Monday, May 17, 2021

பாகுபாடற்ற பாரதம் முடிவுரை

 #பாகுபாடற்ற_பாரதம் முடிவுரை




💐 தேவையானவை அனைத்தும் சொல்லப்பட்டது என்றே நினைக்கின்றேன்.

👑 மஹாபாரதம் ஒரு புண்ணிய காவியம் மட்டுமில்லாமல் வாழ்வியல் முறைகளைக் கூறுவதிலும் தன்னிகரற்ற ஒன்றாகும்.

இங்கு ஒரே மனநிலை, ஒரே கொள்கை கொண்டவர் என எவரும் இல்லை.

தெளிவாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாதை, தங்களுக்கென ஒரு கொள்கை அமைத்து வாழ்ந்து அவ்வழியில் செல்வதால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதை சொல்லாமல் காட்டிவிட்டு செல்கின்றனர்.

🌻 ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியிலும் பாரதத்தை பார்த்து அதில் வரும் பிரச்சனைகள் அவர்களின் நிலைகள் குறித்து ஆராய்ந்து படிப்பது ஒருவருக்கு வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும்.

🌺 காலத்தின் போக்கில் மஹாபாரதத்திலும் வர்ண பாகுபாடு என்ற கரை படிந்தது . கதைகளை சிறப்பாக்க களத்தில் வில்லனை சேர்ப்பதை போல சில நிகழ்வுகளில் வர்ணத்தை திணித்து பேசினர். அதில் முக்கிய பங்கை தொலைகாட்சி தொடர்கள் வகித்தன!

அதை துடைத்தெறிவதற்காக எழுதப்பட்டதே இந்த தொடர்.

👑 இத்தொடரில் விளக்கப்பட்ட விஷயங்கள்...

வர்ணம் என்பது தொழில் சார்ந்து வந்ததே!
ஒருவன் தனது தொழில் மூலமாக வர்ணத்தை மாற்றலாம்.
சூத்திரன் பிராமணனாகலாம்
ஏன் அரசனாக கூட ஆகலாம்.

காட்டுவாசிகள் மற்றும் மலைவாசிகளில் கூட இருந்த அரசர்கள் பற்றியும் ஏகலைவனுக்கு நிகழ்ந்தது அவன் வனவாசி என்பதால் இல்லை என்பதையும்
பாஞ்சாலி சுயம்வரத்தில் நடந்தது என்ன...?
அதில் உள்ள பாரபட்சமின்மை பற்றியும்

கர்ணனின் தந்தை அதிரதன் அரசவம்சத்தை பற்றியும் கர்ணனுக்கு நிகழ்ந்தவை எதுவும் வர்ணபாகுபாட்டால் இல்லை என்பதையும் தெளிவாக பார்த்தோம்.

இந்த தெளிவுரைகள் மூலமாக நிச்சயம் மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என விளங்கி இருக்கும்.

🌷 மஹாபாரதம் இயற்றிய கிருஷ்ண துவைபாயனரே மீனவ பெண்ணிற்கு பிறந்தவரே! அம்மீனவ பெண்ணையே அரசன் சந்தனு மணந்தான் அவளின் வழிவந்ததே குரு வம்சம்.

🍀 விதுர நீதி உரைத்த விதுரனும் பணிப்பெண்ணின் மைந்தனாவான். கடைசிவரை அமைச்சராய் இருந்து அனைவராலும் மதிக்கப்படும் மனிதனானான்.

🌸 குருசேத்திரத்தில் பிழைத்த ஒரே கௌரவன் ஆன யுயுத்சு. திருதராஷ்டிரனுக்கும் பணிப்பெண்ணுக்கும் பிறந்தவனாவான். பரிட்ஷித்தையும், ராஜ்யத்தையும் அவனிடம் விட்டே பாண்டவர்கள் ஆயுளை முடிக்கச் செல்கின்றனர்.

👑 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் மின்னி நிற்கும் ஒரு மகாகாவியம் மகாபாரதம்! பாகுபாடில்லா பாரதம்! வஞ்ச நெஞ்சன் சகுனியின் மருமகன் துரியனும், அஞ்சா நெஞ்சன் பார்த்தனின் அண்ணன் தர்மனும் விட்டுச்சென்றிருப்பதெல்லாம் என்னைப்போல் வாழ்ந்து ஒழியாதே என்றொரு கருத்தையும்... என்னைப் போல் வாழ் என்றொரு கருத்தையுமே!

மஹாபாரத காலத்தில் எங்குமே வர்ண பாகுபாடு பார்க்கப்படவில்லை ஒரு வேளை பார்க்கப்பட்டிருந்தால் அதன் தாக்கம் அந்த கதாபாத்திரத்திடம் தெரிந்து இருக்கும். அப்படி எங்கும் நிகழவில்லை எனக் கூறி இத்தொடரை முடிக்கிறேன்.

🌸 இத்தொடர் எழுத உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அந்த பரந்தாமன் காட்டிய கீதையின் வழியே வாழ்வோம்! வாழ்க வையகம்!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

No comments:

Post a Comment