Monday, May 17, 2021

பாகுபாடில்லா பாரதம் - 3

 #பாகுபாடில்லா_பாரதம் - 3


முந்தைய பதிவு


இப்பதிவில் சில இனக்குழுக்களையும் #ஏகலைவனைப் பற்றியும் காண்போம்.

💐#யாதவர்கள்:

யயாதி #சாபத்தால் யாதவர்களுக்கு அரியணை இல்லை என்பது அறிந்ததே. இதனால் ஒரு பகுதியினர் மாடு #மேய்பவராக இருக்க அங்கு அவதரித்தவரே #ஸ்ரீகிருஷ்ணர்.

🌸 #மிலேச்சர்கள்:

👉பொதுவாக இவர்கள் #அயல்நாட்டவர்கள் என்ற கருத்து உள்ளது. ஆனால் கடற்கரை மற்றும் தீவில் வாழ்ந்த ஒரு வகை #பழங்குடியினர்களும் மிலேச்சர்களாக அறியப்பட்டனர்.
👉இவர்கள் இராஜசூய யாகத்திலும் குருசேத்திர யுத்தத்திலும் பலமுறை குறிப்பிடப்படுகின்றனர்.
👉 நரகாசுரன் மகனான பகதத்தனின் ஆதரவாளர்களாக அவர்கள் இருந்தனர்.

🌺 #கிராதர்கள்:

🏔️இவர்கள் #மலைவாசிகளாக கருதப்படுகின்றனர். திக் விஜயத்தில் அர்ஜுனன் பற்பல #கிராத கூட்டங்களை வெல்ல இராஜசூயத்தில் இம்மன்னர்கள் கலந்துகொள்கின்றனர்.

🏔️இதனால் தான் ஈசனின் #மலைவாசி வடிவம் கிராதர் என்று அழைக்கப்படுகிறது.
🏔️ஈசன் அர்ஜுனனுக்கு வைத்த பரீட்சையின் போது #கிராதர்களை அடிக்கடி மலைப்பகுதியில் கண்டதால் தான் அர்ஜுனனால் முதலில் வேறுபாடு காண முடியவில்லை.

🏔️ பகதத்தனே மொத்த #கிராதர்களின் அரசன் என மஹாபாரதம் உரைக்கிறது. குருஷேத்திரத்தில் கிராதர்கள் மற்றும் சில இனக்குழுக்கள் உடைய ஒரு அக்ரோணி சேனை படையை துரியோதனனுக்கு அளிக்கிறான் #பகதத்தன்...

🏔️ பாஞ்சாலி #சுயம்வரத்திலும் பகதத்தன் கலந்து கொண்டான்.

🌻#நிஷாதர்கள்:

🌴இவர்கள் #காட்டுவாசிகளை சேர்ந்தவர்கள். இவ்வகை அரசர்களை அர்ஜுனன் மற்றும் பீமன் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெல்கின்றனர்.
🌴இவர்களில் ஒரு கூட்டத்தின் அரசனே #ஏகலைவன் .ஏன் புகழ்பெற்ற நள தமயந்தி கதையில் வரும் #நளன் கூட நிஷாத அரசனே.

🌹#கள்வர்கள்:

🌺கூட்டம் கூட்டமாய் வாழும் கள்வர்களை அர்ஜுனன் போரில் அடக்குகிறான். இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். குருசேத்திரத்தில் #கௌரவர் பக்கம் நிற்கின்றனர்.

🐟 #மத்யஸ்யர்கள்:

🐠 சத்யவதியுடன் பிறந்த இரட்டை சகோதரனே மத்யஸ்தன்.
#மீனவ குலத்தை சேர்ந்த இவர் பின்னாளில் மத்யஸ்ய #தேசத்தை உருவாக்கினார். இதன்பின் மீனவனின் தேசம் வளர்ச்சிடைந்து பெரும்நாடானாது.

☝மேற்கூறியன யாவும் சில #எடுத்துகாட்டுகளே. இவ்வாறே பற்பல பழங்குடி கூட்டங்கள் தங்களுக்கென இராஜ்யம் மற்றும் அரசர்கள் உடன் வாழ்ந்து வந்தனர்.

👑நகரத்திற்கு வராத காட்டுவாசிகள், மலைவாசிகளுக்கு கூட ஒருவன் அரசன் என இருந்ததுடன் அவனும் மற்ற அரசர்களோடு சமமாக பாவிக்கப்பட்டான்.

👑ஒரு இராஜ்யம் என்றிருந்தால் அங்கே விவசாயிகள், வணிகர்கள், வைத்தியர்கள், போர்வீரர்கள், தேரோட்டுபவர்கள், யானை பாகர்கள் என அனைவரும் இருக்க வேண்டும்.
👑 இது காட்டுவாசிகளுக்கும், மலைவாசிகளுக்கும் கூட பொருந்தும். சரியான ஒரு கட்டமைப்பு மூலம் அவர்கள் தேசமும் மற்றவர்களை போல வளர்ச்சியுற்றது. அவர்களையும் #இணைப்பதால் மட்டுமே இராஜசூயம் வெற்றியுடையதாக கருதப்படும்.

👑அவ்வாறே அரசன் என்பவன் எந்த இனத்தை சேர்ந்தவனாகவும் இருந்தான். ஒரு வம்சம் மட்டுமே #மேலோங்காமல் அனைவரின் வளர்ச்சியும் அங்கு #சமமாக மேலோங்கி இருந்தது.

👑 #இப்போது_ஏகலைவன்_விஷயத்திற்கு வருவோம்....

♦நிஷாதர்கள் என்றால் காட்டுவாசிகள் என்று பார்த்தோம் அப்படி ஒரு நிஷாத அரசன் #ஹிரண்யதனுசுவின் மகனே ஏகலைவன்.

♦தனது மருமகன் கம்சனைக் கொன்றதால் கிருஷ்ணனை அழிக்க #ஜராசந்தன் கட்டிய மனக்கோட்டையில் ஏகலைவன் ஒரு பெரும் #தூண் என்றால் மிகையாது.
♦ஜராசந்தனின் படையுடன் தன் படையை இணைத்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை ஜராசந்தன் படையெடுத்தபோதும் அவனுக்கு #துணையாக சென்றவன் ஏகலைவன்.

👑இராஜசூய யாகத்தில் நிஷாத அரசன் என்ற வகையில் #யுதிஷ்டிரனுக்கு காலணியை பரிசாக அளிக்கிறான்.

