Friday, September 3, 2021

#பிரம்மசிரஸ்களின்_நாயகன்_பீபத்சு....

 


     🤔அதென்ன பிரம்மசிரஸ் 

    👤அதாவது சிரஸ் என்றால் தலை 

     👤பிரம்மசிரஸ் - பரப்பிரம்மனின் தலையை போல அழிக்கும் சக்தியை கொண்ட அஸ்திரம் அனைத்துமே இந்த வகையை சேர்ந்தது தான் ..

    🌏அதாவது முழு அண்டத்தையும் #கண்ணிமைக்கும் நேரத்தில் அழிக்கவல்ல அஸ்திரங்கள் .

     🙏துரோணர் கடும்தவத்திற்கு பிறகு இதை அகஸ்தியரிடம் இருந்து பெற்றார்.
     ❤அர்ஜுனனுக்கு விரும்பி கொடுத்ததை கண்ட அஸ்வதாமனும் கேட்க அஸ்வதாமனுக்கும் கொடுத்தருளினார் ....
✨✨✨✨✨✨✨✨✨✨✨
🔱 #ஈசனிடம்_பெற்ற_பிரம்மசிரஸ்கள்......
     💘இருமுறை ஈசனை சந்தித்து வரமாக அஸ்திரம் பெறுகிறார் அர்ஜுனர்.. 

     💘ஒன்று #வனவாசத்தில் தவமிருந்து கிராத வடிவில் வந்த ஈசனை மகிழ்வித்து பெறுவது

     💘மற்றொன்று அபிமன்யு கொல்லப்பட்டபின் ஜெயத்ரதனை கொல்வேன் என சபதம் எடுத்த இரவு கிருஷ்ணனுடன் #கைலாயம் சென்று வாங்குவது .

#அர்ஜுனன்_மறந்தாரா???  
       🏹அர்ஜுனர் பாசுபதத்தை மறந்தார் என எங்கும் கூறவில்லை. 
      🏹மாறாக நல்ல #நினைவுத்திறனை கொண்டவன் என்ற பாராட்டே உள்ளது .
  
      🏹துரோணர் சிறுவயதில் அளித்த பிரம்மசிரஸை சரியாக விடுத்து திரும்ப பெற்றவர்.
      🏹 ஈசன் அளித்த அஸ்திரத்தை எப்படி மறப்பார். 
ஒரு வேளை மறந்தார் என்றால் ஈசன் அளித்த வரமே #பொய்யாகிவிடும்.

🏹 #பாசுபதத்தின்_இருவகை...

      🏹இரண்டு பாசுபதம் எனில் இரண்டிற்கும் வித்தியாசம் என்ன ???

    🌺யது வம்சத்தில் பிறந்தவர்கள் எப்படி யாதவர்களோ !!
    🌺அவ்வாறே #பசுபதினாதரின் அஸ்திரம் பாசுபதம் என்ற பெயர் பெறும் .

#யுத்த_காலத்தில்_பெற்றது....

     🏹13-ம் நாள் இரவில் அர்ஜுனன் பெற்றது தான் ஈசனின் தனிப்பட்ட அஸ்திரமான பாசுபதம் .

  #இதன்_தனித்தன்மை  :
     💜அசுரர்களை அழித்தபின் வில்லுடன் சேர்த்த இதை #அமிர்தம் நிறைந்த குளத்தில் எறிகிறார் ஈசன் 

      🐍அஸ்திரமானாலும் இதன் ரூபம் #1000 தலைகளை கொண்ட நாகமாகும். அர்ஜுனன் பார்க்கும்போது அதே ரூபத்தில் இருந்தது பின் அஸ்திர ரூபமானது .

      🐍அவ்வாறே #உபமன்யு ரிஷிக்கு ஈசன் காட்சி அளித்தபோதும் 1000 தலைகளை கொண்டதாக தான் பாசுபதம் காட்சியளித்தது .

     ☝சரி இது தான் ஈசனின் தனிப்பட்ட அஸ்திரம் என்றால், வனபர்வத்தில் அர்ஜுனன் தவமிருந்து கிராத ரூபத்தில் ஈசன் தோன்றி அளித்தது என்ன அஸ்திரம்...?

