Monday, May 17, 2021

பாகுபாடற்ற பாரதம் முடிவுரை

 #பாகுபாடற்ற_பாரதம் முடிவுரை




💐 தேவையானவை அனைத்தும் சொல்லப்பட்டது என்றே நினைக்கின்றேன்.

👑 மஹாபாரதம் ஒரு புண்ணிய காவியம் மட்டுமில்லாமல் வாழ்வியல் முறைகளைக் கூறுவதிலும் தன்னிகரற்ற ஒன்றாகும்.

இங்கு ஒரே மனநிலை, ஒரே கொள்கை கொண்டவர் என எவரும் இல்லை.

தெளிவாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாதை, தங்களுக்கென ஒரு கொள்கை அமைத்து வாழ்ந்து அவ்வழியில் செல்வதால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதை சொல்லாமல் காட்டிவிட்டு செல்கின்றனர்.

🌻 ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியிலும் பாரதத்தை பார்த்து அதில் வரும் பிரச்சனைகள் அவர்களின் நிலைகள் குறித்து ஆராய்ந்து படிப்பது ஒருவருக்கு வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும்.

🌺 காலத்தின் போக்கில் மஹாபாரதத்திலும் வர்ண பாகுபாடு என்ற கரை படிந்தது . கதைகளை சிறப்பாக்க களத்தில் வில்லனை சேர்ப்பதை போல சில நிகழ்வுகளில் வர்ணத்தை திணித்து பேசினர். அதில் முக்கிய பங்கை தொலைகாட்சி தொடர்கள் வகித்தன!

அதை துடைத்தெறிவதற்காக எழுதப்பட்டதே இந்த தொடர்.

👑 இத்தொடரில் விளக்கப்பட்ட விஷயங்கள்...

வர்ணம் என்பது தொழில் சார்ந்து வந்ததே!
ஒருவன் தனது தொழில் மூலமாக வர்ணத்தை மாற்றலாம்.
சூத்திரன் பிராமணனாகலாம்
ஏன் அரசனாக கூட ஆகலாம்.

காட்டுவாசிகள் மற்றும் மலைவாசிகளில் கூட இருந்த அரசர்கள் பற்றியும் ஏகலைவனுக்கு நிகழ்ந்தது அவன் வனவாசி என்பதால் இல்லை என்பதையும்
பாஞ்சாலி சுயம்வரத்தில் நடந்தது என்ன...?
அதில் உள்ள பாரபட்சமின்மை பற்றியும்

கர்ணனின் தந்தை அதிரதன் அரசவம்சத்தை பற்றியும் கர்ணனுக்கு நிகழ்ந்தவை எதுவும் வர்ணபாகுபாட்டால் இல்லை என்பதையும் தெளிவாக பார்த்தோம்.

இந்த தெளிவுரைகள் மூலமாக நிச்சயம் மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என விளங்கி இருக்கும்.

🌷 மஹாபாரதம் இயற்றிய கிருஷ்ண துவைபாயனரே மீனவ பெண்ணிற்கு பிறந்தவரே! அம்மீனவ பெண்ணையே அரசன் சந்தனு மணந்தான் அவளின் வழிவந்ததே குரு வம்சம்.

🍀 விதுர நீதி உரைத்த விதுரனும் பணிப்பெண்ணின் மைந்தனாவான். கடைசிவரை அமைச்சராய் இருந்து அனைவராலும் மதிக்கப்படும் மனிதனானான்.

🌸 குருசேத்திரத்தில் பிழைத்த ஒரே கௌரவன் ஆன யுயுத்சு. திருதராஷ்டிரனுக்கும் பணிப்பெண்ணுக்கும் பிறந்தவனாவான். பரிட்ஷித்தையும், ராஜ்யத்தையும் அவனிடம் விட்டே பாண்டவர்கள் ஆயுளை முடிக்கச் செல்கின்றனர்.

👑 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் மின்னி நிற்கும் ஒரு மகாகாவியம் மகாபாரதம்! பாகுபாடில்லா பாரதம்! வஞ்ச நெஞ்சன் சகுனியின் மருமகன் துரியனும், அஞ்சா நெஞ்சன் பார்த்தனின் அண்ணன் தர்மனும் விட்டுச்சென்றிருப்பதெல்லாம் என்னைப்போல் வாழ்ந்து ஒழியாதே என்றொரு கருத்தையும்... என்னைப் போல் வாழ் என்றொரு கருத்தையுமே!

மஹாபாரத காலத்தில் எங்குமே வர்ண பாகுபாடு பார்க்கப்படவில்லை ஒரு வேளை பார்க்கப்பட்டிருந்தால் அதன் தாக்கம் அந்த கதாபாத்திரத்திடம் தெரிந்து இருக்கும். அப்படி எங்கும் நிகழவில்லை எனக் கூறி இத்தொடரை முடிக்கிறேன்.