♦ஜராசந்தனுடன் இருந்த சிசுபாலன் மற்றும் தண்டவக்கிரன் ஆகியோர் பழிதீர்க்க கிருஷ்ணனிடம் மோதுவது போல கிருஷ்ணனிடம் மோதி #அழிகிறான் ஏகலைவன்.
♦குருசேத்திர போரில் பத்திற்கும் மேற்பட்ட இடத்தில் நிஷாத வீரர்கள் தென்படுகின்றனர். அவ்வாறே #அஸ்வமேதயாகத்தில் ஏகலைவனின் மகன் அர்ஜுனனை எதிர்க்கிறான்.

👉இதற்கு பின் சொல்லுங்கள் ஏகலைவன் என்பவன் #தாழ்த்தப்பட்டவனா??.???.

♦அவன் ஒரு அரசன்.
இராஜசூய யாகத்திலும் அஸ்வமேத யாகத்திலும் #மதிக்கப்பட்ட அரசன்.
#வீரத்தால் கிருஷ்ணனையே எதிர்த்தவன்.

♦ஏகலைவன் தாழ்ந்தவன் என்ற பட்சத்தில் அவனிடம் கேட்ட தட்சணை பாகுபாடாக இருக்கலாம். ஆனால் #அரசன் என்னும் வகையில் அங்கு பிறப்பால் உயர்வு, தாழ்வு #காட்டப்படவில்லை என்பதே நிஜம்.

👉மேலும் ஏகலைவன் குருகுலம் வந்த அதே நேரம், அவன் ஏற்ற தரப்பிலேயே ....
ஜராசந்தன்
நரகாசுரன்
பகதத்தன்
பாணாசுரன்
என தேவர்களாலே வெல்லப்பட முடியாத பற்பல அதிரதர்கள் இருந்தார்கள். எனில் அவன் கொண்ட #கூட்டணியில் இல்லாத வில் வித்தையா? இல்லை அஸ்திரமா?

👉இவ்வளவு ஏன் #அதே தரப்பிலிருந்த பீஷ்மகனின் மகனான ருக்மி காண்டீபத்திற்கும் சாரங்கத்திற்கும் இணையான வில்லை தனது குருவிடம் இருந்து பெற்றான் எனில் அவர் எத்தகைய குரு.
👉 அதெல்லாம் தாண்டி #எதிரியின் தேசத்திற்கு வர ஏகலைவனுக்கு என்ன அவசியம்?

🌟கிருஷ்ணனோ, ஏகலைவனை #கொல்லப்படாமல் இருந்து இருந்தால் துரியோதனன் தரப்பை ஏற்று இருப்பான் அதனாலேயே என்னால் #கொல்லப்பட்டான் என்கிறார்.

🌺சரி இப்பதிவு பிறப்பினால் பாகுபாடு இல்லை என்பதை மட்டுமே சொல்லவிளைவதால் இது போதும் என நினைக்கிறேன்.

👉ஏகலைவனுக்கு நிகழ்ந்தது நியாயமா இல்லையா என உரைக்க பல #பதிவுகள் உள்ளன. இங்கு அதை விளக்கினால் பதிவு நீளுமே தவிர தலைப்பிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை...

✨இனி அடுத்து வரும் பதிவில் பாஞ்சாலி சுயம்வரத்தில் நிகழ்ந்தவை பாகுபாட்டினாலா என்பதைப் பற்றி காணலாம்.


பாகுபாடில்லா பாரதம் - 2

 #பாகுபாடில்லா_பாரதம் - 2


முந்தைய பதிவு


வர்ணம் என்பது தொழிலை வைத்தே வருவது பிறப்பால் அல்ல என போன பதிவில் பார்த்தோம்.

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும், எப்படி வாழக்கூடாது என்பதையும் படிப்பவர் நெஞ்சிலே பசுமரத்தாணி போலே பதியச்செய்ய வல்லது மஹாபாரதம். அப்படிப்பட்ட பாரதம் உண்மையில் பிறப்பினால் வரும் வர்ண பாகுபாட்டை ஆதரிக்கிறதா?

ஒரு அரசனுக்கு சேவகனாக இருக்கும் சூத்திரன் வளமாய் இருப்பான். ஆனால் துறவு பூண்டு யாரும் ஆதரிக்காத நிலையிலுள்ள ஒரு பிராமணன் வறுமையில் வாட வேண்டும். இதில் எங்கிருந்து வந்தது பாகுபாடு?

பாரதத்தை எழுதிய கிருஷ்ண துவைபாயனரே ஒரு மீனவ பெண்ணின் மகன் என்பதை அனைவரும் அறிவர்.
அவர் எழுதிய பாரதத்தில் பலதரப்பட்ட இடைசொருகலுக்கு பின்னும் இன்றும் வர்ண பாகுபாடுகளை உடைக்கும் குறிப்புகள் உள்ளன.

காலமும் கற்பனையும் ஒரு சமூக கட்டமைப்பை மாற்ற, அதை வைத்து எப்படி அரசியல் நடத்துகிறார்கள் என காண்போம்.

"ஒருவன் பிராமணன் வீட்டில் பிறந்து இருந்தாலும் வேதங்களை படிக்காத வரை அவன் சூத்திரனனே! தூயவிதிகளுக்கும்,
அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே பிராமணனாக அறிவிக்கிறேன்!"
என நகுஷனின் கேள்விக்கு பதிலளிக்கிறார் யுதிஷ்டிரர். (3.179)

ஞானமுள்ளவனே பிராமணன் அவனது பிறப்பு முக்கியமல்ல. ஞானமுள்ளவன் யாராய் இருந்தாலும் ஏன் சூத்திரனாய் இருந்தாலும் அவனிடம் ஞானத்தைப் பெறுவதே தகும். (12.319)

ஒரு நல்ல அரசன்

4 பிராமணர்கள்
8 சத்ரியர்கள்
21 வைஸ்யர்கள்
3 சூத்திரர்கள்

மற்றும் ஒரு ஞானமுள்ள சூதனை அமைச்சர்களாக வைத்திருக்க வேண்டும் என யுதிஷ்டிரனுக்கு அறிவுறுத்துகிறார் பீஷ்மர்.(12.85)

ஒரு பிராமணன் தனது நிலையிலிருந்து தவறி கடமைகளை மறந்தால் அவன் சூத்திரனின் நிலையையும் அடையக்கூடும். இதையே பிருகு பரத்வாஜரிடம் கூறுகையில், "பிரம்மனால் படைக்கப்பட்ட உலகில் அனைவருமே பிராமணர்களாகவே இருந்தனர். ஆசைப்பண்பு, கடுமை மற்றும் கோபம் கொண்ட பிராமணர்களே சத்ரியர்கள் ஆகினர். நற்பண்பு ஆசைப்பண்பு இரண்டும் கொண்டு கடமையில் தவறியவர்கள் வைஸ்சியர்கள் ஆயினர்.
அவ்வாறே ஒழுக்கம் தவறி பேராசை கொண்ட பிராமணன்களே சூத்திரர்கள் ஆயினர்" என்றார். (12.188)

இதையே கிருஷ்ணன் கீதையில் குணங்களின் வேறுபாட்டாலும் கடமையின் வேறுபாட்டாலும் நான்கு வர்ணங்களை படைத்தேன் என உரைக்கிறார்.(4.13)

பைஜவனன் என்ற சூத்திரன் யாகத்தில் லட்சம் பூர்ண பாத்திரங்களை பிராமணர்களுக்கு தானம் அளித்துள்ளான். (12.60)

அவ்வாறே அதிக செல்வம் இருந்தும் அநியாய வட்டி பணம் வசூலித்த சூத்திரனும் இருந்துள்ளான்.(13.117)

பித்ருக்களுக்கு உரிய சடங்குகளை துறவி மூலம் கற்று முறையாக இயற்றி அடுத்த பிறவியில் அரசனாக அவதரித்த சூத்திரனும் உள்ளான்.(13.10)

இராஜசூய யாகத்தில் யுதிஷ்டிரனுக்கு பரிசு கொண்டு காத்திருந்த சூத்திர மன்னர்களும் உண்டு. (2.50)

ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம் என ஞானம் பெறவந்த கௌசிகரிடம் தர்மவியாதன் எனும் வேடன் உரைக்கிறான் . (3.211)

அவ்வளவு ஏன் அதர்மம் தலைவிரித்து ஆடுகையில் நாட்டை காத்து எவன் ஒருவன் தர்மத்தை ஸ்தாபிக்கிறானோ அவன் சூத்திரனாக இருந்தாலும் அரசனாகத் தகுந்தவனே என பீஷ்மரே யுதிஷ்டிரனுக்கு உரைக்கிறார்.(12.78)

க்ஷத்திரியர்கள் என்றழைக்கப்படும் அதிரதர்கள், அம்பஷ்டர்கள், உக்கிரர்கள், வைதேஹகர்கள், ச்வபாகர்கள், புக்கஸர்கள், ஸ்தேநர்கள், நிஷாதர்கள், ஸூதர்கள், மாகதர்கள், அயோகர்கள், காரணர்கள், விராத்தியர்கள், சண்டாளர்கள் ஆகியோர் அனைவரும் உண்மையில் இருந்த நான்கு வகையினர் ஒருவரோடொருவர் கலந்ததால் எழுந்தவர்களாவர் என ஜனகரிடம் உரைக்கிறார் பராசரர். (12.297)

இவ்வளவு ஏன் தேவர்களில் கூட ஆதித்யர்கள் சத்ரியர்களாகவும்
மருத்துக்கள் வைஸ்யர்களாகவும் கடும் தவங்களில் இருப்பவர்களும் சூரியனின் மைந்தர்களுமான அஸ்வினி தேவர்கள் சூத்திரர்களாகவும் அறியப்படுகின்றனர்.(12.208)

பிறப்பால் வரும் வர்ணத்தை வைத்து ஒதுக்கப்படுவார்களே ஆனால் புராண இதிகாசங்கள் நல் கருத்துக்களை கூறாமல் வெறும் பிராமணர்களை பற்றி மட்டுமே கூறி இருக்க வேண்டும்.

ஒழுக்கம் இழந்து தவறான பாதையில் சென்ற பிராமணன் சூத்திரனாக்கப்பட்டான்.

ஒரு அரசன் விதிவசத்தால் நாடிழந்து வேறுவழியில்லாமல் சிறு வேலைகளை செய்தால் அவன் சூத்திரனே!

அவ்வாறே ஒரு சூத்திரன் வீரத்தால் முன்னேறி தளபதி ஆகி பின் குறிப்பிட்ட பகுதிக்கு அரசனானால் அவன் சத்ரியனே!
அவனே தவதுறவில் சிறந்து வேதங்களை கற்று சுய ஒழுக்கத்தில் சரியாய் இருந்தால் பிராமணன்!

சத்ரியர்களாய் பிறந்து வாழ்வை வெறுத்து துறவியானவர்களும் உண்டு...

பிராமணனாய் பிறந்து வீரத்தால் அரசர்கள் ஆனவர்களும் உண்டு...

அடுத்து வரும் பதிவில் சில இனக்குழுக்களை பற்றியும் ஏகலைவனை பற்றியும் பார்ப்போம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏


பாகுபாடில்லா பாரதம் - 1

 பாகுபாடில்லா பாரதம் - 1


விநாயகர் காயத்ரி

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்:

பாகுபாடு என்றொரு வார்த்தையைக் கேட்ட பொழுதினில் நம் எண்ணங்கள் விரிந்து வர்ணத்திற்கு சென்று விடும் .
பிராமணன் தலையில் பிறந்தான் சத்திரியன் தோளில் பிறந்தான் வைஷியன் தொடையில் பிறந்தான் சூத்திரன் பாதத்தில் பிறந்தான்
என்று மனது எங்கெல்லாமோ சென்று இருக்கும் .

நமது இதிகாச புராணத்தை உற்று நோக்கின் படைப்பை பற்றி இரு விஷயங்கள் புலப்படும்.

ஒன்று சிருஷ்டியின் தோற்றம்:

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேரந்தது ஒரு சதுர்யுகம்.

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம் 

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல் 

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்

360 நாட்கள் ஒரு வருடம் இதே போல் 100 வருடங்கள் கொண்டது ஒரு பிரம்மனின் ஆயுள் .

இதில் ஒரு மன்வந்திரத்திற்கு ஒரு முறை வரும் பிரளயத்தில் 3 லோகங்கள் மட்டுமும் , கல்ப முடிவில் வரும் பிரளயத்தில் மொத்தமும் அழியும் .

ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் புண்ணிய கணக்குப்படி ஒரு மனு தலைவனாக இருப்பான் . அவ்வாறே சப்தரிஷிகள், இந்திரன், தேவர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மாறுவார்கள்.

இத்தனை பேரின் பெயர்கள், ஏன் செடி கொடிகளில் துவங்கி பாம்புகள் வரை ஒவ்வொருவரும் எப்படி படைக்கப்பட்டனர் என்பது வரை நமது இதிகாச புராணங்களில் தெளிவாக உள்ளது.

இப்பொழுது அடுத்த தகவல் பற்றி வரலாம்.

நான்கு வர்ணங்களும் புருஷன் அல்லது பிரம்மனில் இருந்து நேரடியாக தோன்றிவிட்டன என்பதற்கு முன்பும் எந்த தகவலும் இல்லை அதன் பின்னும் ஒன்றும் இல்லை. இரண்டையும் ஒப்பிட்டால் தானாக தெரியும் எது சரி எது தவறு என்று 

(அது ஒரு சமூகத்தின் கட்டமைப்பும் என்றும், பிராமணனுக்கு அறிவு அதனால் தலையில் தோற்றம், சத்ரியனுக்கு புஜபலம் அதனால் கைகளில் இருந்து தோற்றம் இவ்வாறு ஒவ்வொரு வர்ணமும் உவமை கொண்டு சொல்லப்பட்டது என கூறுபவர்களும் உண்டு)

இதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் , நமக்கு கிடைத்த நூல்கள் அனைத்தும் பல்வேறு பட்ட இடைச்செருகல்களுக்கு பின்பு கிடைத்தது தான். இன்று சட்டத்திருத்தம் செய்து அதை அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்றுவது போல இதிகாச புராணங்களை அடிப்படையாகக் கொண்டு அதைச் சட்டமாக்கி வாழ்ந்த காலத்தில் சில மாற்றங்களை சேர்த்தனர். அவைகளில் ஒன்று தான் வர்ண கோட்பாடு .

குறிப்பிட்ட சிலர் தங்கள் இனம், தங்கள் சந்ததி உயர்ந்து இருக்க சிலரை வஞ்சம் தீர்க்க இடையில் சேர்த்தது தான் இந்த வர்ணப்பாகுபாடு. பின்னால் நடக்கப்போகும் விபரீதங்களை அறியாமல் சுயநலத்தால் அவர்கள் இணைத்த இது பின்னாளில் விஸ்வரூபம் எடுத்தது. அது அடுத்து நம்மை ஆள படையெடுத்த முகலாயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் யானையை அடக்கும் அங்குசமாகியது .
உங்கள் சமய நூல்களின் சட்டத்தை வைத்தே உங்களை ஆள்வோம் என வர்ணாஸ்சிரமத்தை தூக்கி பிடித்தனர்.
அதை வைத்தே நீங்கள் தாழ்ந்தவர்கள் உங்களுக்கு உரிமை வேண்டுமானால் மதம் மாறுங்கள் என பலரை மதமாற்றம் செய்தனர்.

சரி உண்மையில் வர்ணம் என்றால் என்ன?

ஒரு நிறுவனத்திற்கு ,

▫️தலைவர் 
▫️திட்டமிடுபவர்கள் 
▫️மேற்பார்வையாளர்கள் 
▫️தொழிலாளர்கள் 
என அவர்களின் பொறுப்பிற்கேற்றவாறு பெயர்கள் இருப்பது போல அவர்களின் தொழில் சார்ந்த பெயர் தான் இந்த வர்ணம் . ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்ந்து அடிமையாகவே இருக்க வேண்டும் எங்கும் உரைக்கப்படவில்லை என்பதே உண்மை.

வேதம் படித்து அனுஷ்டானங்களை சரியாக கடைப்பிடித்தவன் பிராமணன் ஆனான் .

வீரத்தில் சிறந்து படையில் சேர்ந்தவன் சத்ரியன் ஆனான் .

வணிகம் செய்யும் அளவு சாமர்த்தியம் கொண்டவன் வைஸ்சியன் ஆனான் .

எதிலும் சேராமல் இவர்களின் வேலை செய்பவன் சூத்திரன் ஆனான் .

ஆனால் இது மருவி வர்ணத்தை அடிப்படையாக்கியது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வர்ணத்தின் தர்மங்கள் இன்னதென பெரும் ஞானிகளே கேட்டு அதற்கு உயர்ந்தவர் சொல்வது போல அனைத்திலும் திணித்தனர் .
(உமா தேவி கேட்டு ஈசன் விடையளிப்பது போல கூட உள்ளது).

எனில் இந்து மதத்தில் வர்ணங்களே இல்லையா? என்றால் இருந்தது ஆனால், அது ஒருவரின் குணம் மற்றும் தொழிலின் அடிப்படையில் முடிவு செய்யப்ட்டது.

பல அறிஞர்கள் தெளிவாக கூறியும் பல ஆராய்ச்சி கட்டுரைகள் ஆணித்தரமாக அடித்துக் கூறியும் அரசியலுக்காக அனைத்தும் மறுக்கப்பட்டு அதை வைத்தே ஆளவும் நினைக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை எதுவும் தெரியாது செம்மறியாடுகள் போல யாரோ ஒருவன் சொல்வதை அப்படியே சொல்வார்கள்.

இதிகாச புராணங்கள் ஒன்று விடாமல் ஒவ்வொரு விசயமாக ஆராய்ந்து பார்த்து பாகுபாடு இல்லை என பதிவிட ஆசை.... ஆனால் அட்ஷய பாத்திரம் போல எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கிறது.

ஆதலால் இருப்பதிலேயே பெரியதும், வேதங்களை தொகுத்த வியாசர் சொல்ல விநாயகர் எழுதிய மஹாபாரதத்தை மட்டும் கொண்டு இதை விளக்க முற்படுகிறேன். ஏனெனில் மஹாபாரதத்தில் இல்லாத விஷயங்களே இல்லை ஆகையால் தான் இன்றும் பாரதத்தை ஐந்தாம் வேதம் என்று அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பாத்திரமும் சில குணங்களை பிரதிபலிக்கின்றன. அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளைக் காட்டி பாடம் நடத்துவதில் மஹாபாரதத்திற்கு ஈடு இணையே இல்லை.

இனிவரும் பதிவுகளில் மஹாபாரதத்தைக் கொண்டு வர்ணாஸ்சிரம் பற்றிய விளக்கம் வரும்.