🏹#வனவாசத்தில்_பெற்றது......
     💙பசுபதினாதரின் அஸ்திரம் ஆதலால் அதுவும் பாசுபதம் என்ற பெயர் கொண்டது தான் ஆனால் இதற்கு #ரௌத்திரம் என்ற பெயரும் உண்டு .
     💙ஈசனுக்கு பிடித்த அஸ்திரமாகும் ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிப்பதும் இதுவே 

      💙ஆனால் பாற்கடலில் அமிர்தத்திற்கு பின் எழுந்ததே இந்த அஸ்திரம். தன் தவசக்தியால் இதை ஈசன் தன்வசப்படுத்தினார்.

From Bori..
      "It is known as Brahmashira and
Rudra obtained it after great austerities. That terrible weapon arose with the ambrosia and Savyasachi has now obtained it."

( Vana parva 89 Sloka 10,11 )
  
   👆ஆனால் இதுவும் பிரம்மசிரஸ் வகையை சேர்ந்தது தான் .
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

     🙏அர்ஜுனன் பிரம்ம சிர ஆயுதத்தை வரமாக கேட்கும்போது #உற்பத்தி_செய்யும் என கூறினார் .(அஸ்வத்தாமனின் நாராயணாஸ்திரம் போல)

     ♠ஹிரண்யபுரத்தை அழிக்க இதை ஏவும்போது வானில் துவங்கி தேவர்கள், ஆவிகள் மற்றும் அசுரர்கள் வரை வெளிப்பட்டு அனைவரையும் அழித்து பின் மறைகின்றனர். 

      ♠எனில் இரண்டுமே அதாவது #அற்புத_ஆயுதங்கள் மற்றும் #அழிக்கும்_ஜீவன்கள் இரண்டுமே இவ்வஸ்திரத்தினால் சாத்தியம் ...

      🐍பாசுபதத்திற்கு 1000 தலை கொண்ட நாக ரூபம் இருப்பது போல இவ்வஸ்திரத்திற்கும் விஸ்வரூபம் உண்டு .

       ♣மூன்று தலைகள், ஒன்பது கண்கள், 6 கரங்கள் கொண்ட ரூபமே இந்த அஸ்திரம் .

(கிட்டதட்ட பாணாசுரன் யுத்தத்தில் 
கிருஷ்ணன் மீது ஈசன் விட்ட #சிவஜ்வரத்தின் ரூபமும் இது தான்
      🌟ஈசனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த முழு யுத்தத்தை காண ....👇👇👇👇
http://seetharaman007.blogspot.com/2017/06/100.html?m=1

      🔥 ஈசனின் கருத்துப்படி இந்திரன், யமன் கூட இந்த அஸ்திரத்தை அறியமாட்டார்கள். குறைந்த பலம் கொண்ட எதிரியின் மீது இதை விட்டால் முழு அண்டத்தையும் எரித்துவிடும் ...

      🔥இவ்வளவு ஏன் அர்ஜுனன் அதை பெற்றபின்னர் அவனிடம் இவ்வஸ்திரம் சேர்ந்ததுக்கே உலகம் #நடுங்கியது. தேவர்களும் தானவர்களும் கூட அஞ்சினர் .

From Bori.........
    At that, the entire earth, with its
mountains, forests, trees, oceans, regions of groves, villages, cities and towns, began to
tremble. When the moment came, the sounds of thousands of conch shells, drums and
kettledrums were heard. A great whirlwind occurred. The gods and the demons saw the
embodied form of the blazing and terrible weapon by the side of the immensely energetic Pandava.

Vana parva 41 sloka 20-22.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡   மேலே கூறப்பட்டுள்ள தகவல்களின் படி.....
       💘துரோணர் அளித்த பிரம்மசிரஸோடு இவ்விரண்டையும் சேர்த்து மொத்தம் #மூன்று பிரம்மசிரஸ் வகையை அறிந்தவர் அர்ஜூனரே ஆவார் .