🌸 இத்தொடர் எழுத உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அந்த பரந்தாமன் காட்டிய கீதையின் வழியே வாழ்வோம்! வாழ்க வையகம்!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

பாகுபாடில்லா பாரதம் - 5

 #பாகுபாடில்லா_பாரதம் - 5


முந்தைய பதிவு


🌸 மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என்றவுடன் பலர் ஏன் வியாச பாரதம் படித்தவர்கள் கூட இழுப்பது #கர்ணனையே!

👇இப்பதிவில் கொஞ்சம் ஆழமாக இலைமறை காயாக உள்ள விஷயங்களை ஆராய்வோம்.

🙏முதலில் நீங்கள் கண்ட தொலைகாட்சித் #தொடர்களையும் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் #எண்ணங்களையும் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள். மனதில் அதை அசைபோட்டு கொண்டே இருக்கும் வரை நான் சொல்ல வருவது நிச்சயம் புரியாது....

💐 சரி விஷயத்திற்கு வருவோம்.
கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்றதாலேயே அவனுக்கு #உரிமைகள் மறுக்கப்பட்டன! என்பது பலரின் வாதம்

உண்மையில் #அதிரதன் என்பவன் யார்?

👑பேரரசன் யயாதிக்கு ஐந்து மகன்கள். அவர்கள் முறையே....

👑யது (இவரின் வழிவந்தவர்களே யாதவர்கள். அதாவது கிருஷ்ணனின் வம்சம்)

துர்வசு

அனு

திரஹ்யு

புரு (இவரின் வழி வந்தவர்களே #பௌரவர்கள். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வம்சம்)

👑இங்கு மூன்றாம் மகனான அனுவின் வம்சத்தில் #27-வதாக வந்தவனே அதிரதன். இளமையைத் தர #மறுத்ததால் புருவை தவிர மற்ற மூவருக்கும் இராஜ்யம் இல்லை என யயாதி #புருவிற்கு அரியணை வழங்குகிறார்.

👑அனுவிற்கு பிறகு 12-வதாக வரும் பலியிடமிருந்து ஐந்து மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள் ஐவரும் முறையே #ஐந்து தேசங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒன்றே #அங்க தேசம்.

👑இதன்பிறகு அனுவின் வம்சத்தில் 21-வதாக வந்த #ஜயத்ரதன் என்னும் அரசன் பிராம்மணிய #சத்திரிய வம்சம் கலந்த ஸம்பூதி என்னும் பெண்ணை மணந்து விஜயன் என்பவளை பெறுகிறார். இதிலிருந்தே அவர்கள் #சூதர்கள் ஆகி இருக்க வேண்டும்.

🌷 சூதர்களின் வழியில் வந்த #சம்பன் எனும் அரசன் உருவாக்கிய நகரமே சம்பா நகரம். இந்நகரத்திலேயே குந்தி மிதக்கவிட்ட கர்ணன் கரை ஒதுங்க அவனை அதிரதன் தத்தெடுக்கிறார்.

(விஷ்ணுபுராணம் 4.18
மற்றும்
ஸ்ரீமத் பாகவதம் 9.23)

🌻 அதாவது அங்க தேசத்தின் தலைநகரத்தில் #அரசனின் வம்சாவழியிலே பிறந்த அடுத்த அரசனின் கரத்தில் கண்டெடுக்கப்பட்டான் கர்ணன். கர்ணன் கரையொதிங்கிய நேரம் #சூதனே அங்கு அரசனாக இருந்தான் என்று மஹாபாரதம் உரைக்கிறது.

அதிரதன் இல்லாதபட்சத்தில் அதிரதனின் தந்தையான #சத்தியகர்மன் அரசனாக இருந்து இருக்க வேண்டும்.

🌺 காலம் சூழல்கிறது
திக் விஜயம் சென்ற பாண்டு பல #தேசங்களை வெல்கிறார். அதில் சம்பா நகரமும் ஒன்று.

🌺பொதுவாகவே ஒரு நாட்டை தன் நாட்டோடு இணைக்கும்போது வென்ற அரசர்கள் தோற்ற அரசர்களுக்கு #பொறுப்பு அளித்து தக்க வைத்துக் கொள்வர்.

🌺திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் அப்படி தேரோட்டி ஆக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும்.
🌺ஏனெனில் #தேரோட்டுவது மிகப்பெரிய கலை. அதனால் தான் அத்தனை பேர் இருந்தும் #கிருஷ்ணனும் சல்லியனும் தேர் ஓட்டினர்.

