#பாகுபாடில்லா_பாரதம் - 5
🌸 மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என்றவுடன் பலர் ஏன் வியாச பாரதம் படித்தவர்கள் கூட இழுப்பது #கர்ணனையே!
👇இப்பதிவில் கொஞ்சம் ஆழமாக இலைமறை காயாக உள்ள விஷயங்களை ஆராய்வோம்.
🙏முதலில் நீங்கள் கண்ட தொலைகாட்சித் #தொடர்களையும் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் #எண்ணங்களையும் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள். மனதில் அதை அசைபோட்டு கொண்டே இருக்கும் வரை நான் சொல்ல வருவது நிச்சயம் புரியாது....
💐 சரி விஷயத்திற்கு வருவோம்.
கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்றதாலேயே அவனுக்கு #உரிமைகள் மறுக்கப்பட்டன! என்பது பலரின் வாதம்
உண்மையில் #அதிரதன் என்பவன் யார்?
👑பேரரசன் யயாதிக்கு ஐந்து மகன்கள். அவர்கள் முறையே....
👑யது (இவரின் வழிவந்தவர்களே யாதவர்கள். அதாவது கிருஷ்ணனின் வம்சம்)
துர்வசு
அனு
திரஹ்யு
புரு (இவரின் வழி வந்தவர்களே #பௌரவர்கள். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வம்சம்)
👑இங்கு மூன்றாம் மகனான அனுவின் வம்சத்தில் #27-வதாக வந்தவனே அதிரதன். இளமையைத் தர #மறுத்ததால் புருவை தவிர மற்ற மூவருக்கும் இராஜ்யம் இல்லை என யயாதி #புருவிற்கு அரியணை வழங்குகிறார்.
👑அனுவிற்கு பிறகு 12-வதாக வரும் பலியிடமிருந்து ஐந்து மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள் ஐவரும் முறையே #ஐந்து தேசங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒன்றே #அங்க தேசம்.
👑இதன்பிறகு அனுவின் வம்சத்தில் 21-வதாக வந்த #ஜயத்ரதன் என்னும் அரசன் பிராம்மணிய #சத்திரிய வம்சம் கலந்த ஸம்பூதி என்னும் பெண்ணை மணந்து விஜயன் என்பவளை பெறுகிறார். இதிலிருந்தே அவர்கள் #சூதர்கள் ஆகி இருக்க வேண்டும்.
🌷 சூதர்களின் வழியில் வந்த #சம்பன் எனும் அரசன் உருவாக்கிய நகரமே சம்பா நகரம். இந்நகரத்திலேயே குந்தி மிதக்கவிட்ட கர்ணன் கரை ஒதுங்க அவனை அதிரதன் தத்தெடுக்கிறார்.
(விஷ்ணுபுராணம் 4.18
மற்றும்
ஸ்ரீமத் பாகவதம் 9.23)
🌻 அதாவது அங்க தேசத்தின் தலைநகரத்தில் #அரசனின் வம்சாவழியிலே பிறந்த அடுத்த அரசனின் கரத்தில் கண்டெடுக்கப்பட்டான் கர்ணன். கர்ணன் கரையொதிங்கிய நேரம் #சூதனே அங்கு அரசனாக இருந்தான் என்று மஹாபாரதம் உரைக்கிறது.
அதிரதன் இல்லாதபட்சத்தில் அதிரதனின் தந்தையான #சத்தியகர்மன் அரசனாக இருந்து இருக்க வேண்டும்.
🌺 காலம் சூழல்கிறது
திக் விஜயம் சென்ற பாண்டு பல #தேசங்களை வெல்கிறார். அதில் சம்பா நகரமும் ஒன்று.
🌺பொதுவாகவே ஒரு நாட்டை தன் நாட்டோடு இணைக்கும்போது வென்ற அரசர்கள் தோற்ற அரசர்களுக்கு #பொறுப்பு அளித்து தக்க வைத்துக் கொள்வர்.
🌺திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் அப்படி தேரோட்டி ஆக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும்.
🌺ஏனெனில் #தேரோட்டுவது மிகப்பெரிய கலை. அதனால் தான் அத்தனை பேர் இருந்தும் #கிருஷ்ணனும் சல்லியனும் தேர் ஓட்டினர்.