     💘ஏற்கனவே மும்மூர்த்திகளிடம் அர்ஜுனர் பெற்ற அனைத்து அஸ்திரங்களையும் முன்பு பார்த்தோம்.. 👇👇👇👇👇👇

https://www.facebook.com/ArjunanTheGreatestWarrior/videos/271142677595442/

#சில_தவறான_புரிதல்கள் ………

1️⃣துரோணரும் பாசுபதம் விடுத்தாரா???? ...
      🔱முதல் விசயம் ஈசனே அர்ஜுனனிடம் """இந்திரனோ யமனோ இதை அறியாத போது #மனிதர்கள் எப்படி அறிவார்கள்""" என உரைத்தார்.      
      🏹 அர்ஜுனனும் பின் இதை உத்யோக பர்வத்தில் உறுதி படுத்தினார் 

👉இரண்டு இருவருக்கும் நடக்கும் போரில் எல்லாம் தாண்டியும் முடியவில்லை என்றாலே  பிரம்மாஸ்திரம் மற்றும் பிரம்மசிரஸ் போன்ற பெரும் அஸ்திரங்களை போரில் பயன்படுத்துவார்கள்.

      🍁ஆனால் இப்போரில் துரோணர் ஐந்திரம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்யம் ஆகிய ஆயுதங்களோடு ஒன்றாகவே பயன்படுத்தினார் .

From Bori....
      Drona could not establish his
superiority over Pandava in any way. The one who was skilled about the motions of
weapons then invoked special weapons—aindra, pashupata, tvashtra, vayavya and
varuna. However, as soon as these were released from Drona’s bow, Dhananjaya
destroyed them. 

Drona parva 163 27 28

👉மூன்று இந்த அஸ்திரம் வெளிப்பட்டவுடனே  அதனை அர்ஜுனன் அழிக்கிறாரே தவிர வேறு எந்த பெரிய அஸ்திரத்தையும் உபயோகிக்கவும் இல்லை எந்த மாற்றமும் #இயற்கையில் வரவும் இல்லை .

      👆எனவே துரோணர் விடுத்த இந்த ஆயுதம் பாசுபதம் என்ற பெயரை கொண்ட ஒரு வகை ஆயுதம் தான் ஈசனின் அஸ்திரம் இல்லை 

2️⃣ரௌத்திரம் பற்றியது....

     🎯கண்ணன் மேன்மையான ஆயுதங்களை உபயோகிக்க சொன்னதும், அர்ஜுனன் கர்ணன் மீது ரௌத்திர அஸ்திரத்தை விட வில்லில் இணைத்த போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் புதைகிறது. இதனால் அர்ஜுனர் அதை திரும்ப பெற்றார்.

From Bori.....
     Kiriti united this with roudrastra and wished to shoot it. But, in that great battle, the earth swallowed up one of the wheels of Radheya’s chariot.

(karna parva 66 sloka 59)

    🎯அர்ஜுனன் ஹிரண்யபுரத்தின் மீது ஏவியபோது கண்ட ரூபம் இங்கு காணப்படவில்லை.

    🎯அவ்வாறே இதை மனிதர்களின் மீது ஏவக்கூடாது அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டால் ஒழிய இதை உபயோகிக்கக்கூடாது என்பது ஈசனே கூறியது.

From Bori....
    Mahadeva told me, ‘This should never be used against humans. O
Dhananjaya! This powerful weapon should only be used if you are hard-pressed

( Vana parva 163 sloka 49,50)

     😘உண்மையில் அர்ஜுனன் 70 % க்கு மேலான அஸ்திரங்கள் #உபயோகிக்கவே இல்லை 
வஜ்ரம், வைஷ்ணவம் ஏன் துரோணர் அளித்த பிரம்மசிரஸ் கூட இருக்கையில் இவ்வஸ்திரத்தை அர்ஜுனர் நிச்சயம் விடுத்து இருக்க மாட்டார் .

       ♐பிரம்மாஸ்த்திர பயன்பாட்டிற்கு பின்னும் மேன்மையான அஸ்திரத்தை பயன்படுத்து என கிருஷ்ணன் கூறியதால் இது ஒரு வேளை #ஏகதச_ருத்ரர்களின் ஆயுதமாக இருக்க வேண்டும் மாறாக அர்ஜுனன் ஈசனிடம் பெற்ற அஸ்திரமாக இருக்க முடியாது.