🌺அங்க தேசம் #குருக்களின் கீழ் இருந்ததால் தான் அவ்வளவு எளிதாக அதற்கு ஒரு அரசனை(கர்ணனை ) துரியனால் நியமிக்க முடிந்தது.

ஆகட்டும் முக்கிய விடயத்திற்கு வருவோம்......
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🌹 #அரங்கேற்ற_களத்தில் நடந்தது என்ன?

🌟குருகுலப் பயிற்சி முடிந்து இளவரசர்கள் தங்கள் #திறமையைக் காட்டுவதற்காய் கூடி நின்ற வேளையில், மற்றொரு இளைஞன் இளவரசனிடம் #யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.

🌟முதலில் அனைவரும் தங்கள் #விற்திறமையை காட்டுகின்றனர். பிறகு பீமனும் துரியனும் கதையுடன் நுழைகிறார்கள். உடனே மக்கள் இருவரின் பக்கமும் பிரிந்து நின்று உற்சாகப்படுத்துகின்றனர்.

🌟குருவல்லவா துரோணர்!
இருவரை பற்றியும் நன்கு அறிந்து வைத்து இருந்தார். நிச்சயம் இது #சண்டைக்கு வழி வகுக்கும் என இருவரையும் அஸ்வதாமன் மூலமாய் தடுக்கிறார்.

(முதலில் பீமனுக்கும் துரியனுக்குமே அங்கே யுத்தம் #நடக்கவில்லை என்பதைத் தெளிவாகப் படித்தால் விளங்கும். )

#அர்ஜுனன்_திறனை காட்டியவுடன் யுத்தத்திற்கான அறைகூவல் வருகிறது.

🌹 யுத்தம் துவங்கப் போகிறது...

💘அர்ஜுனன் பக்கம் பாண்டவர்கள் துரோணர் நிற்க, கர்ணன் பக்கம் துரியோதனனும் அவன் சகோதரர்களும் நிற்கின்றனர்.

👉நன்றாக கவனியுங்கள். கர்ணன் ஒரு சூதன் என்பதால் நீ இளவரசனை #எதிர்க்ககூடாது என எவரும் தடுக்கவில்லை. ஆனால் இளவரசனை எதிர்க்க நீ யார்? உன் குலம் எது? என கிருபர் தொடங்குகிறார்.

👉இங்கு அரசனில்லை என்பது மட்டுமே பிரச்சனை என்பதால் தான் துரியன் உடனே கர்ணனை #அரசனாக்குகின்றான்.
👉வீரம் ஒன்றே அரசனுக்கான தகுதி என்பதே துரியனின் வாதம்.
(ஜராசந்தனும் வீரத்தில் வியந்ததால் தான் கர்ணனுக்கு மாலினி நகரைக் கொடுத்தான்)

☀யுத்தம் துவங்கும் நேரத்தில் சூரிய நாராயணர் அஸ்தமனமாகிறார்.

#முதல்_விசயம் .....

♣குருகுல இளவரசர்கள் தங்கள் திறனைக் காட்டுவதற்காக கட்டிய #அரங்கேற்ற களத்தில் கர்ணனின் திறனைக் காட்ட எவரும் தடுக்கவில்லை.... துரோணரின் அனுமதியுடன் தன் திறனைக் காட்டுகிறான்.

#இரண்டாவது ....

♣அது அரங்கேற்ற களம் ... யார் யாருடன் வேண்டுமானாலும் மோதும் #போட்டி அல்ல...
♣கர்ணன் தன் திறனைக் காட்ட மட்டும் அங்கு வரவில்லை... அர்ஜுனனிடம் #மோதவும் வந்து இருந்தான்.
♣யாரும் அங்கு #யுத்தத்திற்காக கூடவில்லை. ஆயினும் இளவரசனை யுத்தத்திற்கு அழைக்கிறான் ஒருவன்.
♣இருந்தாலும் கிருபர் தவிர மற்ற அனைவரும் யுத்தத்தை #ஆமோதிப்பது போலவே இருவர் பக்கமும் பிரிகின்றனர்.

♣கிருபரும் நீ ஒரு சூதன் அதனால் அனுமதி இல்லை போ என்று #உரைக்கவில்லை நீ யார்? உன் குலம் என்ன? என்று கேட்கிறார்.

உடனே துரியன் ...

🌺" பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன் " என கர்ணனை அரசனாக்கிறான்.

💢அரசன் ஆனவுடன் போட்டி துவங்கும் நிலையில் சூரியன் #அஸ்தமிக்கிறார் மாறாக யாரும் தடுக்கவில்லை.

🌻 தெளிவாக ஆராய்ந்தால் கிடைக்கும் விஷயங்கள் இவையே.. ...

