Monday, May 17, 2021

பாகுபாடில்லா பாரதம் - 3

 #பாகுபாடில்லா_பாரதம் - 3


முந்தைய பதிவு


இப்பதிவில் சில இனக்குழுக்களையும் #ஏகலைவனைப் பற்றியும் காண்போம்.

💐#யாதவர்கள்:

யயாதி #சாபத்தால் யாதவர்களுக்கு அரியணை இல்லை என்பது அறிந்ததே. இதனால் ஒரு பகுதியினர் மாடு #மேய்பவராக இருக்க அங்கு அவதரித்தவரே #ஸ்ரீகிருஷ்ணர்.

🌸 #மிலேச்சர்கள்:

👉பொதுவாக இவர்கள் #அயல்நாட்டவர்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால் கடற்கரை மற்றும் தீவில் வாழ்ந்த ஒரு வகை #பழங்குடியினர்களும் மிலேச்சர்களாக அறியப்பட்டனர்.
👉இவர்கள் இராஜசூய யாகத்திலும் குருசேத்திர யுத்தத்திலும் பலமுறை குறிப்பிடப்படுகின்றனர்.
👉 நரகாசுரன் மகனான பகதத்தனின் ஆதரவாளர்களாக அவர்கள் இருந்தனர்.

🌺 #கிராதர்கள்:

🏔️இவர்கள் #மலைவாசிகளாக கருதப்படுகின்றனர். திக் விஜயத்தில் அர்ஜுனன் பற்பல #கிராத கூட்டங்களை வெல்ல இராஜசூயத்தில் இம்மன்னர்கள் கலந்துகொள்கின்றனர்.

🏔️இதனால் தான் ஈசனின் #மலைவாசி வடிவம் கிராதர் என்று அழைக்கப்படுகிறது.
🏔️ஈசன் அர்ஜுனனுக்கு வைத்த பரீட்சையின் போது #கிராதர்களை அடிக்கடி மலைப்பகுதியில் கண்டதால் தான் அர்ஜுனனால் முதலில் வேறுபாடு காண முடியவில்லை.

🏔️ பகதத்தனே மொத்த #கிராதர்களின் அரசன் என மஹாபாரதம் உரைக்கிறது. குருஷேத்திரத்தில் கிராதர்கள் மற்றும் சில இனக்குழுக்கள் உடைய ஒரு அக்ரோணி சேனை படையை துரியோதனனுக்கு அளிக்கிறான் #பகதத்தன்...

🏔️ பாஞ்சாலி #சுயம்வரத்திலும் பகதத்தன் கலந்து கொண்டான்.

🌻#நிஷாதர்கள்:

🌴இவர்கள் #காட்டுவாசிகளை சேர்ந்தவர்கள். இவ்வகை அரசர்களை அர்ஜுனன் மற்றும் பீமன் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெல்கின்றனர்.
🌴இவர்களில் ஒரு கூட்டத்தின் அரசனே #ஏகலைவன் .ஏன் புகழ்பெற்ற நள தமயந்தி கதையில் வரும் #நளன் கூட நிஷாத அரசனே.

🌹#கள்வர்கள்:

🌺கூட்டம் கூட்டமாய் வாழும் கள்வர்களை அர்ஜுனன் போரில் அடக்குகிறான். இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். குருசேத்திரத்தில் #கௌரவர் பக்கம் நிற்கின்றனர்.

🐟 #மத்யஸ்யர்கள்:

🐠 சத்யவதியுடன் பிறந்த இரட்டை சகோதரனே மத்யஸ்தன்.
#மீனவ குலத்தை சேர்ந்த இவர் பின்னாளில் மத்யஸ்ய #தேசத்தை உருவாக்கினார். இதன்பின் மீனவனின் தேசம் வளர்ச்சிடைந்து பெரும்நாடானாது.

☝மேற்கூறியன யாவும் சில #எடுத்துகாட்டுகளே. இவ்வாறே பற்பல பழங்குடி கூட்டங்கள் தங்களுக்கென இராஜ்யம் மற்றும் அரசர்கள் உடன் வாழ்ந்து வந்தனர்.

👑நகரத்திற்கு வராத காட்டுவாசிகள், மலைவாசிகளுக்கு கூட ஒருவன் அரசன் என இருந்ததுடன் அவனும் மற்ற அரசர்களோடு சமமாக பாவிக்கப்பட்டான்.

👑ஒரு இராஜ்யம் என்றிருந்தால் அங்கே விவசாயிகள், வணிகர்கள், வைத்தியர்கள், போர்வீரர்கள், தேரோட்டுபவர்கள், யானை பாகர்கள் என அனைவரும் இருக்க வேண்டும்.
👑 இது காட்டுவாசிகளுக்கும், மலைவாசிகளுக்கும் கூட பொருந்தும். சரியான ஒரு கட்டமைப்பு மூலம் அவர்கள் தேசமும் மற்றவர்களை போல வளர்ச்சியுற்றது. அவர்களையும் #இணைப்பதால் மட்டுமே இராஜசூயம் வெற்றியுடையதாக கருதப்படும்.