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் படிப்பவர் நெஞ்சிலே பசுமரத்தாணி போலே பதியச்செய்ய வல்லது மஹாபாரதம். அது வர்ணாசிரமத்தை பற்றி என்ன கூறுகிறது? வர்ணத்தின் பேரால் வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிய வழிவகுக்கிறதா என்ன? ஒரு ஆகச்சிறந்த படைப்பின் மீது அள்ளி வீசப்பட்ட குற்றங்களை எல்லாம் துடைத்தெறிய வேண்டாமா! வாருங்கள் காண்போம்!



Monday, April 13, 2020

பாசுபதாஸ்திரம் பெற்று இராவணனையே நடுங்க வைத்த பாண்டியன்



கவிஞர் காளிதாசர் பற்றி நம்மில் பலரும் அறிவோம் அவரின் படைப்புகள் இன்றும் அனைவராலும் போற்றப்படுகின்றனர்
அவ்வாறு அவரது படைப்புகளில் இரகு வம்சம் முக்கியமானது ஆகும்
ஸ்ரீ ராம பிரானின் வம்சமான ரகு வம்சத்தவர்களின் வரலாற்றை சுருக்கமாக கூறுவதே காளிதாசர் இயற்றிய இரகு வம்சமாகும்
இங்கு ஆறாம் சருக்கத்தில் விதர்ப்ப தேச இளவரசியும் தசரத மன்னனின் தாயான இந்துமதியின் சுயம்வரம் பற்றி கூறியுள்ளார் காளிதாசர்
அந்த சுயம்வரத்தில் இந்திமதி ஒவ்வொரு மன்னனின் முன் செல்லும்போதும் அந்த மன்னரை பற்றி உரைக்கிறாள் அவளது பணியாளான சுநந்தை
அவ்வாறு அங்கு சுயம்வரத்தில் பங்கு பெற்றவர்களில் பாண்டிய மன்னனும் ஒருவராவார் அவ்வாறு பாண்டிய மன்னனின் அருகில் வரும்போது அவரின் புகழை உரைக்கிறாள் சுநந்தை
" ஓ தோழி தேவர்களுக்கு சமமான இந்த பாண்டிய மன்னனை பார்
பூணூளிலிருந்து தொங்கும் சிறந்த முத்து மாலை அணிந்தவனும் மலய பர்வதத்தில் விளைந்த சந்தனத்தை பூசியவனான இந்த மன்னன் அருவிகளால் நிறைந்த மலையை போல தென்படுகின்றான்
கடலை முழுவதும் குடித்தவரும்
விந்திய மலையின் வளர்ச்சியை தடுத்தவருமான அகத்திய மாமுனிகள் இம்மன்னன் மீது மிகுந்த பற்றும், அனுக்கிரகமும் கொண்டவராவார்
சிவபெருமானை மகிழ்வித்து பாசுபதாஸ்திரம் பெற்றவனான இந்த பாண்டிய மன்னன் தனது ஜனஸ்தானத்தை (தண்டகாரண்ய வனம் )* அழித்துவிடுவானோ என்றென்னிய இராவணன் பாண்டியனுடன் சமாதானம் செய்தபின்னே இந்திரனை வெல்ல புறப்பட்டான்
(அதாவது இவனது வீரம் இராவணனே அச்சம்கொள்ளும் வகையில் உள்ளது
* தண்ட காரண்ய வனம் பாரத தேசத்தில் இராவணனிற்கு சொந்தமான இடமாகும் )
இரத்தினங்களடங்கிய கடலுடைய இந்த தென்திசை மன்னனை நீ மணந்தால் இவனது பட்டத்து இராணியாகலாம்
பல அற்புத செடிகொடிகளுடைய சிறந்த பர்வதமான மலய பர்வதத்தில் நீ சுகமாக வாழலாம்
கருநிறமுடைய இவ்விளவரசனுடன்
பசுமையான நிறமுடைய நீ கைகோர்த்தால் மேகத்துடன் இருக்கும் மின்னல் போல் பிரகாசிப்பாய் " என்று முடிக்கிறாள் சுநந்தை
மேற்கூறியவை அமைந்தது சமஸ்கிருத காவியமான ரகுவம்சத்தில் அமைந்தவை
இந்த சுயம்வரத்தில் விதர்ப்பதேச இளவரசி இந்துமதி
ரகுவம்சத்தின் அஜமன்னனை தேர்ந்தெடுக்கிறார்
அந்த அஜமன்னனின் மகனே தசரத சக்ரவர்த்தி
தசரத சக்ரவர்த்திக்கு வாரிசு இல்லாமல் பல ஆயிர வருடத்திற்கு பின்னரே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரிக்கிறார்
பாண்டியன் என்பது வேறுப்பெயர் என்று மறுத்தாலும் மலய பர்வதத்தை மறுக்க இயலாது
இராமாயண காலத்தில் இராமேஸ்வர மன்னனுக்கு இராமபிரான் பரிசளித்த இராமபாணம்,
உத்திரகோசமங்கை மீது திப்புசுல்தான் படையெடுத்த போது உதவியதால் புதுக்கோட்டை மன்னனுக்கு அளிக்கப்பட்டு இன்றும் உள்ளது
தென்திசை சென்ற வானர படையின் விவரங்களும்
ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின்போது அங்கு பங்கேற்ற தர்மபிரம்மாவாகிய சோழ ராஜன் பற்றிய குறிப்பும் இன்று காணலாம்
அர்ஜுனனின் மனைவியான சித்ராங்கதை பற்றியும்
பாண்டவ தரப்பிற்கு ஆதரவு அளித்த பாண்டியன் பற்றியும் நாம் அறிவோம்
இவ்வாறே இராமாயண மஹாபாரத காலத்தில் வரும் சேர, சோழ, பாண்டிர்களை பற்றி எவ்வளவோ இன்னும் கூறலாம் ஆனால் மேற்கூறிய பதிவு அதற்கு முன்னும் இருந்த பாண்டியனின் திறனை விவரிப்பது ஆகும்
🙏🙏🙏
ஆதாரம் (தமிழில்)  :
Proof in most authentic English translation :

Tuesday, June 26, 2018

தபோ பலம் எனப்பட்ட மனத்தின் சக்தி - அறிவியல் பார்வை



ஒரு கட்டுகடங்காத சக்தி நம் அனைவருக்குள்ளும் உள்ளது ஆனால் நாம் அனைவருமே அதை சிறுவயதிலேயே நமக்குள்ளே ஒரு கூண்டு கட்டி அடைத்துவிட்டு பதின்பருவத்தால் அதை கரிந்து கொட்டியது உண்டு