♈ஒன்று கர்ணனை உன் திறனைக் #காட்டக்கூடாது என எவரும் தடுக்கவில்லை.

♉இரண்டு கர்ணன் #அரசனாவதையும் யாரும் தடுக்கவில்லை.

♈மூன்று அரசன் ஆனபின் அவன் #அர்ஜுனனுடன் யுத்தம் செய்வதையும் யாரும் தடுக்கவில்லை.

🌸 துரோணர் சூதன் என்ற முறையில் கர்ணனிற்கு வித்தை #அளிக்கமாட்டேன் என கூறவில்லை.
🌸துரோணரின் குருகுலத்திலேயே கர்ணன் கல்வி பயின்றான். மாறாக பிரம்மாஸ்திரம் அளிக்கமாட்டேன் எனக் கூறினார்.
🌸 ஏற்கனவே அஸ்தினாபுரத்திற்கு #அடிமையாகி இருக்கும் தேசத்தின் அடுத்த வாரிசிற்கு எப்படி பிரம்மாஸ்த்திரம் அளிக்க முடியும்?

🌟மேலும் பிரம்மாஸ்திரத்தின் சக்தி அளப்பரியது. அதனை அவ்வளவு எளிதில் #யாருக்கும் அளிக்க முடியாது.

🌟இதனால் தான் அத்தனை மன்னர்கள் போரிட்ட பாரத போரில் கூட வெறும் #6 பேர் மட்டும் தான் பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தனர்.

🌸 பரசுராமரும் கர்ணன் சூதன் என்ற காரணத்தால் #சாபம் வழங்கவில்லை.
🌸மாறாக தான் சூதன் என்பதை #மறைத்ததால் சாபம் அளிக்கிறார்.
🌸சத்திரியர்களை #வெறுப்பவரிடம் ஒரு அரச வம்சத்தை சேர்ந்தவன் தான் பிராமணன் என்று கூறி #பிரம்மாஸ்த்திரத்தை பெற்றான் என்றால் எப்படி சும்மா இருப்பார்?

(உடனே அவர் அவதாரம் தானே எப்படி தெரியாமல் போகும் என்ற கேள்வி வரும்.
பரசுராமர் #சக்தி ஆவேச அவதாரம்... இங்கு ஆவேச அவதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒருவரின் உள்ளே பகவான் #விஷ்ணுவின் சக்தி பிரவேசிக்கும் )

🌷 சுயம்வரம் பற்றி ஏற்கனவே போன பதிவில் பார்த்தோம்



🌸 குருசேத்திர களத்தில் கூட சூதன் என்ற காரணத்தால் கர்ணனை பீஷ்மர் போரில் #பங்கேற்க கூடாது எனக்கூறவில்லை.பீஷ்மர் இருக்கும் வரை #யுத்தம்_புரியமாட்டேன் என்று கூறியது கர்ணனே.
🌸 பல மன்னர்கள் பங்கேற்ற போரில் சேனாதிபதி ஆவதும் #சாமான்யம் அல்ல. காரணம் போரில் அத்தனை மன்னர்களுக்கும் #தலைவன் சேனாதிபதி தான்.

🌸கர்ணன் சேனாதிபதி ஆக்கப்படுவதை யாராவது சூதன் என்ற காரணத்தால் #தடுத்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
🌸துரோணரின் மகன் அஸ்வதாமனே கர்ணனை சேனாதிபதியாக வழிமொழிகிறான்.

👑 மேற்கூறியவைகள் மூலம் கர்ணன் #துன்பமெல்லாம் படவே இல்லை என்று #சொல்வதற்கில்லை. அவன் பிறந்த உடன் ஆற்றில் விடப்பட்டான். துரியனின் #நட்பால் நாசமடைந்தான்.

👉ஆனால் கர்ணன் பிறப்பால் தோன்றிய பாகுபாட்டினால் எதையும் #இழக்கவில்லை என்பதே உண்மை. அங்கு பாகுபாடு காட்டப்படவில்லை என்பதே சத்தியம்.

பாகுபாடில்லா பாரதம் - 4

 #பாகுபாடில்லா_பாரதம் :4


முந்தைய பதிவு


(சர்ச்சைக்குரிய #பாஞ்சாலி_சுயம்வரம்!)

கர்ணன் வில்லை எடுத்து குறி பார்த்து அடிக்கும் வேளையில் பாஞ்சாலி கூறியதாகச் சொல்லப்படும், "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்ற ஒரு வரி தான் #குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

#முரண்பட்டதாக கருதப்படும் இந்த வரியை Bori Critical edition நீக்கியது.

