Monday, April 13, 2020

பாசுபதாஸ்திரம் பெற்று இராவணனையே நடுங்க வைத்த பாண்டியன்



கவிஞர் காளிதாசர் பற்றி நம்மில் பலரும் அறிவோம் அவரின் படைப்புகள் இன்றும் அனைவராலும் போற்றப்படுகின்றனர்
அவ்வாறு அவரது படைப்புகளில் இரகு வம்சம் முக்கியமானது ஆகும்
ஸ்ரீ ராம பிரானின் வம்சமான ரகு வம்சத்தவர்களின் வரலாற்றை சுருக்கமாக கூறுவதே காளிதாசர் இயற்றிய இரகு வம்சமாகும்
இங்கு ஆறாம் சருக்கத்தில் விதர்ப்ப தேச இளவரசியும் தசரத மன்னனின் தாயான இந்துமதியின் சுயம்வரம் பற்றி கூறியுள்ளார் காளிதாசர்
அந்த சுயம்வரத்தில் இந்திமதி ஒவ்வொரு மன்னனின் முன் செல்லும்போதும் அந்த மன்னரை பற்றி உரைக்கிறாள் அவளது பணியாளான சுநந்தை
அவ்வாறு அங்கு சுயம்வரத்தில் பங்கு பெற்றவர்களில் பாண்டிய மன்னனும் ஒருவராவார் அவ்வாறு பாண்டிய மன்னனின் அருகில் வரும்போது அவரின் புகழை உரைக்கிறாள் சுநந்தை
" ஓ தோழி தேவர்களுக்கு சமமான இந்த பாண்டிய மன்னனை பார்
பூணூளிலிருந்து தொங்கும் சிறந்த முத்து மாலை அணிந்தவனும் மலய பர்வதத்தில் விளைந்த சந்தனத்தை பூசியவனான இந்த மன்னன் அருவிகளால் நிறைந்த மலையை போல தென்படுகின்றான்
கடலை முழுவதும் குடித்தவரும்
விந்திய மலையின் வளர்ச்சியை தடுத்தவருமான அகத்திய மாமுனிகள் இம்மன்னன் மீது மிகுந்த பற்றும், அனுக்கிரகமும் கொண்டவராவார்
சிவபெருமானை மகிழ்வித்து பாசுபதாஸ்திரம் பெற்றவனான இந்த பாண்டிய மன்னன் தனது ஜனஸ்தானத்தை (தண்டகாரண்ய வனம் )* அழித்துவிடுவானோ என்றென்னிய இராவணன் பாண்டியனுடன் சமாதானம் செய்தபின்னே இந்திரனை வெல்ல புறப்பட்டான்
(அதாவது இவனது வீரம் இராவணனே அச்சம்கொள்ளும் வகையில் உள்ளது
* தண்ட காரண்ய வனம் பாரத தேசத்தில் இராவணனிற்கு சொந்தமான இடமாகும் )
இரத்தினங்களடங்கிய கடலுடைய இந்த தென்திசை மன்னனை நீ மணந்தால் இவனது பட்டத்து இராணியாகலாம்
பல அற்புத செடிகொடிகளுடைய சிறந்த பர்வதமான மலய பர்வதத்தில் நீ சுகமாக வாழலாம்
கருநிறமுடைய இவ்விளவரசனுடன்
பசுமையான நிறமுடைய நீ கைகோர்த்தால் மேகத்துடன் இருக்கும் மின்னல் போல் பிரகாசிப்பாய் " என்று முடிக்கிறாள் சுநந்தை
மேற்கூறியவை அமைந்தது சமஸ்கிருத காவியமான ரகுவம்சத்தில் அமைந்தவை
இந்த சுயம்வரத்தில் விதர்ப்பதேச இளவரசி இந்துமதி
ரகுவம்சத்தின் அஜமன்னனை தேர்ந்தெடுக்கிறார்
அந்த அஜமன்னனின் மகனே தசரத சக்ரவர்த்தி
தசரத சக்ரவர்த்திக்கு வாரிசு இல்லாமல் பல ஆயிர வருடத்திற்கு பின்னரே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரிக்கிறார்
பாண்டியன் என்பது வேறுப்பெயர் என்று மறுத்தாலும் மலய பர்வதத்தை மறுக்க இயலாது
இராமாயண காலத்தில் இராமேஸ்வர மன்னனுக்கு இராமபிரான் பரிசளித்த இராமபாணம்,
உத்திரகோசமங்கை மீது திப்புசுல்தான் படையெடுத்த போது உதவியதால் புதுக்கோட்டை மன்னனுக்கு அளிக்கப்பட்டு இன்றும் உள்ளது
தென்திசை சென்ற வானர படையின் விவரங்களும்
ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின்போது அங்கு பங்கேற்ற தர்மபிரம்மாவாகிய சோழ ராஜன் பற்றிய குறிப்பும் இன்று காணலாம்
அர்ஜுனனின் மனைவியான சித்ராங்கதை பற்றியும்
பாண்டவ தரப்பிற்கு ஆதரவு அளித்த பாண்டியன் பற்றியும் நாம் அறிவோம்
இவ்வாறே இராமாயண மஹாபாரத காலத்தில் வரும் சேர, சோழ, பாண்டிர்களை பற்றி எவ்வளவோ இன்னும் கூறலாம் ஆனால் மேற்கூறிய பதிவு அதற்கு முன்னும் இருந்த பாண்டியனின் திறனை விவரிப்பது ஆகும்
🙏🙏🙏
ஆதாரம் (தமிழில்)  :
Proof in most authentic English translation :

1 comment:

  1. புராணங்களில் குறும்பர்கள் பற்றி தகவல் இருந்தால் பதிவிடுங்கள் சகோ.....

    ReplyDelete