வான்தாண்டி நிலவை அடையும் விண்கலத்தை
உடைத்து பிரித்து வீட்டிற்கு கூரை  மேய்வதுபோல

நாம் அனைவரும் செயலிலக்க வைத்த அந்த சக்தியே

" மனிதனின் மனம் "

மனதின் சக்தி எல்லையில்லாதது ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் அதை அறிய தவறிவிட்டோம்

ஆனால் நம் முன்னோர்கள் அறிய தவறவில்லை அவர்களில் முனிவர்களை எடுத்துகாட்டாக்கி சிலவற்றை பார்க்கலாம்

இன்றைய அறிவியலில் ESP அதாவது Extra sensory preception என்ற தலைப்பில் மனதின் பலதரப்பட்ட சக்திகளை படிக்கிறோம் அவைகளில் சில

Telepathy : ஒருவர் மனதில் நினைப்பது நமக்கு தெரியும்

( பல முனிவர்கள் வேண்டியவர்கள் நினைத்த நேரத்தில் காட்சி அளித்துள்ளனர் அவர்களில் முக்கியமானவர் வியாசராவார் மஹாபாரதத்தில் ஒருவர் குழம்பி வியாசரை நினைக்கும் போது பிரசன்னமாவார் ஒருவர் நினைப்பதை அறிந்து கொள்வதே டெலிபதி அவ்வாறே பல மைல் தூரத்திற்கு அப்பாலும் வியாசரால் அறிய முடிந்ததே )

Clear vision : எங்கோ ஒரு இடத்தில் நடப்பதை இங்கிருந்தே மனதால் பார்ப்பது

(இங்கு நான் கூறவேண்டிய அவசியமே இல்லை சஞ்சயனே சிறந்த எடுத்துகாட்டு மேலும் ஒவ்வொரு அவதாரமும் விஸ்வரூபமும் நிகழும்போது முனிகள் அனைவரும் காண்பார்கள் )

Precognition : எதிர்காலத்தை அறிவது
(கல்கி அவதாரம் பற்றி உரைத்தவர்களே சிறந்த உதாரணமாவர் )

Retrocognition : கடந்த காலத்தை அறிவது
(கடந்த காலம் மட்டுமல்ல ஜென்மங்களேயே கூறியுள்ளனர் )

Psychometry : ஒருவரை அல்லது ஒரு பொருளை தொடுவதின் மூலம் அவர்கள் பற்றிய தகவல்களை அறிவது
(பார்வையே போதுமானது )

intuition : ஒரு விசயம் பற்றிய உண்மைகள் திடீரென மனதில் தோன்றும்
(பல முனிவர்கள் குரு இல்லாமல் பல வித்யைகளை கற்றது இவ்வாறே )

மேற்கூறியவற்றில் Telepathy தவிர மற்ற எதையும் நிகழ்காலத்தில் எவரும் செயல் படுத்தவில்லை

எனில் முனி புங்கவர்கள் மனதின் சக்தியை சரியாக பயன்படுத்தினார்களா என்றால் ஆம் தங்களின் கடின தவங்களால் அடைந்த மனவளர்ச்சியை செவ்வனே பயன்படுத்தினர் என்பதே உண்மை

இன்று மனிதர்கள் அடைந்த உச்சமானது என்னவென்றால் காற்றில் உள்ள சக்தியை பிரித்தெடுத்து மற்ற மனிதனுக்கு உள்ள சிறிய உடல்நல குறைபாடுகளை (காய்ச்சல், சோர்வு முதலியவை ) போக்குவதே சுற்றுபுறம் அனைத்திலும் அதிக அளவு சக்தி இருப்பவை மனிதன் தற்போதே உணர தொடங்கியுள்ளான் ஆனால் நம் முன்னோர்களால் சுற்றி உள்ள சக்தியை ஒன்றினைத்து ஒருவரை பஸ்மமாக்க கூட முடிந்தது

வெளியில் உள்ள சக்திக்கே இப்படி என்றால் இன்று பார்க்கும் யுரேனியத்தின் சக்தி போன்ற பெரும் சக்திகளால் அவர்கள் அஸ்திரங்களை உருவாக்கி இருக்கலாம்

பராசரரை பொறுத்த வரை வியாசரின் பிறப்பின் போது சுற்றி இருந்த இடத்தை பனிமூட்டத்தால் மூடினார் எனில் அங்கு அவர் கால சூழ்நிலையையே மாற்றினார் அவ்வகையில் சுற்றியுள்ள வெப்பத்தையும் சூரிய ஒளியின் மூலம் பனி மூட்டம் கலையாத அளவு கட்டுபாட்டுக்குள் வைத்தார்

இதன் தார்ப்பரியம் என்னவெனில் சுற்றியுள்ள சூழ்நிலையையே ஒருவரால் மாற்றமுடியும் அறிவியல்படி காற்றில் உள்ள அணுக்களை விருப்பப்படி மாற்றுவது. இதன் ஆழம் யோசித்தால் விளங்கும் (விஸ்வாமித்ரரால் நட்சத்திரங்களையும் உருவாக்க முடிந்தது)

அவ்வளவு ஏன் முனிவர்களை விடுங்கள் பீஷ்மர் மற்றும் துரோணரே தங்கள் பிராணனை தாங்களே வெளியேற்றவும் செய்தனர்

மேலும் அஷ்டசித்திகளுக்கும் இப்படி அறிவியல் பின்னணி உண்டு வானில் பறப்பது முதல் யாகத்தில் சக்தியை உருவாக்குவது வரை அனைத்தையும் யோசித்தால் விளங்குவது இதுவே

தினமும் செய்யும் 2 நிமிட தியானத்திற்கே எவ்வளவு திறன் உள்ளது என்பதை நாம் அறிவோம் அவ்வகையில் அவர்களின் வருடக்கணக்கான தவத்திற்கு உள்ள சக்தியே இது

இப்பொழுது அல்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இச்சக்தியை நமது விஞ்ஞானத்தால் இதை அறிய இயலாது

மேற்கூறிய அனைத்து கருத்துகளுமே எனது சொந்த கருத்துகளே தவறாக இருப்பின் மன்னிக்கவும்