அது என்ன? Bori Critical edition

🌺19 ம் நூற்றாண்டின் இறுதியில், எண்ணற்ற மகாபாராத நூல்கள் இந்தியா #முழுவதும் இருந்தாலும் ஒரு சரியான பொதுவான நூல் வேண்டும் என மஹாபாரத பிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முடிவெடுக்க அப்பொறுப்பை Bhandarkar Oriental Research Institute ஏற்கிறது.

🌺அவர்கள் உலகம் முழுக்க இருந்த 1259-க்கும் மேற்பட்ட மஹாபாரத நூல்களை 50 வருடம் ஆராய்ந்து எண்ணற்ற இடைசொருகல்களை நீக்கிய பின் 22-9-1966 அன்று அன்றைய ஜனாதிபதி சர்வபள்ளி #இராதாகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டதே இந்த Critical edition.

🌺பல காலம் #சமஸ்கிருதத்திலேயே இருந்த இந்த Critical edition 2010 ஆம் ஆண்டு பிபேக் தீப்ராய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது.

🌺இவர்கள் செய்த ஆராய்ச்சியில் திரௌபதி கூறியதாக சொல்லப்படும் #சூதனை ஏற்க மாட்டேன் முதலிய பலவரிகளை நீக்கினர்.

🌺மொத்தம் உள்ள 21 தேவநகரி ஏடுகளில் 3-ல் மட்டுமே இந்த வரி உள்ளதாகவும் அதுவும் ஆராயப்பட்டு பின்னால் சேர்க்கப்பட்டவையே என அறிவித்தனர்.

🌺வந்த மன்னர்கள் அனைவரும் #தோற்றபின்னரே அர்ஜுனன் செல்கிறார்.
இதில் கர்ணனும் அடக்கம் என்பதை பின்வரும் வரிகள் தெளிவாக உரைக்கின்றனர்.

Bori

Vaishampayana said, ‘When all the kings gave up attempting to string the bow, the great-
souled Jishnu arose from among the Brahmanas. On seeing Partha advance, with a
complexion resplendent like that of Indra’s flag, the chief Brahmanas shook their deerskins and created a loud uproar. Some of them were pleased. Others were displeased.

Others among them, who lived by their wisdom and were wise, told each other, “O Brahmanas! If #Kshatriyas like #Karna and #Shalya, who are famous in the world, have great strength and are well versed in Dhanur Veda, could not string the bow, how can this weakling Brahmana, with no knowledge of weapons, succeed?

♦முதலில் சூதன் என்பதும் #சூத்திரன் என்பதும் வேறு வேறு என்பதையும்
சூதன் என்றாலே #தேரோட்டி என்று சொல்வது தவறென்றும் அறியுங்கள்.

♦சூதனிலும் அரசர்கள் உள்ளனர். கர்ணனின் தந்தையான #அதிரதனும் ஒரு சூதர் #அரசனே. (இதை தெளிவாக அடுத்த பதிவில் காணலாம் )

♦சில அறிவிலிகளால் சேர்க்கப்பட்ட இதை வைத்தே பாகுபாடு உண்டென்று கூறுவர் பலர்....

♦இது இல்லை என கூறியாகிவிட்டது இனி அந்த சுயம்வரத்தின் பாகுபாடற்ற தன்மை குறித்து காண்போம்.

சுயம்வரத்தில் இரண்டு முறைகள் உண்டு.

1.ஒன்று பல அரசர்கள் கூடி நிற்க அதில் ஒருவரை மணப்பெண் தேர்ந்தெடுப்பாள்.

🌹விதர்ப்ப தேச இளவரசி தமயந்தி காட்டுவாசிகள் என்றழைக்கப்படும் #நிஷாதர்களின் அரசன் #நளனை தேர்ந்தெடுத்தாள்.
(கிருஷ்ணனின் மனைவியான ருக்மிணியும் விதர்ப்ப தேசமே)

2.மற்றொன்று குறிப்பிட்ட #வீரதீர சாகசம் புரிபவருக்கு பெண் மாலையிட்டு மனைவியாக வேண்டும். இதில் வீரம் மட்டுமே விஷயமே தவிர அவன் யார் என்பது #விஷயமில்லை பாஞ்சாலி சுயம்வரம் இப்படி நடைப்பெற்றதே.

👉கீழுள்ள விஷயங்களை சற்று உற்று நோக்குங்கள். சுயம்வரம் முடிந்தவுடன் நடந்த விசயங்கள் அதன் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர் (ஆதி பர்வம் 193 - 197)

💐 முதலில் அர்ஜுனன் அங்கே #அரசகுமாரானாக வரவில்லை. #மான் தோல் அணிந்து அவன் அர்ஜுனனா என என அத்தனை அரசர்கள் ஏன் கர்ணனாலேயே கூட கண்டுபிடிக்க முடியாத அளவு #விகாரமாக வந்தார்.

