்தினை மட்டும் வாயு தேவன் காப்பாற்றி கடலில் சேர்க்கிறார் அங்கு வருணன் அடைக்கலம் கொடுத்தார்

🌹 வருணனை வளர்த்தவர் சூரிய வம்சத்தின் ஸகரன் என்ற மன்னனே ஆவார் இதனால் கடமைப்பட்ட வருணன் அனுமானுக்கு உதவ மைநாக பர்வதத்திடம் இதை கூற அம்மலை அனுமான் சமுத்திரத்தை தாண்டும்போது இடையில் ஓய்வு எடுப்பதற்காக கடலின் மேல் வருகிறது இதை அனுமான் தடங்கலோ என நினைத்து தன் மார்பால் இடிக்கிறார் ஆனால் உள்ளதை எல்லாம் கூறி உபசரிப்பை ஏற்கவேண்டுகிறது

🌻 ஆனால் அனுமான் இராம காரியம் முடிக்கும் முன் ஓய்வு எடுக்கமாட்டேன் என கூறி தனது கரத்தால் தடவிகொடுத்து இதுவே நான் உன் உபசரிப்பை ஏற்றதுபோல் ஆகும் என கூறிச்செல்கிறார் இதைக்கண்டு மகிழ்ந்த இந்திரன் மைநாக பர்வதத்திற்கு இனி பயமில்லாமல் இஷ்டபடி வாழ வரமளிக்கிறார்

🌹 இம்மலையை தாண்டி அனுமந்தன் செல்கையில் நாகங்களின் தாயாகிய ஸுரசை என்பவளை அனுகிய இந்திரன் வாயுபுத்திரனை இடையில் ஒரு முகூர்த்தகாலம் தடுக்க சொல்கிறார் அவ்வாறே செல்லும் ஸுரசை பயங்கர இராட்ஷசர் உருவம் கொண்டு அனுமானை தடுக்கிறார்

🌹 இப்பாதையில் செல்லும் அனைத்தும் தனக்கு உணவாக வேண்டும் என கூறுகிறார் ஸுரசை இதைக்கேட்ட அனுமான் தான் இராம காரியம் காரணமாக செல்வதாகவும் சீதா தேவியை பார்த்துவிட்டு இராமபிரானிடம் அதை தெரிவித்து பின் தானே இங்கு வந்து உணவாவதாகவும் வாக்களிக்கிறார்

🌸 ஆனால் இவ்வழியாக செல்லும் அனைத்து உயிரினங்களும் தன் வாயில் நுழைந்தே ஆகவேண்டும் இது பிரம்மாவின் வரம் என கூற சரியென அனுமந்தரும் தனது உருவத்தை பெரிதாக்க அவ்வாறே தனது வாயை பெரிதாக திறக்கிறார் இராட்ஷசி உருவில் இருந்த ஸுரசை

🌺 இச்சமயத்தில் திடீரென தனது வடிவத்தை சுருக்கி கொண்ட மாருதி வாயினுள் புகுந்து வெளிவந்தான் இது ஆச்சரியமாக இருந்தது பின் நான் உங்கள் எண்ணப்படியும் பிரம்மாவின் வரத்தின்படியும் உள்புகுந்து வெளிவந்துவிட்டேன் எனக்கூற ஸுரசை தன் சுயரூபத்தை காட்டி ஹனுமனை ஆசிர்வதிக்கிறார்

🌺 பின் தன்பணியை துவங்கும் அனுமான் வேகமாக செல்கிறார் பிறகு நிழலை பிடித்து அசையவிடாமல் செய்து உயிரினங்களை விழுங்கும் ஹிம்சிகையென்னும் அரக்கி அனுமானின் நிழலை பிடிக்கிறார் திடீரென்று தனது வேகம் குறைவதை கண்ட அனுமான் இராட்ஷசி தன்னை விழுங்க வருவதை கண்டார்

🌺 ஏற்கனவே சுக்ரீவன் இதைப்பற்றி அறிவுறுத்தியதால் இதான் ஹிம்சிகை என வாயுபுத்திரன் அறிகிறார் இதனால் முன்போல தனது உருவத்தை பெரிதாக்கி பின் அவளது வாயினுள் செல்லும் மாருதி அவளது முக்கிய பாகங்களை அடித்து அவளை கொன்று வெளிவந்து திரும்பவும் தன்பணியை தொடர்கிறார்

🌻 இவ்வாறு வாயு வேகத்தில் செல்லும் கேசரிநந்தன் குபேரனிடம் இருந்து பிடுங்கிய நகரமும் அமராவதியை செல்வத்தில் மிஞ்சும் நகரமான இலங்கையை சென்றடைகிறார்

🍃 இலங்கை சென்றடைந்த அஞ்சனை புத்திரன் பகல் வேளையில் இலங்கையினுள் நுழைந்தால் நம்காரியம் கெட்டுவிடும் என யோசித்து அதற்கு இராத்திரியே சரியான நேரம் என எண்ணி பர்வதத்தில் ஏறி இலங்கையின் பாதுகாப்பு அம்சங்களை நோட்டமிடுகிறார் அனுமான்

🌹 தேவாசுரர்களேயாலும் நுழையமுடியாத இலங்கை காக்கப்படும் விதத்தை ஆராய்கிறார் ஏந்நேரமும் நாற்புறமும் காக்கப்படும் இலங்கையை கண்டு வானரர்கள் இங்கு எவ்வாறு வரக்கூடும் எனவும் அப்படியே வந்தாலும் அவை ஆழிகள் மற்றும் இக்கோட்டையை தாண்டி இலங்கையை எவ்வாறு வெல்லும் என யோசிக்கிறார் பின் முதலில் நான் சீதா தேவியை கண்டபிறகே இதையெல்லாம் ஆலோசிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்

🍃 ஒரு வழியாக அனுமான் காத்திருந்த இராத்திரி பொழுது வருகிறது தன் உருவத்தை ஒரு பூனையின் உருவிற்கு சுருக்கிகொண்ட இலங்கையின் வாசலை அடைகிறார்

🌹 ஆனால் அவ்வுருவத்தையும் இலங்கினி எனும் இலங்கையின் காவல்தேவதை காண்கிறாள் இலங்கினியே இலங்கையின் மொத்த ரூபமாவாள் அவள் அனுமந்தரை மிரட்டும் தோனியில் யார் எனகேட்க அவரும் கூற அவரை ஓங்கி அடிக்கிறார் இதனால் கோபம் கொண்ட பஜ்ரங்கபளி பெண் என்பதால் இடது கையால் அதுவும் முழுபலத்தை உபயோகிக்காமல் ஒரு அடி கொடுக்கிறார்

🍁 இந்த அடியிலே லங்கினி வீழ்கிறாள் அதன்பிறகே அவளுக்கு தனது சாபம் நினைவுக்கு வருகிறது முற்காலத்தில் பிரம்மாவின் வாயில்காப்பவளாக இருந்த இலங்கினி அவளது அகங்காரத்தினால் இராட்ஷசர்களின் காவலாளியாக போ என்ற சாபத்தை பிரம்மாவிடம் பெற்றார் பிறகு மனமிரங்கிய அவர் என்று நீ ஒரு வானரன் அடியால் வீழ்கிறாயோ அன்றிலிருந்து இராட்ஷசர்களின் அழிவு தொடங்கும் அப்போது உனக்கு விமோசனம் என கூறினார்

🌺 இது நினைவிற்கு வர லங்கினி விஜயந்திரியனை வணங்கி இலங்கையினுள் செல்ல அனுமதியளிக்கிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌻 இங்கு கவனிக்க வேண்டிய விசயம் ஹனுமான் சந்தித்த மூன்று தடைகளுமே பெண்களாவர்

👑 ஸுரசையிடம் காட்டிய பணிவு லங்கினியிடம் இல்லை

👑 லங்கினியிடம் பெண் என்பதால் காட்டிய பரிதாபம் ஹம்சிகையிடம் இல்லை

👑 தான் யார் என்றும்

👑 பிரம்மாவிடம் வரம்பெற்றதால் தன்னால் இப்பாதையில் வரும் எவரையும் உண்ண முடியும் என்ற அகங்காரமில்லாமலும்

👑 ஹனுமானை உணவாக அவரிடமே கேட்டதாலும்

👑 ஸுரசையின் குணத்தை கண்டு அவருக்கு மதிப்பளித்தார் கபிசிரேஷ்டர்

👑 காவல் தேவதையாக இருந்த லங்கினி தனது கடமையை எடுத்துரைத்தாள் கொஞ்சம் கோபத்துடன்

👑 ஹனுமானிடம் தனது பலத்தை காட்ட ஒரு அடி குடுத்தாள் லங்கினி ஆனால் லங்கினியின் செயலால் பலமே இங்கு பேசப்படும் என்றாலும் அனுமான் இடக்கையால் தனது முழு பலத்தை பயன்படுத்தாமல் குறைவாக அடி கொடுத்தார்

👑 மற்ற இருவரை காட்டிலும் ஹம்சிகையின் செயல் வேறாகும் மற்ற இருவரை பற்றியும்  வாயுபுத்திரன் அறியவில்லை ஆனால் ஹம்சிகை பற்றி ஹனுமானுக்கு சுக்ரீவன் தெளிவாக கூறியிருந்தார் மேலும் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை ஆஞ்சநேரை நேரடியாக முழுங்கவே செய்தார் பிறகே வீரமைந்தன் அவளை வதைப்பது அன்றி வேறுசெயல்கள் செல்லாது என பிளந்தார்

👑 இம்மூன்று நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கினால் விஜயந்திரியனின் பார்வைபுரியும்
ஸுரசையிடம் மேன்மை குணத்தையும்
இலங்கினியிடம் பெண்மையும் கண்ட மாருதி
ஹம்சிகையிடம் அரக்கதனத்தை மட்டுமே கண்டார்

👑 இராம காரியத்திற்கு செல்லும் ஹனுமானை இந்திரன் ஏன் ஸுரசை அனுப்பி சோதிக்க வேண்டும் இது அனைவருக்கும் எழும் கேள்வி

👑 முதலில் எதிர்த்தது ஸுரசை இங்கு இரண்டு காரியங்களே சாத்தியமாகும்

👑 அதாவது ஒன்று பிரம்மாவின் வரமாதலால் ஸுரசைக்கு இறையாதல்

👑 இல்லை பிரம்மாவின் வரத்தை மீறும் செயலாக ஸுரசையை சண்டையிட்டு வீழ்த்தி முன்னே செல்லவேண்டும்

👑 இந்த நேரத்தில் மாருதியின் செயல்கண்டு வியக்காதோர் இல்லை ஏனெனில் அவர் இவை இரண்டையும் செய்யவில்லை பிரம்மாவின் வரத்தை உதாசீனம் செய்யவும் இல்லை மாறாக உணவாகவும் இல்லை

👑 இதனால் அனுமானின் விவேகம் நன்கு வெளிப்பட்டது அனைவரும் வியக்கும் மூன்றாம் முடிவை அவர் எடுத்தார்

👑 கடல் கடந்து இலங்கையில் இறங்கியாகிவிட்டது ஆனால் கேசரிநந்தன் அவசரபடவில்லை இரவு வரை காத்திருந்தார் ஆனால் அந்த நேரத்தையும் விரயம் செய்யவில்லை மாறாக இலங்கையின் பாதுகாப்பை உற்று நோக்கினார்

👑 அவர் ஒவ்வொன்றையும் நோக்கி இது வானர சேனைக்கு சாத்தியமா இல்லை இதை சாதிக்க வல்லவர்கள் நம் சேனையில் யார் என யோசிக்கிறார் அவரின் பார்வையில் இராம லட்சுமணர்கள் மற்றும் 10 வானரங்களை தவிர வேறு எவராலும் இலங்கையின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முடியாது இவ்வாறு அவர் பார்வையிலேயே செய்த ஆராய்ச்சி அவரின் விவேகத்தின் உச்சியாகும்

🔰 அடுத்த பதிவில் சீதா தேவியை கண்ட ராமதூதன்

👑 சுந்தரகாண்டம் - பாகம் 2


👑 பெரும் சமுத்திரத்தை தாண்டி இலங்கை வந்தடைந்து லங்கினியிடம் விடைபெற்ற கபிக்குஞ்சரன் லங்கையை நாசம்செய்யவிருப்பதால் அதன் வாசல்வழி நுழைவது தகாது சுவர்ஏறி தனது இடதுகாலை முன்வைத்து இலங்கையினுள் பிரவேசித்தார் (இக்காரணத்தால் இன்றும் வலது கால்வைத்து உள்வரும் பழக்கம் உள்ளது)

🌻 தங்கத்தினால் தூண்கள் கொண்டதும் வைர வைடூரியங்களால் பாதைகள் நிரப்பப்பட்டதுமான லங்காபுரியின் ஒவ்வொரு வீடும் விடாமல் அனைத்திலும் சீதா தேவியை தேடுகிறார் வானரசிரேஷ்டன்

🌻 இலங்கையினுள் இராவணனின் மூலபல சேனையையும் அவற்றால் காக்கப்படும் அரண்மனையையும் காண்கிறார்

🌹 இரவு தொடங்கிய காரணத்தால் அங்கு அரக்கர்கள் மது மாமிசம் உண்டு திளைக்கின்றனர் மேலும் சந்திரனின் பூரண ஒளியில் காதலர்கள் தங்கள் துணையுடன் ரசிக்கின்றனர் இங்கு ஒரு பெண்ணின் புருவத்தை வைத்தே ஹனுமான் அந்த பெண்ணின் மனித குளமா இல்லை அரக்கியா என யூகித்து அங்கும் சீதா தேவி இல்லாததை கண்டு வருந்துகிறார்

🌻 இராவணன் மகன் மேகநாதனிலிருந்து இந்திரனை வென்ற பிரகஸ்தன் வீடுவரை அனைத்து முக்கிய சேனாதிபதிகளின் வீடுகளிலும் ஹனுமான் கவனத்துடன் தேடுகிறார் பிறகு இராவணனின் மாளிகையை தேடி செல்கிறார்

🌻 சிவப்பு நிறமும் வெண்மை நிறமும் கொண்ட குதிரைகளுடைய இராட்ஷசிகளையும் யுத்தத்தில் ஐராவதம் மற்றும் திக் கஜங்களுக்கு இணையான யானைகளையும் காண்கிறார்

🌻 பிறகு யானைகளிலும்
எந்த ரதத்தையும் இழுக்கும் திறன்கொண்ட குதிரைகளிலும்
பறக்கும் திறன்பெற்ற ரதங்களிலும்
சிங்கம் புலி போன்றவற்றின் தோலினால் செய்யப்பட்ட கவசத்தையுடையவர்களான தனுர்வித்தையில் தேர்ந்த வீரர்களால் காக்கப்படுவதுமான இராவணனின் அந்தபுரத்தை காண்கிறார்


 🌼 பிறகு சூரியனுக்கு நிகரான ஒளிபொருந்துமளவிற்கு ஆபரணங்களை அணிந்த காலாட்படையினால் காக்கப்படுவதும்

 👑 உயரத்தில் மந்தர மலையை ஒத்ததும்

 👑 நீர் பருகும் கிண்ணம் முதல் படுக்கை வரை அனைத்தும் ரத்தினங்களாலும் வைடூரியத்தினாலும் இழைக்கப்பட்டதும்

 👑 எந்நேரமும் அப்சரஸ்களுக்கு இணையான பெண்களால் இசைக்கப்படும் இசையை உடையதும்

 🌼 விஸ்வகர்மாவினால் நிர்மானிக்கப்பட்டு இராவணன் தன்விருப்பப்படி தன் மாமனாரும் அசுர சிற்பியான மயனின் மூலம் மெருகேற்றப்பற்றதுமான
இராவணனின் மாளிகையில் நுழைகிறார்

👑 அங்குள்ள சிற்ப வேலைபாடுகளை கண்டு வியக்கிறார் அனைத்தும் சொர்ணத்தில் அமைந்ததாய் இருந்தன பிறகு சொர்கமே நேராக வந்து இறங்கியது போன்று காணப்பட்ட புஞ்பக விமானத்தை காண்கிறார்

👑 இது பிரம்மதேவருக்கு விஸ்வகர்மா செய்துகொடுத்தது பின் அது குபேரனின் தவத்தால் குபேரனுக்கு கிட்டியதை இராவணன் அபகரித்தான் பிரம்மதேவருக்காக செய்யப்பட்டதால் இது செல்வத்தில் குறையில்லாததாக இருந்தது

🌻 புஞ்பக விமானத்திலும் சீதா தேவியை காணாததால் இராவணனின் தங்கி இருக்கும் பவனத்தையே சென்று அடைகிறார் அது சொர்க்கலோகமோ இல்லை பிரம்மலோகமோ என்று எண்ணும் அளவிற்கு மேன்மையுடையதாக இருந்தது

🌻 அங்கு ஆயிரக்கணக்கான பெண்களை காண்கிறார் அனைவரும் விளையாடி விட்டு உறங்குகின்றனர் அங்கு கந்தர்வ பெண்களில் இருந்து பலரும் காணப்பட்டனர் அனைவரும் இராவணன் மேல் அதீத காதல்கொண்டவராய் இருந்தனர் இராவணனின் பராக்கிரமம் மற்றும் ஞானத்தை கண்டு அவனை மணந்தவர்களாக இருந்தனர் இங்கு சீதா தேவியை தவிர மற்றவர்கள் விரும்பி இராவணனை ஏற்றவர்களாகவே இருந்தனர்

🌻 பிறகு தங்கத்தால் செய்யப்பட்டு இரத்தினங்களால் இழைக்கப்பட்டு தந்தங்களால் அலங்கரிக்கப்பட்டு பல பெண்களால் சாமரம் வீசப்பட்ட இராவணன் படுக்கையறையை அடைகிறார் இராவணன் அருகில் சென்றதுக்கே தான் இந்த பாபிக்கு அருகில் வந்துவிட்டோமே என உடனடியாக விலகுகிறார்

🌻 பிறகு இராவணனின் அரண்மனை முழுதும் தேடுகையில் கேசரிநந்தன் உத்தமிகளில் முதன்மையானவளும் இராவணனின் பத்தினியும் பட்டத்து ராணியுமான மண்டோதரியை காண்கிறார் ஒரு கணம் அதுதான் சீதையே என சொல்லின் செல்வன் எண்ணும் வகையில் மண்டோதரியின் தோற்றம் இருந்தது ஆனால் இராமபிரானை பிரிந்த மைதிலி இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கமாட்டாளே என அது சீதை இல்லை என முடிவுக்கு வருகிறார்

🌻 அனுமான் இலங்கையை சல்லடை போட்டு தேடியும் சீதா தேவியை காணாததால் பெரும்துயர் அடைந்தார் ஒருவேளை சீதையை விஜேந்திரியன் காணவில்லையேல் விளையும் விபரீதங்களை நினைத்துபார்க்கவும் இயலவில்லை ஆனால் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை ஒருவேளை சீதையை காணமுடியவில்லையேல் தசதலைகளை கொண்டவனை கொன்று விடுவதே அவரின் முடிவாய் இருந்தது

🌻 அனுமந்தன் இவ்வாறு யோசிக்கையில் அவருக்கு எதிரில் பட்டது பரந்த வனமே நகர்முழுதும் தேடியும் காணததால் கபிசிரேஷ்டன் வனத்தில் தேட அனைத்து தேவதைகளையும் வணங்கிவிட்டு களத்தில் இறங்குகிறார்

🌻 வனத்தில் தேடிசெல்கையில் மண்ணாலான மலையான ஜகதிபர்வத்தை காண்கிறார் அதன் வளமும் அது ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட விதமும் அற்புதமாக இருந்தது மேலும் அங்கு பெருக்கெடுத்து ஓடும் நதியையும் அதன் கரைகளில் இருந்த பசுமை மற்றும் நீருக்காக அங்கு இருந்த விலங்குகளையும் கண்ட வீரமைந்தன் பார்த்தவி நிச்சயம் அங்கு வருவார் என யூகிக்கிறார்


🌻 இதனால் சிம்சுபா மரத்தின் மீது அவர் ஏறி ஒட்டுமொத்த வனத்தையும் அலசுகிறார் அவர் அவ்வாறு மரத்தில் ஏறி இருந்தபோது இராட்ஸச பெண்களால் பாதுகாக்கப்பட்டு தனது வஸ்திரங்கள் முழுதும் அழுக்கடைந்தும் சோகத்தினால் அழுதே இளைத்துபோன ஆபரணங்களை மரத்தில் அனுவித்திருந்த பெண்ணை கண்டார் ஸ்ரீராமரின் சொற்களால் அவளே சீதை என யூகிக்கிறார்

🌹 சீதையின் நிலையை கண்ட விவேகசீலனுக்கே கண்ணில் நீர் ததும்பியது இப்படிப்பட்ட இரு ஜீவன்கள் பிரிந்து இருக்கையில் இருவருக்கும் காலம் கடந்து செல்வது கடினமென எண்ணினார் இராவணனின் மேல் கோபம் எல்லை கடந்தது ஆனால் இராமருக்காக இராவணனை விட்டுவைக்க வேண்டும் என தன்னை சமதானப்படுத்தினார்

🌹 ஸ்ரீராமனின் துயரை சீதையை கண்டதுமே அனுமான் உணர்ந்திருக்க வேண்டும் அனுமான் இராமரின் செயல்கள் அனைத்தும் சீதைக்காகவே என எண்ண துவங்கினார்

🌹 இராமரின் அளவு கடந்த துயரத்தை கண்ட விஜேயந்திரியன் வசிஷ்டரிடம் யோக வசிஷ்டம் பெற்ற இராமனே இவ்வாறு பெண்பிள்ளைக்காக துடிப்பதா என எண்ணினார் ஆனால் சீதையை கண்டதும் இருவரின் மனமும் மற்றவர் மீதே தொடர்ந்து இருப்பதால்தான் இருவரும் ஜீவித்து உள்ளனர் இல்லையேல் முகூர்த்தகாலம் ஜீவிப்பது கூட கடினமே என கண்ணீர் ததும்புகிறார்

🌹 சீதைக்காக மூவுலங்களையும் ராமன் நாசம்செய்தாலும் தகும் அத்தகைய மேன்மையுடையவள் மைதிலி

🌹 மூவுலங்களின் இராஜ்யமே கிட்டினாலும் பார்த்தவியின் பதினாறில் ஒரு பங்கிற்கு ஈடாகாது

🌻 உயர்ந்த குணத்தாலும் நிறைந்த மனத்தாலும் பெரும்புகழ் கொண்ட இராமனும்

🌻 இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என இராமன் வனவாசம் செல்ல துணிந்த போது 18 வருடமாக அரண்மலையிலேயே வளர்ந்தவள் கொடும்வனம் செல்ல துணிந்தாலே அவ்வைதேகியும் துன்பப்படுவது கண்டு அஞ்சனைபுத்திரன் வருந்தினான்

🌻 இராத்திரி வேளை இவ்வாறு கழிகையில் பின்ராத்திரி வேளையில் பெரும் இசை இசைக்க இராவணன் சீதையை காண நூறுபெண்கள் உடன்வர ஏற்கனவே கலங்கிகொண்டிருக்கும் சீதை தற்போது கண்ணில் மேலும் நீர்பெறுக கலங்கினாள்

🌹 இராவணன் வர சீதை தன்னை குறுக்கி தனது கையால் மறைத்து இராவணன் தன்னை காண முடியாதபடி அமர்ந்தாள் இதைகண்ட இராவணன் வைதேகியிடம் அச்சம்கொள்ள தேவையில்லையென்றும் இருக்கும் போகங்களை அனுபவித்து சுகமோடு வாழ்வாய் என்றும் பிரம்மதேவர் தனது முழுத்திறன் கொண்டு படைத்த பெண்களிலேயே முதன்மையான நீ இவ்வாறு அழுக்கான ஆடைகளுடன் ஆபரணம் இல்லாமல் சோகமாய் இருப்பது உனக்கு தகாது எனக்கூறுகிறான்

🌹 இதைக்கேட்ட ஜனகநந்தினி இராவணனை நேருக்கு நேராக பார்க்காமல் ஒரு அருகம்புல்லை இடையில் வைத்து இவ்வாறு பேசலானாள்

🌹 இராவணா இவ்வாறு சிந்தை இழந்து செயல்கள் புரியாதே நான் ஜகத் ரட்சனாகிய ஸ்ரீராமனின் பார்யை உனக்கு இருக்கும் பார்யைகளிடத்தில் கீரிடிப்பாய் உன் பார்யையை ஒருவன் இவ்வாறு கவர்ந்தால் உன்நிலையென்ன இதுவே அனைவரின் நிலையும் ஒரு பதிவிரதையின் தர்மத்தை நீ அறிந்திருக்கமாட்டாய் இராவணா

🌹 நீயும் உனது சொந்த பந்தங்களுடன் கூடிய அனைத்து வளங்களுமுடைய சமஸ்த லங்கையும் உனது செயலால் அழிவை சந்திக்க போகிறது

🌹 அனைத்து லோகங்களிலும் நிகரற்றவனான ராமனின் பத்தினி நான்

🌹 இராமனும் நானும் என்றும் வேறு ஆகமாட்டோம் பதினான்கு லோகங்களிலும் இராமனின் புஜம் நிகரற்றது அந்த புஜத்தில் தலைவைத்து இராமனை அணைத்து உறங்குபவள் நான்

🌹 இராவணா மோசமான மரணத்தை நீ விரும்பவில்லையென்றால் உனது சொந்தங்கள் நிலைக்க வேண்டும் என எண்ணினால் இராமரின் பாதம் சரணம் அடைவாய் என்னை இராமரிடத்தில் சேர்த்து மன்னிப்பு வேண்டு அவர் நிச்சயம் மன்னிப்பார்

🌹 இந்திரனின் வஜ்ரம் கூட தவறலாம்
எமன் பல காலம் முயன்றுகூட உனது உயிரை எடுக்கமுடியாமல் திரும்பலாம் ஆனால் இராமனின் கோபம் உன்னை போன்றவர்களை விட்டுவைக்காது

🌹 இராமலட்சுமணர்களின் வாசனை கூட இல்லாத நேரத்தில் தானே என்னை கவர்ந்தாய் அவர்களின் யுத்தத்தை நீ காணவில்லை அவர்களிடம் உனது பாணம் வெல்லாது எனக்கூறுகிறார்

🌹 இதைகேட்ட இராவணன் சீதைக்கு இரண்டுமாத காலம் அவகாசம் தருகிறான் இரண்டுமாதம் முடிந்த அடுத்த நாளே சீதையை உணவாக இராட்ஷசர்கள் சமைத்து அதை இராவணன் உண்ணுவான்

🌹 இதைகேட்ட ஜனகபுத்ரி இராமனை யானையாகவும் இராவணனை முயலாகவும் கூறினார்

🌻 இராவணா என்னால் உன்னை இப்போதே பஸ்மம் ஆக்க முடியும் ஆனால் என் பிரபுவின் நிமித்தமாகவும்  எனது பதிவிரதை தவத்தை காக்கவுமே அவ்வாறு செய்யாதிருக்கிறேன்

🌻 சீதையின் நிலை இராவணனின் மனைவிகளுக்கு வருத்தத்தை தந்தது அதில் தான்யமாலி இராவணனை கட்டியனைத்து விருப்பமுள்ள நாங்கள் இருக்கையில் அந்த மனிதப்பெண்னை விடசொல்லி கேட்கிறார் ஆனால் இராவணன் சீதைக்கு காவல் இருந்தவர்களிடம் வைதேகியை அடிபணிய வைக்க கட்டளை இட்டு செல்கிறான்

🌹 இராவணன் சென்றபிறகு இராட்ஷச பெண்கள் அவளை பலவாறாக மிரட்டுகின்றனர் பல ஆசைவார்த்தைகளால் சீதையை மனமாற்ற முயல்கின்றனர் இதனால் மிகவும் கலங்கி அழுத சீதை மிகவும் வருத்தமுற்று அழுகிறார் அவ்வாறு அழுதுகொண்டிருந்த சீதை விவேகசீலன் இருந்த சிம்சுபா மரத்தின் அருகில் வருகிறார் அங்கு இருக்கும் அசோக மரத்தினை பிடித்து அழுகிறார் அரக்கபெண்களிடம் தாராளமாக நீங்கள் என்னை உணவாக உண்ணுங்கள் என உரைத்து குடும்பத்தை நினைத்து அழுகிறார்

🌹 இராமனின் குணம் அனைத்து இடங்களிலும் பெயர்பெற்றது இகழத்தக்கவனிடத்திலும் மேன்மையை காண்பவன் அவனை பிரிந்து நான் இனி வாழ்வதில் என்ன உபயோகம் இனி பிராணனை துறப்பதே சரியென எண்ணுகிறார்

🌹 இந்நிலையில் இராட்ஷச பெண்கள் சீதையை உண்ணபோவதாக கிளம்ப வயதான பெண் அரக்கியான திரிசடை அந்த அரக்கிகளை தடுத்து தான் பகல்வேளையில் இலங்கை ஒரு வானரால் கொளுத்தப்பட்டு அனைத்து இராட்ஷசர்களும் அழிந்து இராவணனை வீழ்த்தி இராமனும் சீதையும் சேர்வதை கனவில் கண்டதாகவும் இது நிச்சயம் நடக்க போவதாகவும் உரைத்து உங்களை நீங்கள் காத்துகொள்ள விரும்பினாள் சீதைக்கு பணிவிடை செய்யுங்கள் எனக்கூறுகிறார்

🌹 ஆனால் சீதை தனது நீண்ட முடியை கொண்டு தனது கழுத்தை நெறித்து தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்

🌻 இதுவரை அனைத்தையும் கவனித்த மாருதி இனி சீதையை அனர்த்தத்தில் இருந்து தடுக்க எண்ணினார் இதனால் அவர் தசரதனிலிருந்து தற்போது நடந்த வரை இராமகதையை உரைத்தார் சீதைக்கு இது கனவா இல்லை நினைவா என சந்தோஷத்துடன் கூடிய ஆச்சர்யம் மேலிட்டது

🌹 இதன்பின் அனுமான் சீதையிடம் தாம் யார் என வினவ சீதை தன் கதையை கூறுகிறார் ஆனால் சீதைக்கு இன்னும் சந்தேகம் இருந்தது ஒரு வேளை வந்தது மாயமறிந்த இராவணனாக இருந்தால் இதனால் இராமரின் குணங்களை பற்றியும் இராமனின் உடல் அங்கங்களை பற்றியும் கேட்க அனுமந்தன் அனைத்தையும் தெளிவாக உரைக்கிறார்
(கால் விரல்கள் அளவு முதற்கொண்டு)

🌻 இதன்பிறகு இராமபிரான் தனக்கு அளித்த கணையாளியை வீரமைந்தன் வைதேகியிடம் காட்ட அதை வாங்கிய சீதை இராமபிரானை நேரில் கண்டதுபோலவே உணர்கிறார்

🌻 கடல் தாண்டி இலங்கையுள் நுழைந்த பஜ்ரங்கபளியின் தீரத்தை வைதேகி வியந்து பாராட்டுகிறார் இராமபிரான் தேர்ந்தெடுத்த தூதன் என்றால் சாமான்யமாக இருக்கமாட்டான் என்று நம்பினார்

🌻 இராமனையும் மற்றவர்களின் நலத்தையும் ஜானகி வெகுவாக விசாரித்தால் அவளின் பிராணன் இருப்பதே இராமனுக்காக என உரைத்தாள்

🌹 இராமபிரானோ தன்மேல் ஏறும் பூச்சி, புழுக்கள் மற்றும் சர்ப்பங்களை கூட உணராத வகையில் சீதையின் நினைவிலேயே ஆழ்ந்து இருப்பதையும் பழங்கள், பூக்கள் என எதைகண்டாலும் சீதையின் பெயரை சொல்லுவதை உரைக்கிறார் விஜயேந்திரன்

🌹 இதன்பின்பு சீதையிடம் தாம் விரும்பினால் நான் தம்மை தற்போதே எனது தோளில் அமர்த்தி இராமபிரானிடம் சேர்ப்பதாக உரைக்க

🌻 அனுமானின் சிறிய ரூபத்தை கண்டு ஜானகி சந்தேகம் கொள்கிறார்
(மாருதி உளவு பார்க்க வந்த சிறிய ரூபத்தில் தான் தற்போதும் இருந்தார்)

🌹 இதை உணர்ந்த கபிசிரேஷ்டன் சீதா தேவிக்கு தன் பலத்தை காட்ட பர்வதத்தை ஒத்த அளவு வடிவத்தை எடுத்து சீதா தேவியை பார்த்து

👑 " தாம் ஐயம் கொள்ள வேண்டாம் மலைகள் மற்றும் அரண்மனைகளோடு கூடிய இந்த இலங்கையையே பெயர்த்து எடுத்து இராமரிடம் சேர்க்க வல்லவன் நான் எனவே தம்மை சுமந்து செல்வது எனக்கு சாமான்ய காரியமே " என கூற ஜானகி அதை மறுக்கிறார்

🌻 பின் ராமபிரானிடம் தான்கூறியதாக முன்நடந்த கதை ஒன்றை சொல்கிறார் மைதிலி

🌻 வனவாசத்தில் இந்திரன் மகன் ஜெயந்தன் காகமாக மாறி வந்து சீதா தேவியை தன் அலகால் கொத்தி புண்ணாக்குகிறான் ஆனால் ஜனகநந்தினி அதைபற்றி எதுவும் உரைக்கவில்லை
இராமபிரான் அதைபார்த்து சினந்து யார் என நோக்குகையில் அங்கு  காக்கை வடிவில் இருந்த ஜெயந்தன் தனது அலகில் இரத்தத்துடன் இருப்பதை கண்டு வெகுண்டு எழுகிறார்

🌹 பிறகு தனது தர்ப்பாஸணத்தில் இருந்து ஒரு தர்ப்பையை எடுத்து அதை பிரம்மாஸ்திரமாக்கி அந்த காக்கையை நோக்கிவிட அது ஜெயந்தனை பின்தொடர்கிறது

🌻 இந்திரனின் மகனல்லவா ? ஆனால் இந்திரனாலேயே காக்க முடியாத நிலை

🌻 மூன்று லோகங்களிலும் அடைக்கலம் வேண்ட எங்கும் இராமரை எதிர்த்து எவரும் அடைகலம் தருவதாய் இல்லை இதனால் வேறு வழியில்லாத அவன் இராமபிரானின் பாதங்களை சரணடைகிறான்

🌻 அவனை மன்னிக்கும் இராமபிரான் பிரம்மாஸ்திரத்தை திருப்ப முடியாது என்ற காரணத்தால் அவனின் வலக்கண்னை மட்டும் பறிக்குமாறு கூற அவ்வாறே அவனின் வலக்கண் பிரம்மாஸ்திரத்தால் சேதமடைகிறது

🌻 என்மேல் பட்ட சிறு காயத்திற்காக ஒரு காக்கையின் மீதே பிரம்மாஸ்திரத்தை தொடுத்த பிரசண்ட புஜ பராக்ரமன்

🌻 என்னை அபகரித்த கொடும்பாவியை இன்னும் ஏன் எரிக்கவில்லை

🌹 ஜகத்ரட்சகனையே நாதனாக கொண்ட எனக்கே அனாதை போல் இருக்கும் இந்நிலை சரிதானா

👑 தேவாசுரர்கள் அனைவரும் சேர்ந்து வந்தாலும் இராமனை யுத்தத்தில் தடுக்க இயலாதது ஆனால் ஏன் இன்னும்
நாசம்செய்து என்னை அழைத்துசெல்ல வரவில்லை

👑 இளவல் லட்சுமணன் தமயனிடம் அனுமதி பெற்று அரக்கர்களை சர்வநாசம் செய்ய ஏன் வரவில்லை

🌼 என்று கூற மாருதி உடனே
தேவி தங்களை பிரிந்ததனால் இராமன் சிந்தையற்று செயல்களற்று இருக்கிறார் இராமபிரானின் நிலையால் இளவலும் அவ்வாறே இருக்கிறார்

🌼 தமது இருப்பிடம் தெரிந்தவுடனே இராமலட்சுமணன் உடன் சேர்ந்த வானரங்கள் இலங்கையை நாசம் செய்யும் எனக்கூற ஜானகி தனது சூடாமணியை அனுமனுக்கு தந்து இதை ராமரிடம் அளித்து இராவணன் கூறிய கெடுவை கூறி வெகுவிரைவில் என்னை மீட்க வருமாறு வேண்டுகிறார்

🌻 சூடாமணியை வாங்கிய அனுமனின் சரீரம் மட்டுமே அங்கிருந்தது மனம் இராமபிரானிடம் சேர்ந்தது

🌻 ஆனால் சீதா தேவிக்கு இந்த சமுத்திரத்தை வானரர்களால் தாண்ட முடியுமா எனசந்தேகம் பிறந்தது

🌻 இதை அறிந்த வானரசிரேஷ்டன்

👑 " தேவி வானர சேனையில் என்னைவிட குறைந்தவன் எவனுமில்லை

👑 மேலான ஒருவனை தூது போன்ற சிறிய காரியங்களை செய்ய ஏவ இயலாது

👑 இதனாலேயே குறைந்தவனான என்னை இக்காரியத்திற்கு அனுப்பினார்கள்

🌹 என்னாலேயே இந்த சமுத்திரத்தை தாண்ட முடிந்ததென்றால் அவர்களை பற்றி நான்சொல்லி தெரிய வேண்டியதில்லை

🌹 விரைவாக வானர அரசன் சுக்ரீவனின் வானர படையுடன் இராமலட்சுமணர்கள் இலங்கையை நாசம்செய்து இராவணனை பந்துகளோடு அழித்து உன்னை மீட்பார்கள் கவலை வேண்டாமென உரைக்கிறார்

🌹 இராமபிரானிடம் தகவலை சீக்கிரமாக சேர்க்க வேண்டுமென்பதால் விடைபெறுகிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

👑 இங்கு அனுமந்தரின் செயல்கள் மிகவும் நுணுக்கமானவை விவேகசீலனின் செயல்கள் விவேகத்தின் உச்சம்

👑 வானரர் என்று சொன்னாலே நமக்கு எல்லாம் முதலில் நினைவுக்கு வருவது இன்று அனைத்து கோவில்களிலும் வீற்றிருக்கும் வீரமைந்தன் விஜயந்திரியனே

👑 பரந்து விரிந்த 70 வெள்ள வானரசேனையில் வாலி, சுக்ரீவன் மற்றும் மாருதியை தவிர சமுத்திரத்தை தாண்டும் திறன்கொண்டவர் இல்லை

👑 (வாலி சுக்ரீவனை துரத்தும்போது சுக்ரீவன் இலங்கை வந்து அதையும் தாண்டிகூட சென்றான் அவ்வாறே வாலியும் பின்தொடர்ந்தான்

அங்கதனால் நூறு யோஜனை தாண்டமுடியுமென்றாலும் இடையில் இருக்கும் தடையை மீறி வந்திருக்க முடியாது ஆகையால் இங்கு தாண்டகூடியவர்கள் மூவரே )

👑 தூதனான சாரணன் வானரர்களை பற்றியும் திறன் மற்றும் பலத்தை பற்றியும்  ஒவ்வொருவராக கூறுகையில் கூட அனுமானை பற்றி இராவணனிடம்

👑 " இவனே கேசரிநந்தன் தேவாசுரர்கள் சேர்ந்து கடைந்த பாற்கடலை தனியாளாக கடையும் திறன்கொண்டவன்
இருப்பினும் மகாராஜா தன்னந்தனியாக இலங்கையை பஸ்பமாக்கிய இவனின் பலம் அளவிடமுடியாததாக இருக்கிறது "
என்று கூறுகிறார்

👑 ஆனால் சீதையிடத்தில் ஒரு வேளை இதை கூறி இருந்தால் ஜானகியின் துக்கம் மேலும் அதிகரித்து இருக்கும் காரணம் ஏற்கனவே வானரர்களால் இந்த சமுத்திரத்தை தாண்டி வரமுடியுமா என்ற சந்தேகம் தேவிக்கு இருந்தது

👑 இங்கே அனுமான் தன்னை தாழ்த்தி சேனையை உயர்த்தியது சீதையின் தைரியத்தை மேலும் அதிகரித்தது

👑 பஜ்ரங்கபளியின் ஆழமான பார்வையும் சீதா தேவியை காணும் வரை அவர் கடைபிடித்த பொறுமையும் சீதாதேவியின் நம்பிக்கையை உயர்த்தியதும் மாருதிக்கே உரித்தான செயல்கள்

👑 கணையாளி மருமகனுக்காக பெண்வீட்டார் சீதனமாய் ஜனகமகாராஜா அளித்தது

👑 சூடாமணி மருமகளிற்காக புகுந்தவீடு சீதனமாய் தசரதர் அளித்தது

👑 தன்னை இன்னாரென்று மாருதி  வெளிப்படுத்திய விதம் போற்றுதலுக்குரியது ஏற்கனவே ஜானகி தற்கொலை செய்ய துணிந்திருந்தார் அவருக்கு இராவணன் மேல் பயமும் கூட இதெல்லாம் இருக்க நேரடியாக அனுமான் பிரவேசித்திருந்தால் ஜனகநந்தினியின் நிலை கவலைக்குரியதாகி இருக்கும்

👑 இராவணன் சீதாதேவியை காண வந்தது நடு ஜாமத்திலே தான் இதனால் மாருதி பேசியது விடியற்காலை வேளையிலே  இதனால் அனைவரும் உறங்கியே இருந்தனர்

👑 சீதா தேவி கிடைக்காவிட்டால் இராவணனை கொன்று எறிந்து பழியை தீர்ப்பேன் என்ற இடத்தில் அனுமனின் ரௌத்திரமும்

👑 மரத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்காத்த பொறுமையும் நமக்கு பலவற்றை உணர்த்துகின்றனர்

👑 சீதையை இராவணன் கண்ணியமாக நடத்தினான்  ஆனால் ராமன் அவ்வாறா
எனப்பலர் கொக்கரிக்கின்றனர்

👑 பெண்களின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்வதில் இராவணனுக்கு இணை எவருமே இல்லை

👑 ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்தாலும் தனது தாயின் சகோதரியான மாயாவிலிருந்து

👑 மருமகளுக்கு இணையான ரம்பை வரை எவரையும் இராவணன் விட்டுவைக்கவில்லை

👑 (இராவணனின் சகோதரனான குபேரனின் மகனான நளகூவரனின் மனைவியே ரம்பை ஆவாள்)

👑 இவ்வாறு பெண்பித்தால் இராவணன் பெற்ற சாபங்களில் நாம் காணவிருப்பது பிரம்மதேவரின் சாபம்

👑 அனுமந்தனின் தாயான அஞ்சனை முற்பிறப்பில் புஞ்சஹஸ்தலை என்ற பெயருடைய அப்சரஸாக இருந்தார்

👑 அவர் பிரம்மதேவரை தரிசிக்க வான்வழியாய் செல்வதை கண்ட இராவணன் அவரை பலவந்தமாக பிடித்து அவரின் ஆடைகளை பலவந்தமாக உருவுகிறான் இதனால் அப்பெண் பிரம்மதேவரை சரணடைய அவர் நடந்ததை அறிந்து இராவணன் இவ்வாறு விருப்பமில்லாத பெண்களை தொட்டால் அவனின் தலை சுக்குநூறாக உடையும் என சபிக்கிறார்
(இதை இராவணனே யுத்தகாண்டத்தில் அமைச்சனான மஹாபார்ஸ்வன் இடத்தில் உரைக்கிறான்)

👑 மஹாபாரதத்தில் இந்த சாபம் இரம்பையை பலவந்தமாக கற்பழித்ததனால் நளகூவரன் அளித்ததாக கூறப்படுகிறது

👑 இதனாலே கால அவகாசம் தரும்போது கூட சம்மதிக்காவிடில் உன்னை உணவாக இராட்சஷிகள் சமைப்பார்கள் என்று கூறினானே ஒழிய பலவந்த படுத்தவில்லை

👑அனுமான் ஒவ்வொருத்தரின் வீட்டையும் கூட விடாமல் காற்றையும் கண்டுகொள்ளும் அரக்கர்களின் பிரதேசத்தில் எவரிடமும் சிக்காமல் தேடினார்

👑 இந்த செயல் பலருக்கு பயம் என்று தோன்றலாம் ஆனால் அனுமான் இதற்கு பின் செய்த செயல்கள் அது பயம் அல்ல

⚡ பதுங்கும் நேரத்தில் பதுங்க வேண்டும் பாயும் நேரத்தில் பாய வேண்டும் எனத்தெளிவாக காட்டும்

🐒 அப்படி என்ன செய்தார் விஜயந்திரியன் அதை நாளை பார்ப்போம்


👑 சுந்தரகாண்டம் - பாகம் 3

🐒 சீதா தேவியை பார்த்தாயிற்று இனி வானர சேனை படையெடுத்து இராவணனை வீழ்த்தவேண்டியதே எனில் அதற்கு இராவணனை பற்றி அறிய வேண்டும்

🌺 போர் நடப்பதற்கு முன் சமாதானத்தை பற்றி பேச வேண்டியது இங்கு அவசியமாகும் மேலும் போர் தொடங்குமாயின் இராட்சஷர்களின் திறன்பற்றியும் அவர்களின் பாதுகாப்பு முறைப்பற்றியும் ஆராய வேண்டியதும் அவசியம்

🌺 இதனால் இங்கு கபீந்திரன் சாம, தான, பேதத்தை விடுத்து தண்டத்தை உபயோகிக்க விருப்பம் கொண்டார் அதாவது இங்கு வீரமும் பராக்கிரமும் மட்டுமே வேலைக்கு ஆகுமென எண்ணினார்

🌻 இதனால் இராவணனுக்கு மிகவும் விருப்பமானதும் சீதா தேவியை சிறைப்பிடித்து வைத்திருக்கும் இடமுமான அசோக வனத்தை அழிக்க முடிவெடுத்தார் இதனால் அரக்கர்கள் நிச்சயம் யுத்தத்திற்கு வருவார்கள் என எண்ணினார்

🌺 இதனால் அங்கு இருந்த பெரும் மரங்களை பிய்த்து எறிய தொடங்கினார் இதைகண்ட அரக்கிகள் இவன்யாரென சீதையை கேட்க சீதை அரக்கர்களே இவ்வாறாக உருவம் எடுக்க வல்லவர்களாவர் எனக்கு எப்படி இதுபற்றி தெரியும் எனச்சொல்கிறார் வைதேகி

🌼 பிறகு சீதா தேவியை அச்சுறுத்திய அரக்கிகளின் மீது தனது கவனத்தை செலுத்துகிறார் உன்னை அப்படியே சாப்பிடபோகிறேன் என்று சீதையை பயமுறுத்திய அரக்கிகள் எல்லாம் அனுமந்தரை கண்டு பயந்து ஓடுகின்றனர் இதனால் அரக்கிகள் இராவணனிடம் வந்திருக்கும் வானரனை பற்றி சொல்கின்றனர்

👑 இந்திரனின் தூதனா இல்லை குபேரனின் தூதனா இல்லை ராமனின் தூதனா இவ்வளவு சக்தி ஒரு வானரனிடத்திலா பல மிருகங்களும் பறவையினங்களும் வாழுமிடமும் உமக்கு பிரியமான இடமான அசோக வனத்தையும் அவன் நாசம்செய்கிறான் என இராவணனிடம் சொல்கின்றனர்

🌺 மேலும் வனத்தையே அவன் நாசம்செய்தாலும் சீதைக்கு மேல் இருந்த மரத்தையும் சீதை அடிக்கடி செல்லும் சிம்சிகா மற்றும் அவளுக்கு விருப்பமான இதர மரங்களை மட்டும் அவன் எதும் செய்யவில்லை எனில் அவன் ராமன் அனுப்பிய தூதனாகவே இருக்க வேண்டும் எனவும் சொல்ல கொதித்தெழுகிறான் இராவணன்

🍁 வீரத்தில் தனக்கு நிகரான 80,000 கிங்கரர்களை அக்குரங்கை கொல்ல ஆணைபிறப்பிக்கிறான் தசதலைகள் கொண்ட வேந்தன் அவர்களும் அவ்வாறே ஈட்டி, சூலம், விற்களுடன் அக்னியை தேடிச்சென்று விழும் விட்டில்களை போல எதிர்த்து செல்கின்றனர்

🌿 அவர்கள் வருவதை கண்ட கபிக்குஞ்சரன் சந்தோஷத்தில் தனது வாலை தரையில் அடித்து இலங்கையே அதிரும் அளவிற்கு கர்ஜனை செய்து பர்வதத்திற்கு ஒப்பான ரூபத்தை எடுக்கிறார்

" மஹாபலனாகிய ராமன் மற்றும் அவனுக்கு இணையான லட்சுமணனை வெல்ல மூவுலகிலும் எவரும் இல்லை

அவர்கள் வாலி வதத்தை நிகழ்த்தி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தையை அளித்தனர்

அவர்களின் தூதன் நான் வாயுபுத்திரன் அனுமந்தன்

கற்களையும் மரங்களையும் கொண்டு யுத்தம் செய்வதில் வல்லவனான எனக்கு ஆயிரம் இராவணர்களும் நிகரில்லை

அனைத்து ராட்சஷர்களும் பார்த்துகொண்டு இருக்கும்போதே இலங்கையை கலக்கி சீதை தேவியை மகிழ்வித்து இராமரிடம் சேரப்போகிறேன் "

என்றுகூற இதைகேட்ட கிங்கரர்கள் விரைந்துவர தோரணவாயிலில் அழகுக்காக இருந்த இரும்புத்தடியை கொண்டு அவர்கள் அனைவரையும் கொல்கிறார்

🌹 பிறகு அசோக வனத்தின் வாசலிற்கு வந்து அசுரர்களுக்காக காத்திருக்கிறார்

🌼 தப்பிப்பிழைத்த சிலர் இராவணனிடம் இதை சொல்ல கோபம்கொண்ட அவன் பிரஹஸ்த குமாரனை அனுமந்தனை எதிர்க்க அனுப்புகிறான்

🌸 அசோக வனத்தை அழித்த அனுமான் தான் வனத்தை மட்டுமே அல்லவா அழித்திருக்கிறேன் அரக்கர்கள் கோபம்கொள்ள அவர்களின் உயர்ந்த மாடமான தேவாலயத்தை நான் அழிக்க வேண்டும் என தன்னுள் எண்ணி அவ்விடத்திற்கு செல்கிறார்

🌸 தனது உடலை பெரிதாக்கி கைகளை தட்ட அவ்வோசையில் பறவைகள் சிந்தை இழந்து கீழே விழுகின்றன பிறகு கர்ஜிக்க அந்த சத்தத்தை கேட்ட பலர் அரக்கர்கள் மூர்ச்சையாகின்றன

" தசரத நந்தனான ராமன் மற்றும் இளவல் லட்சுமணனுக்காக சுக்ரீவனால் அனுப்பப்பட்ட தூதன் விரைவில் அவர்களால் இவ்விலங்கை அழிவை சந்திக்க போகிறது " எனக்கூறிக்கொண்டே உயர்ந்த மாடத்தை பெயர்த்து எடுக்கிறார்

🌹 பிறகு அதை நன்றாக சுற்றி உராய்வினால் நெருப்பை வரவைத்து அந்த மாடத்தை எரிக்கிறார் இதைகண்ட அம்மாடத்தை பாதுகாக்கும் அரக்கர்கள் மாருதியை எதிர்த்துவர அவர்களை ஸ்தம்பத்தினால் அடித்து கொல்கிறார்

" சுக்ரீவன் வசத்தில் என்னைபோன்ற பல்லாயிரக்கணக்கான வானரோத்தமர்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் சீதா தேவியை உலகம் முழுவதும் தேடிச்சென்றுள்ளனர்

அவர்களில் சிலர் பத்து யானைகளின் பலமுடையவர்கள்
சிலர் நூறுயானைகளின் பலமுடையவர்கள்
சிலர் ஆயிரம் யானைகளின் பலமுடையவர்கள்
சிலர் லட்சயானைகளின் பலம் உடையவர்கள்
மற்றும் சிலரோ இத்தனை பலம் என சொல்லமுடியாத பலம்கொண்டவர்கள்

எண்ணிலடங்கா வானரர்களை கொண்டிருக்கும் சுக்ரீவன் தனது படையுடன் இலங்கையை நாசம்செய்ய போகிறான் அப்போது இராமரிடம் பகைத்ததற்கான பலனை அறிவீர்கள் " என்று இடிந்துரைக்கிறார் கேசரிநந்தன்

🌹 இராவணனின் ஆணையை ஏற்ற பிரகஸ்தனின் குமாரனாகிய ஜம்புமாலி கழுதைகள் பூட்டப்பட்ட ரதத்தில் அசோக வனத்தின் வாசலுக்கு அனுமானை எதிர்த்துவர அனுமான் மகிழ்ந்து யுத்தநாதம் புரிந்தார்

🌹 இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது அனுமான் மலைக்கு ஒப்பான கல்லையும் பெரும் சால விருட்சத்தையும் பிடுங்கி ஜம்புமாலியை நோக்கி வீச அதை அவன் தன் பாணங்களால் பிளக்கிறான்

🌸 அனுமனின் மேல் ரத்தகாயம் விழும்படி பல அம்புகளை பிரயோகிக்கிறான் இதனால் கோபம்கொண்ட அனுமான் முன்பு கிங்கரர்களை கொன்ற அதே இரும்புதடியை எடுத்து ஜம்புமாலியின் மீது வீச அவன் மார்பில் அது விழுந்து மால்கிறான் ஜம்புமாலி

🍁 இதைகேட்ட இராவணன் வீரதீரமிக்க மந்திரிகுமாரர்கள் ஏழுபேரை அனுப்ப அவர்கள் தங்கள் படையுடன் நான் பிடிப்பேன் நான் பிடிப்பேன் என தங்களுக்குள் போட்டிப்போட்டுகொண்டு சென்றனர்

🍃 ஆனால் வாயுவின் வேகத்தையும் மிஞ்சும் வீரனான அனுமான் அவர்கள் அனைவரும் எதிர்த்து பாணங்களை பிரயோகித்தாலும் அதில் ஒன்றுகூட தன்மீது படாதபடி ஆகாயத்தில் திரிந்தார் பிறகு வந்த மந்திரிகுமாரர்களோடு சேர்ந்த அனைத்துப்படைகளையும் ஆயுதமில்லால் கை, கால்கள், முட்டி மற்றும் மார்பால் அடித்து கொல்கிறார்

👑 அவர்களையும் கொன்றதால் இராவணன் சிந்திக்க தொடங்கினான் வாலி, சுக்ரீவன், நீலன், வெல்லமுடியாத ஜாம்பவான் மேலும் மைந்த துவிந்தர்கள் முதலிய பல வானரங்களை இராவணன் கண்டு இருக்கிறான் இதனால் நினைத்த ரூபம் எடுக்கக்கூடிய இவ்வளவு சக்திகொண்டவனை அவன் வானரனாய் பார்க்கவில்லை மாறாக ஒரு பூதமாக இருக்கக்கூடும் என எண்ணினான்