அறிவியல் ரீதியில் தபோ பலத்திற்கான விளக்கமே மேற்கூறியது



Thursday, June 7, 2018

ஈசனின் தத்துப்பிள்ளை உபமன்யு மஹரிஷி



ஓடி விளையாடும் வயதில் கால்கள் இமயமலை நோக்கி தவம் செய்ய அழைத்து சென்றது அந்த சிறுவனை

சிறுவன் தன்மீது விளையாட இடம் தேடி குடும்பத்தில் இருந்து பிரிந்து பாதை மறந்து திரிகிறானோ என பூமா தேவியை நினைக்க வைத்து

இந்த இளம்பிஞ்சு வெப்பம் தாளாமல் இமயமலை செல்கிறான் போல என அக்னி தேவனை இரங்க வைத்து

இவன் பெற்றோர்களை தேடி இவனை சமர்பிக்க வேண்டும் என வாயுதேவனை மனதில் மும்மூர்த்திகளை ஆராதிக்க வைத்து

பால்மணம் மாறாதவன் பனிமலை நோக்கி பயணித்தான்

சிவனருள் போன ஜென்மத்தில் பெறவில்லையென்பதால் பால் கூட கிட்டாது என அவன் தாய் சொன்னது அவன் மனதில் ஆழமாக உரைத்தது

யார் அந்த சிவன் என கேட்க மகாதேவனை பற்றி அன்னை உரைத்தது அவன் மனதில் முக்கண்ணன் மேல் பக்தி வளர காரணமானது

பால் வேண்டும் என அரற்றி அழுத சிறுவன் சிவனை தெரிந்த உடன் இமயமலையில் கொடுந்தவம் செய்வேன் என கிளம்பி கிட்டதட்ட இமயமலை சேர்ந்தான்

பால் என்ன பாற்கடலையே சிவனிடம்  பெற்றுவருவேன் என சொல்லி புறப்பட்டு இருந்தாலும் அவன் மனம் பாலில் இல்லாமல் பவனிடமே இருந்தது

பக்திக்கு பெயர்போன வியாக்கிர பாதரின் மகன் பஞ்சாட்சரத்தில் தன்னை மறந்து தவமிருக்க துவங்கினான்
வருடங்கள் ஓடியது இளம்பிஞ்சின் தவம் இந்திர லோகத்தையே தகித்தது

இதையெல்லாம் அறியாதவரா சூலபாணி சிறுவனை சோதித்து திருவிளையாடல் நடத்த திருவுள்ளம் கொண்டார்

அம்பிகை இந்திராணியாய் மாற

திரிசூலம் வஜ்ரமாகவும்

நந்திகேஸ்வரன் ஐராவதமாகவும்

கணங்கள் தேவர்களாகவும் மாற

புலித்தோல் உடுத்தியவர் திரிலோக அதிபதியான இந்திரனாய் மாறி உபமன்யுவை அடைந்தார்

" மகனே கண்திற திரிலோக அதிபதி இந்திரன் வந்துள்ளேன் சாம்பல் பூசி இருக்கும் ஈசனை எண்ணி ஏன் தவம்செய்கிறாய்

இதோ தேவர்களின் தலைவன் நான் வந்துள்ளேன் என்னால் தர முடியாதது எதுவும் இல்லை என்னை போற்றி வேண்டுவன எல்லாம் பெறுவாய் " என கூற சிறுவன் தீயில் இட்ட புழுவாய் துடித்தான் சிவதரிசனம் பெற்று புழுவாக வாழ்ந்தாலும் வாழ்வேன் இந்திரா ஆனால் சிவநிந்தனை கேட்டு நீ மூவுலகத்தையும் தந்தாலும் அது துச்சமே

இந்திரனை தூற்றிய அவன் சிவநிந்தனை கேட்ட நான் இனி வாழ தகுதியற்றவன் என தபோ பலத்தினால் அக்னியை வளர்த்து சிவனை தவறாக பேசிய நீ வாழக்கூடாது உன்னை அழித்து பின் நான் தீயில் விழுவேன் என கூறி

ரிஷிகளுக்கே உரியதும் ஈசனின் அஸ்திரமுமான அகோராஸ்திரத்தை இந்திரனாய் இருந்த மகாதேவன் மீது விடுத்து தன் முடிவை அக்னியில் தேட தயாரானான்

அவன் வளர்த்த அக்னி சோமநாதனின் குளிர்ந்த பாதையில் அணைய அவன் ஏவிய அகோராஸ்திரம் நந்தி தேவரால் தடுத்து நிறுத்தப்படுகிறது

கண் சிமிட்டும் நேரத்தில் வஜ்ரதாங்கியாய் இருந்த சூலபாணி தன் சுய ரூபம் காட்ட கனவா நிஜமா என புரியாத சிறுவனாய் ஈசன் பாதம் பணிகிறார் உபமன்யு மகரிஷி

நாயன்மார்களில் கூட சிறு தொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் காட்சி தந்த முக்கண்ணன் உபமன்யு ரிஷிக்கு

இடப்புறம் நாராயணர்

வலப்புறம் பிரம்ம தேவன்

முன் தன் இரு பிள்ளைகள் நிற்க

இந்திரன் முதலான தேவர்கள் புடை சூழ

அவ்வளவு ஏன் ஈசனின் பினாக வில், பாசுபத அஸ்திரம், பரசு ராமருக்கு அளித்த பரசு மற்றும் திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்கள் கூட தங்களின் விஸ்வரூபத்துடன் சூழ்ந்து நிற்க

நந்தி வாகனத்தில் பார்வதி தேவியுடன் பதினாறு புஜங்களுடன் காட்சி தந்தார் கல்பாந்த நர்த்தனர்

பாலகனாய் இருந்தாலும் பக்தியில் தன்னை பனிமழையாய் குளிர வைத்தவனை தன் கரங்களில் ஏந்தி அவனது நெற்றியில் முத்தமிட்ட ஹரன் பின்

" குழந்தாய் இனி நீயும் என் மகனே சிருஷ்டிக்கே தாயான உமாதேவி உனக்கு தாய் ஆவார் உனக்கு என்ன வேண்டுமோ கூச்சப்படாமல் கேள் மகனே

ஆயிரமாயிரம் பால், தயிர், நெய் மற்றும் தேனாலான கடல்கள் உன்னை வந்தடையும்

உனது சொந்தபந்தங்களுடன் அமிர்தம் நிறைந்த பாற்கடலை உண்டு காலம் முழுதும் வாழ்வீர்கள் என்னாலும் உன் சந்ததி அழியாமல் தொடரும்