♠போட்டியில் வென்றபின் அர்ஜுனனை அவன் யார்? எந்த #குலம்? என கூட யாரும் கேட்கவில்லை. #வென்றதும் பாஞ்சாலியுடன் செல்கிறார்.

♠துருபதனை விடுங்கள்! #பாஞ்சாலியே அர்ஜுனனை யார் என கேட்கவில்லை. மாறாக அவன் அணிந்த மான்தோலை பிடித்துகொண்டு அர்ஜுனன் உடன் மகிழ்வாக செல்கிறார்.

♠துருபதனின் சொற்படி திருஷ்டதுய்மன் அவர்கள் யாராக இருப்பார்கள் என மறைந்திருந்து கேட்டு அறிய முற்படுகிறான்.
♣பெண்ணின் சகோதரன் என்ற முறையில் ஏன் நேரடியாக அவன் கேட்கவில்லை? எனில் #வென்றவர்களிடம் அவர்களின் #குலம்_அல்லது_எதை_வைத்தும்_பாகுபாடு பார்க்ககூடாது என்பதே #தர்மம். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கேட்க கூட கூடாது.

♠மறைந்திருந்து விவரம் அறியச் சென்ற திருஷ்டதுய்மனிடம் பதை பதைத்தவாறே துருபதன்,

பாஞ்சாலியை #வென்றவன்

சூத்திரனா?
இழிந்த பிறவியை சேர்ந்தவனா?
கப்பம் கட்டும் வைசியனா?
சத்ரியனா? இல்லை பிராமணா? என வினவுகிறான்.

எனில் ஒரு #சூத்திரன், இழிந்த பிறப்பை கொண்டவனுக்கு கூட சுயம்வரத்தில் பங்கேற்க #அனுமதியுண்டு அதை துருபதனாலும் #தடுக்க முடியாது என அர்த்தம்.

♠மேலும் தனது புரோகிதரை வைத்து இதை அறிய விரும்புகிறான் துருபதன். இதை புரோகிதர் யுதிஷ்டிரரிடம் கேட்டவுடன்

👉" அவன் என்ன வர்ணம்,
என்ன குலம், என்ன தொழிலாக இருந்தால் என்ன? போட்டியில் வென்றான் திரௌபதியை அடைந்தான் "
என புரோகிதரை கடிந்துரைக்கிறார் யுதிஷ்டிரன்.

♠பின்னர் அவர்களை பற்றி அறிய முடியாததால் தூதுவன் மூலம் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறான் துருபதன். அந்த விருந்தில் அவர்களை பற்றி அறிய அனைத்து தொழில் புரிபவர்களின் #இயந்திரங்களையும் விளையாட்டு பொருட்களையும் ஒவ்வொரு குலத்தின் முறைப்படி திருமண முறைகளையும் அமைக்கிறார்.
♠ இதில் பாண்டவர்கள் #வீரர்களாதலால் போர் #தளவாடங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வேளையில் வேறு வழியில்லாமல் கேட்டே விடுகிறான் துருபதன். அதன் பின்னே தனது #அடையாளத்தை உரைக்கிறார் யுதிஷ்டிரன்.

உண்மையில் இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்கள்.

அவ்வாறு குயவன் இல்லத்தில்
பாண்டவர்கள் பிச்சை எடுத்து வந்த உணவை சரியாக பங்கு பிரித்து மகிழ்வாக உண்டு, இல்லத்தில் #இடமில்லாததால் பாண்டவர் #தலைப்பக்கத்தில் குந்தி தேவி படுத்துறங்க #குசப்புற்கள் மீது மான் தோல் விரித்து பாண்டவர்கள் #கால்மாட்டில் படுத்துறங்கிய அன்னை பாஞ்சாலியின் பெருமை சொல்லி மாளாது.

😡TRP Rating-க்காக தொலைகாட்சி தொடரில் காட்டப்படும் #உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளை வைத்து பல காலங்களாக #இந்தியாவில் ஏன் #தமிழகத்தில் கூட பல இடங்களில் கோவில் கட்டி வணங்கிய திரௌபதி தேவியை விமர்சிப்பது முட்டாள்தனமாகும்.

அடுத்த பதிவில் கர்ணனுக்கு நிகழ்ந்த விஷயங்கள் பிறப்பினால் வந்த பாகுபாட்டினாலா என்பதைத் தெளிவாகக் காணலாம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!🙏🙏🙏





பாகுபாடில்லா பாரதம் - 3

 #பாகுபாடில்லா_பாரதம் - 3


முந்தைய பதிவு


இப்பதிவில் சில இனக்குழுக்களையும் #ஏகலைவனைப் பற்றியும் காண்போம்.

💐#யாதவர்கள்:

யயாதி #சாபத்தால் யாதவர்களுக்கு அரியணை இல்லை என்பது அறிந்ததே. இதனால் ஒரு பகுதியினர் மாடு #மேய்பவராக இருக்க அங்கு அவதரித்தவரே #ஸ்ரீகிருஷ்ணர்.

🌸 #மிலேச்சர்கள்:

👉பொதுவாக இவர்கள் #அயல்நாட்டவர்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால் கடற்கரை மற்றும் தீவில் வாழ்ந்த ஒரு வகை #பழங்குடியினர்களும் மிலேச்சர்களாக அறியப்பட்டனர்.
👉இவர்கள் இராஜசூய யாகத்திலும் குருசேத்திர யுத்தத்திலும் பலமுறை குறிப்பிடப்படுகின்றனர்.
👉 நரகாசுரன் மகனான பகதத்தனின் ஆதரவாளர்களாக அவர்கள் இருந்தனர்.

🌺 #கிராதர்கள்:

🏔️இவர்கள் #மலைவாசிகளாக கருதப்படுகின்றனர். திக் விஜயத்தில் அர்ஜுனன் பற்பல #கிராத கூட்டங்களை வெல்ல இராஜசூயத்தில் இம்மன்னர்கள் கலந்துகொள்கின்றனர்.

🏔️இதனால் தான் ஈசனின் #மலைவாசி வடிவம் கிராதர் என்று அழைக்கப்படுகிறது.
🏔️ஈசன் அர்ஜுனனுக்கு வைத்த பரீட்சையின் போது #கிராதர்களை அடிக்கடி மலைப்பகுதியில் கண்டதால் தான் அர்ஜுனனால் முதலில் வேறுபாடு காண முடியவில்லை.

🏔️ பகதத்தனே மொத்த #கிராதர்களின் அரசன் என மஹாபாரதம் உரைக்கிறது. குருஷேத்திரத்தில் கிராதர்கள் மற்றும் சில இனக்குழுக்கள் உடைய ஒரு அக்ரோணி சேனை படையை துரியோதனனுக்கு அளிக்கிறான் #பகதத்தன்...

🏔️ பாஞ்சாலி #சுயம்வரத்திலும் பகதத்தன் கலந்து கொண்டான்.

🌻#நிஷாதர்கள்:

🌴இவர்கள் #காட்டுவாசிகளை சேர்ந்தவர்கள். இவ்வகை அரசர்களை அர்ஜுனன் மற்றும் பீமன் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெல்கின்றனர்.
🌴இவர்களில் ஒரு கூட்டத்தின் அரசனே #ஏகலைவன் .ஏன் புகழ்பெற்ற நள தமயந்தி கதையில் வரும் #நளன் கூட நிஷாத அரசனே.

🌹#கள்வர்கள்:

🌺கூட்டம் கூட்டமாய் வாழும் கள்வர்களை அர்ஜுனன் போரில் அடக்குகிறான். இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். குருசேத்திரத்தில் #கௌரவர் பக்கம் நிற்கின்றனர்.

🐟 #மத்யஸ்யர்கள்:

🐠 சத்யவதியுடன் பிறந்த இரட்டை சகோதரனே மத்யஸ்தன்.
#மீனவ குலத்தை சேர்ந்த இவர் பின்னாளில் மத்யஸ்ய #தேசத்தை உருவாக்கினார். இதன்பின் மீனவனின் தேசம் வளர்ச்சிடைந்து பெரும்நாடானாது.

☝மேற்கூறியன யாவும் சில #எடுத்துகாட்டுகளே. இவ்வாறே பற்பல பழங்குடி கூட்டங்கள் தங்களுக்கென இராஜ்யம் மற்றும் அரசர்கள் உடன் வாழ்ந்து வந்தனர்.

👑நகரத்திற்கு வராத காட்டுவாசிகள், மலைவாசிகளுக்கு கூட ஒருவன் அரசன் என இருந்ததுடன் அவனும் மற்ற அரசர்களோடு சமமாக பாவிக்கப்பட்டான்.

👑ஒரு இராஜ்யம் என்றிருந்தால் அங்கே விவசாயிகள், வணிகர்கள், வைத்தியர்கள், போர்வீரர்கள், தேரோட்டுபவர்கள், யானை பாகர்கள் என அனைவரும் இருக்க வேண்டும்.
👑 இது காட்டுவாசிகளுக்கும், மலைவாசிகளுக்கும் கூட பொருந்தும். சரியான ஒரு கட்டமைப்பு மூலம் அவர்கள் தேசமும் மற்றவர்களை போல வளர்ச்சியுற்றது. அவர்களையும் #இணைப்பதால் மட்டுமே இராஜசூயம் வெற்றியுடையதாக கருதப்படும்.

👑அவ்வாறே அரசன் என்பவன் எந்த இனத்தை சேர்ந்தவனாகவும் இருந்தான். ஒரு வம்சம் மட்டுமே #மேலோங்காமல் அனைவரின் வளர்ச்சியும் அங்கு #சமமாக மேலோங்கி இருந்தது.

👑 #இப்போது_ஏகலைவன்_விஷயத்திற்கு வருவோம்....

♦நிஷாதர்கள் என்றால் காட்டுவாசிகள் என்று பார்த்தோம் அப்படி ஒரு நிஷாத அரசன் #ஹிரண்யதனுசுவின் மகனே ஏகலைவன்.

♦தனது மருமகன் கம்சனைக் கொன்றதால் கிருஷ்ணனை அழிக்க #ஜராசந்தன் கட்டிய மனக்கோட்டையில் ஏகலைவன் ஒரு பெரும் #தூண் என்றால் மிகையாது.
♦ஜராசந்தனின் படையுடன் தன் படையை இணைத்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை ஜராசந்தன் படையெடுத்தபோதும் அவனுக்கு #துணையாக சென்றவன் ஏகலைவன்.

👑இராஜசூய யாகத்தில் நிஷாத அரசன் என்ற வகையில் #யுதிஷ்டிரனுக்கு காலணியை பரிசாக அளிக்கிறான்.

♦ஜராசந்தனுடன் இருந்த சிசுபாலன் மற்றும் தண்டவக்கிரன் ஆகியோர் பழிதீர்க்க கிருஷ்ணனிடம் மோதுவது போல கிருஷ்ணனிடம் மோதி #அழிகிறான் ஏகலைவன்.
♦குருசேத்திர போரில் பத்திற்கும் மேற்பட்ட இடத்தில் நிஷாத வீரர்கள் தென்படுகின்றனர். அவ்வாறே #அஸ்வமேதயாகத்தில் ஏகலைவனின் மகன் அர்ஜுனனை எதிர்க்கிறான்.

👉இதற்கு பின் சொல்லுங்கள் ஏகலைவன் என்பவன் #தாழ்த்தப்பட்டவனா??.???.

♦அவன் ஒரு அரசன்.
இராஜசூய யாகத்திலும் அஸ்வமேத யாகத்திலும் #மதிக்கப்பட்ட அரசன்.
#வீரத்தால் கிருஷ்ணனையே எதிர்த்தவன்.

♦ஏகலைவன் தாழ்ந்தவன் என்ற பட்சத்தில் அவனிடம் கேட்ட தட்சணை பாகுபாடாக இருக்கலாம். ஆனால் #அரசன் என்னும் வகையில் அங்கு பிறப்பால் உயர்வு, தாழ்வு #காட்டப்படவில்லை என்பதே நிஜம்.

👉மேலும் ஏகலைவன் குருகுலம் வந்த அதே நேரம், அவன் ஏற்ற தரப்பிலேயே ....
ஜராசந்தன்
நரகாசுரன்
பகதத்தன்
பாணாசுரன்
என தேவர்களாலே வெல்லப்பட முடியாத பற்பல அதிரதர்கள் இருந்தார்கள். எனில் அவன் கொண்ட #கூட்டணியில் இல்லாத வில் வித்தையா? இல்லை அஸ்திரமா?

👉இவ்வளவு ஏன் #அதே தரப்பிலிருந்த பீஷ்மகனின் மகனான ருக்மி காண்டீபத்திற்கும் சாரங்கத்திற்கும் இணையான வில்லை தனது குருவிடம் இருந்து பெற்றான் எனில் அவர் எத்தகைய குரு.
👉 அதெல்லாம் தாண்டி #எதிரியின் தேசத்திற்கு வர ஏகலைவனுக்கு என்ன அவசியம்?

🌟கிருஷ்ணனோ, ஏகலைவனை #கொல்லப்படாமல் இருந்து இருந்தால் துரியோதனன் தரப்பை ஏற்று இருப்பான் அதனாலேயே என்னால் #கொல்லப்பட்டான் என்கிறார்.

🌺சரி இப்பதிவு பிறப்பினால் பாகுபாடு இல்லை என்பதை மட்டுமே சொல்லவிளைவதால் இது போதும் என நினைக்கிறேன்.

👉ஏகலைவனுக்கு நிகழ்ந்தது நியாயமா இல்லையா என உரைக்க பல #பதிவுகள் உள்ளன. இங்கு அதை விளக்கினால் பதிவு நீளுமே தவிர தலைப்பிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை...

✨இனி அடுத்து வரும் பதிவில் பாஞ்சாலி சுயம்வரத்தில் நிகழ்ந்தவை பாகுபாட்டினாலா என்பதைப் பற்றி காணலாம்.