👑அவ்வாறே அரசன் என்பவன் எந்த இனத்தை சேர்ந்தவனாகவும் இருந்தான். ஒரு வம்சம் மட்டுமே #மேலோங்காமல் அனைவரின் வளர்ச்சியும் அங்கு #சமமாக மேலோங்கி இருந்தது.

👑 #இப்போது_ஏகலைவன்_விஷயத்திற்கு வருவோம்....

♦நிஷாதர்கள் என்றால் காட்டுவாசிகள் என்று பார்த்தோம் அப்படி ஒரு நிஷாத அரசன் #ஹிரண்யதனுசுவின் மகனே ஏகலைவன்.

♦தனது மருமகன் கம்சனைக் கொன்றதால் கிருஷ்ணனை அழிக்க #ஜராசந்தன் கட்டிய மனக்கோட்டையில் ஏகலைவன் ஒரு பெரும் #தூண் என்றால் மிகையாது.
♦ஜராசந்தனின் படையுடன் தன் படையை இணைத்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை ஜராசந்தன் படையெடுத்தபோதும் அவனுக்கு #துணையாக சென்றவன் ஏகலைவன்.

👑இராஜசூய யாகத்தில் நிஷாத அரசன் என்ற வகையில் #யுதிஷ்டிரனுக்கு காலணியை பரிசாக அளிக்கிறான்.

♦ஜராசந்தனுடன் இருந்த சிசுபாலன் மற்றும் தண்டவக்கிரன் ஆகியோர் பழிதீர்க்க கிருஷ்ணனிடம் மோதுவது போல கிருஷ்ணனிடம் மோதி #அழிகிறான் ஏகலைவன்.
♦குருசேத்திர போரில் பத்திற்கும் மேற்பட்ட இடத்தில் நிஷாத வீரர்கள் தென்படுகின்றனர். அவ்வாறே #அஸ்வமேதயாகத்தில் ஏகலைவனின் மகன் அர்ஜுனனை எதிர்க்கிறான்.

👉இதற்கு பின் சொல்லுங்கள் ஏகலைவன் என்பவன் #தாழ்த்தப்பட்டவனா??.???.

♦அவன் ஒரு அரசன்.
இராஜசூய யாகத்திலும் அஸ்வமேத யாகத்திலும் #மதிக்கப்பட்ட அரசன்.
#வீரத்தால் கிருஷ்ணனையே எதிர்த்தவன்.

♦ஏகலைவன் தாழ்ந்தவன் என்ற பட்சத்தில் அவனிடம் கேட்ட தட்சணை பாகுபாடாக இருக்கலாம். ஆனால் #அரசன் என்னும் வகையில் அங்கு பிறப்பால் உயர்வு, தாழ்வு #காட்டப்படவில்லை என்பதே நிஜம்.

👉மேலும் ஏகலைவன் குருகுலம் வந்த அதே நேரம், அவன் ஏற்ற தரப்பிலேயே ....
ஜராசந்தன்
நரகாசுரன்
பகதத்தன்
பாணாசுரன்
என தேவர்களாலே வெல்லப்பட முடியாத பற்பல அதிரதர்கள் இருந்தார்கள். எனில் அவன் கொண்ட #கூட்டணியில் இல்லாத வில் வித்தையா? இல்லை அஸ்திரமா?

👉இவ்வளவு ஏன் #அதே தரப்பிலிருந்த பீஷ்மகனின் மகனான ருக்மி காண்டீபத்திற்கும் சாரங்கத்திற்கும் இணையான வில்லை தனது குருவிடம் இருந்து பெற்றான் எனில் அவர் எத்தகைய குரு.
👉 அதெல்லாம் தாண்டி #எதிரியின் தேசத்திற்கு வர ஏகலைவனுக்கு என்ன அவசியம்?

🌟கிருஷ்ணனோ, ஏகலைவனை #கொல்லப்படாமல் இருந்து இருந்தால் துரியோதனன் தரப்பை ஏற்று இருப்பான் அதனாலேயே என்னால் #கொல்லப்பட்டான் என்கிறார்.

🌺சரி இப்பதிவு பிறப்பினால் பாகுபாடு இல்லை என்பதை மட்டுமே சொல்லவிளைவதால் இது போதும் என நினைக்கிறேன்.

👉ஏகலைவனுக்கு நிகழ்ந்தது நியாயமா இல்லையா என உரைக்க பல #பதிவுகள் உள்ளன. இங்கு அதை விளக்கினால் பதிவு நீளுமே தவிர தலைப்பிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை...

✨இனி அடுத்து வரும் பதிவில் பாஞ்சாலி சுயம்வரத்தில் நிகழ்ந்தவை பாகுபாட்டினாலா என்பதைப் பற்றி காணலாம்.


No comments:

Post a Comment