இனி நீ கடவுளுக்கு நிகரானவனாவாய் முக்காலமும் அறிவாய்

மூப்பு, இறப்பு உன்னை சேராது

எனக்கே உள்ள ஞானம், புனிதம் மற்றும் புகழ் கொண்டவனாய் விளங்குவாய் என மேலும் பத்து வரங்களை அளித்த ஈசன்

இரு கரங்களால் இளைய மகனை பார்வதி அன்னையிடம் தேவி இதோ நம் மகன் என அளிக்கிறார் மகாதேவன்

தன் மகனாய் உபமன்யுவை ஏந்திய அன்னபூரணி தன் பங்கிற்கு மேலும் பல வரங்களை அளிக்கிறார்

பின் எப்போதும் உனது ஆஸ்ரமத்தில் நித்யவாசம் செய்வோம் மேலும் நீ நினைக்கும் நேரத்தில் தரிசனம் தருவோம் என கூறி மறைகிறார் மகாதேவர்

இதன்பின் ஆஸ்ரமத்தில் சிவபூஜையில் தன் வாழ்வை கழிக்கிறார் உபமன்யு ரிஷி இதற்கப்பால் ஈசன் உபமன்யு ரிஷியின் பக்தியால் மேலும் ஆயிரம் வரங்களை அளிக்கிறார்

இதன்பின்பு கிருஷ்ண பகவான் தனக்கு சிவபெருமானின் அம்சமாக ஒரு மகன் வேண்டும் என தவம்செய்ய வருகையில் உபமன்யு ரிஷியின் ஆஸ்ரமத்தில் எட்டு தினங்கள் கழிக்கிறார்

பின் உபமன்யு ரிஷி கிருஷ்ண பகவானுக்கு பாசுபத விரதமுறையை கூறி சிஷை செய்வித்து அனுப்ப அவ்வாறே வரமும் பெறுகிறார்

பின்னாளில் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர் கிருஷ்ணரிடம் சிவ மகிமையை கூறுமாறு வேண்ட உபமன்யு ரிஷி தனக்கு உரைத்த சிவ சகஸ்ர நாமத்தை கூறுகிறார்

இன்றும் உபமன்யு மஹரிஷி முக்கண்ணனை பூஜித்து வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சரி சிறுவனை ஏன் ஈசன் சோதித்தார்

ஒரு வேளை ஈசன் அவ்வாறு சோதிக்கவில்லையென்றால் பாலுக்காக கொடும் தவம் என்றே நாம் கூறி இருப்போம்
உபமன்யு ரிஷிக்கு ஈசனின் மேல் இருந்த பக்தி நமக்கு விளங்கி இருக்காது எதையும் தருவேன் என்றபோதும் சிவனை நிந்தித்த உன்னை அழித்து நானும் அழிவேன் என்பதில் இருக்கிறது ஈசன் மேல் கொண்ட பக்தி

நாம் சிறுபிள்ளையில் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம் ஒரு மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் மற்றும் ஏழு மலைக்கு அப்பால் இருக்கும் ஒரு கிளியுனுள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என

அவ்வாறே ஈசனின் பெரும் அன்பு அவரை போற்றிய அடியார்களிடமே உள்ளது அவர்களை பூஜிப்பது ஈசனுக்கு பெரும் மனமகிழ்வை தரும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை இதை நாயன்மார்களின் வரலாற்றிலேயே தெளிவாக அறியலாம் நாயன்மார்கள் அனைவருமே சிவனடியார்களுக்கு செய்த சேவையே இதற்கு சாட்சி












கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன்


இராஜராஜ சோழ மன்னனின் சிவபக்தியை பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம்

நாம் எங்குமே " பஞ்ச தேக மூர்த்தி " என்ற ஒருவரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம் ஆனால் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டில் பஞ்சதேக மூர்த்தியை அவர் வணங்கியதற்கான கூறுகள் உள்ளன

பஞ்சதேக மூர்த்தி என்பவர் வேறு எவரும் இல்லை ஈசனின் பஞ்ச முகங்களாக கருதப்படும் பஞ்ச பிரம்மன்கள்

 சத்யோஜாதம்,

 வாமதேவர்,

 அகோர மூர்த்தி,

 தத்புருஷம்,

 ஈசானர்

 ஆகிய ஐவரும் ஒன்று சேர்ந்து ஓரே சிலையில் காட்சியளிப்பதே

இத்தகைய சிலை கிட்டதட்ட எந்த ஒரு கோவிலிலும் இல்லை என்றே கூட கூறலாம்
தற்போது இவை பெரிய கோவிலில் இருப்பதாக தெரியவில்லை ஆனால் அதை செய்யும் முறையும் அளவுகளும் கல்வெட்டில் உள்ளன

மேலும் முக்கண்ணனின் ஐந்து முகங்களில்

மேற்கு நோக்கி சத்யோஜாதம்

வடக்கு நோக்கி வாமதேவம்

தெற்கு நோக்கி அகோரம்

கிழக்கு நோக்கி தத்புருஷம்

மற்றும் மேலே வடகிழக்கு நோக்கி ஈசான முகத்தையும் கொண்டு சிருஷ்டியின் இயக்கத்தில் பங்கேற்றுகிறார்

ஐந்து ரூபங்களில் ஈசானரே அடிப்படையாகவும் ஆகாய ரூபமாகவும் காட்சித்தருகிறார்

அவ்வாறே பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தின் நாற்திசைகளிலும் முறையே
மேற்கே சத்யோஜாத ரூபமும்
வடக்கே வாமதேவரும்
தெற்கே அகோர மூர்த்தியும்
கிழக்கே தத்புருஷ ரூபமும்

சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன

ஈசானரின் முக்கியத்துவம் அறிந்து அந்த சிற்பம் அமைக்கப்படவில்லை

மேலும் அனைத்து கோவில்களிலும் கருவறையின் மேலுள்ள விமானத்தின் அமைப்பு வேறு பெரிய கோவிலில் உள்ள அமைப்பு வேறு

ஆழ்ந்து யோசித்தால் விளங்குவது ஒன்றே ஈசனையே தத்ரூபமாக லிங்க அமைப்பில் கோபுரமாக அமைத்தார் இராஜராஜ சோழன்

சர்வம் சிவார்ப்பணம்

Thanks to my temple app