      🙏ஏனென்றால் இந்திர லோகத்தில் அர்ஜுனன் ருத்ரர்களையும் சந்திக்கிறார் ...........

From Bori....
    On Indra’s command, Partha travelled along it and was
praised in every direction. The Sadhya, Vishvas,Maruts, Ashvins, Adityas, Vasus, Rudras, unblemished brahmarshis, many rajarshis, the kings led by Dilipa,Tumburu,Narada and the gandharvas Haha and Huhu were there.The descendant of the Kuru lineage showed homage to all of them in the appropriate manner.
( vana parva 44 sloka 12-15)  
( முழு பதிவு விரைவில்)...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ☝ஆனால் மேல் குறிப்பிட்ட அஸ்திரங்களை தனது கொள்கையில் தவறாத அர்ஜுனன் போரில்  உபயோகிக்கவில்லை .

    🏹அஸ்வதாமனின் பிரம்மசிரஸை தடுக்க கிருஷ்ணனின் சொல்லின்படி தனது பிரம்மசிரஸை விடுகிறார் அர்ஜுனன்.
 
    💘வியாசரின் ஒரே சொல்லுக்காக அஸ்வதாமன் தனது அஸ்திரத்தை திருப்பி அழைக்க முரண்டுபிடித்தாலும்  பாண்டவர்களின் மரணத்தை பொருட்படுத்தாமல் முதல் ஆளாக தனது அஸ்திரத்தை திருப்பி அழைத்தார் தனஞ்சயன்.

     💪பிரம்மசிரஸை திரும்ப பெறுவது இந்திரனாலும் முடியாத காரியம்.
      😍ஆனால் தான் பின்பற்றிய #பிரம்மசரிய விரதத்தால் அர்ஜுனனால் திரும்ப பெற முடிந்தது என அனைவருமே அவனை போற்றுகின்றனர் .

     😍எனில் தன் உயிரை பணயம் வைத்து வியாசர் மற்றும் நாரதரின் சொல்லுக்காக பிரம்மசிரஸை திருப்பி அழைத்தார் அர்ஜுனன்

♣இதை கண்ட வியாசர் ....
        🏹"""அர்ஜுனன் பெரும் ஆபத்தான சூழ்நிலையிலும் இதை உபயோகிக்கவில்லை.
    தற்போதும் உன் அழிவிற்காக அவன் பயன்படுத்தவில்லை

      🏹 அர்ஜுனனால் உன் ஆயுதத்தை கலங்கடிக்க முடியும் ஆனாலும் #உயிரினங்களின்_நன்மை கருதி அவன் தன் ஆயுதத்தை திருப்பியழைத்தான் அவ்வாறே நீயும் உன் ஆயுதத்தை திருப்புவாய்'""" என்கிறார் 

     🤰🏻ஆனால் திருப்பமுடியாத அஸ்வதாமனின் அஸ்திரம் உத்தரையின் கர்ப்பத்தில் விழுகிறது .

     💥வஜ்ரம் உருவாக காரணமான ததிசீ முனிவரின் சக்தியிலிருந்தும் ஒரு பிரம்மசிரஸ் உருவாகியது என்றும் உள்ளது .
(சிவமஹா புராணம் மற்றும் ஸ்காந்த புராணத்தின் படி) ஆனால் அதன்பின் என்னவானது எனத்தெரியவில்லை ..

    💥இவையில்லாமல் பிரம்மசிரஸ்களில் மிச்சம் இருப்பது நாராயணாஸ்திரம் மட்டும் தான் .

     😍நாராயணனை கூட்டாளியாக கொண்ட நரனின் அவதரிப்பான அர்ஜுனனுக்கு  #நாராயணாஸ்திரம் பெறுவது ஒரு பொருட்டல்ல .

     💘ஒவ்வொரு விசயமும் இங்கு மூல நூலை ஆராய்ந்து இடைசொருகலை நீக்கி வெளியிட்ட Bori Critical edition வைத்தே சொல்லப்படுகிறது.

      💘இருப்பினும் சில முக்கிய விஷயங்களுக்கு மட்டும் தெளிவிற்காக இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment