காசி இளவரசிகள் மூவரையும் தனது தம்பி விசித்திர வீரியனுக்காக கடத்தி வருகிறார் பீஷ்மர் இதில் மூத்தவளான அம்பை தான் மனதால் சால்வனை வரித்தவள் என்று கூறியதால் அவளை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார் ஆனால் பீஷ்மர் கடத்தி சென்றதால் அவளை ஏற்க மறுக்கிறார் சால்வன்
இதனால் தன் வாழ்க்கை நாசமானதற்கு காரணம் பீஷ்மரே என்றென்னும் அம்பை கடும்தவம் செய்து முருகப்பெருமானை மகிழ்விக்கும் அம்பை தேவலோகத்தின் வாடாத மலர்மலையை வரமாக பெறுகிறார் அம்மாலை அணிபவர் பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவர்
ஐந்து வருடகாலம் பல தேசம் சென்றும் பீஷ்மரின் மேல் கொண்ட பயத்தினால் எவரும் அந்த மாலையை ஏற்க மறுக்கின்றனர் இதனால் அந்த மாலையை துருபதனின் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு செல்கிறார்
இதனால் மன உளைச்சல் அடையும் அவள் தவமுனிகளிடம் பேசுகையில் அம்பையின் தாயுடைய தந்தையான ஹோத்திரவாகனர் வருகிறார் ராஜ ரிஷியான இவர் பரசுராமரின் நெருங்கிய நண்பராவார் அவரே அம்பையை ராமரிடம் சரணடைய சொல்கிறார்
அந்நேரத்தில் ராமருடன் வசிப்பவரான அகிருதவ்ரணர் வருகிறார் அவரிடத்தில் இதை உரைக்கும் ஹோத்திரவாகனர் பரசுராமர் பற்றி கேட்கையில் அவர் சிறிது நேரத்தில் தம்மை காண இங்கே வருவதாய் கூறுகிறார்
அவ்வாறு வரும் ராமரிடம் சரணடைகிறாள் அம்பை தனது நண்பனுக்கு நீ எவ்வாறோ அவ்வாறே எனக்கும் மகளிள் மகளாவாய் என்கிறார் ராமர் இதனால் பீஷ்மருக்கு அம்பையை ஏற்குமாறு உரைக்கிறார் இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்ய நேரிடும் என்கிறார்
ஆனால் பீஷ்மர் தனது பிரக்ஞையை மீற முடியாது என்கிறார் இதனால் குருசேத்திரத்தில் இருவருக்கும் யுத்தம் மூள்கிறது
பரசுராமரிடம் ஆசிபெற்று யுத்தத்தை தொடங்குகிறார் பீஷ்மர் ஆனால் தான் ரதத்தில் இருப்பதாகவும் ராமர் தரையில் இருப்பதாகவும் இது எவ்வாறு சரியாகும் என வினவுகிறார்
உடன் ராமர் பீஷ்ம எனக்கு பூமியானது ரதம், வேதங்களே குதிரை, வாயுவே சாரதி, காயத்ரி,சாவித்ரி,சரஸ்வதி ஆகியோரே கவசம் என்று கூறி பீஷ்மர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரதத்தில் ஏறி கவசம் பூண்டவராக இருக்கிறார் அவருடன் இருப்பவரும் வேதங்களை அறிந்தவரான அகிருதவ்ணர் சாரதியாக வருகிறார்
பீஷ்மருக்கு அஸ்வ சாஸ்திரம் நன்கறிந்த சாரதியை கொண்டு இருந்தார் யுத்தம் தொடங்கியது
ஒருவர் விஷ்ணுவின் அவதாரமும், சத்ரிய வம்சத்தையே வேரறுத்து, ஆயிரம் கைகள் உடையவனும் இராவணனையே தோற்கடித்தவனுமான கார்த்தவீர்யார்ஜுனரை கொன்றவரான பரசுராமர்
மற்றொருவர் அஷ்ட வசுக்களில் ஒருவரும் சாபத்தால் பூமியில் பிறந்தவரும் பரசுராமரின் அன்பு சீடனுமான பீஷ்மர்
கங்கை சந்தனுவிடம் பரசுராமருக்கு தெரிந்த அஸ்திரம் அனைத்தும் நமது மகனுக்கும் தெரியும் என்கிறார்
இதனால் இதைக்காண தேவர்களும் கூடுகின்றனர் இருவரும் மாவீரர்கள் என்பதால் யுத்தம் பற்பல சஸ்திரங்களில் ஆரம்பமாகி திவ்ய அஸ்திரங்களில் தொடர்கிறது
இருவரும் தலா ஒருமுறை மூர்ச்சையடைகின்றனர் மற்றும் தேரிலிருந்து விழுகின்றனர் பீஷ்மரின் சாரதியை கொல்கிறார் பரசுராமர் இதனால் கங்கையே சாரதியாகுகிறார்
இவ்வாறாக யுத்தமானது 23 நாட்கள் நடைபெறுகிறது ஒவ்வொரு நாளும் பீஷ்மர் பரசுராமரிடம் ஆசி பெற்று யுத்தத்தை தொடங்குகிறார் 22 ம் நாள் இரவு பீஷ்மருடைய கனவில் வேதியர் வடிவில் வரும் வசுக்கள் பிரவாபஸ்திரத்தை பற்றி கூறி இதை பற்றி முன் ஜென்மத்தில் உனக்கு தெரியும் பிரம்மாவை தேவதையாக கொண்ட இது ராமரை தூங்க வைத்துவிடும்
சாஸ்திரத்தில் யுத்தத்தின் போது தூங்கியவன் மரணத்தை அடைந்தவனாக கருதப்படுகிறான் இந்த அஸ்திரத்தை வேறெவரும் அறியார் என்று கூறுகின்றனர் பிறகு பீஷ்மர் தூக்கத்தில் இருந்து எழுகிறார்
வசுக்கள் இவ்வாறு செய்தது தவறானலும் யுத்தத்தில் ஒருவர் வென்றே ஆக வேண்டும் இல்லையேல் இவர்களுக்கான சண்டையில் சிருஷ்டியே பாதிக்கப்படும் எப்படியும் ஒருவர் தோற்கும் வரையோ இல்லை சாகும் வரையோ யுத்தம் தொடரும் இதனால் யுத்தத்தை நிறுத்துவதே சரியாகும்
அடுத்த நாள் யுத்தம் தொடங்குகிறது ராமர் பிரம்மாஸ்திரத்தை விடுகிறார் இதனால் பீஷ்மரும் அவ்வாறே பிரம்மாஸ்திரத்தை விடுகிறார் இருவரின் பிரம்மாஸ்திரமும் வானில் எதிர்க்கின்றனர்
இதனால் சிருஷ்டியே பாதிப்படைகிறது அந்த நேரம் பீஷ்மருக்கு பிரவாபஸ்திரத்தின் மந்திரம் நினைவில் வந்து அதை தொடுக்க ஆயத்தமாகிறார் ஆனால் நாரதர் தடுக்கிறார் குருவையே அவமதிக்கும் இச்செயலை செய்யாதே பீஷ்மா என்று இதனால் அந்த அஸ்திரத்தை திரும்பப்பெறுகிறார் பிறகு இருவரும் சிருஷ்டியின் நலனுக்காக தங்களின் பிரம்மாஸ்திரங்களை திரும்ப பெறுகின்றனர்
பீஷ்மர் அஸ்திரத்தை திரும்ப அழைத்ததை கண்டு நான் தோற்றேன் என்கிறார் பரசுராமர்.
இதைக்கண்ட தேவர்கள் பரசுராமரிடம் பீஷ்மரின் பிறப்பு பலகாரணங்களுக்காக இருக்கிறது பரசுராமரே ஆதலால் இந்த சண்டையை விட்டுவிடுங்கள் என்கின்றனர் மேலும் பரசுராமரே தாம்புரிந்த யுத்தங்கள் முடிவடைய வேண்டும் இனி தாம் எவருடனும் யுத்தம் புரிய வேண்டாம் என்கின்றனர் மேலும் தாம் தர்மம் காக்கவே ஆயுதம் ஏந்தினீர் தற்போது தாம் சாந்தம் கொள்ள வேண்டும் என்கின்றனர்
இதனால் பரசுராமர் தன்னால் பீஷ்மனை தோற்கடிக்க இயலவில்லை என அம்பையிடம் கூறுகிறார் பரசுராமரிடம் ஆசிப்பெற்று தவம் செய்ய செல்கிறாள் அம்பை
ஆறு மாதம் ஆகார இல்லாமலும் பிறகு ஒரு வருடம் யமுனை ஜலத்தினுள்ளும் பிறகு காய்ந்த இலையை மட்டும் உண்டு கட்டை விரலில் நின்று ஒரு வருடம் என 12 வருடங்கள் தவம் செய்கிறாள் ஒரு முறை 8 மாதம் வரையிலும் ஒரு முறை பத்து மாதம் வரையிலும் கூட நீரை கூட அருந்தாமல் தவம் இருந்தாள்
இதனால் காட்சியளித்த ஈசன் உன்னால் பீஷ்மன் உயிர் பிரியும் என வரம் அளிக்கிறார் ஆனால் அது அடுத்த ஜென்மம் என்கிறார் இதனால் உடனே தீ மூட்டி உயிர்விடுகிறாள்
பிறகு துருபதனுக்கு சிகண்டினி என்ற பெண்ணாக பிறக்கும் இவர் தசார்ணராஜனுக்காக ஆண்மையை பெற விரும்புகிறார் அப்போது குபேரனின் வேலையாலான ஸ்தூர்ணனை சந்திக்கிறார்
இருவரும் ஒப்பந்தம் செய்கின்றனர் அதுப்படி ஸ்தூர்ணன் அவளுக்கு தனது ஆண்மையை கொடுத்து அவள் பெண்மையை அவன் அடைவான் தசார்ணராஜன் சென்றபிறகு அவள் அங்கு வந்து மறுபடியும் பெண்ணாவாள் இதுவே அந்த ஒப்பந்தம்
ஆனால் இதை அறிந்த குபேரன் ஸ்தூர்ணனை சபிக்கிறான் அதாவது இனி சிகண்டினி சாகும்வரை ஸ்தூர்ணனால் ஆணாக மாறமுடியாது இதுவே அந்த சாபம் இந்த சாபத்தால் சிகண்டினி கடைசி வரை ஆணாகிறாள்
சிகண்டினி என்ற பெயர் சிகண்டியாகிறது பிறகு துரோணரிடம் கல்வி கற்கும் சிகண்டி யுத்தத்தில் பாண்டவர் சேனையில் சேர்ந்து பீஷ்மரின் மரணத்திற்கு காரணமாகிறாள்
No comments:
Post a Comment