🌺அங்க தேசம் #குருக்களின் கீழ் இருந்ததால் தான் அவ்வளவு எளிதாக அதற்கு ஒரு அரசனை(கர்ணனை ) துரியனால் நியமிக்க முடிந்தது.
ஆகட்டும் முக்கிய விடயத்திற்கு வருவோம்......
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🌹 #அரங்கேற்ற_களத்தில் நடந்தது என்ன?
🌟குருகுலப் பயிற்சி முடிந்து இளவரசர்கள் தங்கள் #திறமையைக் காட்டுவதற்காய் கூடி நின்ற வேளையில், மற்றொரு இளைஞன் இளவரசனிடம் #யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.
🌟முதலில் அனைவரும் தங்கள் #விற்திறமையை காட்டுகின்றனர். பிறகு பீமனும் துரியனும் கதையுடன் நுழைகிறார்கள். உடனே மக்கள் இருவரின் பக்கமும் பிரிந்து நின்று உற்சாகப்படுத்துகின்றனர்.
🌟குருவல்லவா துரோணர்!
இருவரை பற்றியும் நன்கு அறிந்து வைத்து இருந்தார். நிச்சயம் இது #சண்டைக்கு வழி வகுக்கும் என இருவரையும் அஸ்வதாமன் மூலமாய் தடுக்கிறார்.
(முதலில் பீமனுக்கும் துரியனுக்குமே அங்கே யுத்தம் #நடக்கவில்லை என்பதைத் தெளிவாகப் படித்தால் விளங்கும். )
#அர்ஜுனன்_திறனை காட்டியவுடன் யுத்தத்திற்கான அறைகூவல் வருகிறது.
🌹 யுத்தம் துவங்கப் போகிறது...
💘அர்ஜுனன் பக்கம் பாண்டவர்கள் துரோணர் நிற்க, கர்ணன் பக்கம் துரியோதனனும் அவன் சகோதரர்களும் நிற்கின்றனர்.
👉நன்றாக கவனியுங்கள். கர்ணன் ஒரு சூதன் என்பதால் நீ இளவரசனை #எதிர்க்ககூடாது என எவரும் தடுக்கவில்லை. ஆனால் இளவரசனை எதிர்க்க நீ யார்? உன் குலம் எது? என கிருபர் தொடங்குகிறார்.
👉இங்கு அரசனில்லை என்பது மட்டுமே பிரச்சனை என்பதால் தான் துரியன் உடனே கர்ணனை #அரசனாக்குகின்றான்.
👉வீரம் ஒன்றே அரசனுக்கான தகுதி என்பதே துரியனின் வாதம்.
(ஜராசந்தனும் வீரத்தில் வியந்ததால் தான் கர்ணனுக்கு மாலினி நகரைக் கொடுத்தான்)
☀யுத்தம் துவங்கும் நேரத்தில் சூரிய நாராயணர் அஸ்தமனமாகிறார்.
#முதல்_விசயம் .....
♣குருகுல இளவரசர்கள் தங்கள் திறனைக் காட்டுவதற்காக கட்டிய #அரங்கேற்ற களத்தில் கர்ணனின் திறனைக் காட்ட எவரும் தடுக்கவில்லை.... துரோணரின் அனுமதியுடன் தன் திறனைக் காட்டுகிறான்.
#இரண்டாவது ....
♣அது அரங்கேற்ற களம் ... யார் யாருடன் வேண்டுமானாலும் மோதும் #போட்டி அல்ல...
♣கர்ணன் தன் திறனைக் காட்ட மட்டும் அங்கு வரவில்லை... அர்ஜுனனிடம் #மோதவும் வந்து இருந்தான்.
♣யாரும் அங்கு #யுத்தத்திற்காக கூடவில்லை. ஆயினும் இளவரசனை யுத்தத்திற்கு அழைக்கிறான் ஒருவன்.
♣இருந்தாலும் கிருபர் தவிர மற்ற அனைவரும் யுத்தத்தை #ஆமோதிப்பது போலவே இருவர் பக்கமும் பிரிகின்றனர்.
♣கிருபரும் நீ ஒரு சூதன் அதனால் அனுமதி இல்லை போ என்று #உரைக்கவில்லை நீ யார்? உன் குலம் என்ன? என்று கேட்கிறார்.
உடனே துரியன் ...
🌺" பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன் " என கர்ணனை அரசனாக்கிறான்.
💢அரசன் ஆனவுடன் போட்டி துவங்கும் நிலையில் சூரியன் #அஸ்தமிக்கிறார் மாறாக யாரும் தடுக்கவில்லை.
🌻 தெளிவாக ஆராய்ந்தால் கிடைக்கும் விஷயங்கள் இவையே.. ...
♈ஒன்று கர்ணனை உன் திறனைக் #காட்டக்கூடாது என எவரும் தடுக்கவில்லை.
♉இரண்டு கர்ணன் #அரசனாவதையும் யாரும் தடுக்கவில்லை.
♈மூன்று அரசன் ஆனபின் அவன் #அர்ஜுனனுடன் யுத்தம் செய்வதையும் யாரும் தடுக்கவில்லை.
🌸 துரோணர் சூதன் என்ற முறையில் கர்ணனிற்கு வித்தை #அளிக்கமாட்டேன் என கூறவில்லை.
🌸துரோணரின் குருகுலத்திலேயே கர்ணன் கல்வி பயின்றான். மாறாக பிரம்மாஸ்திரம் அளிக்கமாட்டேன் எனக் கூறினார்.
🌸 ஏற்கனவே அஸ்தினாபுரத்திற்கு #அடிமையாகி இருக்கும் தேசத்தின் அடுத்த வாரிசிற்கு எப்படி பிரம்மாஸ்த்திரம் அளிக்க முடியும்?
🌟மேலும் பிரம்மாஸ்திரத்தின் சக்தி அளப்பரியது. அதனை அவ்வளவு எளிதில் #யாருக்கும் அளிக்க முடியாது.
🌟இதனால் தான் அத்தனை மன்னர்கள் போரிட்ட பாரத போரில் கூட வெறும் #6 பேர் மட்டும் தான் பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தனர்.
🌸 பரசுராமரும் கர்ணன் சூதன் என்ற காரணத்தால் #சாபம் வழங்கவில்லை.
🌸மாறாக தான் சூதன் என்பதை #மறைத்ததால் சாபம் அளிக்கிறார்.
🌸சத்திரியர்களை #வெறுப்பவரிடம் ஒரு அரச வம்சத்தை சேர்ந்தவன் தான் பிராமணன் என்று கூறி #பிரம்மாஸ்த்திரத்தை பெற்றான் என்றால் எப்படி சும்மா இருப்பார்?
(உடனே அவர் அவதாரம் தானே எப்படி தெரியாமல் போகும் என்ற கேள்வி வரும்.
பரசுராமர் #சக்தி ஆவேச அவதாரம்... இங்கு ஆவேச அவதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒருவரின் உள்ளே பகவான் #விஷ்ணுவின் சக்தி பிரவேசிக்கும் )
🌷 சுயம்வரம் பற்றி ஏற்கனவே போன பதிவில் பார்த்தோம்
🌸 குருசேத்திர களத்தில் கூட சூதன் என்ற காரணத்தால் கர்ணனை பீஷ்மர் போரில் #பங்கேற்க கூடாது எனக்கூறவில்லை.பீஷ்மர் இருக்கும் வரை #யுத்தம்_புரியமாட்டேன் என்று கூறியது கர்ணனே.
🌸 பல மன்னர்கள் பங்கேற்ற போரில் சேனாதிபதி ஆவதும் #சாமான்யம் அல்ல. காரணம் போரில் அத்தனை மன்னர்களுக்கும் #தலைவன் சேனாதிபதி தான்.
🌸கர்ணன் சேனாதிபதி ஆக்கப்படுவதை யாராவது சூதன் என்ற காரணத்தால் #தடுத்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
🌸துரோணரின் மகன் அஸ்வதாமனே கர்ணனை சேனாதிபதியாக வழிமொழிகிறான்.
👑 மேற்கூறியவைகள் மூலம் கர்ணன் #துன்பமெல்லாம் படவே இல்லை என்று #சொல்வதற்கில்லை. அவன் பிறந்த உடன் ஆற்றில் விடப்பட்டான். துரியனின் #நட்பால் நாசமடைந்தான்.
👉ஆனால் கர்ணன் பிறப்பால் தோன்றிய பாகுபாட்டினால் எதையும் #இழக்கவில்லை என்பதே உண்மை. அங்கு பாகுபாடு காட்டப்படவில்லை என்பதே சத்தியம்.
No comments:
Post a Comment