🌸 இதனால் தனது முதன்மை சேனாதிபதிகளான
விரூபாஷன்
யுபாஷன்
துர்த்தரன்
ப்ரபஸன்
பாஸகர்ணன்

ஆகியோர்களை அழைத்த இராவணன்

" நாம் தேவர்களில் இருந்து கந்தர்வர்கள், நாகர்கள் என என அனைவரையும் வென்று இருக்கிறோம்

எனக்கு வந்தவன் வானரனாக தெரியவில்லை ஒரு வேளை அவன் இந்திரனாக இருக்க வேண்டும் இல்லையேல் தபோ பலத்தால் அனைவரும் சேர்ந்து யாகத்தில் உருவாக்கப்பட்டவனாக இருக்க வேண்டும்

முவுலகில் தேவர்கள் முதற்கொண்டு எவரும் உங்களை வெல்ல வல்லவர்கள் இல்லையென்று அறிவேன் ஆனாலும் அந்த தைர்யம் மிகுந்த வானரனை சாமான்யனாக எண்ணாதீர்கள் அவனிடம் ஜாக்கிரதையாக யுத்தம் செய்யுங்கள்"

எனக்கூறி அனுப்புகிறான்

⚡ ஆணையை ஏற்ற சேனாதிபதிகள் ரதகஜதுரகபதாதிகளுடன் கபிக்குஞ்சரனை வீழ்த்த அசோக வனத்தின் வாசலிற்கு செல்கின்றனர் ஆனால் வானரசிரேஷ்டன் முன் அது எடுபடவில்லை

⚡ வானில் சேனாதிபதிகளுக்கும் வானரனிற்கும் நடத்த யுத்தம் மெய்சிலிர்க்க வைப்பதாய் இருந்தது இறுதியாக அஞ்சனை மைந்தன் ஐவரையும் கொல்கிறார்

🌹 இதனால் வெகுண்டெழுந்த இராவணன் அட்சய குமாரனிடம் பார்வையை செலுத்த அதை உணர்ந்த அவனும் தன் தவத்தினால் பெற்ற ரதமும் எட்டு குதிரைகளால் இழுக்கப்பட்டு சமஸ்த ஆயுதங்களும் நிறைந்ததும் பறக்கும் திறனுடையதும் தேவாசுரர்களாலும் போரில் வெல்லமுடியாததுமான ரதத்தில் ஏறி அசோக வனத்தின் வாசலிலிருக்கும் மாருதியை நோக்கி செல்கிறான்

🌼 இருவருக்கும் பயங்கரமான யுத்தம் நடக்கிறது அட்சய குமாரனின் வீரம் அளவிட முடியாததாக இருந்தது இதைகண்ட அனுமான் சந்தோஷித்து

" ஆகா இப்படிப்பட்ட மாவீரனை எப்படி கொல்வேன் இவன் யுத்தத்தில் தேவாசுரர்களையும் நடுங்க வைப்பவனாக இருக்கிறான் பெரும் தீரனாகவும் இருக்கிறான் இவனை வதைக்க எனக்கு மனம் வரவில்லை ஆனால் யுத்தம் மூளும்போது இவனின் வீரத்தால் பல வீரர்கள் மடிவார்கள் ஆகையால் இவனை நான் நிச்சயம் வதைத்தாக வேண்டும் " என தன்னுள் சொல்லிகொண்டு அவனின் குதிரைகளையும் தேர்ச்சக்கரத்தையும் ஆகாயத்திலேயே நொறுக்குகிறார் இதனால் கீழே விழும் அட்சய குமாரன் கையில் வாளேந்தி மேலிருக்கும் அனுமனை வீழ்த்த பறக்கிறார்

🌼 ஆனால் மாருதியோ அட்சய குமாரனின் காலை பிடித்து பூமியில் சுழற்றி சுழற்றி அடித்தே கொல்கிறார்

🌻 மகனின் மரணம் துக்கத்தை அளித்தாலும் இராவணன் மனதை திடப்படுத்திகொண்டு இந்திரனையே வென்ற தனது மகன் மேகநாதனை அழைத்தான்

" மேகநாதா வீரத்தில் சிறந்தவனும் இந்திரனையே வென்றவனுமான உன்னை அழைக்க வேண்டிய நேரம் வந்தது

தேவேந்திரனுடன் கூடிய தேவாசுரர்கள் வந்தாலும் யுத்தத்தில் உனக்கு நிகராக மாட்டார்கள்

பிரம்மாஸ்திரத்தை அறிந்தவனான நீ திவ்ய அஸ்திரங்களை பிரம்மதேவரிடமே பெற்றாய் உன்னை வெல்ல மூவுலகிலும் எவரும் இல்லை

வந்திருக்கும் வானரன் சாமான்யனாக தெரியவில்லை கிங்கரர்களையும் பிரகஸ்த குமாரனான ஜம்புமாலியையும் மந்திரி குமாரர்கள் எழுவரையும் சேனாதிபதிகள் ஜவரையும் வதைத்தது மட்டுமில்லாமல் அட்சய குமாரனையும் இவன் பரலோகம் அனுப்பியுள்ளான்

இந்த விஷயத்தில் உனக்கு சேனைகள் உதவமாட்டார்கள் அவன் சேனைகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்துவனாக உள்ளான் இதனால் நீ தனியாக சென்று அவ்வானரனை அடக்கிவா "

🌼 எனக்கூற இந்த்ரஜித்தும் தந்தையின் ஆணையை ஏற்று யுத்தகளம் புகுகிறான் யுத்தம் தொடங்க இருவருக்கும் நிகழ்ந்த யுத்தம் இதுவரை எவரும் கேள்விப்படாத அளவு பயங்கரமாக இருந்தது

🍁 முவுலகிலும் குறியை அடிக்கும் திறனும் அம்பின் வேகத்திலும் பிரசித்தி பெற்றவன் மேகநாதன் ஆனால் அனுமானின் வேகம் அதை மிஞ்சியதாக இருந்தது தனது வேகத்தினால் இந்த்ரஜித்தின் பாணங்களை வீணாக்கினார்

🌺 இருவரையும் பூமியில் இருந்த மற்றவர்களால் காணமுடியாத அளவிற்கு வேகம் கொண்டு யுத்தத்தை நடத்தினர்

🌼 அனுமானின் திறனை கண்ட மேகநாதன் இவனை அஸ்திரங்களால் கொல்ல முடியாது என முடிவெடுத்தான் இதனால் இந்நேரத்தில் பிரம்மாஸ்திரமே தகுந்ததென்று எண்ணி பிரம்மாஸ்திரத்தை வரவழைத்தான்

🌹 வருவது பிரம்மாஸ்திரமென தெரிந்த வாயுமைந்தன் முன்காலத்தில் பிரம்மதேவர் அளித்த வரத்தை நினைத்து பிரம்மதேவருக்கு மரியாதை அளிக்கும்விதமாக அதற்கு கட்டுறுகிறார்

🍁 ஆனால் மூடர்களான இராட்சஷர்கள் பிரம்மாஸ்திரத்தால் அனுமான் கட்டப்பட்டு இருப்பினும் பிரம்மாஸ்திரத்தின் சக்தியை உணராது பல கயிறுகளை கொண்டு வாயுபுத்திரனை கட்டுகின்றனர் இதனால் பிரம்மாஸ்திரம் அங்கு செயல் இழக்கிறது

🌹 இதை அனுமனும் மேகநாதனும் தவிர வேறு எவரும் அறியவில்லை அனுமான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இராவணனை காணலாம் என கட்டுண்டு கிடப்பதை போன்று நடித்தார்

👑 ஆனால் பிரம்மாஸ்திரம் செயல் இழந்ததை கண்ட

இந்த்ரஜித்திற்கு அரக்கர்களின் மேல் கோபமும்

விடுபட்ட அனுமனை கண்டு அதிர்ச்சியும்

ஆனால் இன்னும் கண்டுண்டதை போலவே நடிக்கும் மாருதியை கண்டு ஆச்சரியமும் கொண்டான்

👑 யுத்தத்தில் மாருதியின் வேகமும் திறனும் மேகநாதன் முன்னமே கண்டிருந்தான்
திவ்ய அஸ்திரங்களும் கூட வேலைக்கு ஆகாது என்பதால் தான் அதிசக்தி வாய்ந்த பிரம்மாஸ்திரத்தை கொண்டு கட்ட முற்பட்டான்

🌹 பிரம்மாஸ்திரமும் அனுமானை பீடித்ததே ஒழிய பாதிப்பை தரவில்லை இதை மேகநாதனும் கவனிக்க தவறவில்லை இதனால் அவனுக்கு குழப்பம் இருந்தாலும் இராவணனிடம் மாருதியை இழுத்துசெல்கிறான் அரக்கர்களும் அனுமனை குத்துவதும் அடிப்பதுமாக தொடர்ந்து இடையூறு செய்துகொண்டே கொண்டு செல்கின்றனர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

👑 அதென்ன சாம, தான, பேத, தண்டம் இதை நாம் கிருஷ்ணரின் செயல்கள் மூலம் எளிதாக உணரலாம்

🌼 சாமம் - முதலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பது இதுவே முதன்மை

கிருஷ்ணர் சென்ற சமாதான தூது சாமமாகும்

🌼 தானம் - பரிசு வழங்குவது மூலம் பிரச்சனையை முடிப்பது

பெரும் இராஜ்யம் கூட வேண்டாம் இராஜ சூய யாகத்தில் பரிசாக பெற்ற பொருட்களும் கூட வேண்டாம்
பாண்டவர்கள் திக் விஜயத்தில் ஜெயித்த பொருட்களும் கூட வேண்டாம்
அரக்கர்களின் சிற்பியும் இராவணனின் மாமனும் மாயத்திலும் கட்டிட கலையிலும் சிறந்தவனுமான மயன் கட்டிய சபை கூட வேண்டாம்

ஐந்து கிராமங்கள் மட்டும் ஏன் ஐந்து வீடுகள் மட்டுமாவது குடு என துரியனிடம் கிருஷ்ணர் கேட்டது தானம்

🌼 பேதம் - எதிரிகளின் பலத்தையே புத்திகூர்மை கொண்டு சிதறடிப்பது

இது மற்ற மூன்றையும் விட கடினமானது இதை கிருஷ்ணர், யுதிஷ்டிரர், நாரதர் மற்றும் அனுமான் போன்ற புத்திகூர்மையின் சிகரங்களுக்கு மட்டுமே இயன்ற ஒன்றாகும்

கிருஷ்ணன் விதுர வில்லை உடைக்க வைத்ததும்
யுதிஷ்டிரர் போருக்கு முன் ஆசிர்வாதம் வாங்க சென்று வரம்பெற்றதும் பேதம் ஆகும்

🌼 தண்டம் - இவை மூன்றும் வேலைக்கு ஆகவில்லையென்றால் மீதமிருப்பது தண்டம் அதாவது நம் பாஷையில் சொன்னால் அடி, உதை மட்டுமே

இறுதியாக போரில் அனைவரையும் கொன்றது தண்டம்

👑 மேற்கூறியவற்றில் அனுமான் இராட்சஸர்களுக்கு தகுந்ததென முடிவெடுத்தது தண்டமே மற்ற மூன்றும் அரக்கர்களிடம் வேலைக்கு ஆகாது

இதனால் அடி உதை மட்டுமே வேலைக்கு ஆகுமென்ற முடிவு சரியாகவே அமைந்தது

🌼 சீதை அனுமானை தெரியாது என்று பொய் கூறியது சரியா எனக்கேள்வி வருகிறது

🌹 ஆனால் இது தவறு இல்லை சீதையின் நிலையும் அவர் கூறிய விடையும் மிகச்சரியே

🌺 இதே இங்கு ஜாம்பவான் ஒரு வேளை இருந்திருந்தால் அவனே இராம தூதன் உங்கள் இலங்கையையும் இராவணனையும் அழிக்க வந்தவன் முடிந்தால் இவனை வென்றுகாட்டுங்கள் இல்லையேல் இலங்கை அழியும் என பகிரங்கமாக அறைகூவலே விட்டு இருப்பார்

👑 காரணம் அனுமனின் வீரத்தை முழுதாகவும் அவனின் செயலுக்கு காரணமென்ன எனவும் அறியகூடிய பெரும் ஞானம் கொண்டவர் அவரே

🌼 ஆனால் சீதா தேவி அப்படியல்லவே பெண்ணின் குணம் அவரை மென்மையாக்கியது மேலும் அனுமான் ராமனிடம் சேரவேண்டியது அவசியமாகும் ஆனால் அரக்கர்கள் பலர் இருப்பதால் மாருதியை எதும் செய்துவிட கூடும் என்ற பயம் இதனால் அங்கு அவர் செய்தது தவறு இல்லை என வால்மீகியே கூறியுள்ளார்

🌻 பிரம்மாஸ்திரத்தை விட்டும்கூட அனுமானை ஏன் வதைக்க முடியவில்லை முன்பு ஒரு தடவை அனுமான் சூரியனை கனியென நினைத்து உண்ணச்சென்று இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்டார் இது அனைவரும் அறிந்ததே

🌺 அப்போது பலரும் பல வரங்கள் அளித்தனர் அதில் முக்கியமான வரங்கள் இரண்டு

👑 ஒன்று எந்தவித ஆயுதத்தாலும் உனக்கு பாதிப்பு வராது என பிரம்மதேவர் அளித்த வரம்

👑 மற்றொன்று நீ விரும்பினால் மட்டுமே விரும்பிய வேளை மட்டுமே மரணிப்பாய் என்ற இந்திரனின் வரம்

🐒 இதன்படி மாருதியின் மேல் எந்த ஆயுதமும் பாதிப்பை தராது மற்றும் விரும்பினால் ஒழிய வேறு எவராலும் மரணம் சம்பவிக்காது

இதனால் பிரம்மாஸ்திரமும் அனுமனின் மேல் சக்தியை காட்டாது

ஆனால் பிரம்மாஸ்திரம் பிரம்மாவிற்கு நிகரானதால் அது மதிக்கப்பட வேண்டியது ஆகும் இதனால் மாருதி பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டால் ஒரு முகூர்த்த காலம் அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக கட்டுண்டு கிடப்பார்

👑 இது மிகச்சரியாக இந்த்ரஜித் வானர சேனையின் மீது பிரம்மாஸ்திரம் விட்டபோது விளங்கும்

மேகநாதனின் பிரம்மாஸ்திரத்திற்கு ஒரு முகூர்த்த காலம் கட்டுண்டு கிடக்கும் அஞ்சனை மைந்தன் அடுத்த முகூர்த்தம் அதை அவிழ்த்தெரிந்து ஜாம்பவானிடம் வருவார்

( பிரம்மாஸ்திரம் மாருதியை ஒரு முகூர்த்தம் கட்டும் என பிரம்மதேவர் கூறியதாக சொல்லப்படும் கருத்து உண்மையில்லை )

🌹 அனுமான் அட்சய குமாரனின் வீரத்தை ரசிப்பதிலேயே அவரின் உத்தமகுணம் விளங்கும்

🌺 அனுமான் நினைத்து இருந்தால் யுத்தத்தில் இலங்கையின் படைகளைனைத்தையும் நாசம் செய்து இருப்பார் ஆனால் இராமபிரானின் பெயருக்கு இழுக்கு எனவும் இராவணனை சந்திக்க வேண்டியுமே கட்டுண்டு கிடப்பதுபோல் நடித்தார்

🌼 அனுமானின் செயலை இந்த்ரஜித்தே கண்டு வியந்தான்

🔰 நாளை இராவணனிடம் அனுமான் பேசிய விதம் மற்றும் பேசிய சொற்கள் என்னவென்று விளக்கமாக அனுமனின் தூதை பார்க்கலாம்

👑 சுந்தரகாண்டம் - பாகம் 4

🐒 இராவணனின் சபைக்கு இழுத்துவரப்பட்ட
வீரமைந்தன் இராவணனின் தேஜஸ் மற்றும் கம்பீரம் முதலியவற்றை கண்டு வியக்கிறார்

🌺 இவனின் வீரம் அற்புதமானதாகும் இவன் அதர்மபாதையில் செல்லாமல் துஷ்கர்மங்கள் புரியாமல் இருப்பானாயின் தேவர்களே இவனை தலைமையாக கொள்ள துடிப்பார்கள் ஆனால் இவனின் அதர்மபாதை இவனை கொடியவனாக்கியது என எண்ணியவாறே இராவணனை உற்றுநோக்கினார்

👑 இராவணனும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் அனுமனை பற்றி அவன் எண்ணம் வேறாக இருந்தது

" அன்று கைலாச மலையை நான் கடக்க முயன்றபோது எனக்கு சாபமளித்த நந்தி தேவனா இந்த வானரன்

🐒 இல்லை மஹாசூரனான பாணாசுரனே இந்த வானர ரூபம் தாங்கி வந்தானா "
என்று ஆழ்ந்து சிந்தித்துகொண்டே கோபத்துடன் பிரகஸ்தனை நோக்க பிரகஸ்தன் எழுந்து அனுமானை விசாரிக்க முற்படுகிறான்

" வானரா நீ யாருக்கு தூதனாக வந்தாய் இந்திரனுக்கா இல்லை குபேரனுக்கா இல்லை எமனுக்கா

🌺 நீ இங்கு பயப்படாம வேண்டாம் உனது ரூபம் வானரனாய் இருந்தாலும் உனது சக்திகள் அப்பாற்பட்டனவாய் உள்ளன நீ எதற்காக இந்த வானர ரூபத்தை தரித்தாய்

🌹 யாருக்கும் தூதனாக வரவில்லையென்றால் எதற்காக இலங்கையில் பிரவேசித்து அசோக வனத்தை அழித்தாய்

உண்மையை கூறினால் நீ நிச்சயம் உயிர்பிழைப்பாய் இல்லையேல் உயிர்துறப்பது திண்ணம் " என வினவுகிறார் பிரகஸ்தன்

🌻 இதைகேட்ட அனுமான் நேராக இராவணனை நோக்கி
" என்னை இங்கு இந்திரனோ இல்லை மற்ற தேவர்களோ அனுப்பவில்லை

🌻 மேலும் நான் வானர ரூபமும் தாங்கிவரவில்லை இதுவே எனது உண்மையான ரூபமாகும் வானர குலத்தை சேர்ந்தவனே நான்

🌻 உன்னை காணவே நான் அசோக வனத்தை நாசம்செய்தேன் ஆனால் துர்ப்புத்தியுடைய இராட்சஷர்கள் என்னை தாக்க வந்ததால் என் பாதுகாப்பிற்காக அவர்களை நான் அடிக்கவேண்டியதாயிற்று

🌻 உண்மையில் பிரம்மதேவர் எனக்கு அளித்த வரத்தின்படி தேவாசுரர்களாலும் கூட என்னை கட்ட முடியாது இருப்பினும் பிரம்மாஸ்திரம் அரக்கர்களின் செயலால் செயல் இழந்தது

👑 நான் பிரபு ஸ்ரீ ராமரின் தூதன் நான் இங்கு ஒரு ராஜகார்யமாக உன்னை காண வந்தேன்

🌻 உன்னுடன் பிறந்தவன் போன்று உன் நலத்தை விரும்புகின்றவனான சுக்ரீவனின் செய்தியை உரைக்கிறேன் கேள்

🌻 முன்பு தேவாசுர யுத்தத்தில் தச திசைகளிலும் ரதத்தை செலுத்தி தசரதன் என்ற பெயர் பெற்றவனும் சனிபகவானையே வில்கொண்டு வீழ்த்த புறப்பட்டவனுமான அவனுக்கு இராமன் என்ற மைந்தன் பிறந்தான் சுயம்வரத்தில் சிவ தனுசை முறித்து சீதையை மணந்தவன் தந்தையின் சொல்கேட்டு அனுஜன் மற்றும் மனைவியுடன் வனம்புகுந்தவன் வனத்தில்  பதிவிரதையும் இராமனின் பார்யையுமான அந்த வைதேகி காணாமல் போனாள்

🌺 சோகத்தில் மூழ்கிய அவன் வானர அரசனான சுக்ரீவனனை நண்பனாக பெற்று உன்னால் சொப்பனத்தில் கூட வெல்ல முடியாதவனான வாலியை ஒரே பாணத்தில் வீழ்த்தி கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனை அரசனாக்கினான்

🌻 முன்புசெய்த பிரதிக்ஞையின்படி சுக்ரீவன் சிறந்த பராக்ரமர்களை எண்ணிலடங்காமல் கொண்டதும் பலத்தில் நிகரற்றதுமான வானரசேனையை ஜனகநந்தினியை தேட அனைத்து பக்கமும் அனுப்பினான்

👑 நான் வாயுதேவரின் ஔரஸ புத்திரன் அனுமான் எனதுபெயர்

நான் சீதா தேவியை காணும் பொருட்டு இந்த மஹா சமுத்திரத்தை தாண்டி வந்தேன் அவ்வாறே அசோக வனத்தில் கண்டும்விட்டேன்

🍃 இராவணா நீ சாஸ்திரங்கள் பயின்றவன் இவ்வாறு ஒரு பெண்ணை கடத்துவது உனக்கு தகுமா ? இதைபோன்ற செயல்கள் ஒருவனுக்கு அழிவையே தரும்

🌿 அனைத்தையும் அழிக்கும் திறன்கொண்ட என்னை எவன் அழிப்பான் என்கிறாயா ?

👑 இராமன் கோபம் கொள்வான் எனில் இராமபாணத்தை மூவுலகிலும் தடுக்கும் திறன் எவர்க்கும் இல்லை

🌻 சுக்ரீவன் சொல்படி நடந்தால் உனக்கு பெரும் நன்மைகிட்டும் அது யாதெனில் சீதையை இராமனிடம் ஒப்படைத்து இராமனிடம் சரண்புகு

🌹 சீதையை நான் கடத்தவில்லை என்கிறாயா நான் சற்றுமுன் தான் சீதையை உன் அசோக வனத்தில் கண்டேன்

🌼 சீதையை என்னாலேயே இங்கிருந்து கொண்டு செல்ல முடியும் ஆனால் அது ராமனுக்கு ஏற்புடையதல்ல

🌻 சீதையை நீ கொண்டு வந்து நிம்மதியாக இருப்பதாய் எண்ணிகொண்டு இருக்கிறாய் ஆனால் உன் பிராணனை குடிக்கும் ஐந்து தலை விஷ நாகத்தை கொண்டுவந்தாய் என அறியாதிருக்கிறாய்

🌻 என்னை எவ்வாறு வதைக்க முடியும் என்கிறாயா தேவர்கள்,  அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்களிடம் மரணம் இல்லை என்று வரம்பெற்றாயே ஒழிய வானரர்கள் மற்றும் மனிதர்களிடம் பாதுகாப்பை நீ பெறவில்லை

🌻 தர்மத்தினை அதர்மம் வென்றதாய் சரித்திரம் இல்லை இராவணா நீ செய்த புண்ணியம் உன்னை காக்கும் என்றென்னுகிறாயா அந்த புண்ணியங்கள் அப்போதே கழிந்துவிட்டன

🌻 ராமன் ஒருவனே வனத்தில் உள்ள அனைத்து இராட்சஷர்களையும் வீழ்த்தினான் வாலியை ஒரே பாணத்தில் கொன்றான் ராமனை பற்றி நீ கேள்விப்பட்டு இருப்பாய்

🌻 நான் ஒருவனே இவ்விலங்கையை நாசம்செய்ய வல்லவன் ஆனால் அது ராமனுக்கு சம்மதமில்லை ராமன் தான் இந்த கார்யத்தை செய்யவிருப்பதாக பிரதிக்ஜை செய்துள்ளான்

🌻 நீ எவளை சீதை என்று மட்டும் நினைத்துகொண்டிருக்கிறாயோ அவள் இலங்கையையே நாசம்செய்யவல்ல காளராத்ரி ஆவாள்

🌻 சீதை என்ற காலபாசத்தை நீயே உன்கழுத்தில் போட்டுகொண்டாய் சீதையின் துக்கத்தால் ஏற்கனவே இந்த இலங்கை பீடிக்கப்பட்டு விட்டது மேலும் இராமனின் கோபமும் சேர்கையில் இந்த பரிபூரண இலங்கையும் பஸ்பமாகுவதை பார்ப்பாய்

🌻 இராவணா நான் மனிதனுமல்ல இராட்சஸனுமல்ல இதனால் நடுநிலையாக ஒன்றை கூறுகிறேன் கேள்

👑 இராமனின் பிரபாவம் நான் கண்டதே ப்ரளயத்தில் பூமி அழிவது போல் அழிக்க வல்லவன் அவன் மேலும் அதே பழையபடி சிருஷ்டிக்கவும் வல்லவன்

🌹 மூவுலகில் உள்ள அனைத்து இனங்களும் இந்திரனையே தலைமையாக கொண்டு போருக்கு வந்தாலும் இராமன் முன் நிற்க சக்தியுடையவர்கள் ஆக மாட்டார்கள்

இராமபாணத்தில் இருந்து உன்னை பிரம்மதேவராலும் காக்க முடியாது "

🐒 என சொல்லின் செல்வன் அந்த இராஜசபையில் சிறுதும் பிசகாமல் கம்பீரத்துதுடன் சொல்வதை கேட்ட இராவணனுக்கு அவன் சொன்ன விசயங்களை கேட்டு கோபம் தலைக்கேறியது அவன் உடனடியாக இந்த கொல்லுங்கள் என ஆணை பிறப்பித்தான்

🌻 ஆனால் இதை விபீஷணர் ஒத்துகொள்ளவில்லை இதனால் அவர் இராவணனை நோக்கி

" இராட்சஷர்களின் வேந்தனே பொறுமை காப்பாய் மனத்தெளிவு பெறுவாய் அனைத்து இனங்களிலும் ராஜ தர்மத்தில் உன்னை விஞ்சியவன் இல்லை இந்த தூதன் செய்தியை தாங்கி வந்தவனே நீயே இவ்வாறு முடிவெடுத்தால் பின்பு அந்த ஞானம் வீணேயாகும் " எனக்கூற இராவணன்

" அனுஜனே இவன் பாப ஸ்வாபம் உடையவன் இவனை கொல்லுவதால் பாபம் சேராது இவனை இப்போதே கொன்றுவிடுகிறேன் " என தன்நிலையை இழக்க

🌺 விபீஷணன் " லங்கேஸ்வரா எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் தூதனை கொல்லக்கூடாது இவன் அட்சய குமாரன் முதலியோர்களை கொன்றதால் இவன் சத்ருவே என்று கூறுகிறாய் இருப்பினும் தூதனை கொல்வது தர்மமாகாது

🌻 ஒரு தூதனுக்கு அங்கத்தை விகார மாக்குதல், சாட்டையால் அடித்தல், மொட்டையடித்தல் மற்றும் முத்திரையிடுதல் போன்ற தண்டனைகளை வழங்கலாம்

🌸 சாஸ்திரத்தில் வல்லவனான நீ இவ்வாறு கோபத்தினால் தவறான முடிவு எடுக்கலாகாது இந்த வானரன் மூலம் நமக்கு செய்தி அனுப்பியவர்களை நீ தண்டிக்கலாம்

மேலும் இவன் ஒருவனே சமுத்திரத்தை தாண்டி இங்கு பிரவேசிக்க வல்லவன் தேவர்களுடன் கூடிய இந்த்ரனே வந்தாலும் உன்னால் யுத்தத்தில் வெல்ல முடியும் ஆனால் இவ்வாறு ஒரு தூதனை கொல்வது தகாது

🌹 மேலும் நீ யுத்தத்தை விரும்புபவன் ஆகையால் இவனை நீ விடுவதே சிறந்தது ஆகும் " என விபீஷணன் கூறுவதில் இருந்த விளக்கத்தை உணர்ந்த இராவணனுக்கு அது சரியாகவே பட்டது

🐒 இதனால் இராவணன் " வானரர்களுக்கு வாலே பிரதானம் அதன் சக்தி அங்கு தான் இருக்கும் மேலும் வால் இல்லாமல் ஒரு வானரனால் இருக்கவே முடியாது இதனால் இவனின் வாலிற்கு தீயிடுங்கள்

🌸 இவன் வாலில்லாமல் திரிவதை கண்ட இராம லட்சுமணர்கள் முதலிய இவன் சொந்தங்களான வானரர்கள் ஒவ்வொரு முறையும் வருந்த வேண்டும்

⚡ இதனால் இவன் வாலில் தீயிட்டு லங்கையின் அனைத்து வீதிகளிலும் இவனை இழுத்துசெல்லுங்கள்

⚡ இலங்கையை அவமதித்த இவன் துடிப்பதை அனைத்து மக்களும் காண வேண்டும் " என ஆணையிடுகிறான்

⚡ இதனால் அனுமந்தனை பாசங்களில் கட்டிய அரக்கர்கள் வீதி முழுவதும் இழுத்துசெல்ல இலங்கைவாசிகள் மாருதியை குத்துவதும் அடிப்பதுமாக சென்றனர்

🍁 இந்நிலையில் கபிகுஞ்சரன்
" இந்த இலங்கையை அனைத்து இராட்சஸர்களையும் சேர்த்து வீழ்த்தும் திறன்கொண்டவன் நான் ஆனால் நான் அப்படி செய்தால் இராமபிரானுக்கு இது இழுக்கல்லவா

மேலும் நான் இலங்கையின் வெளியில் உள்ள பாதுகாப்பை மட்டுமே கண்டேன் உள்ளே சீதா தேவியை தேடும்போது அதை காணவில்லை இவர்களே என்னை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச்செல்ல போகிறார்கள் இதனால் அந்த பாதுகாப்பு அம்சங்களை நிச்சயம் பார்க்கலாம் " என தன்னுள் எண்ணிகொண்டார்

👑 இவ்வேளையில் அசோக வனத்தில்

" யாரோ வானரன் சீதையை கண்டானாம் அசோக வனத்தை அழித்தானாம் இதனால் அவனின் வாலிற்கு தீயிட இராவணன் உத்தரவிட்டுள்ளான் " என மக்கள் கூறுவதை கேட்ட சீதை துடித்துபோகின்றார்

👑 இதனால் வைதேகி

" நான் பதிவிரதை என்பது உண்மையானால்

இராமனின் தர்மபத்தினியான நான் வேறொருவனை எள்ளளவும் நினைக்கவில்லை என்பது உண்மையானால்

அக்னியே நீ அனுமானிற்கு குளிர்ந்திருப்பாயாக "
என உரைக்க அதை அக்னியும் ஆமோதிக்கிறார்

🌿 ஏற்றப்போவது முழு லங்கைக்கான தீ என அறியாத அரக்கர்கள் அனுமானின் வாலிற்கு தீ மூட்டுகின்றனர் ஆனால் அனுமானிற்கு அக்னி சிறிதும் காட்டம் காட்டவில்லை மாறாக குளிர்ச்சியை நல்கியது

" என் தந்தை வாயுயோடு சேர்ந்திருக்கும் அக்னிதேவன் என் வாலில் கொழுந்துவிட்டு எரிவது கண்ணிற்கு தெரிந்தாலும் என் வாலில் சந்தனத்தை குழைத்து அப்பியதுபோல் உள்ளதே

🍃 மைநாகன் வெளிப்பட்டதுபோல இது ராமனின் பிரபாவமே

🌿 அக்னி காட்டத்தை காட்டாமல் இருப்பதற்கு ராமனின் பிரபாவம் மற்றும் சீதையின் பதிவிரதை தன்மையே காரணம் "
என எண்ணிய மாருதி பாசக்கயிர்களை அவிழ்த்துகொண்டு வானில் பறந்து சுவர்மீது நின்று கர்ஜிக்கிறார்

🌺 பின்பு இலங்கையின் தோரணவாயிலில் இருந்த இரும்புத்தடியை எடுத்து பாதுகாப்பிற்கு வந்த அரக்கர்களை வதம்செய்கிறார்

🌺 கோட்டை மதில்களின் மேல்நின்ற மாருதி கோட்டை மதில்களையும் அரக்கர்களின் சாம்ராஜ்யமாக இருக்கும் இவ்விலங்கையை நாசம்செய்ய வேண்டும் என யோசிக்கிறார்

🌹 அப்போது தன்மேல் கருணைகாட்டிய அக்னியை நினைத்த அனுமான் அக்னிதேவனுக்கு வயிறாற ஆஹூதி குடுக்க வேண்டும் என எண்ணி அதற்கு இலங்கையை ஆஹூதி குடுக்கலாம் என முதலில் பிரகஸ்தனின் இல்லத்தில் பாய்ந்து வாலில் இருந்த தீயை கொண்டு தீ மூட்டுகிறார்

👑 விபீஷணரின் அரண்மனை தவிர

ரத்னங்கள், வைரங்கள், முத்துக்கள் என விலைமதிக்க முடியாத கற்களால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை நகரம் அனைத்தும் அனுமானின் வாலில் இருந்த அக்னிபகவானிற்கு ஆஹூதியாகின்றனர்

👑 அனுமானை அந்நேரத்தில் கண்ட இலங்கைவாழ் மக்களில் சிலர் இவன் வானரன் அல்ல அக்னிதேவன் என்றனர் மற்றும் சிலரோ இவன் காலனே என பயந்தனர்

👑 இலங்கையை நாசம்செய்த அனுமான் தனது வாலில் இருந்த அக்னியை சமுத்திரத்தில் நனைத்து அணைத்தார் இலங்கைவாழ் மக்கள் தங்களின் நகரம் கொளுத்தப்பட்டதை கண்டு இலங்கையின் வெளியே நின்று கொண்டு இருந்தனர்

🐒 இதைகண்ட பிறகே அனுமனுக்கு தனது செயல்கள் தவறோ என்ற எண்ணம் வந்தது காரணம் பரந்த இலங்கையிலே தான் சீதா தேவியும் இருந்தார்

🐒 அவர்
" கோபத்தினை தனது புத்தியை கொண்டு எவன் மூடுகிறானோ அவன் புத்திமானாவான்

கோபம்கொள்வதால் விளைவது அதர்ம எண்ணங்களே

இத்தனையும் சரியாக செய்த நான் இவ்விசயத்தில் என் குரங்கு புத்தியை காட்டிவிட்டேன்

ஒருவேளை சீதை தீக்கு இறையாகி இருப்பாரா

இல்லை அவரின் பத்தினித்தன்மை அக்னியையே பஸ்மமாக்கும் அல்லவா

கொளுத்தும் தீ எனக்கே தீமையை செய்யவில்லையெனில் சீதாதேவிக்கு அது எவ்வாறு தீங்கிழைக்கும்

👑 என தன்னைத்தானே நிந்தித்தும் தன்னைத்தானே தேற்றும்போது சாரணர்கள்

" எவர்க்கும் ஆகாத காரியமான இதை அந்த வானரன் செய்து காட்டினான் இந்திரனின் நகரமான அமராவதியை விடவும் செல்வத்தில் மிஞ்சியதுமான இவ்விலங்கையை நெருப்பிற்கு இரையாக்கி இந்நகரத்தின் செல்வங்களையெல்லாம் நாசமாக்கினான்

👑 ஆனால் ஆச்சர்யம் அளிக்கும்விதமாக சீதா தேவி இருந்த பக்கம் மட்டும் தீ எள்ளளவும் பரவவில்லை " எனக்கூறுவதை கேட்ட அனுமானுக்கு மனதில் சற்று நிம்மதி கிட்டியது

👑 பிறகு மீண்டும் சிம்சுபா விருட்சத்திற்கு அடியிலிருந்த சீதா தேவியை காணச்செல்கிறார் அப்போது அனுமந்தரின் செயல்களை பாராட்டிய வைதேகி இராமபிரான் தன்னை விரைவாக மீட்க வேண்ட அனுமந்தர் விரைவாக வானரசேனை படையெடுத்து வரும் என உறுதி கூறி விடைபெறுகிறார்

🌺 பின் அங்கிருந்த அரிஷ்டா பர்வதத்தின் மீதேறி அந்த மலையை நொறுக்கும் விதமாக அழுத்தத்தை கொடுத்து சமுத்திரத்தை தாண்டுகிறார்

👑 இடையில் திரும்பவும் மைநாக பர்வத்தினை காணும் அவர் அதனை தடவிகொடுத்து மகேந்திர பர்வதத்தை அடைகிறார்

🌺 அங்கு இறங்கியபின் அங்கதன், ஜாம்பவான் மற்றும் வானர படைகளுக்கு தனது வருகையை உணர்த்த கர்ஜிக்கிறார் அவரின் கர்ஜனையை கேட்ட வானரர்கள் அவர் நிச்சயம் சீதா தேவியை கண்டிருப்பார் என உறுதியாக நம்பினர்

🌹 அங்கு அவரின் சந்தோஷ ஆட்டத்தை கண்ட வானரர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்காக பற்பல பழங்களை படைக்கின்றனர்

🌺 அங்கதன் மற்றும் ஜாம்பவானிடம் அர்த்தம் புதைந்த " கண்டேன் சீதையை " என்ற வார்த்தையை கூறி தான் போனதிலிருந்து நடந்த ஒவ்வொன்றையும் விளக்கமாக எடுத்து கூறிகிறார்

👑 இதைகேட்ட அங்கதன் அனுமானின் சாதனையை புகழ்ந்து நாம் எல்லோரும் இங்கிருந்து சென்று உடனே இராவணனை வீழ்த்தி சீதாதேவியை இராமரிடம் சேர்ப்பதே சிறந்ததென கூற

👑 அதைகேட்ட ஜாம்பவான் அது தகாது என கூறி நாம் இத்தகவலை அவர்களிடம் சேர்ப்பிப்பதே சிறந்ததென கூற அனைவரும் ஆமோதிக்கின்றனர்

🌺 இதனால் வெற்றியுடன் திரும்பும் அவர்கள் உடனே கிளம்ப இடையில் சுக்ரீவனுக்கு சொந்தமானதும் ததிமுகன் என்ற சுக்ரீவனின் மாமாவினால் காக்கப்படுவதுமான மதுவனத்தை அடைகின்றனர்

🌿 வானரர்கள் வைதேகியை காணும்வரை சரியாக உண்ணாதிருந்தனர் இதனால் மதுவனத்தில் ஆகாரம் சாப்பிட அங்கதனிடம் அனுமதி கேட்க அங்கதனும் அனுமதியளிக்கிறார்

🌺 இதனால் மதுவனத்தில் உள்ள அனைத்து பழங்கள் மற்றும் தேனை உண்டு வெற்றியின் களிப்பால் ஆடிப்பாடி குதிகளிக்கின்றனர்

🌹 இதைகண்ட காவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று நடந்ததை கூற சுக்ரீவன் வானரர்களின் இந்த செயலுக்கு காரணம் சீதா தேவியை கண்டதே என யூகிக்கிறார் இந்நிலையில் அங்கு வந்த லட்சுமணன் அதை வினவ நிச்சயம் அங்கதன் தலைமையிலான வானர சேனை வெற்றிவாகை சூடினர்

🌹 அனுமான் நிச்சயம் இக்காரியத்தை சாதிப்பான் என அறிவேன் என நம்பிக்கையுடன் கூறி ததிமுகனிடம் வானர சேனையை உடனே வரச்சொல்லுமாறு ஆணைபிறப்பிக்கிறார்

🌹 அவ்வாறே ஆணையை ஏற்ற தலைமைதாங்குபவர்களில் சிறந்தவனான அங்கதன் தனது வானரப்படையின் பசி தீர்ந்தவுடன் அந்த படையை சுக்ரீவனை நோக்கி திருப்புகிறார்

🌼 அவ்வாறே ராமபிரானிடம் அனுமானை பிரதானமாக கொண்டு செல்லும் வானர சேனையில் மாருதி இராமபிரானிடம் சென்று " கண்டேன் சீதையை " என உரைத்து " இலங்கையில் அசோக வனத்தில் சீதா தேவி பதிவிரதையாய் இருப்பதை கண்டேன் என உரைக்கிறார்

👑 பிறகு சீதை கூறிய காக்காசுரனின் கதையை கூறிய கபிகுல திலகன் சீதா தேவி அளித்த சூடாமணியை இராமரிடம் சேர்த்து
" பிரபோ சீதா தேவி இன்னும் ஒரு மாதகாலமே ஜீவித்திருப்பார் என்றும் இராவணன் மைதிலிக்கு அளித்த கெடு பற்றியும் கூறிய மாருதி அவருக்கு தான் அளித்த சமாதானம் பற்றியும் " உரைக்கிறார்

சுந்தர காண்டம் நிறைவடைந்தது

ஸ்ரீ ஸீதா லஷ்மன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர பரப்ரமஹனே நம

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🐒 அனுமனில் தூதை படித்தாலே சொல்லின் செல்வன் என்ற பெயர்  விஜயேந்திரியனுக்கு எவ்வாறு வந்ததென அறியலாம் அவர் உரைத்த கண்டேன் சீதையை என்ற வார்த்தையும் சிறப்பு மிகுந்தது

🐒 அத்தனை மாவீரர்களுடன் கூடிய தசதலைகளை உடையவனின் சபையில்  கம்பீரத்துடன் இராமனிடம் சரண்புகு என்று கூறுவது சாமான்யர்களுக்கு இயலாத காரியமே

🐒 அனுமான் உரைத்த தூதுசெய்தியை சற்று விரிவாக பார்த்தோமானால்

' தனது செயல்களுக்கு காரணம் என்ன

தான் யார் அனுப்பி இங்கு வந்தேன்

தான் யார்

எக்காரணத்திற்காக தூது வந்தேன்

உனது தவறு யாது

அதற்கான தீர்வு என்ன

தர்மம் யாது

போர் மூண்டால் நடுநிலையில் இருந்து பாத்தால் என்ன தெரியும்

எதிர்ப்பவனின் திறன் என்ன '

இவை அனைத்தையும் தெள்ளத் தெளிவாக பிசகில்லாமல் சரியாக எடுத்துரைத்தார்

🌹 இந்தக்கலை இன்று நம்மில் பலருக்கு தேவை எந்த ஒரு இடத்திலும் சரியான முறையில் தேவையான கருத்துகளை பிசகில்லாமல் தைரியமாக கூறவேண்டும்

👑 இங்கு வாலில் இருந்த நெருப்பை அனுமான் கடலில் அணைக்கும்போது கூறியதை தெளிவாக ஆராய வேண்டும்

" கோபத்தில் எடுக்கும் முடிவுகள் என்றும் சரியானதல்ல அது அதர்ம பாதைக்கே நம்மை இழுத்துச்செல்லும்

கோபத்தை புத்தியை கொண்டு மூடுபவனே சிறந்தவன் "

🐒 இன்று கோபத்தையே பெருமையாக எண்ணும் பலர் உள்ளனர்
ஆனால் உண்மையில் கோபம் ஒரு மனிதனை வீழ்த்தும் பெரும் ஆயுதமாகும்

🌹 இதனால் தான் கோபத்தில் முடிவெடுக்காதேயென பெரியவர்கள் கூறினர்

🌿 ஒருவனின் ரௌத்திரம் புத்தியை கொண்டே காட்டப்பட வேண்டும்

🌹 அனைத்தையும் எரித்த அனுமான் விபீஷணரின் வீட்டை மட்டும் கொளுத்தவில்லை காரணம் அச்சபையில் அவரின் செயல்களே

👑 மோசமான அரக்கர்களின் மத்தியில் இராவணனுக்கே தர்மத்தை எடுத்து கூறியவர் விபீஷணர்

⚡அட்சய குமாரனின் வீரத்தை ரசித்ததுபோல விபீஷணரின் தர்மத்திற்கு மதிப்பளித்தான் வாயுமைந்தன்

👑 தண்டனை அறிவித்தாகிவிட்டது இந்நிலையில் எந்த ஒரு வீரனுக்கும் கோபம் வரும் ஆனால் அந்நிலையிலும் அனுமான் நினைத்தது யுத்தத்தின் முன்னேற்பாடாக பாதுகாப்பு அம்சத்தை நோக்குவதே

🍃 வானரர்கள் இராமபிரானிடம் தகவல் சேர்க்காமல் மதுவனத்தில் புகுந்தது சரியா

🌼 இங்கு அங்கதனை பற்றி ஆராய்வது அவசியம் அங்கதன் இங்கு சிறந்த தலைவனாக பார்க்கப்படுகிறான்

🌼 கடல் தாண்டும் வேளையிலும் இளையவனாக இருந்தாலும் துணிந்து முன்நிற்க துணிந்தவன் நூறு யோஜனையை நான் தாண்டுவேன் ஆனால் திரும்பு வருவது இயலாது சரி நானே செல்கிறேன் என கூறும்போதே அனுமானை பற்றி ஜாம்பவான் உரைப்பார்

🌹 இருமாத காலங்களில் வானர படை உணவு உறக்கத்தை விட்டு மிகுந்த உழைப்பை கொடுத்தது அவர்கள்  சீதா தேவியை காணாவிடில் மரணம் ஒன்றே தீர்வு என உறுதியாக இருந்தனர் இந்நிலையில் சீதா தேவியை கண்டபின்னும் அவர்களுக்கு உணவு குதுகலத்திற்கு அனுமதி அளிக்காமல் இருந்து இருந்தால் அங்கதனின் தலைமை பண்பு மோசமானதாகி இருக்கும்

👑 அங்கதனை வானர வீரர்கள் கொண்டாட முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்

👑 அங்கதன் கூறியதுபோல சில முக்கிய வானரர்கள் மட்டும் சேர்ந்து போய் இலங்கையை நாசம்செய்து சீதையை மீட்டு இருக்கலாம்

👑 இது இயன்ற காரியமே காரணம் இடையில் இருந்த அரக்கியை மாருதி வதைத்தார் மேலும் மைநாகப்பர்வதத்தின் உதவியும் தற்போது உள்ளது

🌺 தனது விருப்பம்போல் எங்கும் நகரவல்ல மைநாக பர்வதம் சமுத்திரத்தின் நடுப்பகுதிக்குசெல்லுமாயின் வானரர்கள் இரு ஐம்பது யோஜனை தூரம் தாண்டுவது எளிதான காரியமே

🐒 மேலும் நகரும் மைநாகத்தின்மேல் வானர தளபதிகள் அமர்ந்தாலே போதும் ஆனால் இந்நிகழ்வை செய்வதற்கு எதற்கு மற்ற வானரர்கள் அனுமான் தூதின்போதே செய்து இருக்கலாம்

🐒 ஆனால் இராமபிரானுக்கு இச்செயல் இழுக்காகும் அல்லவா இதனாலே தான் இதை அனுமந்தரும் ஜாம்பவானும் ஆமோதிக்கவில்லை

சுந்தர காண்டம் முற்றுப்பெற்றது

அடுத்த பதிவு முடிவுரை 

👑 சுந்தரகாண்டம் - முடிவுரை


அஞ்சிலே ஒன்று பெற்றான்.
   அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
   ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
   அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
   அவன் எம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்க் காக்க ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
   ‎
👑 சுந்தர காண்டம் என்ற பெயர் அனுமந்தனால் வந்ததில்லை என்று ஒரு சாரார் மறுத்தாலும்

🐵 இராமாயணத்தின் கதா நாயகன் இராமன் என்றால்
சுந்தர காண்டத்தில் அனுமனே நாயகன்

🐒 இராமபிரானும் சீதாபிராட்டியாரும் பிரிவால் வாட அனுமனின் சாகசத்தை முழுதாய் கொண்டிருப்பதால் இங்கு கபீந்திரனே நாயகராவார்

💐 சீதாதேவியையும் இராமபிரானையும் சேர்த்துவைத்ததில் பெரும்பங்கு அனுமனுக்கே என்றால் மிகையாகாது

🌷 சுந்தரன் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருள் மட்டும் இல்லை மாறாக சிறந்தவன் என்ற பொருளும் உண்டு
அனுமந்தனுக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தமானது ஆகும்

🍀 அனுமான் விஸ்வரூபமெடுத்து பரந்த சமுத்திரத்தை தாண்டுவதில் தொடங்கி இராமபிரானிடம் தகவல் சேர்ப்பது வரை இருப்பது சுந்தர காண்டம்

🍁 அனுமந்தனின் இத்தகு கூர்மையான பார்வையால் வந்த பின்விளைவுகள்

🌻 சீதா தேவியின் தகவல் அறிந்தாயிற்று

" அனுமான் செய்த காரியம் பூலோகத்தில் எவர்க்கும் செய்ய இயலாத ஒன்று கருடனும் வாயுவும் மட்டுமே தாண்டக்கூடிய சமுத்திரத்தை தாண்டிய அனுமான் எவர்க்கும் நுழையமுடியாத இலங்கையில் நுழைந்ததுமட்டுமல்லாது இராவணனின் இராஜ்யத்தையே துவம்சம் செய்துள்ளான் " என்று பூரித்த ஸ்ரீ இராமபிரான் மாருதி செய்த காரியங்களுக்கு
" தன்னிடமுள்ள சர்வத்தையும் அளித்தால் மட்டுமே என் மனம் நிம்மதியை அடையும் ஆலிங்கனம் செய்வதே சர்வத்தையும் தருவதற்கு சமம் இதோ இப்போதே அதை தருகிறேன் " எனக்கூறி ஆலிங்கணம் செய்கிறார்
( அதாவது கட்டி அணைக்கிறார்)

🍀 ஆனால் இராமபிரானுக்கு இம்மஹாசமுத்திரம் இடையில் தடையாக இருப்பதை உணர்ந்தார் மேலும் இலங்கையின் பாதுகாப்பு அம்சங்களை ஆராயவேண்டி இருப்பதால் அங்குச்சென்ற வாயுமைந்தனிடம் இதுப்பற்றி வினவுகிறார்

👑 இதற்கு அனுமான் உரைத்த பதில்

" இலங்கை நகரம் இயற்கையாகவே

ஜல துர்க்கம்
( பரந்த சமுத்திரத்தால் காக்கப்படுவது)

கிரி துர்க்கம்
(திரிகூட மலையின் உச்சியிலிருப்பதே ஆதலால் மலையினால் காக்கப்படுவது)

வனதுர்க்கம்
(வனத்தினால் காக்கப்படுவது)

இம்மூன்றையும் நாம் கடந்தாக வேண்டும்

தங்கத்தினால் பெரும் மதில்கள் கொண்டதும் சுற்றி ஆழிகள் கொண்டதும் எந்நேரமும் கோடி வீரர்களால் காக்கப்பட்டதான இலங்கையின்

மதில்களை நான் தீக்கிரையாக்கி விட்டேன்

ஆழிகளை நான் மூடிவிட்டேன்

காவலில் இருந்த வீரர்களையும் நான் கொன்றுவிட்டேன்

அதனால் அதைப்பற்றி கவலை தேவையில்லை

மேலும் இயற்கையால் உண்டான இம்மூன்று பாதுகாப்பையும் பற்றி கவலை கொள்ள வேண்டும்

🌺 ஆணை பிறப்பித்தால் உடனே மலைகள் அரண்மனைகளோடு கூடிய இலங்கையை வானாரர்களான நாங்கள் பெயர்த்து உன் காலடியில் சமர்ப்பிப்போம் " எனப்பணிவுடன் தெளிவாக உரைக்கிறார்

🐒 இங்கு அனுமந்தனின் செயல்கள் யுத்தத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொண்டதாகும் அதை வார்த்தையில் விவரிக்க முடியாது

🌹 மேலும் சுந்தர காண்டத்தில் இராமபிரானிடம் தான் சீதையை கண்டதை மட்டுமே உரைத்திருந்தான் வாயுமைந்தன் அவன் எதிரிகளை துவம்சம் செய்தது பற்றி விபீஷணர் கூறியபின்பே இராமருக்கு தெரியும்

🍂 மாருதியின் செயலால் இலங்கையில் வெப்பம் தாங்காமல் ஏழு நாட்கள் வான்வெளியில் தங்கிய இராவணன் வெட்கினான்
" ஒரு குரங்கு தேவர்களும் வான்வழியாக கூட கடக்க பயம்கொள்ளும் இவ்விலங்கை மாநகரை வந்தடைந்து சீதையை கண்டான்

பல இராட்ஷசர்களை கொன்று குவித்து இந்நகரத்தையே தீக்கிரையாக்கிவிட்டு சென்றுவிட்டான்

ஆனால் அவனுக்கு நம்மால் ஒரு தீங்கும் இழைக்கமுடியவில்லை

இலங்கை மாநகரில் கிணற்றில் எங்கும் தண்ணீர் இல்லை அக்குரங்கு வைத்த தீ இன்னும் அடங்கவில்லை

எப்போதும் மிகுந்த நறுமணம் வீசும் இம்மாநகரம் தற்போது வெறும் கருகிய வாசனையை மட்டுமே கொண்டதாக உள்ளது

எனப்புலம்புகிறான் இராவணன்

👑 அனுமனின் செயல்களை ஆழ்ந்துநோக்கினால் இராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் பங்கும்

🔱 ஒருவன் எவ்வாறாக ஒரு செயலை ஆராய்ந்து அதை உற்றுநோக்கி செயல்களை ஆற்றுவதினால் சிறப்பான நிலையை அடைவான் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்

👑 சுந்தர காண்டம் கற்பனைக்கு எட்டாத பலன்களை உடனே தரவல்லது அவற்றில் சில

👑 ஒரு தேசத்தில் இருப்பவர்கள் அனைவரும் படித்தால் அந்த தேசமே பெரும் வளர்ச்சியை அடையும்

👑 படிப்பவருக்கு வேண்டும் பலன்களை தரவல்லது என்றால் மிகையாகாது

👑 வளர்ச்சி மற்றும் வியாதிகளை போக்குவது மட்டுமில்லாமல் நவகிரக தோஷங்கள் மற்றும் ஏனைய தோஷங்களையும் போக்கவல்லது

👑 ஊள்வினையால் வரும் நிம்மதி சீர்குலைவை போக்க வல்லது சுந்தர காண்ட பாராயணம்

👑 சுந்தர காண்டத்தினை ஒருவன் ஆழ்ந்து படிப்பானேயானால் அவன் தனது உண்மையான சொரூபத்தை உணர்வான்

👑 சுந்தர காண்டத்தை முழுமையாக படிக்க முடியாதவர்கள் கீழ்க்காணும் வரிகளை ஆத்மபூர்வமாக படிப்பதன் மூலம் அப்பலன்களை அடையலாம்
(இணையதளத்தில் எடுத்தது)

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்

இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்

கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன

கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி

இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.

அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்

அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!

வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்

வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க

மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து

சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து

சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை

இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை

அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்

சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்

ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட

வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !

கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி

சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்

அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு

அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்

பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க

வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்

வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்

அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.

ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்

அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்

ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.

வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி

சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து

ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.

ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ

அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை

அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.

அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்

அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

👑 எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை

💢 இப்பதிவுடன் சுந்தரகாண்ட பதிவுகள் முடிவடைகின்றன

☀ இப்பதிவை தர அருள்புரிந்த ஸ்ரீராமருக்கு இந்த அடியேனின் கோடி நமஸ்காரங்கள்

ஸ்ரீ ஸீதா லஷ்மன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர பரப்ரமஹனே நம

🙏🙏🙏🙏


Monday, September 25, 2017

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

சில நாட்களாக இந்த பழமொழியை கூறிவருகின்றனர்

எனில் அர்ஜுனனுக்கு அத்தனை மனைவிகளா என்ன?

சரியாக வியாச பாரதத்தின் படி அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள் மட்டுமே (பாஞ்சாலி, சுபத்திரை, சித்ராங்கதை, உலூபி)

1.இங்கு பாஞ்சாலியை அர்ஜுனன் குறியை அடித்து மணப்பார்

2.உலூபி
      இதில் அர்ஜுனன் உலூபியை தேடி செல்லவில்லை கடத்தியது உலூபியே ஆனால் பெண்ணிடம் வீரத்தை காட்ட வேண்டாமென அர்ஜுனன் ஏதும் செய்யமாட்டார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html?m=1

   பலர் அறியாத விசயம் உலூபி ஒரு விதவை ஆவாள்
     
  அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம்{உலூபியிடம்} பெறப்பட்டவனாவான்.கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான்

http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-091.html?m=1

3.சித்ராங்கதை
              இவர் பாண்டியனின் மகள் பாண்டியன் உடனான உடன்படிக்கையின் படி இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புகிறார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section217.html?m=1

4.சுபத்திரை
               இவர் அர்ஜுனனின் அத்தை மகள் ஆவார் இருவருமே முன்னமே ஒருவரை ஒருவர் கேள்விபட்டு காதல் கொண்டனர் அர்ஜுனன் சுபத்திரையை கண்டவுடன் இந்த விருப்பத்தை கிருஷ்ணரிடம் சொன்னார் அதேபோல சுபத்திரையும் ரிஷியானவர் அர்ஜுனன் என உணர்ந்த உடனே காதல் வெளிப்படுத்தினாள் சரியாக சொல்ல வேண்டுமானால் ருக்மணி கண்ணன் மீது கொண்ட காதல்போல அர்ஜுனனை பற்றி கேள்வியுற்றே காதலிக்க தொடங்கினாள்

முறையே நான்கு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகன்களாக மாவீரர்கள் நால்வர் ஜெனித்தனர்

இவர்கள் நால்வர் மட்டுமே அர்ஜுனனின் பாரியைகள் இவர்களில் திரௌபதி மற்றும் சுபத்திரை மட்டுமே இந்திரபிரஸ்தம் வருவர்

பல பேர் அர்ஜுனனின் மனைவிகள் என குறிப்பிடப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை அவை புதினங்களே

🌸 அர்ஜுனனின் தவம்

            பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.


பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section38.html?m=1

🌸 அர்ஜுனனின் விரதம்
          பிரம்மசிரா அஸ்திரத்தை திரும்ப பெறுவதென்பது சாதாரணம் இல்லை அதற்கான விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது கடினமானது இதனால் தான் அஸ்வதாமரால் கூட அவ்வஸ்திரத்தை பின்வாங்க இயலவில்லை

Having said these words Dhananjaya withdrew his weapon. The withdrawal of that weapon by the gods themselves in battle is exceedingly difficult. Not excepting the great Indra himself, there was nobody save the son of Pandu, who was capable of withdrawing that high weapon after it had once been let off. That weapon was born of Brahma energy. No person of uncleansed soul can bring it back after it is once let off. Only one that leads the life of a brahmacari can do it. If one who has not practised the vow of brahmacarya seeks to bring it back after having shot it, it strikes off his own head and destroys him with all his equipments. Arjuna was a brahmacari and an observer of vows. Having obtained that almost unobtainable weapon, he had never used it even when plunged into situations of the greatest danger. Observant of the vow of truth, possessed of great heroism, leading the life of a brahmacari, the son of Pandu was submissive and obedient to all his superiors. It was for this that he succeeded in withdrawing his weapon.

http://www.sacred-texts.com/hin/m10/m10015.htm

கும்பகோண பதிப்பு (தமிழில்)

https://drive.google.com/file/d/0BwtAdTS664FARWRWc3AwYTNmSk0/view?usp=drivesdk

அர்ஜுனனின் தவம் பெரும் பலம் கொண்டது மேலும் மேலும் அவர் கடைபிடித்த விரதமும் அவ்வாறே

இதனால் தேவலோக அப்சரஸான ஊர்வசியையும்

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section46b.html?m=1

விராடன் மகள் உத்தரையையும் ஏற்காதவன் விஜயன்

ஊர்வசியை ஏற்காதலால் சாபம் பெற்றதை அனைவரும் அறிவோம்

சரியாக மூன்று முறை விஜயன் திக் விஜயம் செல்வார் இதில் எந்த நாட்டு பெண்னையும் மணக்கவில்லை

அப்படி பார்த்தால் திருதராஷ்டிரருக்கே மொத்தம் 110 மனைவிகள் உண்டு
எனில் இந்த பழமொழி எவ்வாறு சரியென நான் அறியேன்

பார்த்தன் பிரம்மதேவர் உருவாக்கிய காண்டீப வில்லையும் இரு அம்பறாத்தூணிகளையும் கொண்டவன்
அவன் வில்லில் இருந்து புறப்படும் கணைகள் ஒன்றையொன்று தொட்டுகொண்டு செல்லும்

http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section168.html

http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section63.html?m=1

மேலும் சவ்யசச்சின் ஒரே இழுவையில் 500, 600 அம்புகளுக்கும் மேலாக விட வல்லவன்

http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section90.html?m=1

http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-090.html?m=1

குடகேசனின் வேகத்தை தேவர்களும் பார்க்க முடியாதவர்கள் ஆவர் வெட்டிய ஜெயத்ரதனின் தலையை அம்புகளை கொண்டே கீழே விழாமல் எல்லையில் இருந்த சிந்து ராஜனின் தந்தை மடியில் விழ வைத்தவன்

http://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-145.html?m=1

அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்

என்பது போல மாற்றப்பட்ட பழமொழியே இது

உண்மையான பழமொழி

#ஆற்று_மணலை_கூட_எண்ணலாம்_ஆனால்_அர்ஜுனனின்_கணைகளை்_எண்ண_முடியாது

குறிப்பு : அனைத்தையும் ஆதாரத்துடனேயே பதிவிட்டு உள்ளேன் தேவையற்ற விவாதம் எழுப்புபவர் எவராயினும் நிச்சயம் Block செய்யப்படுவர் இங்கு நான் வேறு யாரையும் இழுக்கவில்லை அர்ஜுனரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் விவாதம் வேண்டாம் 🙏🙏🙏

💐 அஸ்திரங்களில் நிகரற்றவர் யார்


👑 மன்னராய் பிறந்து ரிஷியாகி பின் இராஜ ரிஷி பிரம்ம ரிஷி என சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்ரரே அவர்

🌷 நம் அனைவருக்கும் வசிஷ்டரின் கன்றுக்காக விஸ்வாமித்ரர் சண்டையிட்டது தெரியும்

🌷 ஆனால் யுத்தம் அவ்வளவு எளிதாக முடிந்துவிட வில்லை யுத்தத்தில் கௌசிகர் விடாத அஸ்திரம் இல்லை

🌷ஆனால் அனைத்தையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் அடக்கியது இதன்பிறகே ரிஷியாகிறார்

🌷இதன் பிறகு திரிசங்கு சொர்க்கம், அரிச்சந்திரன் என இருவருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை பலரும் அறிவோம் ஆனால் எதுவும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை

💐 வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரரின் பங்கு இராமவதாரத்தில் இன்றியமையாததாகும்

👑 ராமபிரானுக்கு ஞானமளிப்பதில் வசிஷ்டரும்

👑 அஸ்திரமளிப்பதில் விஸ்வாமித்ரரும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர்

🌺 இராமருக்கு வசிஷ்டர் அளித்த ஞானம் அளவிட முடியாதது ஆகும் அதில் யோக வசிஷ்டம் மிகவும் முக்கியமாகும் இது சரியாக 32,000 ஸ்லோகங்களை கொண்டது (வால்மீகி இராமாயணம் முழுதும் கூட 24000 மட்டுமே)

🌹 தனது 16 வயதிலேயே மனித வாழ்க்கையை கண்டு விரக்தி அடையும் ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டரின் உபதேசமே யோக வசிஷ்டமாகும்

🌸 இதே போல அஸ்திர பயிற்சியில் விஸ்வாமித்ரரின் பங்கு அற்புதமானது

🌻 அவர் ஏற்கனவே பல அஸ்திரங்களை மன்னராய் இருக்கும் போது அறிந்ததே ஆனால் ரிஷியான பின்பும் இதை விட வில்லை

🌸 பெரும் வேள்வி நடத்துகிறார் விஸ்வாமித்ரர் அதற்கு இராவணனே நேராக வந்து தடுக்க முடியாததால் மாரிசன் மற்றும் சுபாகுவை அனுப்பி வைக்கிறான்

🍀 இவ்விருவர்களும் சாமான்யர்கள் இல்லை ராமபிரானின் தந்தையாகிய தசரதரே

🌺 " நான் மற்றும் என் நண்பர்கள் எங்களின் படையுடன் சேர்ந்து வந்து தடுத்தாலும் கூட அந்த இருவர்களில் ஒருவனை தடுப்பதே இயலாத காரியம் அவ்வாறு இருக்கையில் வெறும் பன்னிரண்டு வயதேயான என் மகன் ராமன் எவ்வாறு தடுப்பான் " என மறுக்கிறார்

🌈 இதை கேட்ட வசிஷ்டர் பொங்கி எழுகிறார்

" தசரதா

இராமன் சிறுவனாய் இருந்தால் என்ன ??

இளைஞனாய் இருந்தால் என்ன ??

தனுர்வித்தை பயின்றால் என்ன??

பயிலாமல் இருந்தால் என்ன

விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ ஏன் பயம் கொள்கிறாய் எதிர்த்து வருபவன் மரணமற்றவராக இருந்தாலும் விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

அவரால் ஆகாத காரியம் என்று இல்லை அவரே ராமனை அழைக்கிறார் என்றார் அதில் காரணம் இருக்கிறது

இவர் தவத்திற்கு இருப்பிடம்

இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரை எவரும் அறிந்ததுமில்லை

இனி எவரும் அறிய போவதுமில்லை

இவர் அறியாத அஸ்திரமில்லை மேலும் தன் பலத்தினால் புதுபுது அஸ்திரத்தினை உருவாக்கும் திறனும் கொண்டவராவார்

தக்ச பிராஜாதிபதியின் மகளான ஜயை மற்றும் ஸுப்ரபை இருவரும் க்ரிசாஸ்வரை மணந்து கொடுமையிழைத்த அசுரர்களை வதைக்க இருவரும் கடவுள்களை தவிர மற்றோரால் வெல்ல முடியாத 100 அஸ்திரங்களை பெற்றெடுத்தனர் அவை அனைத்தையும் இவர் அறிவார்

மேலும் மும்மூர்த்திகளிடம் இருந்தும் பல அஸ்திரங்களை பெற்றவர் இவருடன் இராமனை அனுப்புவதே உனக்கு தகும் மேலும் அதுவே இராமனுக்கும் நன்மை பயக்கும்
(பால காண்டம் 21வது சர்க்கம்)

⛅ பின் இராமனை அழைத்து செல்லும் விஸ்வாமித்ரர் பலா மற்றும் அதிபலா வித்யைகளை அளிக்கிறார் இந்த வித்தைகளால் பலத்தில் எவரும் இணையாக மாட்டார்கள் மேலும் பசி ,தாகம், நோய்களால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படாது

🌼 இன்னும் பற்பல விசயங்கள் இவ்விரண்டு வித்தைகளால் சாத்தியம் மேலும் இதை அறிந்தவர் விஸ்வாமித்ரர் மட்டுமே இதை பிரம்ம தேவர் விஸ்வாமித்ரர்க்கு உபதேசித்தார்

🌺 தாடகையை வதைத்த பின்வரும் தேவர்கள் இதுவே சரியான நேரம் தாம் பாதுகாத்த அஸ்திரங்களை ஸ்ரீ ராமருக்கு அளிக்க வேண்டும் என வேண்ட அவ்வாறே அளிக்கிறார்


👑 விஸ்வாமித்ரர் இராமபிரானுக்கு அளித்த அஸ்திரங்கள்

🌻 தண்ட சக்கரம்

🌻 தர்ம சக்கரம்

🌻 கால சக்கரம்

👑 விஷ்ணு சக்கரம்

🌻 இந்திர சக்கரம்

👑வஜ்ராயுதம்

👑 சிவனின் திரிசூலம்

👑 பிரம்மாஸ்திரம்

👑 பிரம்மசிரா

🌻 ஜஷிகாஸ்திரம்

👑 மோதகி கதாயுதம்

👑 சிகாரி கதாயுதம்

👑 தர்ம பாசம்

👑 கால பாசம்

👑 வருண பாசம்

👑 வஜ்ரத்திற்கு இணையான இரு ஆயுதங்கள்

🌻 வருணாஸ்திரம் ஆக்னேயம் மற்றும் வாயவ்யம் மற்றும் சிகாரி

👑 சிவன் மற்றும் நாராயணரின் அஸ்திரங்கள்

👑 சிவனின் சக்தியாஸ்திரம்

👑 விஷ்ணுவின் சக்தியாஸ்திரம்

👑 ஹயக்ரீவர் அஸ்திரம்

🌺 கிரௌஞ்ச அஸ்திரம்

🌻 அசுரர்களின் சக்திமிக்க தண்டமான கங்காலம், கபாலம், கங்கனம்

🌼 வைத்யதாரா அஸ்திரம்

👑 நந்தன கட்கம்

🌻 மோஹன அஸ்திரம்

👑 பிரஸ்வாப்ன அஸ்திரம் (இதை வைத்தே பரசுராமரை பிஷ்மர் வெல்வார்)

🌻 பிரஸாமனா அஸ்திரம்

🌻 வர்சனா அஸ்திரம்

🌻 சோசனா அஸ்திரம்

🌻 சந்தப்பனா அஸ்திரம்

🌻 விலாப்பனா அஸ்திரம்

🌻 மன்மத அஸ்திரம்

🌻 கந்தர்வ அஸ்திரம்

🌻 ராட்சஸர்களின் அஸ்திரமான பைசாச அஸ்திரம்

🌻 தாமச அஸ்திரம்

🌻 சௌமான அஸ்திரம்

🌻 சம்வர்த்த அஸ்திரம்

🌻 மௌசல அஸ்திரம்

🌻 சத்ய அஸ்திரம்

🌻 மாய மாயா அஸ்திரம்

👑 சூரியனின் அஸ்திரமான தேஜபிரப

👑 சந்திரனின் அஸ்திரமான சிஷிரா

👑 துவஸ்தாவின் அஸ்திரமான சுதாமன

👑 பகனின் அஸ்திரமான சிதைசு

👑 மனுவின் மானவாஸ்திரம்

👑 மேலும் க்ரிசாஸரின் மகன்களாய் பிறந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அளித்தார் இவர்களின் பெயர் முதற்கொண்டு வால்மீகி இராமயணத்தில் உள்ளது

(பால காண்டம் 27 மற்றும் 28-வது சர்க்கம்)

🌺 இவைகள் அனைத்துமே தெய்வீக அஸ்திரங்கள் ஆகும்

🌺 மேற்கண்டவற்றில் பிரம்மாஸ்திரம் முதலிய பல அஸ்திரங்களை தடுக்க மஹேஸ்வர அஸ்திரம் வேண்டும்

👑 ஆனால் விஷ்ணு சக்கரம் மற்றும் திரிசூலம் முதலிய சிவன் மற்றும் விஷ்ணுவின் சக்திகொண்ட அஸ்திரங்களை தடுப்பது இயலாத காரியம்

👑 ஆனால் இவற்றையெல்லாம் இராமலட்சுமணர்கள் உபயோகிக்கவே இல்லை

🌺 அதிகாயன் பிரம்மகவசத்தை வரமாக பெற்றவன் பிரம்ம கவசத்தினை கிழிக்க பிரம்மாஸ்திரம் ஒன்றே வழி இதனால் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தினை அதிகாயனை கொல்ல உபயோகிப்பார்
( யுத்த காண்டம், 71- வது சர்க்கம்)

🌺 இராவணனின் தலையை இராம பிரான் அறுக்க அறுக்க முளைக்கிறது இவ்வாறாக நூற்றியோரு முறை அறுத்தும் இராவணன் மாளவில்லை இதை கண்ட தேரோட்டி மாதலி இராமபிரானிடம் பிரம்மாஸ்திரம் விட வேண்டுகிறார்
(இராம - இராவண இறுதியுத்தத்தில் இராமபிரான் இந்திரனின் தேரில் யுத்தம் செய்தார்)

🌺 அப்போது இராமபிரான் அகஸ்தியரிடம் பெற்ற பிரம்ம அம்புகளை இராவணன் மீது பிரயோகிக்கிறார்
( யுத்த காண்டம் 108-வது சர்க்கம்)

🌼 மற்றபடி வேறு எதையும் இருவரும் உபயோகிக்கவில்லை

❄ இராவணன் மகன் மேகநாதன் யார் கண்ணிற்கும் புலப்படாமல் தன்னை மறைத்துகொண்டு அனைவரையும் பிரம்மாஸ்திரம் கொண்டு தாக்குகிறான் இதை கண்ட லட்சுமணன் பிரம்மாஸ்திரம் கொண்டு அனைத்து இராட்சஸர்களையும் கொன்று வீழ்த்துவேன் என இராமபிரானிடம் கூறுகிறார் ஆனால் இராமபிரான் அதை அனுமதிக்கவில்லை
(யுத்த காண்டம் 80-வது காண்டம்)

👑 இராமபிரான் சரியாக மூவரிடம் அஸ்திரங்களை பெற்றார்
அவர்கள் வசிஷ்டர், விஸ்வாமித்ரர் மற்றும் அகஸ்தியர் ஆவர் இங்கு விஸ்வாமித்ரர் அளித்த அஸ்திரங்களை இராமபிரான் பெரும்பாலும் உபயோகிக்கவே இல்லை

👑 அவையனைத்தும் போரை எளிதாய் முடிக்கும் திறன் கொண்டு இருந்தவை காரணம் இராவணன் ஈசனிடம் பெற்ற சந்திராசன வாளை தவிர வேறு மகாஸ்திரங்கள் இந்த அஸ்திரங்களை தடுப்பதற்கு இல்லை ஆனால் சந்திராசனமும் அதர்மத்திற்கு உபயோகப்படுமானால் என்னிடம் வந்துவிடும் என ஈசனே கூறினார்

👑 இந்த வாளை இராவணன் போரில் உபயோகிக்க வில்லை காரணம் இந்த வாள் ஜடாயுவை கொன்ற போதே ஈசனிடம் சென்று விட்டது ஜடாயு இராவணன் வில்லையும், கவசத்தையும் உடைத்து இராவணனின் இடது கைகள் அனைத்தையும் கிள்ளி எறிகிறார் ஆனால் மீண்டும் கைகள் முளைத்தபின் இராவணன் வாள் கொண்டு வீழ்த்துவான்
( ஆரண்ய காண்டம் 51 -வது சர்க்கம் )

👑 பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் இறுதியாக தனது அஸ்திரங்கள் அனைத்தையும் தடுத்த பிரம்ம தண்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

https://m.facebook.com/story.php?story_fbid=250256242147332&id=100014888746843

முதலில் இங்கு பாசம் என்பது என்ன என்பதை பார்க்கலாம்

ஒருவரை கட்டிப்போட பயன்படும் அஸ்திரங்களே பாசங்களாகும் இவற்றில் பல வகையுண்டு தர்மபாசம், வருணபாசம், காலபாசம், இவைகள் இராமர் அறிந்ததே

இங்கு மேகநாதன் தொடுத்தது நாகபாசமாகும் அதாவது இது தொடுக்கப்பட்டால் கொடுமையான நாகங்கள் வெளிவந்து எதிரியை கட்டும் இவ்வாறே இராமலட்சுமணர்கள் கட்டப்பட்டனர்

நாகங்கள் கட்டியதால் பட்சிராஜன் கருடன் வந்த போது அது விலகியது

எனில் நாகபாசத்தை தடுக்க எந்த அஸ்திரத்தாலும் முடியாதா என்ன....?

இல்லவே இல்லை நாகபாசத்திற்கு அவ்வளவு சக்தி இல்லை

எனில் ஏன் இதை இராமபிரான் தடுக்க வில்லை சற்று தெளிவாக பார்ப்போம்

இலங்கைக்கு வானர சேனை சென்றவுடனே அவைகளை எதிர்த்து இராட்சஸர்கள் வருகின்றனர்

பகல் முழுதும் நடந்த யுத்தம் இராத்திரியிலும் தொடர்கிறது

இராத்திரி யுத்தத்தில் இந்த்ரஜித்தை அங்கதன் எதிர்க்கிறான் அங்கதன் இந்த்ரஜித்தின் குதிரைகளையும் சாரதியையும் கொல்கிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 28 -வது ஸ்லோகம்)

இதனால் இந்த்ரஜித் உடனடியாக அந்த இடத்தை விட்டு மறைகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 29 -வது ஸ்லோகம்)

அங்கதனால் தோற்கடிக்கப்பட்ட இந்த்ரஜித் கோபத்துடன் தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு திரும்பவும் யுத்தகளம் வருகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 35 -வது ஸ்லோகம்)

யுத்தத்தில் தன்னை மறைத்து இராம லட்சுமணர்களை தாக்குகிறான் பிறகு இராம லட்சுமணர்களிடம்
" யுத்தத்தில் நான் தன்னை மறைத்து கொண்டு வந்தால் 1000 கண்களையுடைய இந்திரனால் கூட என்னை பார்க்க முடியாது பின் மனிதர்களான உங்களால் முடியுமா என்ன " என கூறுகிறார்
(யுத்த காண்டம் 45 -வது சர்க்கம் 11 -வது ஸ்லோகம்)

எனில் மறைந்து நின்று தான் இராமலட்சுமணர்களை தாக்கினாரே தவிர நேரடியாக தாக்க வில்லை பிறகு எவ்வாறு நாகபாசத்தை இராமரால் தடுக்க முடியாது என கூறமுடியும்

இவ்வாறு தாக்கி இராமலட்சுமணர்கள் வீழ்ந்தபின் நான் அவர்களை யுத்தத்தில் கொன்று விட்டேன் என இராவணனிடம் கூறுகிறார்
(யுத்த காண்டம் 46 -வது சர்க்கம் 12 -வது ஸ்லோகம்)

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த்ரஜித் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து நாகபாசத்தை விட்டான் இதை இராமபிரான் எங்ஙனம் தடுப்பது

அனைத்திற்கும் ஸ்லோகம் முதற்கொண்டு கூறப்பட்டுள்ளது இங்கு கூறியதில் ஏதேனும் பிழை இருந்தால் ஆதாரத்துடன் தெளிவாக கூறலாம்


கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

விடை : ஸ்ரீ இராமபிரான்

இராமபிரானிடம் நட்பு பூண்டதிற்கு பின்னரும் சுக்ரீவனுக்கு ராமரால் வாலியை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது

காரணம் வாலி சாமான்ய வானரமே அல்ல எதிர்த்து நிற்பவரின் பாதி பலம் கிட்டும் என்றாலும் சாதாரணமாகவே வாலியின் பலம் அளவிட முடியாதது

ஒரு முறை தேவர்கள் பாற்கடலில் சில முக்கிய ரத்தினங்களையும் புதையலையும் வேண்டி கடைந்தனர் ஆனால் அவர்களால் அதை அடைய முடியவில்லை

அதன்பிறகு வாலி தனியாளாக கடைந்து அந்த புதையலையும் இரத்தினங்களையும் பெற்றார் அப்படி தோன்றிய ஒரு இரத்தினத்தில் வந்த அப்சரஸே வாலியின் மனைவி தாரா ஆவார்

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் சண்டையில் மட்டுமே வாலிக்கு பாதி பலம் கிட்டும் ஆனால் தனியாக கடைந்ததை வைத்து பார்த்தால் வாலியின் பலம் புரியும் இவ்வாறு ஹனுமானும் வாலியையும் தவிர மற்றோரால் இயலாது

இதனாலே சந்தேகம் கொண்ட சுக்ரீவன் இராமபிரானிடம் வாலி எந்த வில்லும் இல்லாமல் தனது வெறும் கையாலேயே எறியும் பாணம் ஒரு சால மரத்தை துளைத்து வெளிவந்து மற்றொரு மரத்தை துளைத்து நிற்கும்

அவ்வாறு தமது பாணம் ஒரு சாலமரத்தை துளைத்து வெளிவந்தால் தாம் வாலியை வதைக்க வல்லவர் என நான் நம்புவதாக கூற இராம பிரானும் இசைகிறார்

இதனால் இராமபிரான் வில்லில் இருந்து தொடுக்கும் பாணம்

"" ஒரு சால மரத்தை மட்டுமல்லாது ஏழு சாலமரங்களை துளைத்து ஒரு மலையையும் துளைத்து வெளிவருகிறது பின் பூமியில் புகும் இராமபாணம் பூமியை துளைத்து வெளிவந்து பிறகு தனது இருப்பிடமான இராமபிரானின் அம்பறாத்தூணியில் அமர்கிறது ""

இதை கண்ட சுக்ரீவன் இராமனின் பாதத்தை ஒடிவந்து பிடிக்கிறார்

இக்காரணத்தாலேயே இராமபிரானுக்கு பிரசண்ட புஜ பராக்ரமன் என்ற பெயர் வந்ததாக அனுமான் உரைக்கிறார் 

👑 முப்பத்து முக்கோடி தேவர்கள்


🌷முப்பத்து முக்கோடி என்றவுடன் நம் நினைப்பது அவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்பதே ஆனால் உண்மை யாதெனில் இங்கு குறிப்பிடப்படும் கோடி என்பதன் பொருள் முக்கியமான மற்றும் தலைமையை குறிக்கிறது

🍂 சமஸ்கிருதத்தில் Trayastrimsati Koti என்ற சொல்லை மொழிமாற்றம் செய்யும்போது முப்பத்து மூன்று கோடி என செய்யப்பட்டுள்ளது ஆனால் கோடிக்கு பல பொருள்கள் உள்ளன


🌺 அதிதியின் புத்திரர்கள் ஆதித்யர்கள் பன்னிருவர்

🌺 ஈசன் படைத்த ருத்ரர்கள் பதினொருவர்

🌺 தர்மதேவதையின் மகன்கள் வசுக்கள் எட்டு பேர்

🌺 மற்றும் சூரியனின் மகன்களான அஸ்வினிதேவர்கள் இருவர்

{மன்வந்திரம் சிறு விளக்கம்

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம்

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல்

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்}

🌺 நாம் வாழும் இந்த மன்வந்திரத்திலேயே இந்த 33 பேர் ஆவர் இதே போல ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் இந்த தலைமை மாறும் அதாவது போன மன்வந்திரத்தில் ஐந்து கனதேவதைகள் முறையே அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் 8 பேர்கள் இருந்தனர் ஆனால் இந்த மன்வந்திரத்தில் இந்த 33 பேர்கள் ஆவர்

🌻 இவர்களை பற்றியும் மேலும் சில முக்கியமானவர்களை பற்றி தற்போது பார்ப்போம்


💐 சப்தரிஷிகள்
       🌼 ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் சப்தரிஷிகளின் பொறுப்பு இன்றியமையாதது ஆகும்
       🌼 முதல் மன்வந்திரத்தில் இவர்கள் பிரம்மாவின் குமாரர்களாக அவதரித்தனர் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தங்களின் தவத்தில் உயர்ந்தவர்கள் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாவர்
        🌼 உண்மையில் கடவுள்களான மும்மூர்த்திகள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்
       🌼 சப்தரிஷியாக ஆகவேண்டுமானால் ஒருவர் தவத்தில் சிறந்து விளங்கி பெரும் தவபலம் பெற்று பிரம்மரிஷியாக வேண்டும்
       🌼 இவர்கள் சிரஞ்சீவிகள் போல கல்பாந்த காலம் அதாவது கல்பகாலம் முடிந்தபின் வரும் பிரளயம் வரை இருப்பர்
       🌼 ஆனால் இவர்களுக்கு ஒரு மன்வந்திர காலம் மட்டுமே சப்தரிஷி பட்டம் மற்றும் முக்கிய பொறுப்புகள் இவ்வாறாக ஒவ்வொரு மன்வந்திரமும் சப்தரிஷிகள் மாறுவார்கள்
      🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் ஆகியோர் சப்தரிகளாவர்
       🌼 இனிவரும் அடுத்த மன்வந்திரத்தில் தீப்திமான், காலவர், பரசுராமர், கிருபர், அஸ்வத்தாமன் , பாரதம் எழுதிய வியாசர், ருஷிய சிருங்கர் ஆகியோர் சப்தரிஷிகளாவர்

👑 மனு
        🌺 மனுவே மன்வந்திரத்தின் அதிகாரியாவார் இவரே முதலில் படைக்கப்பட்ட மனிதன் ஆவார் மனுவின் வம்சமாதலால் நாம் மனிதர்கள் என அழைக்கப்படுகிறோம்
        🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் சூரியனின் மகனான சிரார்த்த தேவன் மனுவாவார்

👑 இந்திரன்
       🌺 இந்திரன் மூவுலகங்களுக்கும் அதிபதி ஆவார் தேவர்கள், சொர்க்கம் மற்றும் மூவுலங்களுக்கும் இவரே தலைவர்
       👑 பொதுவாக நூறு அசுவமேத யாகங்களை செய்தவர் இந்திர பதவியை அடைவர்
       🌺 மூவுலக அதிபதி என்பதால் இந்திரனை வெற்றிகொண்டு அந்த இடத்தை பிடிக்கவே அசுரர்கள் முயல்வார்கள்
       🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் அதிதியின் புதல்வரான புரந்தரன் இந்திரன் ஆவார் மேலும் அடுத்த மன்வந்திரத்திற்கு வாமனரால் பாதாள லோகத்திற்கு தள்ளப்பட்ட பலிச்சக்ரவர்த்தி இந்திரனாவார்

☀ ஆதித்யர்கள்
            ⛅ அதிதியின் புதல்வர்களாதலால் இவர்கள் ஆதித்யர்கள் என்றழைக்கப்படுகின்றனர்
            💧 இவர்கள் 12 பேரும் முறையே 12 மாதங்களுக்கு பொறுப்பாவார்கள் மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் சூரியனாய் இருப்பர்
            ⚡ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுள்ளனர் செடி வளர்வதிலிருந்து கர்ப்பத்தில் குழந்தை வளர்வது வரை இவர்களுக்கு பல வேலைகள் தரப்பட்டுள்ளனர்
            🌾 புரந்தரன், வருணன் முதலியோர் ஆதித்யர்களே இவர்களின் பொறுப்பு மற்றும் சக்திகளை விளக்க ஒவ்வொரு ஆதித்யருக்கும் ஒரு பதிவு தேவைப்படும் இங்கு நான் கூறியது மிகக்குறைவே

ருத்ரர்கள்
            🍃 இவர்களை பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டுள்ளது
            🌺 பிரம்மாவின் கோபத்தில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார் மேலும் பிரம்மாவின் உடலிலிருந்து ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற கதையும் உண்டு
            ☁ ஜந்து கர்மேந்திரங்களாகிய பேசுவது, கை (கையால் செய்யும் வேலைகள்), கால் (நடத்தல்), ஆசனவாய் மற்றும் உறுப்பு
            ❄ ஐந்து ஞானேந்திரங்களாகிய கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல்
            🌙 மற்றும் கர்மேந்திரமும் ஞானேந்திரமும் சேர்ந்ததாகிய யோசித்தல்
            🌋 இவை பதினொன்றையும் பதினொரு ருத்ரர்கள் கவனித்து கொள்வர்

🌌 வசுக்கள்
           🍀 தட்ச பிராஜிபதி தனது பத்து மகள்களை தர்மதேவதைக்கு மணமுடித்தார் அவர்களுக்கு பிறந்தவர்களே வசுக்கள் 8 பேர்
           🍁 இவர்கள் எண்மரும் முறையே பூமி, காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன், அண்டம் மற்றும் நட்சத்திரங்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுள்ளனர்
           🌺 இங்கு பீஷ்மரை பிறந்த பிரபாசன் எனும் வசுவின் புத்திரரே தேவசிற்பி விஸ்வகர்மா ஆவார்
           🌺 மன்மதனும் தர்மதேவதையின் புத்திரனே

👑 அஷ்டதிக் பாலகர்கள்
           🎆 குபேரன், எமன், இந்திரன், வருணன், ஈசானன், அக்னி, வாயு, நிருதி ஆகிய இவர்கள் எண்மரும் அஷ்டதிக் பாலகராவர்
           🌴 இவர்கள் பிரபஞ்சத்தின் எட்டு திசைக்கும் காவலராவர்

🌹 நவகிரகங்கள்
           🍃 கசியப்பரின் புதல்வரான சூரியன்
           🌼 அத்ரி மஹரிஷியின் புதல்வரான சந்திரன்
           ❄ ஈசனின் வியர்வை துளியில் பிறந்த செவ்வாய்
           🌺 சந்திரனின் புதல்வரான புதன்
           🌺 ஆங்கிரச மஹரிஷியின் புதல்வரும் தேவகுருவுமாகிய பிரகஸ்பதி
           🌺 பிருகுமுனிவரின் புதல்வரும் அசுரகுருவான சுக்ராச்சாரியார்
           🌾 சூரிய புதல்வனும் ஈசனின் சீடனுமான சனீஸ்வரர்
           🍁 அமிர்தம் உண்டவர்களும் அசுர கிரகங்களுமான ராகு-கேது
           👑 இவர்கள் ஒன்பது பேரும் நவகிரகங்களாவர் ஒரு மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்றப்படி அவர்களுக்கு பலன்களை வழங்குகின்றனர்

🌼 கந்தர்வர்கள் - இவர்கள் கசியப்பர் மற்றும் அரிஷ்டா தேவிக்கு பிறந்தவர்கள் இவர்கள் தேவர்களுக்கு உதவியாளர்களாக கருதப்படுகின்றனர்

🌼 அசுரர்கள் - இவர்களும் தேவர்களுக்கு இணையான சக்தியோடு பிறந்தவர்களே ஆனாலும் எண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்
இவர்கள் இராவணனின் தாத்தாவான புலஸ்தியரின் வம்சத்தில் வந்தவர்கள்

🌼 தைத்தியர்கள் - இவர்களும் அசுரர்கள் போலவே ஆனால் கசியப்பருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் திதியின் மைந்தர்களாதலால் இவர்களின் வம்சம் தைத்தியர்கள் என்றழைக்கப்படுகிறது

🌼 தானவர்கள் - கசியப்பருக்கும் தனுவிற்கும் பிறந்தவர்கள் தனுவின் மைந்தர்களாதலால் தானவர்கள் என இவர்களின் வம்சம் அழைக்கப்படுகிறது

🌼 யட்சர்கள் - இவர்கள் பூமியில் உள்ள வளங்களை காப்பவராக கருதப்படுக்கின்றனர் குபேரனும் யட்சரே இவரே யட்சர்களின் தலைவராவார்

🌼 ராட்ஷசர்கள் - பூதங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்

👑 அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யட்சர்கள், இராட்ஷசர்கள் இவர்களை பொறுத்தவரை அனைவருமே மோசமானவர்கள் என கூறமுடியாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் அதாவது நல்லவரும் இவர்களில் உண்டு

🌺 கிம்புருஷர் - உடலின் மேல்புறம் சிங்கமாகவும் கீழே மனிதனாகவும் இருப்பவர்கள் (நரசிம்மர் போல)

🌺 கின்னரர்கள் - உடலின் மேற்புறம் மனிதனாகவும் கீழே குதிரையாகவும் இருப்பவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவர்கள் அனைவருக்கும் (கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர் தவிர) தனித்தனி லோகங்கள் உண்டு இவர்கள் மும்மூர்த்திகளின் ஆணையின் கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்ட செயல்களை செய்கின்றனர்

ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே அதாவது தேவர்களின் தலைவன் இந்திரன் முதல் கந்தர்வர்கள் வரை புவியில் மனிதர்களாய் பிறந்தவர்களே

எனில் இந்நிலையை இவர்கள் எவ்வாறு எட்டினர் என்ற கேள்வி எழுகிறதல்லவா

இவர்கள் அனைவருமே தங்கள் செய்த புண்ணியத்தாலேயே இந்த நிலையை எட்டினர் மேலும் இதன்பிறகு இறைவனிடம் சேர்வர்

இதை பல இடங்களில் அவர்களே கூட ஒத்துகொண்டுள்ளனர்

அனைத்தும் கர்மவினையே

நரகத்தில் சேர்ப்பதும் கர்மாவே
இந்திரனாய் ஆக்குவதும் கர்மாவே